தலைமை நீதியரசர் ரமணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமை நீதியரசர் ரமணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

ஆந்திர முதல்வர் தன் மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதிகள் மேலேயே குற்றம்சாட்டுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

 நீதிபதிகள் மென்மையான தாக்குதல் இலக்காக கருதப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகி இருக்கிறது. நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர்”

இப்படி நீதியரசர் ரமணா சொல்லி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டு ஆந்திர முதல்வரிடமிருந்து ஒரு கடிதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போயுள்ளது.

2018 ஜனவரியில் 4 நீதியரசர்களின் பத்திரிகை மாநாடு நடந்ததில் இருந்தே உச்ச நீதிமன்றம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதில் ஒரு அரசியலமைப்பு தலைமையிடமிருந்து ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மீது எழுதப்பட்ட குற்ற வாசிப்பு ஒரு கவலைக்குரியது தான்.

அதுவும் அவர வரும் ஏப்ரல் 2021ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஆக இருக்கும் நிலையில்…

படிமப்புரவு கூகிள்

இதில் கவனிக்க வேண்டியது…இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட காலம்…

நீதியரசர் ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அக்டோபர் 9 ந் தேதி, ஜெகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை திரும்ப தொடர ஆரம்பித்த பிறகு …

இதற்கு முன்பு இது போல மக்கள் பிரதிநிதிகள் நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தியதுண்டா?

இதிலும் ஆந்திரா தான் முன்னோடியாக உள்ளது.

1961ல அப்போதைய முதலமைச்சர் சஞ்சீவய்யா ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரா ரெட்டி மீது சில குற்றம் சுமத்தி, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார்.நீதியரசர் சென்னைஉயர நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்.

ஆறு வருடங்கள் கழித்து…

அதே காட்சிகள் அரங்கேறுகிறது.

இப்போது எழுதுபவர் பிரதமர் இந்திரா காந்தி. அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கோலக்நாத் வழக்கில் தீர்ப்பு வழங்கிய பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் கொக்க சுப்பாராவிற்கு எழுதினார்.!!

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி, ஏற்கெனவே ஆந்திர உயர நீதிமன்ற உத்தரவுகளால் பெருத்த நெருக்கடியில் உள்ளார்.

கடந்த 18 மாதங்களில் 300 பொதுநல வழக்குகள் அரசு செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டு ஆந்திர உயர் நீதிமன்றம் அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக ஆளுங்கட்சித் தரப்பில் சொல்லப்படுகிறது.

அரசின் ஒவ்வொரு சிறு செயலுக்கும் பொது வழக்கு பாய்ந்து அரசு இயந்திரம் முடங்கும் நிலைக்கு வந்துள்ளதும், சமீபத்தில் உயர்நீதிமன்றம், முன்னாள் அடவகேட் ஜெனரல் ஸ்ரீனிவாஸ் மீது பதியப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டிற்கான FIR க்கு தடை விதித்து மேற்கொண்டு அந்த வழக்கில் விதித்த gag உத்தரவும் இந்தக் கடிதத்தின் பின்புலம் எனப்படுகிறது.

.எந்தக் குடிமகனும் ஒரு தவறை சுட்டி காட்டி நாட்டின் தலைமை நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதும் உரிமை உண்டு என்பது உண்மை தான்

அந்தக் குற்றச்சாட்டுகள் சரி தானா என ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது தலைமை நீதியரசரிடம் உள்ளது.

"யதோ தர்மஸ் ததோ ஜயா"


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...