அரசு ஊழியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு ஊழியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 செப்டம்பர், 2021

அரசு ஊழியர்கள் ஏதேனும் துறை சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டால், பணி இட மாறுதல் வழங்கப்படுகிறது. இது எப்படி தண்டனையாகும்? இதன்படி பார்த்தால் ஒரு ஊரில் குற்றங்களை செய்யும் ரவுடிகளை வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் செய்து விட்டால் போதுமல்லவா?

இது பெரும்பாலோருக்கு உள்ள சந்தேகம் தான்.  ஒரு அரசு ஊழியர் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டும் பனி மாறுதல் மட்டுமே செய்யப்படுகிறாரே  அது ஏன்?

அரசின் ஊழியராக ஒருவர் நியமிக்கப்ப்படும்போதே, அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்311 பிரிவின்  கீழ் அவரின் பணிக்கு பாதுகாப்பு கிடைத்து  விடுகிறது.. ஏனெனில் ராஜாங்க காரியங்களில் அவர் ஈடுபடும்போது தேவையில்லாத இடர்ப்பாடுகள் வருவதை தவிர்க்கவும், அந்த பணியை மேற்கொள்வதால் அவரின் வேலைக்கு யாரும் தீங்கு இழைப்பதை தவிர்க்கவும், அப்போது தான் அவர் தனக்கு கொடுபட்ட பணியை உறுதியுடன் செய்யமுடியும் என்பது தான் அந்த விதியின் பின்னுள்ள காரணம்.

நிறைய அரசு ஊழியர்கள், பிரச்சினை வரக்கூடிய வேலை ஏதும் வந்தால், செய்யாமல் ஒத்திப் போடுவதன் பின்னுள்ள விஷயமும் இது தான்.  ஆனால் அது தவறான அணுகுமுறை.  

அதே போல,  அரசின் தலைமை மாறும்போது, காழ்ப்புணர்ச்சி காரணமாக,  முந்தைய அரசின் தலைமையின் கொள்கையின்படி, சில அரசு அதிகாரிகள், எந்த தவறும் தன மீது இல்லாமல்  , ஒரு நல்ல எண்ணத்தில் ,செய்த பணியில் களங்கம் கற்பிக்கப்படும் அவலமும் நடப்பதுண்டு.  அதுவும் தவறான அணுகுமுறை தான். 

 அதுவே  அவர் சட்டத்திற்கு புறம்பான ஒரு குற்றம் செய்து விட்டார் என்றால், கையும்  களவுமாக பிடித்து விட்டாலும், சிலர் நினைப்பது போல, அவரை பணியில் இருந்து நீக்கி விட முடியாது. அதற்கு என உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும். 

செய்த காரியம்  குற்றச் செயல் என்றால், காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு, அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படுகிறது. அதே வேளையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்படும். இவற்றிற்கெல்லாம் ஆதாரம் சேகரிக்க வேண்டும்.  அந்த அரசு ஊழியர் தொடர்ந்து அதே இடத்தில பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், இதெல்லாம் சேகரிக்க இயலாது.  அவர் சாட்சி, சாட்சியங்களை கலைக்க இயலும். அதனால் மிக முக்கியமான தருனங்களில், அவர் பனி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.  அப்படி குற்றம் மேலெழுந்தவாரியாக தெரியவில்லை, விசாரணை நடத்தித்தான் ஆதாரம் எடுக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலிருந்து அவர் பணி மாற்றம் செய்யப்படுகிறார். 

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், குற்ற வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், அதை காரணம் காட்டி , துறை ரீதியான விசாரணையில் இருந்து விடுவிக்க சொல்லி அவர்  கோர முடியாது. 

அதே போல குற்ற வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தான் குற்றம் செய்தார் என்று அரசு  நிரூபிக்க வேண்டும்.  ஆனால் துறை ரீதியான விசாரணையில் அவர் மீது சந்தேகம் எழுப்பக்கூடிய செயல்கள் புரிந்து  இருந்ததாக நிரூபிக்கப்பட்டாலேயே அவருக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இவை எல்லாம் அதிகம் வெளியே தெரியாமல் நடக்கும்  போது, குற்றம் செய்த அரசு ஊழியருக்கு கிடைக்கும் மாறுதல் உத்தரவு மட்டும் தான் வெளியே தெரிகிறது. 

இன்னொன்று, மாறுதல் உத்தரவு என்பது ஒரு அரசு ஊழியருக்கு தண்டனை கிடையாது.  அது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறை. ஒரு அரசு ஊழியரை எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த பணி இடத்திற்கும் மாற்றும் அதிகாரம் உண்டு. 

ஆனால் குற்றங்களை செய்யும் ரவுடிகளின் கதை வேறு. 

அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு இட மாற்றம் செய்வது ? 

யார் அதை செய்வது? 

அத்தோடு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த இடத்திலும் போக வர உள்ள உரிமை என்பது அவனுக்கு உள்ள  அடிப்படை உரிமையல்லவா ...அதை தடுக்கவேண்டும் என்றால் அதை சட்டப்படியானதாக இருக்க வேண்டும்.  

அதற்கு முதலில் அவர் குற்றவாளியா இல்லையா ? அந்த குற்றத்தை அவர் தான் செய்தாரா என்பதை நிரூபிக்க வேண்டுமே? 

அதற்கு தான் அரசு, தன் காவல் துறை சார்பாக அந்த ரவுடிக்கு எதிராக ஒரு குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்.  நீதிமன்றத்தின் அதிகாரத்தின் உள் அது வந்தவுடன், அரசின்  செயல்பாடுகள் எதுவுமில்லை. ஆனால்  அந்த குற்றம் செய்த ரவுடியை ஒரு சிறையிலிருந்து வேறு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றலாம்.   தண்டனை கொடுக்கப்பட்ட பின்பு கூட, அந்த சிறை தண்டனையை அவர் எந்த சிறையில் இருந்து அனுபவிக்கவேண்டும் என்ற முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.  அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்.

குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், அவர் குற்றவாளி என்று தீர்மானித்து,  அவர் அந்த ஊரில் இருந்தால், தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று முடிவு செய்தால், அவர், அந்த ஊருக்குள் நுழையக் கூடாது என்று ஒரு தடை உத்தரவை போடலாம்.  அது போன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே?

இந்த தடை உத்தரவை , அரசும் கூட.  குற்றம் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இருக்கும் போது செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நபர், அவர் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால், அந்த எல்லைக்குள் நுழைய முடியாமால் அவரை தடுக்க முடியும். மீறி வருபவரை கைது செய்து அடைத்து வைக்கலாம். ஏன்,  அவர்களை வீட்டுக் காவலில் கூட வைக்கலாம். 

அது வரைக்கும் ஏன் போறீங்க. .. ஒரு நேர்மையான துடிப்பான காவல் அதிகாரி, அந்த காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலேயே, நிறைய ரவுடிகள் அந்த காவல் நிலைய எல்லையை விட்டு இடம் மாறி விடுகிறார்கள் என்பது தான்  நிதர்சன உண்மை!!

 




சனி, 12 ஜூன், 2021

நீங்கள் சந்தித்ததில் மிகவும் மோசமான ஊழியர் யார்?

 ஆமாம். இவரே தான் திருமதி பிரதிபா பாட்டில்.

சிறந்த ஜனாதிபதி என்று பெயர் எடுத்த திரு அப்துல் கலாமிற்கு அடுத்து அந்த பதவியை வகித்தவர், மோசமான ஜனாதிபதி என்ற பெயர் பெற்றது துரதிர்ஷ்டமே.

முப்படைகளின் தலைவராக, நாட்டின் முதல் குடிமகளாக, இருக்கும் ஜனாதிபதி, அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 52ன் படி பொது ஊழியர்.நான் பார்த்ததிலேயே மோசமான ஊழியர் இவரே என்று நான் கருதுகிறேன்

ஆனால் அவரோடதரப்பையும் கேப்போம் வாங்க..

என்னோட பதவி காலத்தில், நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் நம்ம நாட்டிற்கு வேணும்னா ஒரு பயனும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் என்னோடு சேர்ந்து பயணம் செய்த என் குடும்ப உறுப்பினர்கள் 11பேருக்கு? 😀 அவங்களும் பார்க்கணும் இல்லையா? நான் போய்ட்டா, யாரு அவங்களை பார்த்துப்பாங்க? அதான் கூடவே கூட்டிட்டு போக வேண்டியதாச்சு.அதை போய் தப்பா சொல்லலாமா?😄

அப்புறம் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி என்ற பெருமை எனக்குத்தான்.😃 ரொம்ப அதிகமில்லை. வெறும் 22 தடவை தான்.😃 இதற்காக செலவிடப்பட்ட வரி செலுத்தியவர்களின் பணம் ஜூஜூபி 205 கோடி ரூபாய்க்கும் அதிகம் தாங்க!!

அடுத்ததா என் சொந்தக்காரர்களை பார்க்கறதுக்குன்னு பூனாவிற்கும் தில்லிக்குமாக நான் அலஞ்சென்னு சொல்லுவீங்க. எங்க…மஹாராஷ்டிராவை சேர்ந்த எனக்கும் புனாவிற்கும் என்ன தொடர்பு என்பீர்கள்? முந்திய ஜானாதிபதியைவிட ஊருக்கு அடிக்கடி போய் அரசு செலவில் அதிக நாள் ஏன் தங்கினேன் என்பீர்கள்?அங்கிருக்கும் திருமணமான என் மகள் வீட்டிற்கும் நான் பூனா போய் தங்கியதற்கும் சம்பந்தம் உண்டா என்பீர்கள்? இதை பத்தியே ஊரெல்லாம் பேச்சு!!

நான் இங்கும் அங்கும் அலைந்து உடல் கெட்டதை எல்லாம் பார்க்கமாட்டீர்களா?😆 நாட்டிற்காக உழைத்தவர் என்று கூட பாராமல் அந்த செலவுக்கணக்கை மட்டும் பாருங்கள். சே…ரொம்ப மோசம் நீங்கள்😅

நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், குடியிருப்பதற்கு பூனாவை தேர்ந்தெடுத்தது தப்பா? வயசான காலத்திலே பொண்ணு இருக்கிற ஊரிலேயே தங்கலாம்னு முடிவு பண்ணி, பூனாவில் 2.61 லட்சம் சதுர அடி… நீங்கள் படித்தது சரி தான் லட்சம் நிலம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கினேன் தான்.. என்ன பெரிய விஷயம். அது ராணுவ வீரர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.அதனாலென்ன? நான் இராணுவத்துக்கு தலைவரா இருந்து சேவை(😭)செஞ்சவர் தானே..என்ன தப்பு? அதையும் குறை சொல்லிட்டாங்க.?

அரசாங்க விதிமுறையின்படி ஒரு ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு, குடியிருக்க அரசு இல்லம் இல்லை என்றால், குத்தகைக்கு 2000 சதுர அடி மட்டுமே வாழும் பரப்பளவு கொண்ட இடத்தை தேர்வு செய்யலாமாம். அதிகப்பட்சமாக ஒரு காபினெட் அமைச்சருக்கு ஓதுக்கப்படுவது போல், கட்டிடம் எழுப்ப 5498 சதுர அடி நிலம் மட்டுமே ஒதுக்க முடியுமாம் .இது சம்பந்தமான தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கேட்டதை கொடுத்திருக்காங்க.

சரி 4500 சதுர அடியில் கட்டிடம் கட்டணும் அவ்ளோதான?

ஜஸ்ட் அந்த 2.61 லட்ச சதுர அடி நிலத்தில் 4500 சதுர அடி பங்களா கட்ட சொன்னேன். அதுக்கு போய் . பலத்த எதிர்ப்பு… சே…போங்கப்பா உங்க கதையே வேணாம்னு நிலத்தையே திரூப்பிக் கொடுத்திட்டேன்.அதுக்குள்ள நான் ஏதோ நிலத்தையே அபகரிக்க பார்த்தேன்னு என்னா பேச்சு?! .நீங்களே சொல்லுங்க…அந்த விஸ்தாரமான ராஷ்ட்ரபதி பவனில் குடியிருந்தபின், 4500 சதுர அடி பங்களாவிற்குள் முடங்கி கிடக்க முடியுமா?

அதுக்கப்புறம் கூட விட்டீங்களா? மஹாராஷ்டிரா அரசு ஏதோ வனிகரீதியிலான அரசு நிலங்களையெல்லாம் என்னோட மகள் ஜோதி ரத்தோர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெயந்த் படேல் ரெண்டு பேரும் நடத்துரை அறக்கட்டளைகளுக்கு கொடுத்துச்சுன்னு ஒரே கூப்பாடு! அவங்க கொடுத்ததுக்கு நான் என்ன செய்வேன்?

6.72 லட்ச ரூபாய் கட்டிதான் அவங்க வாங்குனாங்க.ஆனா நீங்க என்ன சொல்றீங்க?7.அந்த 93 ஹெக்டர் நிலத்தொட மதிப்பு 19 கோடிங்கிறீங்க. யயஏங்கஅரசாங்கம் சொல்ற விலையைத் தானே கட்ட முடியும்? அதுக்கும் குறை சொல்லிக்கிட்டு…

விதிமுறைப்படி ஓஓவீட்டோட, ரெண்டு போன், ஒரு மொபைலை போன், ஒரு கார் கொடுக்கணும்.நான் கார் வேணாம் என்கிட்ட இருக்கு.டீசல் போட பணம் கொடுங்கன்னு சொன்னேன்.அதையும் தப்பாதான் பார்த்தாங்க!!

அட அதையும் கூடப் பொறுத்துக்கிட்டாங்க..2012 பிப்ரவரியிலே உள்ளாட்சி தேர்தல் நடக்கிற சமயம்.நாக்பூரிலிருந்து வர்ற காரை அமராவதி போலீஸ் சோதனை போடுறாங்க.உள்ளே இருக்கிறார் என் புள்ளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஷெகாவத். பார்த்தவுடனே விட்டுட்டு தானே போகணும்? சாமான் வக்கிற இடத்திலே பத்திரமா 😃வச்சிருந்த 1 கோடி ரூபாயை புடிச்சிட்டாங்க.அது கட்சி பணம், தேர்தலில் போட்டியிடுற ஏழை😂காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுக்க வச்ச பணம்ன்னு சொன்னா, இப்பிடியாங்க ஊரே சிரிப்பீங்க? நல்லதுக்கே காலம் இல்லை…

எவ்ளோ பெருமையை இந்தியாவுக்கு கொடுத்திருக்கேன். ஒரு முதல் பெண் ஜனாதிபதியை இப்படியா படுத்துவீங்க?

நான் பதவிலே இருந்தப்ப, 23பேருக்கு கருணை அடிப்படையில் மரண தண்டனையில் இருந்து விடுவிச்சு இருக்கேன்.எல்லோரும் என்னை கருணையுள்ள ஜனாதிபதின்னு பாராட்டுவாங்க!! அதுவும் 1981லேயிருந்து பெண்டிங்க இருந்த 91 தண்டனை கைதிகளோட கருணை மனுக்களை என்னோட பதவி காலம் முடியப்போவுதுனாலும் பரவாயில்லை ன்னு கடுமையா வேலை செஞ்சு அத பண்ணேன்.அது சில பேருக்கு புடிக்கல. சுப்ரீம் கோர்ட்டு அரிதிலும் அரிதான கேஸுன்னு சொல்லி 9 வயசு பையனை கொன்னவனுக்கு மரண தண்டனை கொடுத்ததை எப்படி குறைச்சென்னு கேக்குறாங்க? அபிசல் குரு மனுவை ஏன் முடிக்கலைன்னு கேக்கிறாங்க..நான் ஆள் பார்த்து பைசல் பண்ணுனேன்னு குறை. எல்லாத்தயும் நானே பார்த்துட்டா அடுத்து வர்றவருக்கும் வேலை வேணும்ல?

சரி வேலை செஞ்சு ட்யரடாச்சேன்னு தென் ஆப்பிரிக்கா, சேஷைலஸ் தீவுன்னு ரெண்டு நாட்டுக்கு ட்ரிப் போனேங்க.ஜஸ்ட் 18 கோடி ரூபா தான் ஆச்சு!! அதுக்கு போய் பதவியை விட்டு போகும்போது இவ்ளோ பெரிய செலவான்னு எல்லாத்துக்கும் குறை தான்?

இப்ப் நீங்களே சொல்லுங்க? நான் நல்ல பொது ஊழியரான்னு?

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.timesofindia.com/india/President-Pratibha-Patils-foreign-trips-cost-record-Rs-205-cr/articleshow/12409003.cms&ved=2ahUKEwiu06mjzPrrAhVMzTgGHam4C2kQFjACegQIDBAI&usg=AOvVaw1YV911FgGiEAmH1yMxo5rw

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.firstpost.com/india/guess-pratibha-patils-last-travel-bill-as-president-587803.html/amp&ved=2ahUKEwi_5ODSzPrrAhU3zzgGHeP4C6QQFjAEegQIAxAB&usg=AOvVaw3WqzA98j6Aq-R1DNbxosmv&ampcf=

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.ndtv.com/india-news/president-pratibha-patils-foreign-trips-cost-record-rs-205-cr-473280%3Famp%3D1%26akamai-rum%3Doff&ved=2ahUKEwiu06mjzPrrAhVMzTgGHam4C2kQFjAAegQIAxAB&usg=AOvVaw2HFaKfPYhBaISvKzYncTQI&ampcf

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.quora.com/Why-is-Pratibha-Patil-widely-hated-and-disrespected-despite-having-held-the-prestigious-office-of-the-president-of-India-Is-she-Indias-worst-president-ever-What-are-the-reasons-contributing-to-this&ved=2ahUKEwiA5r6mzfrrAhW9zzgGHfNIArMQFjAJegQIAxAB&usg=AOvVaw01aLbk2aqWIWKgVdZv88On

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.firstpost.com/india/the-disastrous-presidency-of-pratibha-devisingh-patil-292042.html/amp&ved=2ahUKEwiA5r6mzfrrAhW9zzgGHfNIArMQFjAGegQIAhAB&usg=AOvVaw3WicA2r8dmGikLdLfJmBB7&ampcf=1

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.moneylife.in/article/recover-tour-costs-of-friends-and-relatives-from-pratibha-patil-demands-activist/31177.html&ved=2ahUKEwi_5ODSzPrrAhU3zzgGHeP4C6QQFjAFegQIBBAB&usg=AOvVaw1Y4bFhRkz9vzEb-t9I966n

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.deccanherald.com/amp/national/a-globetrotting-president-and-his-travels-749649.html&ved=2ahUKEwi_5ODSzPrrAhU3zzgGHeP4C6QQFjAIegQIBhAB&usg=AOvVaw0_IAtPjjCzM8ShMhgFChNa&ampcf=1

Does Pratibha Patil deserve what she's asking for?


வெள்ளி, 11 ஜூன், 2021

தமிழை அழித்துக்கொண்டிருப்பது இந்தியா அல்லது ஆங்கிலமா?

  தமிழ் மொழியை இன்னொன்று அழிககிறதா என்ற கேள்விக்கு புகு முன், தமிழ் மொழியை அழிக்க வேறொருவர் தேவையில்லை நாமே போதும் என்ற நிலைக்கு வந்த பிறகு, மற்றவரை குறை சொல்வானேன்?!

என்ன ..அதிர்ச்சியா இருக்கா..

நான் எந்த தப்பும் பண்ணலே….அவன் தான்.ன்னு சொல்லி தப்பிக்க முடியாது…

ஏனென்றால் தப்பு நடக்கும்போது கண்டும் காணாமலும் இருப்பவனும் தானே உடந்தை..

பீஷ்மரும் விதுரரும் தப்பு செய்யாவிட்டாலும் குற்றம் சுமத்தப்பட்டது அதனால் தானே…

அப்படி என்ன தப்பு நடந்தது…எனக்கு தெரியாமன்னு கேட்கிறீர்களா..

நமக்கு தெரியாம நம்ம சொத்து களவாடப்பட்டா, குற்றம் நம்ம மேல தானே சொல்லணும்?

தமிழ் மொழி நம்ம சொத்துன்னா, அதை ஓசைப்படாம அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, வாய் மூடி மவுனியாய் இருப்பதும் நாம் தானே..😏

அப்படி என்ன தான் நடந்துருச்சுன்னு உண்மையான ஆதங்கத்தில் கேட்பவர்களுக்கு மட்டும்..

தமிழக அரசுப் பணிகளுக்கு அடிப்படை தகுதிகளாக இருந்தவை

  1. தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்
  2. தமிழ் நாட்டில் குடியிருக்க வேண்டும்
  3. தமிழக அரசு நடத்தும் தொகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, இடைக்கால முதல்வர் ஆன திரு பன்னீர்செல்வம் அவர்கள், அந்த கட்டத்தில் ஓசைப்படாமல் முதல் இரண்டு நிபந்தனைகளையும் நீக்கினார்.

இதனால் பலன் கண்டது தமிழ்நாடு மின்சார வாரியம்!! எக்கச்சக்க வட இந்தியர்கள்!!

இன்னமும் நிறைய வருவார்கள்..

நாம் தான் வந்தாரை வாழ வைப்பவர் ஆயிற்றே!!

"மெல்லத் தமிழ் இனி சாகும்"என்னும் நிலையில், "தமிழ் எங்கள் மூச்சு" என்று கதை அளந்துக கொண்டிருக்கிறோம்!!

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கிடில் கைகொட்டி சிரியாரோ!!

படித்தமைக்கு நன்றி..

ஸ்ரீஜா.

வியாழன், 10 ஜூன், 2021

இந்திய சட்டத்தின் மூலம் ஒரு ஆவணத்தை சரிபார்த்து கையொப்பமிடுவதில் இந்திய அரசு ஊழியரின் தாமதத்தை ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

 ஒரு ஆவணத்தை சரிபார்த்து கையெழுத்திடல் என்பது அந்த ஆவணத்தில் உள்ள அத்தனை விவரங்களுக்கும் அவரையே.பொறுபப்பாளியாக்குகிறது

  • அது எத்தனை நபரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும்.
  • அதில் ஏதேனும் ஒரு தவறு கீழ்நிலை ஊழியரால் செய்யப்பட்டிருந்தாலும்

எனவே அதனை சரிபார்த்து கையெழுத்திட உரிய கால அவகாசம் எடுத்துக்கொள்ள ஒரு அரசு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு..ஆனால் அந்த கால அவகாசம் என்பது நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அவருடைய அவசர நிர்வாக பணிகளால் அந்த தாமதம் ஏற்பட்டால், அது கணக்கில் வராது.

எப்பொதெல்லாம் அந்த கால தாமதத்திற்கு அவர் பொறுப்பாளியாவார்?

  1. அந்த ஆவணம் வழங்குவதற்கு சேவைக்கட்டணம் அரசு பெற்றிருக்கும் போது.
  2. அது எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் என்று விதிமுறைகள் இருந்து, அதில மனுதாரரால் காலதாமதம் ஏற்படாதபோது.
  3. அந்த காலதாமதத்தினால மனுதாரருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும்போது

மேற்கண்ட சமயங்களில் மனுதாரர் நிவாரணம் அல்லது நஷ்ட ஈடு வேண்டி நீதிமன்றத்தை அல்லது நுகர்வோர் மன்றத்தை அல்லது அரசின் குறை தீர்ப்பு மையத்தையோ அணுகலாம்.

திங்கள், 7 ஜூன், 2021

அரசு அதிகாரிகள் சட்டப்படி செய்யவேண்டிய சேவையைச் சரிவர செய்யத்தவறினால் அவர்களுக்கு எதிராக நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா?

 ஒரு சேவையில் குறைபாடு என்னும் போது,     நுகர்வோர் யாரும் நிச்சயமாக அது சம்பந்த புகாரை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 படி தாக்கல் செய்யலாம்.

ஆனால் …சேவை என்றால் என்ன? என்பது குறித்து அந்த சட்டத்தில் என்ன சொல்லியுருக்குன்னு பார்க்கணும்.

அரசின் செயல்கள் இரண்டு பிரிவா பிரிக்கப்படும.

  • ஒண்ணு அதனோட இறையாண்மை செயல்கள் ..அதாவது soverign function ன்னு சொல்லப்படுவது..அது பத்தி எந்த நீதிமன்றத்திலேயும் கேள்வி எழுப்ப முடியாது.          ஆனால்
  • நிர்வாக ரீதியா செய்யப்படுபவையிலே ஏதும் குறை இருந்தா கேள்வி கேட்கலாம்.
  • அரசு அதிகாரிகள் ரெண்டு பணியையும் சேர்ந்து செய்யும்போது எது அவங்க செயல்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற இறையாண்மை செயல்கள், எதுலாம் இல்லைன்னு அடிக்கடி குழப்பம் ஏற்படும்.ஏன்னா அது இரண்டுக்கும் நடுவுல மெலிசான இடைவெளி தான் இருக்கு.
  • அரசு செய்யும் சேவை பொதுவா இலவசமா தான் இருக்கும்.அது போல செய்யப்படுவது இந்த சட்டத்தின் கீழ் வராது.
  • ஆனால்..சில சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயிச்சு வசூல் பண்ணிட்டு தான் அரசு செய்யுது. அது போன்ற சமயயத்தில் சேவைக்குறைபாடு இருந்தால் அதை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிரா கேஸ் போடலாம்.
வேதாளமும் விக்ரமாதித்தனும்.

நம்ம விக்ரமாதித்தன் பேரு டாக்டர் சவந்த்.😃

  1. 2007 ஏப்ரலில் தன்னோட நிலத்தை அளக்கணும்னு மஹாராஷ்டிராவில் உள்ள மால்வன் நில அளவியல் துறையில் அவசர மனு கொடுக்கிறார். அதுக்காக ரூபாய் 2000 பீஸ் கட்ட சொல்ல, அதையும் செய்றார்.
  2. ஜூலை 18ன்னு தேதி குறிக்கிறங்க. ஆனால் மழை காரணமா தள்ளிப்போகுது. கடைசியா பிப்ரவரி 2008லே நிலத்தை அளக்கும் பணி முடியுது.
  3. 15 நாள் கழிச்சு வரைபடம் வாங்கிக்க சொல்றாங்க.ஆனால் எவ்வளோ தடவை கேட்டும் அது அவருக்கு கிடைக்கவேயில்லை.
  4. திரும்பவும் ஒரு மனு மே 2008ல் கொடுக்கிறார்.
  5. அதுக்கு பதில் ரொம்ப லேட்டா ஜூலை 16லே வருது.என்னன்னு…முந்தின நாளே அளக்கும் வேலை செஞ்சுட்டதா சொல்லி. 😯
  6. எரிச்சலாயி, அந்த கண்காணிப்பாளர் கிட்டே புகார் செய்றார்.
  7. அதுக்கு பிறகு ஆகஸ்ட் 2008லே தேதி குறிக்கிறங்க. திரும்பவும் கான்சலாயிடுது. இப்ப சொல்ற காரணம்..அவர் மனுவே கான்சலாயிடுச்சுன்னு..😃 இப்போதைக்கு நிலத்தை பிரிக்கும் வேலை செய்யலன்னு சொல்லிட்டாங்க!!
  8. அவர் விடாம, தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ் தகவல் சேகரிக்க முயற்சி எடுக்குறார். பலன். 0…😄
  9. அதுக்கப்புரம் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில், அந்த குறிப்பிட்ட RI மற்றும் சர்வே அதிகாரி மேலேயும் புகார் கொடுக்கிறார்.
  10. ஆனா நுகர்வோர் மன்றத்தில் வழக்கு போடமுடியாது, சிவில் நீதிமன்றம் போங்கன்னு மனு தள்ளுபடி ஆகுது
  11. நம்ம விக்ரமாதித்தன்…சாரி..சவந்த், மாநில நுகர்வோர் மன்றத்தில் முறையிடுறாரு…
  12. அது நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு கோர்ட்டு சொல்லி, வரைபடத்தை குடுத்துடுறாங்க..அப்புறம் என்ன ..வேலை முடிஞ்சுருச்சுன்னு மனு தள்ளுபடி ஆகுது.

நாமன்னா…கோர்ட்டையும் நாட்டையும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு மத்த வேலையை பார்க்க போவோம்…

அங்கே தான் அவர் வித்யாசப்படுறார்..

13. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லிலே இருக்கிற தேசிய நுகர்வோர் மன்றத்தில் அப்பீல் செய்றார்.

அவரோட இந்த விடாமுயற்சி தான் இன்னிக்கும் அவர் பெயர் சொல்ற மாதிரியும், அவர் வழக்கு மத்தவங்களுக்கு வழிகாட்டியாவும் இருக்கு..

  • வழக்கை விசாரிச்ச தேசிய மன்றம், 2013ல் தீர்ப்பளித்தது. அதில், ஒரு முக்கிய சட்ட பிரச்சினையான நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறவேண்டும் எனில், அரசின் நில அளவியல் துறை செய்வது இறையாண்மை பணியா நிர்வாக பணியா என்பதை மாநில நுகர்வோர் மன்றம் முடிவு செய்யவில்லை என்று கருத்து தெரிவித்தது.
  • அதோடு, தன்னுடைய முந்தைய வழக்கான பிரபாகர் வியங்கோபா ஆந்தோன் எதிர் நகல் கண்காணிப்பாளர், சிவில் நீதிமன்றம் 1986 2004 Consumer 7211 (NS) என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
  • அது நீதிமன்றத்தில் சான்றிட்ட நகல் பெறுவதில் இருந்த காலதாமதம் ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு கோரி போடப்பட்ட வழக்கு. நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது தான் இறையாண்மை செயல் என்றும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் பெற்று சான்றிட்ட உத்தரவு நகல் வழங்குவது நிர்வாகப் பணியென்றும் அதனால் அந்த சேவையில் குறைபாடு என்றால் நுகர்வோர் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
  • அதை குறிப்பிட்ட மன்றம், இந்த வழக்கிலும் கட்டணம் பெற்றுக்கொண்டு நில அவியல்…சே..😂அளவியல் மேற்கொள்வதால் அது நிர்வாக பணி தான் என்று தீர்ப்பளித்தது.
  • அதே சமயம் அந்த துறை அதிகாரிகள், அவர்கள் பணியில் எந்த தாமதமும் ஏற்படவில்லை, பக்கத்து நிலத்து சொந்தக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தாமதம் ஆனது என்பதை நிரூபித்ததால், நஷ்ட ஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை.

வடை போச்சே..😑

  • அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயருடன் வழக்கு போடப்பட்டதை சுட்டிக்காட்டி, அதை தவிற்குமாறும் அவர்கள் செய்யும் பணியின் பெயர் மட்டும் குறிப்பிட் சொன்னது..

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும்..😃

படிமப்புர்வு சேவையில் கெட்டிக்கார கூகிள்




சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...