பக்கிங்க்ஹாம் கால்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்கிங்க்ஹாம் கால்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மே, 2022

ஆக்கிரமிப்பு என்றால் என்ன? உதாரணம் கூறமுடியுமா?

சென்னை மைலாப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற சமயம், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி சாவு.......

மக்கள் ஆவேசம்....வீட்டை இடிக்கவிடாமல் தடுத்தனர்

அதிகாரிகள் அங்குள்ள மக்களை வசைபாடியாடியே தொடர்ந்து அங்குள்ள வீடுகளை இடித்து வருகின்றனர்..... .

''திங்கட் கிழமை நாங்கள் உச்ச நீதிமன்றம் போக உள்ளோம். அதற்குள் இந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டை இடிக்கின்றனர்

இத்தனைக்கும் காரணம் ஒருவர் போட்ட பொதுநல வழக்கு தான் '

நாங்கள் பல தசாப்தங்கலாக இங்கு தான் வாழுகிறோம் சொத்து வரி கட்டியும் ஆதார் கார்டு பெற்றும் எங்களை இவ்வளவு மோசமாக நடத்துகின்றனர்" .

என்று அங்குள்ள மக்கள் குமுற,....

நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருக்கும் போது அரசு இப்படி செய்யலாமா ' ஏன், இந்த அவசரம்?' என்ற கேள்வி உள்ளுக்குள் எழ '

ஏற்கெனவே அந்த பகுதியை 'சேரி' என்ற குடிசைப்பகுதி என்று 1973 லேயே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையி;ல் இது போன்று வீடுகளை பொதுப் பணித்துறை இடிப்பது தவறு . "

என்று அவர்கள் கூறுவதை கேட்டபோது என்ன தான் நிலவரம் என்று அறிய தேடியபோது, இந்த கேள்வியும் கண்ணில் பட்டது.

எது ஆக்கிரமிப்பு?

தனக்கு சொந்தமில்லாததை தன்னுடையதாக எண்ணுவது மட்டுமல்லாமல், அதில் உரிமை கோரும் விதத்தில், அதன் உரிமையாளர் அனுமதியின்றி தன்னுடைய அனுபவத்தில் அதை வைத்திருத்தல்....

௨௦௦ ஆ ண்டுகளுக்கும் மேலான பழமையான பக்கிங்ஹாம் கால்வாய பற்றி இன்று அதிகம் அறியப்படவில்லை. ""மதராஸ் பட்டினம்:: வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது!!

இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாதவர்களுக்கு………அப்படியே அந்தப்பாட்டின் பின்னணி இசையை மனதுக்குள் இசைத்துக் கொண்டே மேலும் படியுங்கள்!!

பக்கிங்ஹாம் கால்வாய் உப்பு நீர் கொண்ட முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்று..

இது கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக உள்ள து

ஆந்திராவில் உள்ள பெட்டகஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது

பக்கிங்ஹாம் கால்வாய் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் புதுச்சேரி அருகே மரக்காணம் மற்றும் தமிழ்நாடு வழியாக நீளும்

இது நகர எல்லைக்குள் வடக்கு கால்வாய், தெற்கு கால்வாய் மற்றும் மத்திய கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது வாமிநகர், கிரீன்வேஸ், ராஜா அண்ணாமலை புரம், முண்டககன்னியம்மன், லைட் ஹவுஸ், திருவல்லிக்கேணி , மந்தவெளி, மயிலாப்பூர், சேப்பாக்கம், கேசவபெர்மாள்புரம் என்று நகரின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

வெள்ளம் வரும் போது தடுப்பானை போன்று செயல்படும் இது,

சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர், குடிசைவாசிகள் என்று ஆரம்ப ஆண்டுகளில் இந்த கால்வாயில் இருந்தவை , காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து. பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் பல சேரிகள் வந்துவிட்டன. சில சேரிகளில கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் முன்பாகவே வந்தவை.

இந்த கால்வாய் கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் ஆங்கிலேயர்களால் பிரிட்டிஷ் தொழிலதிபரின் வர்த்தக நலன்களுக்காக அவர்கள் வழிசெலுத்தலுக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது சென்னை எல்லைக்குள் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளை மட்டுமே கொண்டு செல்கிறது ஆங்கிலேயர் காலத்தில் 60 மீட்டராக இருந்த கால்வாயின் அகலம், வீடுகள், தொழிற்சாலைகள் என்று சில பகுதிகள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், வெறும் ஆறு மீட்டராக பரப்பளவு குறைந்துள்ளது

அதற்கு காரணம்…… தமிழ்நாடு அரசின் சரியான கால்வாய் மேலாண்மை இல்லாமை.!!

நீர் நிலைகளை எந்த காரணம் கொண்டும் அது காய்ந்த நிலையில் இருந்தாலும் யாருக்கும் தாரை வார்த்து கொடுக்க கூடாது என்று நமது உயர் நீதிமன்றமும் சரி உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி சொல்லி வருகின்றன.

அப்படியிருக்க பொதுப்பணித்துறையின் வசம் இருக்கும் இந்த கால்வாயானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது!!

2015ல் ஒரு பெரு வெள்ளம் சென்னையில் வந்ததே நினைவிருக்கிறதா? அப்போது ஒரு ரிட் மனு சென்னை உயர் நீதியான்றத்தில் பொது நல வழக்காக பதியப்பட்டு, ' இந்த அசம்பாவிதத்துக்கு யார் காரணம்/? என்று ஒரு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரித்து குறைகளை சரி செய்ய வேண்டும் என்று ராஜீவ் ராய் என்பவரால் போடப்பட்டது. அப்போது இந்த கால்வாயின் கரையில் இருந்த 408 ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டு மற்ற சுமார் முன்னூறு ஆக்கிரமிப்புதார்களின் ஏக எதிர்ப்பின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அப்படி அகற்றியும். கால்வாயின் முகப்பு பகுதியி]லிருந்து வெறும் நாற்பது அடிகள் மட்டுமே கிடைக் கின்றன என்றும் இப்போதைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே அதன் முழு விஸ்தீரணம் கிடைக்கும் என்கிறது இந்த ஆக்கிரம்மிப்புகளை அகற்றும் பொதுப் பணித்துறை.

ஆனால் 'சேரி' என்று அரசு உத்தரவு இருக்கும் போது, அங்குள்ள சேரிவாசிகளை குடிசைப்பகுதி மாற்று வாரிய சட்டபப் பிரிவு 11 படி அறிவிப்பானை கொடுத்து தானே அகற்ற வேண்டும் என்றால் அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளது அரசு தரப்பு.

அரசு ஆணை அப்படி போடப்பட்டாலும், இதுநாள் வரை பொதுப்பணி துறை, அந்த நிலத்தை குடிசை பகுதி மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்படியிருக்கும் போது, அந்த சட்டம் இவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது" என்கின்றனர். ஆனால் அரசு தானே அதை சேரி என்று ஆணை பிறப்பித்தது. பிறகு அந்த சட்டப் பிரிவின்படி தானே அது நடக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்…..

, பொது இடத்தில் உள்ள நீர் நிலையை சேரி என்று அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச், டி. கே. சண்முகம் எதிர் தமிழக அரசு வழக்கில் (2015) 5 LW 397 (FB), நீர் நிலைகள், யாருக்கும் மாற்ற முடியாதது யாராலும் மாற்ற முடியாதது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஒரு பகுதியை சேரி என்று அறிவிப்பதே அதில் அடிப்படை வசதியை கொண்டு வந்து மேம்படுத்த முடியுமா என்று முயல்வதற்கே. ஆனால் கால்வாயின் கரையில் உள்ள இந்த பகுதிக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் தான், 1973 ல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அது கிடப்பில் போடப்பட்டது என்று தெரிய வருகிறது. . மேலும் டவுன் நில அளவீடு பதிவேடுகளின்படி பக்கிங்காம் கால்வாய் என்ற வகைப்பாட்டில் தான் இந்த வீடுகள் வருகின்றன .இதை ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்……

இங்கல்ல…... சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு!!

அரசு தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று இவர்கள்மனு செய்து விட்டு அதை பின்னர் வாபஸ் வாங்கியுள்ளனர். மேலும் இந்த அரசு ஆணையை தவிர குடிசை மாற்று வாரியம் இவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ததாக எந்தவித ஆவணமும் இவர்கள் வசம் இல்லை. மேலும் இந்த இளங்கோ தெரு என்பதும் இவர்களே உருவாக்கியது தான் என்றும் அரசு அந்த தெருவை அமைக்கவில்லை என்றும் ஒத்துக்கொண்டுள்ளனர். அதனால் தான் உயர் நீதிமன்றம் கூட இவர்களில் நூற்றுக்கனக்கானோர் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது, இந்த அரசு ஆணையை வைத்துக் கொண்டு, பொது நிலத்தில் அதிலும் நீர் நிலையில் எந்த உரிமையும் கொண்டாட முடியாது என்றும் இந்த அரசு ஆணையினால் மட்டுமே, இவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற மாற்றமுடியாத உரிமை ஏதும் கிடைத்து விடவில்லை என்றும் தெளிவு படுத்தியது

மேலும் .Sarvepalli Ramaiah (Died) vs. The District Collector [Civil Appeal No.7461 of 2009] decided on 14.03.2019, என்ற வழக்கில் கூட, நீர்நிலைகள் பாதுகாக்க, புனரமைக்க சொன்னதோடு அல்லாமல், காய்ந்த நிலைக்கு போனாலும், அவற்றை யாருக்கும் மாற்றம் செய்து கொடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

நீர்நிலைகளை எந்த விதத்திலும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது, அதை அரசும் அனுமதிக்க கூடாது என்று சொன்ன தீர்ப்புகளில் சில…. (1) Susetha vs. State of Tamil Nadu, reported in (2006) 6 SCC 543; (2) M.C.Mehta (Badkhal and Surajkund Lakes Matter) vs. Union of India, reported in (1997) 3 SCC 715 and (3) Intellectuals Forum v. State of Andhra Pradesh, reported in (2006) 3 SCC 549.”

நமது உயர் நீதின்றம் கூட, , நிலப்பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம், "இந்த நிலம், நீர் நிலை வகைப்பாட்டில் வரவில்லை" என்ற உறுதியை பத்திர பதிவு அலுவலகங்கள் பெற வேண்டும் என்றும் அதே போல நீர்நிலைகள் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் டான்ஜெட்கோ விற்கு அனுப்ப, அது அங்கு வீடு கட்டி மின்வசதி கோருபவருக்கு அனுமதி அளிக்க கூடாது என்கின்றது.

இந்த விவகாரத்தில் கூட, உயர் நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்கு பிறகும் காலி செய்யாதவர்களின் வீடுகளில் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தான் இன்றைய தேதி வரையில் நிலவுகிறது. இப்படி ஒவ்வொரு அடியாக தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும், இவர்கள் சொல்வது போல திடீரேன ஒரு நாளில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது.

'தனி நபர் தொடர்ந்த பொது நல வழக்கில் போடப்பட்ட உத்தரவுக்கு இவ்வளவு மரியாதை செய்கின்றனர் அதிகாரிகள்; என்று ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. உண்மையில் 2008 ல் முதன் முதலில் போடப்பட்டது பொது நல வழக்கு அல்ல. ஆனால் அதில் கோரப்பட்ட பரிகாரம், பொது நலன் சம்பந்தப்பட்டது என்பதால் அவ்வாறு மாற்றப்பட்டது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் போட்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போயினர். 2011 ல் இந்த எஸ்.எல்.பி யில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது இதற்கிடையே அரசு தரப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்த சொல்லி கடிதம் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நடவடிக்கை தாமதம் ஆகவும் , உச்ச நீதிமன்ற உத்தரவு அமுலபடுத்தவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. இன்னொன்று… 11.02.2011 லேயே உச்ச நீதிமன்றம், உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சொல்லியுள்ளது. அதுவே இறுதி நிலை என்னும்போது, அதன் பிறகு வெவவேறு காரணங்களை சொல்லி மனுக்கள் போடப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே சென்னையில் பெரு வெள்ளம் வந்து, நிறைய பேரின் உயிரை பறிக்க, உயர்நீதிமன்றத்தின் கோபத்தை தாங்க முடியாமலும், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இணங்கியும், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் கடுமையாக எதிர்த்த மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடுக்கின்றனர். அதில் உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவையும் மறைக்கின்றனர். பல சங்கதிகள் உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவில் இடம்பெறவில்லை. இருந்தாலும், உயர் நீதிமன்றம், பெருந்தன்மையோடு அதை மன்னித்து, மனுதாரர்கள் ஆக்கிரப்பாளர்கள் என்பது முடிவாகியுள்ளதால், அவர்கள் இங்கு தொடர்ந்து தங்க வசிக்க முடியாது. என்றும் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் குடிசை பகுதிமாற்று வாரியம் கொடுக்கும் மாற்று இடத்தை வாங்கி கொண்டு பள்ளிப் படிப்பு படிக்கும் அவர்கள் குழந்தைகள் சிரமப்படாமல் இருக்க, 2018 சூன் 15 க்குள் அங்கு குடி செல்லவேண்டும் என்றது /https://indiankanoon.org/doc/191133807/

ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். அவர்களும் இந்த தீர்ப்பை உறுதி செய்தனர்.. அதே வேளையில், தாங்கள் ஆக் கிரப்பாளர்கள் அல்ல என்ற இவர்கள் வாதத்தை உயர்நீதிமன்றத்தில் கொண்டு முன் வைக்க அனுமதி அளித்தது. திரும்பவும் 2019ல் உயர்நீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி ரிட்\ மனு. அதில் தான் நீதியரசர்கள் வேணுகோபால் அவர்களும் நீதியரசர் வைத்தியநாதன் அவர்களும், மேலும் இந்த கால அளவை 10.06.2019 வரை நீடித்து தீர்ப்பு அளிக்\கின்றனர். https://indiankanoon.org/doc/15274525/

இந்த காலக் கெவிற்குள் ஒத்துழைக்காத ஆக்கிரப்மிப்பாளர்களின் வீட்டை இடித்துக்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு போதிய போலிஸ் பாதுகாப்பு வழங்க சொல்லி உத்தரவும் வருகிறது. போன வருடம் சுமார் முந்நூறு பேர்களை அகற்றி மாற்று இடம் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்கின்றனர்.

பக்கிங்ஹாம் கால்வாய் நீர்நிலை முழுவதையும் தேசிய நீர்வழிப் பாதையாக (காக்கிநாடா-புதுச்சேரி கால்வாய்கள் மற்றும் களுவேலி குளம், பத்ராசலம் ராஜமுந்திரி நீட்சி, கோதாவரி நதி மற்றும் வஜீராபாத் விஜயவாடா நீட்சி ஆகியவை தேசிய நீர்வழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.. தேசிய நீர்வழிச் சட்டம், 2016 வந்தபிறகு, கிருஷ்ணா நதி) சட்டம், 2008, ரத்து செய்யப்பட்டது, ஆனால் உள்நாட்டு நீர்வழிச் பாதையின் நோக்கத்திற்காக முழு பக்கிங்ஹாம் கால்வாயும் தொடர்ந்து தேசியமயமாக்கப்பட்டது. எனவே, பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் உள்ள அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் அல்லது ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனப்படுகிறது..

மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் 14 அமைக்க முன்மொழியப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை, மேலும் வெள்ளஅபாயம் ஏற்ப்படும் போது, அதை தடுப்பதற்கான போதிய நீண்ட கால திட்டங்கள் ஏதும் நம் கைவசம் இல்லை.

நீர்நிலைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் மேம்படுத்தவும் உதவும் நோக்கில் தமிழ்நாடு தொட்டிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007 ஐ அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் நோக்கமே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நீர்த்தேக்கத்தின் சரியான எல்லையைக் கண்டறிவதும், அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிவதும் அகற்றுவதற்கானதும் ஆகும். .. துரதிர்ஷ்டவசமாக, மேற்குறிப்பிட்ட அரசு ஆணைகளை நிறைவேற்றுவதன் மூலம், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களை அரசு தீவிரமாக ஊக்குவிக்கிறது மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் அவர்களின் உடைமைகளை முறைப்படுத்தவும் முனைகிறது என்று தான் சொல்லவேண்டும்.

மாற்று இடம் கண்டறிந்து ஆக்கிரப்பாளர்களை அங்கு குடியேற்றுவது என்பது அரசின் கடமை அதை செய்யாமல், நீர்நிலை ஆக்கிரப் புகளை களைவதை காலம் தாழ்த்த கூடாது என்ற நமது உயர் நீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போதும் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கிறது. நாட்டில் நிலவும் சூழலையும் வழக்கின் தன்மையையும் நன்கு அறிந்த முன்னாள் துணை முதல்வரும் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையிலேயே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடைபெறுகின்றன என்பதை நன்கு அறிந்தும் மாற்று கருத்து சொல்லியிருப்பது. துரதிர்ஷ்டமானது என்று தான் சொல்லவேண்டும்

அரசுக்கு மட்டுமா நீர்நிலைகளை காப்பாற்றும் கடமை உள்ளது.? நமக்கும் தான்.

காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட தேசியச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்களிடம் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-ஏ அறிவுறுத்துகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது 19 மற்றும் 21 பிரிவு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள்,உட்பட அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் நோக்கத்தைப் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது நமது தமிழக முதல்வர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதியின் , தற்போது கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கப்படும் என்றும் சொல்லியிருப்பது நல்ல செய்தி தானே !

அது சரி …….அசையா பொருளை மட்டும் தான் ஆக்கிரமிப்பு செய்ய முடியுமா?

அப்படியானால், தனக்கு சொந்தமான மனைவியை/கணவனை ஆக்கிரமிப்பு செய்வது ??

https://m.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q

https://www.youtube.com/watch?v=a9UMpqZbr6I












சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...