புதன், 9 ஜூன், 2021

அபத்தமானது, அதிக விலை என்று நீங்கள் நம்பும் சில தயாரிப்புகள் யாவை?

 "அபத்தமானது"ன்னு சொன்னது. மட்டுமில்லே. அதை தயாரிச்ச்வரே அதுக்கு அதிக விலை கொடுக்கவும் வேண்டியதாயிடுச்சு..!!

ஒன்னும் புரியலையா..☺️

தொடர்ந்து படியுங்க…

தயாரிப்பு பொருள்..ஒரு வழக்கு

இதை "அபத்தம் " என்று சொன்னவர் நம்ம சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!! அத்தோடு நில்லாம அந்த கேஸை போட்டவரை, " கேஷ்" பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டவும் சொல்லிட்டார்!!

படம்:கூகிள்

இப்படி தலைமை நீதியரசர் கொந்தளிக்க வச்சது எது?

ஞாயிற்றுக்கிழமைகளில் அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, எந்தவொரு கோப்பையும் அனுப்பவோ, எந்த உத்தரவுகளையும் பெறவோ அல்லது முதலமைச்சரை தொந்தரவு செய்யவோ கூடாது என்று தலைமைச் செயலாளருக்கும் பிற அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க கோரிப் போடப்பட்ட வழக்கு தான் அது!!

" எப்படி கோப்புகளை முதலமைச்சரின் முன் வைக்க வேண்டும், முதலமைச்சர் எவ்வாறு செயல்படுவார் என்பது முழுக்க முழுக்க ஒரு அரசாங்கத்தின் தலைவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான விஷயம்," என்ற நீதிமன்றம், "இதுபோன்ற விஷயங்களில் தலையிட முடியாது" என்றதுடன், "இது போன்ற அற்பமான மனுக்கள் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே அழிக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

போன வருஷம் டாஸ்மாக் கடைகள் திறப்பது சம்பந்தமா போடப்பட்ட இது போன்ற அபத்த வழக்குசுளுக்கு 10,000 ரூபாய் அபராதம் போட்டது ஞாபகம் இருக்கும்.!!

இந்த வழக்கால அரசுக்கு கிடைச்ச ஆதாயம்..அந்த பத்தாயிரம் ரூபாய் , கோவிட் -19 ஐ சமாளிக்க பயன்படுத்துவதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கட்டுமாறு போடப்பட்ட உத்தரவு!!

அப்டியே தலைமை நீதிபதியின் நம்பிக்கையும் வளர செஞ்சாச்சு!!

இதுக்கு முன்னாலும், இந்த வழக்கு போட்ட வழக்கறிஞர், அற்பமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ததற்காக. 10,000 ரூபாய் அபராதம் போட்டிருக்கு.அதை மறைச்சு, இந்த வழக்கை போட்டுருக்கார்..

இதை தான் ஒவ்வையார் "நல்வழி"யில் குறிப்பிடுகிறார்..

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு

விளக்கம்:
பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

அப்ப இத்தோடு விட்டுடலாமா?

மனுதாரர் இனி ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு பொது நலன் வழக்கையும் சம்பந்தப்பட்ட பெஞ்சிலிருந்து முந்தைய அனுமதியைப் பெறாமல் போட முடியாதுன்னு. தலைமைநீதிபதி தடுத்துள்ளார்.!!

கூர்ந்து கவனித்தால், ஒன்று புலனாகும்..கோரானா காலத்தில், வழக்கு விசாரணை சாதாரணமாக நடக்காத நிலையில், அவசரம் கருதி மட்டும் நடக்கும் நீதிமன்ற பணியின் இடையில், இது போன்ற வழக்குகள் போடப்படுவதன் பின்னணி என்ன?

"கல்லெரிஞ்சு பார்ப்போம்..கிடைச்சா கனி..இல்லைனா ஒன்னுமில்லை"ன்னு போகலாம்னு பொது நல வழக்கு தாக்கலை தப்பாக அர்த்தம் செய்து கொள்ள வைப்பது எது?

"குறுகிய காலத்தில் கிடைக்கக்கூடிய பேர், புகழ்"

அந்த அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும் என்கிறார் ஒவ்வையார்..

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...