சனி, 19 ஜூன், 2021

மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈட்டு பணத்தை நீதிமன்றத்திலிருந்து பெறுவது எப்படி?

 ஒரு பொது இடத்தில் மோட்டார் வண்டியினால் விபத்து நடக்கிறது. அதில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள்.. போலீசார் வருகிறார்கள். வாக்குமூலம் பெறுகிறார்கள்.  திடீரென ஒருவர் வருகிறார்...மருத்துவ செலவுகளை தானே முன்வந்து பார்த்துக் கொள்கிறார். தான் கோர்ட்டில் கேஸ் போட்டு, விபத்துக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவதாக சொல்லி, சில ஏற்பாடுகள் செய்கிறார். அதன் பிறகு பல வருடம் கழித்து, ஒரே ஒரு தடவை மட்டும் கோர்ட்டுக்கு வர சொல்கிறார்..பிறகு பல மாதம் கழித்து, கேஸ் முடிந்து விட்டது என்கிறார். தன் 'ஃபீஸ்' என்று கழித்துக் கொண்டு, .நஷ்ட ஈடு தொகை என்று அவர் கொடுத்ததை வாங்க வேண்டியிருக்கிறது..

எவ்வளவு தொகைக்கு மனு போடப்பட்டது தெரியாது.. எவ்வளவு தீர்ப்பாகியது ..அதுவும் தெரியாது..

80 களின் வாக்கில், மோட்டார் வாகன விபத்து இழப்பு தொகை உத்தரவு பெற்றாலும், அது முழுதும் உரியவர்களுக்கு போய் சேருவதில்லை என்ற புகார்கள் உயர்நீதிமன்றத்திற்கு வரத் தொடங்கின.

மோட்டார் வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பாலோனோர் மைனர்களாகவும், விபத்தில் இறந்தவர் வாரிசுகள்,படிப்பறிவு இல்லாதவர்களாகவும், சட்ட விவரம் தெரியாமல் இருந்ததால், நஷ்டஈட்டு தொகை உரியவருக்கு சரியாக கிடைப்பதில்லை என்றனர்.

அவர்களின் நலன் காக்க, நஷ்ட ஈடு தொகை பெரும் தொகையாக இருப்பதாலும், வாரிசுதாரர்களும் காயம் அடைந்தவர்கள் மைனர்களாக, படிப்பறிவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாகவும், தேவைக்கேற்ப, வழக்கு தீர்ப்பிலேயே இந்த நஷ்டஈட்டு தொகையை, நிரந்தர வைப்பீடு செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறும் .. மனுதாரர்கள் தேவைக்கேற்ப மனு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.. தீர்ப்பாயங்கள், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி பணிக்கப்பட்டனர்

நாளடைவில் இந்த பிரச்சினை குறைந்தாலும்,  இந்த நஷ்டஈடு தொகையை, தேவைக்கேற்ப வைப்பீடு செய்ய சொல்லப்பட்ட போது, அனைத்து வழக்கிலும் நஷ்டஈடு தொகையை வைப்பீடு செய்வது, கட்டாயமாக்கப்பட்டது போல தீர்ப்புகள் போடப்படுகிண்றன…அந்த தொகையை வைப்பீடும் செய்யப்படுகின்றன.

இதனால் தீர்ப்பு பெற்றாலும், அடுத்து அந்த நஷ்டஈடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வைப்பீடு செய்யும் வரை காத்திருந்து, பின்னர் மனு செய்து, உத்தரவு பெற்று, நஷ்டஈடு தொகையை பெற ரொம்பவே "மெனக்கெட" வேண்டியுள்ளது.

இன்றைய பெரும்பாமையான வழக்காடிகள், சட்ட அறிவு ஓரளவு உள்ளவர்களாகத் தான் உள்ளனர்..அவர்களுக்கு தங்கள் நஷ்டஈட்டு தொகையை பாதுகாக்க தெரிகிறது. அதே போல, விபத்தினால், குடும்பத்தின் தலைவரை இழந்து பொருளாதார ரீதியாக தவித்துக்கொண்டிருக்கும் குடும்பம், தீர்ப்பு பெற்றும், உடன் நஷ்டஈடு தொகையை பெற முடியாமல் தவிக்க வேண்டி இருக்கிறது.

மாண்புமிகு நீதிமன்றங்கள், நஷ்டஈட்டு தொகையை வைப்பீடு செய்ய "உத்தரவிடலாம்" என்று சொன்ன விதிமுறைகளை, "கண்டிப்பாக" என்று, இயந்திரத்தனமாக , , அமுல்படுத்துகிறதா என்ன?

உண்மையிலேயே நஷ்டஈட்டு தொகையை, உரியவருக்கு கொடுக்காமல், வைப்பீடு செய்யத்தான் வேண்டுமா? என்ற கேள்வி எழும் போது, இது சம்பந்தமாக, மான்புமிகு உச்சநீதிமன்றம், என்ன சொல்லியுள்ளது என்று பார்ப்போம்.

இந்த வழிகாட்டுதல்களை மான்புமிகு உச்சநீதிமன்றமும், தன் முன் வந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர், திருவனந்தபுரம் எதிர் சுசம்மா தாமஸ் மற்றும் பலர் என்ற பிரபல வழக்கில் ஏற்றுக்கொண்டது. அதையே தேவையான வழக்கில் பின்பற்றவும் சொன்னது.

மேலும் சில விதிமுறைகளை குறிப்பிட்ட நீதிமன்றம், யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் வி. யூனியன் ஆஃப் இந்தியா  வழக்கில், நஷ்டஈட்டு தொகை வழங்குவது குறித்து, சொல்லப்பட்ட கொள்கைகளை தீர்ப்பாயம் மனதில் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொகையை பெறுபவரின் நலன் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், மான்புமிகு உச்ச நீதிமன்றம் "மேற்கொள்ளலாம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அவை கீழமை நீதிமன்றங்களால், எல்லா சந்தர்ப்பங்களிலும் இயந்திரத்தனமாகப் "கண்டிப்பாக " என்று சொன்னது போல், பின்பற்றப்படுகின்றன,

இந்த நிலையை மான்புமிகு உச்சநீதிமன்றமும் கவனிக்காமல் இல்லை...

விபத்தில் பாதிக்கப்பட்டவர்  மனு செய்த பிறகு, 21.7.1993 அன்று இறக்கிறார். மான்புமிகு உயர்நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்கிறது  காப்பீட்டு நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் பணத்தை டெபாசிட் செய்தது ஆனால் ..பரிதாபம்..அந்தோ..பரிதாபம்.... .இந்த பணத்தை எடுத்துக்கொள்ள  வாரிசுகள் அனுமதிக்கப்படவில்லை.!!

உச்சநீதிமன்றம் வரைக்கும்  வந்த  இந்த  ஏ.வி. பத்மா எதிர் ஆர். வேணுகோபால்  வழக்கில், மேலெ சொன்ன சுசம்மா வழக்கில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் கண்டிப்பானவை கிடையாது  என்றது. 

 நஷ்ட ஈடு தொகையைக்  கட்டாயமாக வைப்பீடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் செய்ததையும், இழப்பீட்டுத் தொகையை நீண்ட கால வைப்புத் தொகையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையையும் உயர்நீதிமன்றமும் கவனிக்க தவறி விட்டது என்றது. 

வழக்குத் தொடுப்பவர்,  தனக்கு வழங்கப்பட்ட பணத்தை கையாளுவதில் திறமையானவர் என்று திருப்தி அளிக்க முடிந்தாலும் கூட போதும். .கல்வியறிவற்ற நபர்களின் விஷயத்தில் தான் இந்த வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்ற நீதிமன்றம், பத்மாவின் வழக்கில் வழக்குத் தொடுத்தவர்களின் அவல நிலையை சுட்டிக்காட்டியது.

இந்த வழிகாட்டுதல்களில் சொல்லப்பட்ட வைப்பீடு செய்யும் திட்டம், படிப்பறல்லாதவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் பலனைப் பெறுவதை பார்க்கும் நோக்கில் மட்டுமே போடப்பட்டது,  வழக்காடிகள், தேவையற்ற கஷ்டங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை த்விற்க,   தீர்ப்பாயம் வங்கிக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனாலும் இன்று வரை, நீதிமன்ற ந்டைமுறைகள், முந்திய நிலையே தொடர்கிறது..

அது சரி,.. வழக்காடிகள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நஷ்டஈட்டு தொகையை திறம்பட கையாளக்கூடிய அளவில், படித்தவர்கள் என்று தீர்ப்பாயங்கள் எப்படி தெரிந்துக் கொள்வது?

இதற்கு வழிகாட்டுகிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசர் டாக்டர் கே ஜே தாக்கர்,

A Discussion On How To Scotch The Quandary Of Claimants Post Deposit Of Amount Of Compensation In Claim Cases

  1. மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயங்களின் (MACT)) நீதிபதி சாட்சி விசாரணை போது விழிப்புடன் இருக்க வேண்டும் .
  2. நஷ்ட ஈடு தொகை உரிமை கோருபவர் அல்லது உரிமை கோருபவர்கள் சாட்சி பெட்டியில் நுழையும் போது, ​​, அவர்களுக்கு நஷ்ட ஈடு தொகையை ஒப்படைக்கக் கூடிய அளவில்  தகுதியுள்ளவரா என்ற  ஆதாரங்களை சாட்சிய சட்டம் 1872 இன் பிரிவு 165 யை பயன்படுத்தலாம்,
  3. அவரிடம் சில கேள்விகளை கேட்டு, அவரின் புரிதலின் அளவைக் கண்டறிய முடியும். அவரின் கல்வித் தகுதிகளின் நிலையை சரிபார்க்க உரிமை கோருபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இது  கேள்வி பதில்களின் வடிவத்திலும் இருக்கலாம் உதாரணமாக, இறந்தவரின் பிறந்த தேதி அல்லது இறந்த தேதி என்ன? அவர் எங்கே படித்தார்? எந்த ஆண்டில் அவர் 10 அல்லது 12 வது தேர்வில் தோன்றினார் ? அவர் பட்டம் பெற்றாரா இல்லையா ? வழக்குத் தொடுப்பவர் பணத்தை எங்கே வைத்திருப்பார்…வங்கியிலா அல்லது வீட்டிலா?, அவருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?, பரஸ்பர நிதிகள், பங்கு மற்றும் பங்குகள், பத்திரங்கள், கடனீடுகள், பத்திரங்கள் போன்றவற்றில் அவர் முதலீடு செய்கிறாரா? போன்ற இந்த பொதுவான கேள்விகளும் உரிமை கோருபவரின் பதில்களும் அவர்,  கல்வியறிவு பெற்ற பிரிவின் கீழ் வருகிறாரா என்பதையும் கல்வித் தகுதி தொடர்பான கேள்விகள், இறந்தவரின் உரிமைகோருபவர் அவரது  நிதி விவகாரங்களை நிர்வகிக்கும் நிலையில் இருக்கிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க  இது  உதவும்.
  4. இத்தகைய கேள்விகள் நிச்சயமாக இறந்தவரின் உரிமைகோருபவர் / வாரிசுகள் கல்வியறிவற்ற, அரை கல்வியறிவு அல்லது கல்வியறிவு பெற்றவர்கள் என்று எந்த பிரிவின் கீழ் வருகிறார்களா என்பது குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வழிவகுக்கும்.
  5. இறந்தவரின் உரிமைகோருபவர் / வாரிசுகள்  கல்வியறிவற்ற,  அரை கல்வியறிவு பெற்றவர் /இல்லாதவர் என்று  தீர்மானிக்கும் நிலையில், தீர்ப்பாயம் நஷ்டஈட்டு தொகையை முதலீடு செய்வதா அல்லது அதை தள்ளுபடி செய்வதா என்று முடிவு செய்ய முடியும்.  அதன்படி வழிகாட்டுதல்களுடன் வழங்கப்படும் தீர்ப்பு, வழக்குத் தொடுப்பவருக்கு பொருந்தும் 
  6.  மேலும் அது, எதிர்காலத்தில் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு,  சிக்கலானதாக இருக்காது.
  7. கல்வியறிவு பெற்ற நபர்கள் தொடர்பாக, அந்த வழிகாட்டுதல்களில் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைகளை நாடுமாறு தீர்ப்பாயங்கள் அறிவுறுத்தப்பட்டன.. மேலும் இந்த வழிகாட்டுதல்கள் படிப்பறிவில்லாத உரிமை கோருபவர்களின் நலனுக்காக மட்டுமே நஷ்டஈடு தொகைகள் சாதாரணமாக வைப்பீட்டில் வைக்கப்படுவதாக கருதப்பட வேண்டும். என்றும் தான் உச்சநீதிமன்றம் பத்மா வழக்கில் சுட்டியுள்ளது..

ஒரு தசாப்தத்திற்கு முன்னரே தளர்த்தப்பட வேண்டிய நிலைப்பாடு, இப்போது மிகைப்படுத்தப்பட்டிருப்பதை சமீபத்திய அனுபவம் நிரூபித்துள்ளது, பல உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவிலிருந்து தெரிகிறது, 

பல தீர்ப்பாயங்கள் நஷ்டஈடு பணத்தை கோருபவருக்கு, அதை கொடுக்க மறுத்துள்ளன. தொடர்ந்து தீர்ப்பாயங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றாததால், நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவு இழப்பீட்டை விடுவிப்பதற்கான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் வரை வந்து வழக்காடிகள் பெற வேண்டியுள்ளது..இது எவ்ளோ பெரிய கொடுமை!!

சமீபத்தில் மாண்புமிகு பம்பாய் உயர்நீதிமன்றத்தால் , இந்த வழக்கில் போடப்பட்ட உத்தரவும் இதையே காட்டுகிறது. 

இந்த தொற்றுநோய்களின் போது , மாண்புமிகு கர்நாடக உயர்நீதிமன்றம் மோட்டார் விபத்து மற்றும் நிலம் கையகப்படுத்தும் விஷயத்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது..

இன்னொரு பிரச்சினையும் உள்ளது...

முன்னர் எல்லாம், தீர்ப்பு, வந்தவுடன், காப்பீடு நிறுவனங்களும், வங்கிகளும், நஷ்ட ஈடு தொகையை நீதிமன்றத்தில் கட்டி விடும். அதை நீதிமன்றம் தான், ஏதேனும் ஒரு வங்கியில் வைப்பீடு செய்யும்.

ஆனால், சமீப காலமாக அதிலும் ஒரு மாற்றம்…

"மோட்டார் விபத்து உரிமை கோரல்கள் வருடாந்திர வைப்பு" (MACAD) என அழைக்கப்படும் வங்கிக்கணக்கை வங்கிகள் தொடங்கியுள்ளன. இத்தகைய திட்டங்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பிற முன்னணி வங்கிகளால் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள இந்த நஷ்டஈட்டு வைப்புத்தொகையை , நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பெற்றால் தான் முன்கூட்டியே பணம் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது, இந்த திட்டத்தில், பணத்தை முன்கூட்டியே வழங்குவதற்கான எந்த வசதியும் இல்லை இந்த நிலையான வைப்புத்தொகை அவ்வப்போது புதுப்பிக்கப்படும். 

 இது ஏற்கெனவே, விபத்தின் அதிர்ச்சியை அனுபவித்த வழக்காடிக்கு தீங்கு விளைவிக்கும், சட்டபூர்வமாக தனக்குச் சொந்தமான தொகையை கண்ணால் பார்க்கவே .அவர்கள் மேலும் அலைய வேண்டியுள்ளது..

இது போதாதென்று, காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும், இந்த வைப்பீடு தொகை முதிர்ச்சியடைந்த நிலையில் டி.டி.எஸ் மூலத்தில் கழிக்கப்படும் வரியைக் கழிக்கின்றன,

இந்த டி.டி.எஸ் விகிதப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி, மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் . முன்பு வந்தது இந்த வழக்கு.

"மொத்த வட்டி தொகையும், இழப்பீட்டுத் தொகையின் மொத்தத் தொகையின் அடிப்படையில் திரட்டப்பட வேண்டும், இது நிதியாண்டு முதல் நிதியாண்டு அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும், ஒரு நிதி ஆண்டில் வட்டி ரூ .50,000 / - ஐ விட அதிகமாக இருந்தால்,  காப்பீட்டு நிறுவனம், வருமான வரிச் சட்டம், 1961 இன் 194 ஏ (3) (ix) வழங்கப்பட்டபடி 'மூலத்தில் வரி விலக்கு' என்ற தலைப்பின் கீழ் பொருத்தமான தொகையை கழிக்க உரிமை உண்டு. எந்தவொரு நிதியாண்டிலும் வட்டி அளவு ரூ.50,000 / - ஐ விட அதிகமாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட வருமான வரி சான்றிதழை கேட்காமல், உரிமைகோருபவர் தொகையை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்"என்றது.. -

ஏற்கனவே அதிக வேலைப்பளு கொண்ட நீதிமன்றங்களுக்கு, பணம் வழக்காடிக்கு சொந்தமானது என்பதை ம்ன்தில் நிறுத்தி, சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அதிக விழிப்புடன்  உச்சநீதிமன்றம் சுசம்மா வழக்கில் சொன்னபடி, வழிகாட்டுதல்களை முறையாகச் செயல்படுத்த நேரம் இப்போது வந்துள்ளது..

 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...