இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்விலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் முற்பட்ட வகுப்பினருக்கு (EWS) இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

 என் கருத்து இருக்கட்டும். சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இரண்டு நாட்களுக்கு முன்பு இது சம்பந்தமான வழக்கு ஒன்று வந்தது.

மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பிய ஒரு பெண் மருத்துவருக்கு, அவர் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள்ளாக இருப்பதால், EWS சான்றிதழ் கேட்டும் தரவில்லை என்று வழக்கு

அவருக்கு உதவிக்கு வந்த நீதிமன்றம், இந்த இடஒதுக்கீடு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இன்று இட ஒதுக்கீடு ஒரு தீவிர பிரச்சினையாக உள்ளது.சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினருக்கும் இடையே வேறுபாட்டை புகுத்தியுள்ளது. அறிவார்ந்த மற்றும் திறமையான மானவர்கள், கல்வியில் வாய்ப்பு பெற முடிவதில்லை.ஆனாலும் அந்த திறமையை பெறாத, மாணவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்த வாய்ப்பை பெறுகிறார்கள். இதனால் நிறைய மானவர்களால் அவர்கள் லட்சியக் கனவை அடைந்து வெற்றி பெற முடியவில்லை. ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் மேலெழ வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால். மேற்படிப்பின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல்…

அதேபோலஇடஒதுக்கீடு என்பதற்காக பொருளாதார வசதி இல்லாத போதும், முற்பட்ட வகுப்பு என்பதாலேயே வாய்ப்பு மறுக்கப் படக்கூடாது என்பது தான் EWS கொண்டு வரப்பட்டதன் நோக்கம்.

இந்திய மேற்படிப்பில், தாழ்த்தப்பட்ட,, பிற்படுத்தப்பட்ட, மலைஜாதியினர்,மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அந்த ஒதுக்கீடு சில சமயம், தகுதியுள்ள மாணவனை தனக்கு விரும்பிய படிப்பை தேர்வு செய்ய முடியாமல், அவனுக்கு விருப்பம் இல்லாமல் வேறு படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.மனுதாரரும் அது போன்ற ஒரு நபர். mbbs படிப்பை சோதனைக்கு இடையே முடித்து, தற்போது அதில் மேற்படிப்பு மேற்கொள்ள எண்ணுபவர்.

மனுதாரரை போன்ற கடின உழைப்பால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், தாங்கள் பொருளாதார வசதியில்லாத பிரிவை சேர்ந்திருந்தும் தேர்வின்போது ஒரே மாதிரி நடத்தப்படுவதில்லை என்று உணருமாறு வைக்கப்படுகிறார்கள்.மனுதாரர் ஒரு மெரிட் மாணவி என்பதாலும் அவர் வருமானம் ரூபாய் 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும்போதும் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கவேண்டும்."

இவ்வாறு குறிப்பிட்டு , மனுவை அனுமதித்து நீதியரசர் புஷ்பா சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...