அரசு சிறப்பு வழக்கறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு சிறப்பு வழக்கறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

அரசு வழக்கறிஞர் எந்தமாதிரியான வழக்குகளில் மட்டுமே ஆஜராவார்?

 அரசே அவர்களை எந்த மாதிரி வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்று நியமனம் செய்யும். அவர்கள் இரண்டு விதமாக தேர்வு செய்யப்படுவர்.

படிமப்புரவு கூகிள்

  1. சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்று பெரும்பாலும் ஆளுங்கட்சி வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு நியமனம்
  2. டி.என்.பி.சி.தேர்வு நடத்தி அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படுவர்.இவர்கள் அரசு அதிகாரிகள் என்பதால் ஓய்வு காலம் வரை பணிபுரிவர்.

இந்த சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எந்த விதிமுறையும் கடைப்பிடிப்பதில்லை. அவர்களுக்கு என்று எந்த பொறுப்பும் கிடையாது. 

இது சம்பந்தமாக ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டு, அதில் மாண்பிமிகு சென்னை உயர்நீதிமன்றம் விதிகள் வகுக்க சொல்லி உத்தரவும் போட்டிருக்கிறது…ஆனாலும்

இரண்டு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்த ஒரு பொது நல வழக்கில் (சீதாராமன் எதிர் உள்துறை செயலாளர் தமிழக அரசு ௦  போதை மருந்து சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் சீதாராமன் , குறித்த காலத்திற்குள் போலீசார் விசாரணை முடித்த இறுதி அறிக்கையை கொடுத்தாலும் வேண்டுமென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி, குற்றவாளிகள் பிணையில் செல்ல உடந்தையாக இருக்கிறார் என்று வாதிடப்பட்டது.

  1. கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் இதே போல செய்து குற்றவாளிகள் பிணையில் சென்றுள்ளார்கள்.
  2. ஏற்கெனவே இரண்டு முறை நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
  3. அவர் பெரும் சொத்து சேர்த்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு

வழக்கின் அதிமுக்கியத்தை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை, மேற்படி அரசு வழக்கறிஞர் பணியாற்ற தடை விதித்துள்ளது.அதோடு லஞ்ச ஒழிப்பு துறை இது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...