திங்கள், 7 ஜூன், 2021

ஒருவர் அவர் வாழ்ந்த வீட்டின் அனுபவ பாத்தியத்தை மட்டும் வைத்து, பத்திரம், ஆவணங்கள் ஏதும் இன்றி உயில் எழுத முடியுமா? எழுதினால் அது செல்லுமா?

 


 சொந்த வீட்டை வாடகைக்குன்னு விட்டு, வாடகை ஒழுங்கா குடுக்கலைனாளும் பரவாயில்லை, இருக்கிற காலம் வரைக்கும் இருந்துட்டு போகட்டும்னு பெரிய மனசோட விட்டு வச்ச வீட்டு சொந்தகாரர்கள் எல்லாம் , இதை படிச்சுட்டு டென்ஷன் ஆயிர போறாங்க😂

உயில் எழுதுவது எதற்கு?

தன்னுடைய காலத்திற்கு பிறகு தனக்கு சொந்தமான சொத்தை யார் அனுபவிப்பது என்ற உரிமையை கொடுப்பது…

இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

  • சொத்து தனக்கு சொந்தமாய இருக்க வேண்டும்.
  • அதனை அனுபவிக்க மாற்றி கொடுக்கும் உரிமை

அனுபவ பாத்யதையால் .உரிமை வந்தது என்றால், முதலில் அதை கொண்டு, அந்த சொத்தை தன் பெயருக்கு சட்ட பூர்வமாக மாற்ற வேண்டும்.

வெறும் அனுபவம் மட்டுமே கொண்டு உரிமை கொண்டாடும் போது, அதை நிரூபிப்பது சற்று கடினம்.

அதை அவர் செய்யாமல் இன்னொருவரிடம் தள்ள முடியாது

அப்படியே எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர் உயில் எழுதி வைத்தாலும், அது செல்லுமா என்பது சந்தேகமே.

அவர், சொத்து உரிமையாளர் வந்து கேட்கும்போது, கோர்ட்டு, கேஸ் என்று அலைய வேண்டும்.

இந்த சமயம் படித்த ஒரு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பணக்காரர், நல்ல குளிர் காலம் ஒன்றில், அலுவலகத்தில் இருந்து இரவு திரும்பும் வழியில், ஒரு முதியவரை எந்த போர்வையும் இல்லாமல் இருப்பதை பார்த்தார். தன்னால் கம்பளி ஆடை இல்லாமல் வெளியே வரமுடியாத இந்த குளிரில் அவரால் எப்படி இருக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டு போய், அவரிடம் கேட்கிறார். முதியவரிடம் வேறு துணி இல்லாதது பார்த்து, தான் வீட்டில் போய் ஒரு கம்பளி போர்வையை கொண்டு வந்து தருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறார்.வீட்டில் மற்ற வேலையில் மறந்து போகிறார். காலையில் ஞாபகம் வந்து, அவசரமாக கம்பளி போர்வையுடன் போனபோது, அந்த முதியவர் அங்கு இறந்து கிடந்தார். பக்கத்தில் ஒரு தாளில் இப்படி எழுதப்பட்டிருந்தது:"எனக்கு போர்வை இல்லாதபோது, குளிர் எனக்கு உரைக்கவில்லை. ஆனால் கம்பளிப் போர்வை வரும் என்ற நம்பிக்கையே, இப்போது குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் செய்து விட்டது"

படிமப்புரவு கூகிள்

அது தான் நம்பிக்கை பொய்த்து போனால் ஏற்படுத்தும் வலி, வேதனை…

உயிலை எழுதும் போது ஏன் வில்லங்கத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்?

முறையாக சொத்தின் பெயர் மாற்றம் செய்து விட்டு, உயில் எழுதி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...