திங்கள், 7 ஜூன், 2021

எனது திருமணம் கால தாமதமாக நடந்தது விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அந்த பெண் வேறொருவருடன் சென்று விட்டாள். அவள் மூலம் எனக்கு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணின் சொத்து என் மகளுக்கு கிடைக்குமா?

 ஒரு குழந்தைக்கு அவள் தாயின் சொத்தில் உரிமை உள்ளதா எனக் கேட்கிறீர்கள்..


கீழ்கண்ட ஏதேனும் முறையில் இருந்தால் உங்கள் குழந்தைக்கு அதில் உரிமை கிடையாது:

  1. அவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டிருந்தால். அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்
  2. அவர் முந்தைய கணவர் மூலமாக வந்த சொத்து எனில்.
  3. அவருக்கு தானமாக கிடைத்திருந்தால்…
  4. அது அவர் பெற்றோர் மூலமாக கிடைத்திருந்தால்

பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தை அனுபவிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது என்பதால், உங்கள் மனைவியே எழுதி வைத்தால் தான் உண்டு.

அதுவே உங்கள் சம்பாத்தியத்தில் வாங்கியது என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு அதில் உரிமை உண்டு.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...