என் அப்பா சென்னையில் இரண்டு வியாபாரத் தளங்கள் வைத்து நடத்தி வந்தார். சொந்தமாக இடம் வேண்டி, இரட்டை கடைகளை சென்னையில் உள்ள ஒரு பஜார் ரோட்டில் வாங்கினார்..ஆனால் அதில் ஏற்கெனவே இருந்த கடைக்காரர்கள் காலி செய்ய மறுத்து விட்டனர்..
அவர்கள் ரொம்ப வருடங்களாக அங்கு கடை நடத்தி கொண்டு இருக்கிறார்களாம். அதுவும் அவர்கள் தான் அதை வாங்க இருந்தார்களாம்.
அப்புறம் என்ன..
அவர்களை காலி செய்ய சொல்லி வழக்கு போட்டார்..இவர் வாடகைக்கு(?) இரண்டு கடைகள் வைத்திருக்கிறார் என்று அவர்கள் எதிர்வாதம் செய்தனர்!!
வழக்கு நடந்தது…நடந்தது..நடந்து கொண்டே இருந்தது..
பாதி நாள் வக்கீல் அந்த கோர்ட்டுக்கு வரும்.முன்பே வழக்கு விசாரணைக்கு வந்து தள்ளுபடியாகி விடும்.
அப்பா இருந்தாலும்..வக்கீல் இல்லையே?!
பிறகு அதற்கு ஒரு மனு..பதில்..விசாரணை..அபராதம்..திரும்பவும் கோப்பிற்கு எடுப்பது..
இப்படி நிறைய தடவை..
அதே போல அவர்கள் தரப்பிலும்….
நடுநடுவிலே வக்கீல் கடைக்கு வந்து அவருக்கு வேண்டிய துணிமணிகளை கட்டிக்கொண்டு போவார்!! பணமா…மூச்..எல்லாம் இலவசம்.😃
பீஸ் தனி!!
வாடகை வேற குடுக்காம இருந்தார்களா..மெயின் கேஸ் நடக்கும்போதே இடைக்காலமா வாடகை நிர்ணயம் செய்து தர சொல்லி ஒரு மனு போட்டார்.
அது ஒரு மாமாங்கம் நடந்து,
ஜட்ஜ் பெரிய மனசு பண்ணி, ஒரு கடைக்கு மாத வாடகை ரூபாய் 18/ _😎 ன்னு நிர்ணயம் செஞ்சார்..அதுக்கு தனியா ஒரு அப்பீல்..
இதுக்கு நடுவிலே, அப்பா வெறுத்து போய், வாடகை பணம் அனுப்பின மணி ஆர்டரை திருப்பி அனுப்பிட்டார்..
அதுக்கு ஒரு மனு போட்டு, அவங்க அதை மாசாமாசம் கோர்ட்டில் கட்டிட்டாங்க…
பின்னாடி நான் பள்ளிப்படிப்பு , கல்லூரியெலாம் முடிச்சு, மனு போட்டு அந்த பெரிய புதையலை(😀) மீட்டு குடுத்தேன்!!
இதுக்கு நடுவிலே கோர்ட்டு, கேசுன்னு அலஞ்சதுலே, வியபாரத்தை அவரால சரியா பார்க்க முடியலை..படுத்துருச்சு!!
சரியான சாப்பாடு இல்லாம அலஞ்சதுலே அப்பாவுக்கு அல்சர் ,வந்துடுச்சு…
கூட சேர்ந்து துணையா நிற்க ஆளில்லாமல், உடலளவிலும் , மனசு, பொருளாராத ரீதியாவும் ரொம்ப சோர்ந்து போனார்..ஆனாலும் கேச விடாம நடத்தினார்!!
கடைசியிலே எங்க அப்பா போய் சேர்ந்த பின்னாலே, மாமா கையிலே வீட்டு நிர்வாகம் போக, எல்லாத்துக்கும் அந்த கடைகள் தான் காரணம்னு அவங்க சொன்ன பணத்துக்கே அவங்களுக்கு வித்துட்டார் மாமா!!
நாங்கல்லாம் ரொம்ப பச்சாஸ்!!
இன்னமும் அந்த பக்கம் போக நேர்ந்தா, அந்த கடைகளை பார்க்க பிடிக்காம, தலையை குனிஞ்சுக்கிட்டே கடந்து போயிடுவேன்..ஏதோ அப்பாவுக்கு பிடிக்காத ஒரு தப்பு செஞ்சுட்ட மாதிரியே ரொம்ப உறுத்தும்!!😶
இந்த வழக்கு, எங்க வாழ்க்கையையே புரட்டி போட்டுருச்சுன்னு சொல்லலாம்..
ஆனால் என்ன ஒன்னு…MIT யிலே எனக்கு சீட் கிடைச்சும், அதை விட்டுட்டு, நான் சட்டம் படிக்க காரணமானதும் அது தான்..
இதோ இங்கே பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறதும், என்னோட வலி, வேதனை மாதிரி, யாருக்கும் வரக்கூடாதுன்னு தான்…
அது சரி..நீங்க என்ன கேட்டீங்க