மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

மருத்துவர்கள் எவரும் விக்ஸ் ஆக்சன் 500 மாத்திரையை மற்ற பாராசிடமால் மாத்திரைகளைப் போல பரிந்துரைப்பது இல்லையே ஏன்? ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா?

 உங்களுக்கு தலைவலியா... ஜலதோஷமா? ஆமாம்ப்பா... ஆமாம்...!

அப்படியென்றால் விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை எடுத்தக்கோங்க...!" என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம், 25 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம்.

கிராமத்தின் பெட்டிக் கடையிலும் இந்த மாத்திரை கிடைக்கும்.

தலைவலி, காய்ச்சல், உடம்பு வலின்னாலே டாக்டரிடம் போகாமலே இந்த மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமானதா இருந்ததும் நமக்கு தெரியும்.

அதுக்கப்புரம் இதைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ குழுக்கள், புழக்கத்தில் இருந்த சில மருந்துகளை, அதிக டோசேஜ் காரணமா தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.

என்னது..பக்க விளைவா?!..அது என்ன?னு விசாரிச்சா அப்ப தான் லிஸ்ட் சொல்றாங்க..😀

  • இந்த மருந்தின் மூலப்பொருட்களில் ஒன்றான பாரசிட்டமால் நரம்பியல் ரீதியாக தலைவலி, உடல் சோர்வு, மற்றும் தொடர்ச்சியாக சாப்பிட்டால் கோமா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது
  • . இதே போல் இருமல், வாந்தி, இதயத்துடிப்பில் மாற்றம் , ரத்தத் தட்டணுக்கள் குறைபாடு, அரிப்பு போன்ற் பக்கவ்விளைவுகளையும் இந்த பாரசிட்டமால் மூலக்கூறு ஏற்படுத்தும்

அடப்பாவமே…இதை தான் எங்கப்பாவெல்லாம் டெய்லி ஒண்ணு போட்டுக்குவார்..இப்ப வந்து இப்படி சொல்றீங்களே😎

அதுக்கப்புறம் பக்க விளைவு ஏற்படுத்தும், மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக டோசேஜ் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை, மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் கீழ், இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு 2016ல் அறிவித்தது. அதிலே இந்த விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா மருந்தும் ஒன்று!!

அந்த தடையை எதிர்த்து இந்த மாத்திரைகளை தயாரிக்கும், பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் - 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை உத்தரவு கூட வாங்கினர்.

இந்நிலையில் தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக பின்னர் அறிவித்தது. .

இப்போ, அந்த மருந்து நிறுவனம் , புது மருந்தா விக்ஸ் 500 அட்வான்ஸ்ட் என்ற பெயரில் சந்தையில் நுழைத்துள்ளது.

ஆனாலும், மக்களின் மனதில் அந்த மாத்திரை குறித்து நன்றாக பதிந்து போன பிம்பத்தாலேயே மருத்துவர்கள் அந்த புது மருந்தை பரிந்துரை செய்வதில்லையென நினைக்கிறேன். அதனாலேயே நடிகர் பிரபு நடித்த அந்த புது விளம்பரத்திற்கும் வரவேற்பு இல்லை

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...