பள்ளி இல்லை..கட்டணமும் இல்லை..
வலைதளத்தில் எங்கே பார்த்தாலும் பெற்றோரின் இந்த போர்குரல் !!
போன கல்வி ஆண்டில் முழு கல்வி கட்டணத்தையும் கேட்டு தனியார் பள்ளிகள் அடம் பிடிக்க, பெற்றோர் கோர்ட்டுக்கு போக, கடைசியில், 75% கல்வி கட்டணம் வசூலிதது கொள்ளலாம் என்றது சென்னை உயர் நீதிமன்றம்.
https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_521.htmlஇத்தனைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றம் வரை போன வழக்குகளில் 100% கல்வி கட்டணம் பெற்றோர் செலுத்த தான் வேண்டும் என்றும்
ஆறு தவணை முறைகளில் மார்ச் 2021லிருந்து கட்டணத்தை செலுத்தலாம் என்றது…அதுவும் முடியாதவர்கள் பள்ளியோடு பேசிக்கொள்ளுங்கள் என்றது என்றும் செய்திகள் வந்ததே....
https://trak.in/tags/business/2021/02/10/shocking-supreme-court-orders-all-parents-to-pay-100-school-fees-for-lockdown-period/வாங்கிய கட்டனத்திற்கு, ஒரு பிரேக் அப் விவரங்கள் இல்லை..இத்தனைக்கும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "லாக் டவுன் போது செயல்பாட்டு செலவுகளை பள்ளிகள் சேமித்துள்ளன; பயன்படுத்தப்படாத வசதிகளுக்காக மாணவர்களை வசூலிக்க முடியாது: " என்று சொல்லியுள்ளது.
https://www.livelaw.in/top-stories/schools-have-saved-operational-costs-during-lockdown-cant-charge-students-for-unused-facilities-supreme-court-173546லாக் டவுன் போது மாணவர்கள் பெறாத வசதிகள், செயல்பாடுகளுக்கான கட்டணங்களைக் கோரும் பள்ளிகள் 'லாபம் ஈட்டுதல்' மற்றும் 'வணிகமயமாக்கல்' செய்வதாக உச்சநீதிமன்றம கண்டனம் கூட தெரிவித்திருந்தது..
ராஜஸ்தான் மாநிலத்தில், போன கல்வி ஆண்டில் 30% கல்விக்கட்டணம குறைவாக தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட, உச்சநீதிமன்றத்திற்கு வந்த தனியார் பள்ளிகளிடம் "2020-21 கல்வியாண்டில் முழுமையான பூட்டுதல் காரணமாக, பள்ளிகள் கணிசமாக நீண்ட காலத்திற்கு திறக்க அனுமதிக்கப்படவில்லை" என்பதை சுட்டிக்காட்டி, " இதன் விளைவாக, பெட்ரோல் / டீசல், மின்சாரம், பராமரிப்பு செலவு, நீர் கட்டணம், எழுதுபொருள் கட்டணம் போன்ற பல்வேறு பொருட்களின் மேல்நிலை மற்றும் தொடர்ச்சியான செலவுகளை பள்ளி நிர்வாகம் சேமித்திருக்க வேண்டும், ”என்று பெஞ்ச் கூறிவிட்டு, "கல்வியை வழங்குவதற்கான தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைத் தணிக்க தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரு மாணவர் கூட விடாமல் அவரது / அவள் கல்வியைத் தொடர வாய்ப்பை மறுக்காத வகையில் பள்ளி கட்டணம் செலுத்துவதை மறுபரிசீலனை செய்வது பள்ளி நிர்வாகத்திற்கானது, " என்றது பெஞ்ச் .
மேல்முறையீட்டாளர்கள் (தனியார் உதவி பெறாத பள்ளிகளின் பள்ளி மேலாண்மை) 2016 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டபடி கல்விக்கட்டனம் வசோழிக்கலாம்.ஆனால் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர்களால் பயன்படுத்தப்படாத வசதிகளுக்கு பதிலாக அந்த தொகையில் 15 சதவீதத்தை குறைப்பதன் மூலம் 2020-21 கல்வியாண்டுதங்கள் மாணவர்களிடமிருந்து வருடாந்திர பள்ளி கட்டணத்தை வசூலிப்பார்கள்"என்று பெஞ்ச் கூறியது.
அதே சமயம், கட்டணம் செலுத்தாது அல்லது நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாக எந்தவொரு மாணவரும் ஆன்லைன் அல்லது உடல் வகுப்புகளில் கலந்து கொள்வதைத் தடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டது.
அதனால் உஷாராக, இந்த வருடம் கல்வி ஆண்டு துவங்கும் போதே, 100% கல்வி கட்டணத்தை நிறைய பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்து விட்டன…
தமிழ நாட்டில் போன கல்வி ஆண்டில், அதிகமாக வசூலித்த பள்ளிகள், கோர்ட்டு உத்தரவிட பிறகும் 25% கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டபிறகு தான், அவை வழிக்கு வந்தன..
அதே போல, க்ஸ்ள்விகட்டனம் கட்ட முடியாதவர்கள் தவணை முறையில் கட்டவும் அனுமதிக்கப்பட்டனர்.!!
https://thewire.in/law/madras-high-court-contempt-schools-fee-collectionஅதே போல தான் இந்த வருடமும், மாண்புமிகு உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றுமா என்று பெற்றோர் காத்திருக்கின்றனர்..
கல்வி கட்டணம் கட்ட முடியாமல், டி.சி.யாவது கொடுத்து விடுங்கள் என்ற பெற்றோரிடம் கூட, பீஸ் கட்டினால் தான் அதுவும் கிடைக்கும் என்று அடம் பிடிக்கின்றன..
கோரானா தாண்டவத்தில், ஒரு பக்கம் மருத்துவமனைகள் என்றால் மறு பக்கம் இந்த தனியார் பள்ளிகள், பணம் பிடுங்கும் தருணமாக களத்தில் மும்முரமாக உள்ளன..
வெளிநாட்டில் எல்லாம், கல்வியும் சுகாதாரமும் இலவசமாக குடிமக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் போது, இங்கு தடுப்பூசி போடவே பணம் வேண்டும்…
பீஸ் கொடுக்க முடியலைனா, அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டிய து தானே என்கிறார்கள்..
அரசு பள்ளியில் தானே படிக்க வைக்கலாம் தான்..அங்கு படித்தால், 7.5% இட ஒதுக்கீடு நீட்டில் உண்டு…அரசு பணி கிடைக்க கூட வாய்ப்பு உண்டு தான்..
ஆனால் படிப்பின் தரம்?! அது கேள்விக்குறியாக உள்ளபோது, பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்ற யார் தான் விரும்புவார்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக