நீதிமன்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜூலை, 2021

பொது மக்களால் அறியப்படாத நீதிமன்றத்தில் நடக்கும் பொதுவான நடத்தைகள் என்ன?

 நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குள் தேக்கம், நீதிமன்றங்களுக்கு விடும் விடுமுறைகள், அவை வழங்கும் தீர்ப்புகள்…..இவை பற்றி மட்டுமே பொதுமக்கள் அறிவார்கள்…

ஆனால் எல்லா தீபங்களுக்கு கீழேயே இருள் உண்டு என்பதை மறந்துவிடுகிறோம்.

விசாரணை நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகலுக்கு உள்ள பணிசுமை தவிர்த்த மனசுமை தெரியுமா?

இதோ ………. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், பட்டியலிட்டுள்ளது…இன்னும் சொல்லபோனால் அவர்களுக்காக வாதாடியுள்ளது!! …வழக்கம் போல…..

என்ன தாம்ப்பா அவங்க பிரச்சினை"ன்னு கேட்கிறவங்களுக்கு………….

அவர்கள் வாய்ஸ்சிலேயே

"உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள் "

இதை ஏன் திடீருன்னு சொல்லியிருக்குன்னு கேட்கிறீங்களா?

எம், டாமோவில் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை செய்யப்பட்டார் இல்லையா?

அது தொடர்பாக, மாநிபுமிகு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போது சொன்னவை இவை

இந்த வழக்கிற்கும், நீதிபதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

மேலே சொன்ன கிரிமினல் வழக்கை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி ஹதா தனது உத்தரவில் தனக்கு உள்ள அச்சங்கள், எல் செல்வாக்குமிக்க குற்றவாளியின் சூழ்ச்சிகள் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

மாவட்ட நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த நீதித்துறை என்ற முழு அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியமானது என்பதை நீங்கள் ஒத்துகொள்கிறீர்கள் தானே? இதைத்தான் மான்்புமிகு உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஒரு சுதந்திரமான, எந்த பக்கச்சார்பற்ற நீதித்துறை ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். மாவட்ட நீதித்துறையில் உள்ள நீதிமன்றங்கள் தான் குடிமக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும். நீதி நிர்வாகத்தில் குடிமகனின் நம்பிக்கை நிலைக்க வேண்டுமானால், மாவட்ட நீதித்துறையிலும், 'உயர்' நீதித்துறையிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். விசாரணை நீதிபதிகள் மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள் -உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள்...

.மாவட்ட நீதித்துறையின் பால் கொண்டுள்ள 
 காலனித்துவ மனநிலை மாற வேண்டும்.
 அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்,
 பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் - என்று எங்கள் 
விசாரணை நீதிமன்றங்களில் அர்த்தமுள்ள 
வகையில் பாதுகாக்கப்படும், ஒவ்வொரு 
ஸ்டாக்கிற்கும் சிவில் சுதந்திரம் கிடைக்கும்.  

மெட்ராஸ் பார் அசோசியேஷேன் எதிர் ஒன்றிய அரசு என்ற வழக்கை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்,

 நீதித்துறையை ஒரு சுதந்திரமான  அமைப்பாக
 செயல்படுத்துவது என்பது,  அதிகாரங்களைப் 
பிரிக்கும் கருத்தில் வேரூன்றியுள்ளது. தனிப்பட்ட
 நீதிபதிகள் சரிசெய்ய முடியும். வேறு எந்த 
காரணிகளின் இடையூறின்றி நீதிபால் சட்டத்தின்
 துணை கொண்டு தீர்ப்பு வழங்க இயல வேண்டும்.
  அதனால நீதித்துறையின் சுதந்திரம் என்பது 
ஒவ்வவொரு நீதிபதியின் சுதந்திரம ஆகும்.  அது 
அவருடன் பணியாற்றும் ஏனைய சக நீதிபதி, 
அல்லது அவருக்கு மூத்த நீதிபதியிடமிருந்தும் 
சுதந்திரத்தை உள்ளடக்கியது.  '

இது சம்பந்தமாக அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 5௦ல் சொல்லப்பட்டதை எடுத்து சொல்லிய உச்ச நீதிமன்றம்,

" இது நீதித்துறையை, பொது சேவையை பொறுத்த வரையில், அரசின் நிர்வாகத்திடம் இருந்து நீதித்துறையை பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது, உயர் நீதிமன்ற நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட நீதித்துறை, எந்தவித நிர்வாக இடையூறு இன்றி சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தில் எந்தவிதத்திலும் அரசின் நிர்வாகம் இடையூறு செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். "

என்றுள்ளது..

ஒன்று சொல்லவா…

ஊரில் எங்கு பிரச்சினை என்றாலும் நீதிமன்றத்தில் போய் முறையிடலாம்.

ஆனால் நீதிபதிக்கே பிரச்சினையென்றால் யாரிடம் போய் நீதி கேட்க முடியும்??
















ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஒருவரை இழிவுபடுத்த, மற்றவர்களிடத்தில் மனித பலவீனங்களை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அவர் ஒரு குடிகாரன், போதை பொருள் பயனாளி என்று சொல்வதை விட முன்வைக்கப்பட்ட உண்மைகளை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

 ஒரு வாரம் முன்பு வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்து இருந்தேன்.வழக்கம் போல, காய்கறி விற்கும் பெண்மணி, தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தினார். இவர் நிறுத்திய இடத்தில் பக்கத்து அபார்மென்டின் வாசல் பக்கம். அதனால் அந்த வாட்ச்மேன் அவரை சற்று தள்ளி நிறுத்த சொன்னார்..அதற்குள் வியாபாரத்தில் மும்முரமாகி விட்ட காய்கறிகாரம்மா அதை சட்டை செய்யவில்லை.. சிறிது நேரத்தில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற, அவர் திட்ட, இவர் திட்ட என்று போய்.. கடைசியில், இந்த பெண்மணி அவரை 'போடா பொட்டை" என்று விட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு போனார்…

அடுத்த முறை அவர் வீட்டிற்கு காய்கறி கொண்டு வந்த போது கேட்டேன்..

"ஏம்மா.. அவரை கடுமையா திட்டனும்னு நினைச்சீங்க சரி….ஆனா உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கிட்டீங்களே!"

"என்ன சொல்றேம்மா…"

"ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையை தாக்கி பேசினால் வலிக்கும்ன்னு தான் அவனை விட கீழே இருக்கிறதா அப்ப அவன் நினைசுகிட்டு இருந்த பெண்ணாக அவனை ஏசுவாஙக. நீங்களும் அப்டி சொன்னா என்ன அர்த்தம்.?"

"….."

நிறைய பேருக்கு இது தான் பிரச்சினை…

எதிராளியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு மறுமொழி சொல்லவோ முடியவில்லை என்றால், அவரை தாக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம், அவர் ஒழுக்கத்தை விமர்சனம் செய்வது தான்… அப்போது பிரயோகிக்கும் வார்த்தைகள் பூமராங் போல தன்னையே தாக்கக்கூடும் என்று நினைப்பதில்லை!!

காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினையும் அது தான்…

ஒருவரை வசை பாட வேண்டும் என்றால் சம்பந்தேமேயில்லாமல் அவன் தாய், சகோதரி என்று அனைவரும் இவன் வாயில் மென்று துப்புவான்.!! கூட கொஞ்சம் அவனிடம் உள்ள கெட்ட பழக்கங்களும் எள்ளி நகையாடப்படும்.. இதில் வேடிக்கை என்னவென்றால் இவனிடமும் அந்த பழக்கம் இருக்கும். ஆனால் அதை மறைத்து வைத்திருப்பான்!!

அதுவே எதிராளி பெண் என்றால் கேட்கவே வேண்டாம்…

அவள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவள் முன் பேச முடியாமல் திணறுபவர்கள், உடன் கையிலெடுப்பது அவள் நடத்தை குறித்து தான்.

அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட…

இரும்பு மனுஷி ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, புதுவை கவர்னர் தமிழிசை …………இப்படி பெண் அரசியல்வாதிகள் சந்தித்த அவதூறுகள், இழி பேச்சுகள் தான் எத்தனை எத்தனை…..

இந்த படத்தை போட்டதன் காரணம் உங்களுக்கே தெரியும்!!

என்ன சொல்லப் படுகிறது என்று பார்க்கப் படுவதேயில்லை. யார் சொல்கிறார்கள் என்று தான் பார்க்கப்படுகிறது….

அதை நேரிடையாக எதிர்க்க நேர்மையான வாதங்கள் இல்லாதபோது, சொல்பவரை இழிவுபடுத்த துணிகிறோம்.

இது போல மற்றவர்களை உலவியல் ரீதியாக காயப்படுத்த எண்ணும் எண்ணம் ஏன் ஏற்படுகிறது?

அதற்கு காரணம் பெரும்பாலும் நம் மீது ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்று பொருள்.

இதைச் செய்வதற்கான எளிதான வழியாகத்தான் , நம்மை பற்றிய தனித்துவமான ஒன்றில், அது நல்ல பழக்கமோ, கெட்டதோ அதில் கவனம் செலுத்தி ...உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நம்மை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்து , நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலாத நிலையை உருவாக்குதல்.

சரி… இது போல மற்றவரை இழிபடுத்தும் எண்ணம் கொண்டவர்களின் மனோ நிலை தான் என்ன?

இதை பற்றி .உலகளாவிய இளைஞர் தொண்டு நிறுவனமான டிச் தி லேபிள் என்ற அமைப்பு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

அதில் அவர்கள் கண்டு அறிந்தது:

இது போன்ற நபர்கள்

1. அதிக மன உளைச்சாலில் உள்ளவர்கள்

2. இந்த வகையான சீண்டல் 66 சதவீதம் ஆண்களுக்கு தான் இருக்கிறது என்றும கண்டுபிடிதுள்ளன்னர். இதற்கு என்ன காரணம்?

ஆண் பெரும்பாலும் தன உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற முறையிலேயே வளர்க்கபடுகிறான். ஆனால் பெண் குழந்தைகளை அவர்கள் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுத்தப்படுகின்றனர்.

ஆண் பிள்ள என்றால் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி அவன் தன மன உணர்வுகளை வெளிப் படுத்த வழியின்றி இது போன்ற சீண்டல்களில் இறங்குகிறான். ஆண்கள் சட்டென்று கைகலப்பில் இறங்கக் காரணமும் இது தான்.

3. தங்களைப் பற்றி அவர்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பதை மறைக்க, சிலர் வேறொருவரை கொடுமைப்படுத்தும் செயலில் கவனம் செலுத்துகிறார்கள். இது போல திசை திருப்புவதன் மூலம் அவர்கள் மீது எதிர்மறையான கவனத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்

ஊரெல்லாம் மீட்டிங் போடுவார்கள். ஆனால் தன மனதோடு மட்டும் நோ மீட்டிங் …!! ஏனென்றால் வீட்டில் தனியே கண்ணாடியில் தன் முகம் பார்த்து தாங்கள் பார்க்கும் விதத்தை வெறுக்கக்கூடும் என்பதை அறிவார்கள் !!

௪. குறைந்த சுய மரியாதை கொண்டவர்கள்

அழகு மற்றும் உடற்தகுதி தரத்திற்கு ஏற்ப வாழ முடியாமல், இவர்களுக்கு நிறைய அழுத்தம் உள்ளது, தம்முடைய சொந்த அழகைத் போற்றுவதற்குப் பதிலாக,தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்!!.

5. கொடுமைப்படுத்துதலை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களை இரு மடங்கு அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் குழந்தைகளாக கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது இப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

6. பெரும்பாலும் இது ஒரு தற்காப்பு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றவர்களை கொடுமைப்படுத்துவதன் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில், இது எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.

7. இவர்களில் 3 ல் 1 பேர், தங்கள் பெற்றோர் / பாதுகாவலர்கள் அவர்களுடன் செலவழிக்க போதுமான நேரம் இல்லை என நினைக்கிறார்கள். தனிமை தான் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.

8. நிபந்தனையின்றி அவர்களை நேசிக்க வேண்டிய மக்களிடமிருந்து நிராகரிப்பு உணர்வுகளை தான் பெரும்பாலும் பெற்றிருப்பார்கள்.

9. குறைந்த கல்வியறிவு

கல்விக்கான சரியான அணுகல் இல்லாமல், மற்றவர்களுடன் வெறுப்பு அடிப்படையிலான பேச்சு மட்டுமே வழக்கமாக இவர்களுக்கு இருக்கலாம். வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, மக்களை இழிவான முறையில் பேசுவது ஏன் பொருத்தமானதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

1௦. சீர்கெட்ட உறவுநிலை :

இறுதியாக, இவர்கள் தங்கள் நட்பு மற்றும் குடும்ப உறவுகள் மிகவும் பாதுகாப்பானவை அல்ல என்று உணர வாய்ப்புள்ளது. நட்பைப் பேணுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ளும்படி அவர்களுடைய உறவு, நட்புகளால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கப்படலாம். தங்களுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவோ அல்லது அன்பாகவோ இல்லை என்று நினைக்கலாம்.

எனவே இத்தககையோரை நேரிலோ வலைத்தளத்திலோ கண்டால் நாம் தான் அவர்களுக்காக இரக்கப்பட்டு அவர்களின் மனோநிலை மாற ஒத்துழைக்கலாம். !!

எப்படி?

பொதுவாக, இத்தகையோரின் விமர்சனங்கள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. நம்மை அறியாமலேயே அதை உள்வாங்கத் தொடங்குகிறோம், உடனே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்ய துவங்குவோம். நம்மை ஏன் குறி வைக்கிறார்கள் என்ற காரணங்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். .

அடுத்து அதை தவிற்பதற்கு,, அந்த குணங்களை, குறைகளை அல்லது பழக்கங்களை மறைக்க முயல்வோம்.

இது கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களும் இளைஞிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை. .அவர்கள் உடலின் நிறத்தை வெளுப்பாக்க முயல்வது… ஏதோ நம் உடல் வெறுக்கப்படக்கூடிய ஒன்று போல அதை மூடி மறைக்க முயல்வது…

மூத்த தலைமுறையினர் என்றால் தலைமுடிக்கு சாயம் போடுவது… நமக்கு விரூப்பமில்லாத நபர்களோடு உறவு கொள்ள முயல்வது .

இது நாளடைவில் நம் நடத்தை மற்றும் நாம் நம்மைப் பார்க்கும் வழிகளைப் பாதிக்கத் தொடங்குகிறது, கடைசியில் நம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் போய் முடியும்…

அதனால் தான், நாம் விமர்சனம் செய்யபடுவதை இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மற்றவர்கள் நம்மை உற்று நோக்கி விமர்சனம் செய்யும் வகையில் நாம் ஏதோ வகையில் வித்தியாசமானவர்கள்.என்று எடுத்துகொண்டு போய் விட வேண்டும்.

நீதிமன்றத்திலேயே ஒரு சாட்சியின் நம்பகத்தன்மையை குறைக்க இது போன்ற எள்ளி நகையாடுதலை குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனுமதிப்பது உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரையறை உண்டு…..

இது குறித்த பதிவு இங்கே…Blogger

நீதிமன்றங்களில் சாட்சியின் குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு கலை. அதில் மறைந்த பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் பிரபலம்.

சேதிர் தரப்பு சாட்சியை சீண்டி விட்டு, கோபத்தில் அவரிடம் தனக்கு வேண்டிய பாயிண்டுகளை வாங்குவதில் அவர் கில்லாடி!!

இப்படிதான் ஒரு தடவை தனக்கு கட்டி கொடுத்த வீட்டில் தரம் சரியில்லை, கட்டிய சிறிது நாளிலேயே அதில் விரிசல் விட்டு விட்டது என்று கூறி அந்த பில்டர் மீது ஒருவர் வழக்கு போட்டார். பில்டருக்காக இவர் ஆஜர்…

புகார் தாரர் சாட்சி கூண்டில் ஏறி நிற்கிறார்..

எத்திராஜ் நிதானமாக நடந்து வந்து அந்த கூண்டின் அருகில் வந்து நின்றார்.

சாட்சிக்கு வியர்க்க ஆரம்பித்தது..

இவர் முதல் கேள்வியே இப்படித் தான் ஆரம்பித்தது

'ம்ம்ம். …சொல்லுங்கள்.. உங்களோடு சேர்த்து, உங்கள் வீட்டில் எத்தனை க்ராக்குகள்?"

…………..

ஞாயிறு, 27 ஜூன், 2021

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்" என்னும் பொது தீர விசாரிப்பது மட்டும் எவ்வாறு மெய்யாகும்?

 "நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?" என்ற புத்தகத்தில் டேல் கார்னகி, ஒரு சம்பவத்தை இப்படி விவரிக்கிறார்..

1931ம் ஆண்டு மே மாதம் ஏழாம் நாளன்று, நியூயார்க் நகரில் மிகப் பரபரப்பான மனித வேட்டை ஒன்று உச்சகட்டத்தை அடைந்தது. பல வாரத் தேடல்களுக்குப் பிறகு, புகைபிடிக்காத, குடிப்பழக்கமில்லாத கொலைகாரன் 'இரட்டைத் துப்பாக்கி' குரோலி, வெஸ்ட் என்ட் அவென்யூவில் அவனது காதலியின் வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான்,

ஒரு கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்த அவனது மறைவிடத்தை நூற்று ஐம்பது காவல் துறையினரும் துப்பறிவாளர்களும் முற்றுகையிட்டனர். கூரையில் அவர்கள் துளைகளிட்டனர். குரோலியைக் தண்ணீர்ப் புகை மூலமாக வெளியே வரச் செய்ய அவர்கள் முயற்சித்தனர். பிறகு சுற்றுவட்டாரத்திலிருந்த கட்டிடங்களில் இயந்திரத் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் | வைத்தனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதிரியார்க் நகரின் அருமையான குடியிருப்பு இடமான ஒலியும் இடைவிடாது எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய நாற்காலிக்குப் பின்னால் குரோலி ஒளிந்து கொண்டு, காவல் துறையினர்மீது தொடர்ந்து சுட்டான். உற்சாகமான பத்தாயிரம் மக்கள் அந்தச் சண்டையைக் கண்டனர். நியூயார்க் நகரின் நடைபாதையில் அப்படிப்பட்ட எதையும் அவர்கள் அதுவரை பார்த்ததில்லை.

குரோலி பிடிபட்டபோது, நியூயார்க் நகரில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் அபாயகரமான குற்றவாளிகளில் 'இரட்டைத்துப்பாக்கி' குரோலியும் ஒருவன் என்று காவல்துறை ஆணையர் ஈ.பி. மல்ரூனி அறிவித்தார். “வேறு எந்தத் தூண்டுதலும் இன்றி, அலட்டிக் கொள்ளாமல் அவன் கொலை செய்வான்," என்று அந்த ஆணையர் கூறினார்.

'ஆனால் இரட்டைத் துப்பாக்கி' குரோலி தன்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தான்? அது நமக்குத் தெரியும். ஏனெனில், காவல் துறையினர் வீட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தபோது, அவன் *உரியவரின் பார்வைக்கு' என்று முகவரியிட்டு ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதும் போது அவனது காயங்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தம் அக்காகிதத்தில் பரவலாகத் தெறித்திருந்தது. அவனது கடிதத்தில் அவன் இவ்வாறு எழுதியிருந்தான்: “என் சட்டைக்குக் கீழே, சோர்ந்து போன, அவனது ஆனால் அன்பான ஓர் இதயம் இருக்கிறது. எவருக்கும் அது தீங்கு விளைவிக்காது.”

கண்ணால் பார்த்த இந்த சம்பவத்தையும், காதால் கேட்ட அவனை பற்றிய குறிப்பையும் வைத்து, நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? இரண்டும் பொய்யா? அல்லது இரண்டும் உண்மை தானா? இல்லை இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் தான் உண்மையா? அப்படியென்றால் அது எது? எப்படி தெரிந்து கொள்வது?

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருக்கலாம் ரயில் நகரத் தொடங்கும் பொழுது எதிரில் தெரியும் மரம் செடி கொடிகள், கட்டிடங்கள் எல்லாம் பின்னோக்கி நகர்வதைப் போல நம் கண்ணுக்கு தெரியும் ஆனால் உண்மையிலேயே அங்கு நகர்ந்து கொண்டிருப்பது ரயில் தான் அந்த பொருட்கள் எல்லாம் அதே இடத்தில் தான் இருக்கின்றன ஆனால் நம்முடைய கண் பார்வைக்கு அந்த பொருட்கள்தான் நகர்வதாக தெரியும் .

அதே போல நாமே பார்த்திருக்கலாம், அதிகாலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் போது, சூரியன் ஆனது நம்முடைய வலது திசையில் சில காலமும் இடது திசையில் சில காலமும் தோன்றும். அதை பார்க்கும்போது, சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றும்..

இவையெல்லாம் கண்ணால் காண்பதும் பொய், என்பதை உணமையாக்கவில்லையா?

ஏன். நாமே, இந்த சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் தான் "உத்தராயணம்." என்றும் " தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலம் என்றும், தஷ்ணாயன காலம் என்பது, சூரியன் வட திசையிலிருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலம் என்றும் ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரையான ஆறு மாதங்கள்.என்பர். நம் முன்னோர் வகுத்தது என்றும் பார்க்கவில்லையா?

ஜோதிடத்தை பொறுத்த வரையில், பூமி நடுவில் இருக்க, அதனை தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்பர்..சூரியன், ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் ஆகும் என்பர்..

அறிவியல் தெரிந்தவர் ஒப்புக் கொள்ள மறுக்கும் விஷயம் இது. என்றாலும் ஜோதிடமே அறிவியல் தானே, அது எப்படி மாற்றி சொல்லியிருப்பர் என்ற கேள்வி வரும்.

அப்படியென்றால் காதால் கேட்பதும் பொய்யா?

சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி

சொல்லின் தரமறிவ தேது..திருக்குறள்

நாம் படித்த அறிவியல், பூமியானது தனது அச்சில் 23 1/2 பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வரும்போதே தன்னை தானே சுற்றி வருவதால் கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை சூரியனின் ஒளி நேரடியாக படும் வகையில் சுற்றுகிறது ...அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.என்பது நினைவுக்கு வரும்.

இயற்கை விதிப்படி தை முதல் ஆனி மாதம்
வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன்,
தென் திசை மீது தன் பார்வையை திருப்பும். அந்த காலத்தின் தொடக்கம் தான் ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம்
நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது.

இதைத் தான், சூரியனின் பயணம் எனப்படுகிறது. ஜோதிடத்தில், சூரியன் தான் பூமியை சுற்றி வருவதாக காட்டப்பட்டாலும் சூரியன் இருக்கும் இடத்தில் பூமி இருப்பதாகவும் பூமி இருக்கும் இடத்தில் சூரியன் இருப்பதாகவும் தான் கொள்ள வேண்டும் அந்த கணக்கில் தான் இதைப் பார்க்க வேண்டும் .

அதே போல ஆடி மாதம் தான், பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும்
கருதப்படுகிறது. .முக்கியமாக ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

அறிவியல் பூர்வமாக , இது உண்மை தான்.
ஆடி தான் மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, , தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்..

அதே போல , தட்சணாயண காலம் முடியும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளை கொடுக்கும். எனவே தான் மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் என்பார்கள்..கிருஷ்ணனே "மாதங்களில் நான் மார்கழி "என்று சொலவில்லையா?

இதை தானே “உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” ..என்றது சீவக சிந்தாமணி.

அப்படியென்றால் உத்தராயனத்தைப் புண்ணிய காலம் என்றும்
தட்சணாயணம் காலத்தை தெய்வங்சுளுக்கு நன்றி சொல்லும் காலமாக முன்னோர் வகுத்தது சரி தானே..?!

எதையும் கண்ணால் பார்த்தால், காதால் கேட்டால் நம்பி விடாமல் பொது தீர விசாரிப்பது மட்டும் தானே மெய்யாகும்.

அந்த உத்தராயனத்தின் தொடக்கத்தையே சங்க்ராந்தி என்று நாட்டின் பிற இடங்களில்
கொண்டாடும் பொங்கல் விழாவை சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாக, தை மாதம் முழுவதும் கொண்டாடினராம். இந்த
விழாவிற்குப் பல மாதங்களுக்கு முன்னர்
அதாவது ஆடி மாதம் மழை வேண்டி
இந்திரனைக் குறித்து விரதம் இருப்பார்களாம் விவசாயிகள். ஆறு மாதம் கடந்த பின் தை மாதம் விரதம் முடித்து, பழையன கழிதலும், புதியன
புகுதலுமாய் மார்கழி இறுதி நாள் போகிப்
பண்டிகை கொண்டாடுவர்.
சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு
நிவேதனம் செய்யும் பொங்கல் திருநாள் தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுவதும் . எவ்வளவு சரியானது!!!

"நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்”….நற்றிணை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(குறள் 423:

திருவள்ளுவர் வலியுறுத்தும் இதை தானே சட்டமும் சொல்கிறது!

அந்த உண்மையை அறிய நடத்தப்படுவதே "விசாரணை". ..நீதிமன்றத்தின் விசாரணை .

இதை தான் சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் தெளிப்படுத்தியுள்ளது.Aim Of Every Court Is To Discover The Truth: Supreme Court Explains Scope Of Section 311 CrPC


அந்த நீதிமன்ற விசாரணையும்  எப்படி இருக்க வேண்டும்?

அதில், குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட குழு, சமுதாயம் இப்படி எல்லோரின் நலனும் சீரதூக்கி பார்க்க வேண்டும். என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Concept Of Fair Trial Entails Balancing The Interest Of The Accused, The Victim, Society And The Community: Allahabad HC [Read Judgment]

ஆனால் விசாரணை என்றவுடன், போலீஸ் விசாரணை தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும்.

அதற்கும் மேலே சொன்ன அளவுகோலகள் தான்.. ஆனாலும் நமக்கு உடன் நடுக்கம் வருகிறதே …ஏன்?

அவர்கள் "தீர" விசாரிப்பது நம் "மெய்"யை தானே! என்பதாலா?

புதன், 23 ஜூன், 2021

மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம். இம்மூன்று நீதிமன்றங்களுக்கும் சட்டங்கள் மாறுபாடு உள்ளதா. ஏன் இப்படி மூன்றாக பிரித்தனர்?

 குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்களே. நம்முடைய குற்றவியல்/சிவில் விசாரணை நடைமுறை சட்டப்படி நீதிமன்றங்கள் மூன்று அடுக்கு கொண்டவை. வழக்குகளை குற்றவியல் நீதிமன்றம் அல்லது உரிமையியல் நீதிமன்றம் விசாரித்தால், அதற்கான மேல்முறையீடு அடுத்த கட்டமாக சார்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்த கட்ட மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும் நடக்கும். அதுவே சார்பு நீதிமன்றமோ அல்லது தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தினால், அதற்கான மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும், அடுத்து உயர் நீதிமன்றத்திலும் நடக்கும். ஆனால், மாவட்ட நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாக இருக்கும்போது, அதற்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடக்கும். அனைத்து கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் சீராய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாண்பிமிகு உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. அனைத்து மாநில நீதிமன்றங்களுக்கு தலைமையாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உள்ளது.

எந்த நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாகும் என்பது குற்றம்/வழக்கின் தன்மையை பொறுத்து குற்ற விசாரணை சட்டத்திலும், சிவில் விசாரணை நடைமுறை சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது. . சட்டம் அனைத்து நீதிமன்றத்திற்கும் பொதுதான்.

மேலும் நமது அரசியலமைப்புச் சட்டம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றங்களையும் தான் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கியுள்ள/உறுதிபபடுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாவலனாக காட்டியுள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு அந்த சட்டத்தின் உறுப்பு ௨௨6 படியும் உச்ச நீதிமன்றத்திற்கு உறுப்பு 3௨படியும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளோடு பொருத்தப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தே, அதாவது அவை வழக்கு சம்பவங்களோடு சரியாகத்தான் பொருததபபட்டுள்ளனவா இல்லையா, அந்த சட்டங்களும் அரசிய லமைப்பு சட்டத்துடன் பொருந்தி உள்ளதா இல்லையா என்பது குறித்துத் தான் உச்ச நீதிமன்றம் பொதுவாக விசாரிக்கும்.

குற்றவியல் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் என்றால் என்ன?

குற்றவியல் நீதிமன்றம் (மாஜிஸ்திரேட் கோர்ட்) என்பது தான் இந்திய நீதித் துறையில் உள்ள கடைநிலை நீதிமன்றமாகும். அந்த நீதிமன்றம் தலைமை நீதித்துறை நடுவர் கட்டுப்பாட்டிலும் ஒட்டுமொத்தமாக அந்த மாவட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

மேலும் எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை, வழக்கு ஆவணங்கள் மற்றும் குற்றவாளியும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தான் தாக்கல்/ஆஜர் செய்யப்பட வேண்டும். நீதித்துறை நடுவர் வழக்குகளை விசாரித்து ரூபாய் பத்தாயிரம் அபராதத்திற்கு மிகாமலும், மூன்று வருட சிறை தண்டனையும் அளிக்க அதிகாரம் பெற்றவர்.

உரிமையில் நீதிமன்றம் என்கிற முன்சீப் கோர்ட் பெரும்பாலான சிவில் வழக்குகளை விசாரிக்கும். அது ரூபாய் ஒரு லட்சம் வரை யிலான பணவியல் அதிகார வரம்பு கொண்டது. அதற்க்கு மேலும் ரூபாய் பத்து லட்சம் வரையிலான அதிகாரம் கொண்டது சார்பு நீதிமன்றம் என்கிற சப் கோர்ட். இங்கு முன்சீப் நீதிமன்றம் வழங்கிய தீர்பிற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும். மேலும் குடும நல நீதிமன்றங்கள் இல்லாத மாவட்டங்களில் விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும். மேலும் சார்பு நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை விசாரித்து ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனையும் அளிக்கக் கூடிய அதிகாரம் கொண்டது.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்கு என்று வழக்குகளை ஏன் இரண்டாகப் பிரிக்கிறார்கள்?

நீதிமன்ற ந்களில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறைகளை சொல்லும் இரண்டு சட்டங்கள் தான் குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் சிவில் விசாரணை நடைமுறை சட்டம். இவற்றின் படி தான் விசாரணை நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது.

எனவே தான் சிவில் கிரிமினல் என இரண்டு பிரிவாக வழக்குகள் பிரிக்கப்பட்டு அந்த சட்ட நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.


இந்திய நீதிமன்றங்களில் ஏன் ஆங்கிலம் மொழியில் வழக்குகள் நடக்கின்றன. இதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா?

ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் கொண்டுவரபட்டது. அதன் பின்னர் அந்தந்த மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிராந்திய மொழியே நீதிமன்ற மொழியாக தொடர்ந்தாலும் ஆங்கிலமும் நீதிமன்ற மொழிகளில் ஒன்றாக உள்ளது. மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டது ஞாபகத்தில் இருக்கும். உயர் நீதிமன்றங்களில் பல மாநிலத்திலிருந்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பார்கள். எனவே பிராந்திய மொழியை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்றங்கள் தமிழில் தீர்ப்பு வழங்கும்போது, அது கட்சிதாரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அந்த வழக்கு மேல்முறையிட்டிற்காக உயர் நீதிமன்றம் போகும்போது, வழக்கு ஆவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...