முஸ்லீம் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லீம் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

இந்துக்களாக உள்ள தாய் வழி சித்தியின் மகளை திருமணம் செய்ய இந்து சட்டம் மறுக்கிறது. இவர்கள் இருவரும் காதலிக்கும் பட்சத்தில் சட்டப்படி இருவர் மட்டுமே இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டு இஸ்லாமிய மதத்திலேயே இருக்க முடியுமா?

 கேள்வி

தங்கை யை காதலிக்கும்போது, இந்து மதம் அதை அனுமதிக்க வில்லை என்பதால் இருவரும் அதை விட்டு வெளியேறி இஸ்லாம் மத்திற்கு மாறி திருமணம் செய்யலாமா?

இ ந்த கேள்வி ஒரு அருவெறுப்பையே ஏற்படுத்துகிறது.

இது உண்மையா அல்லது கேள்வியாளர் கற்பனை செய்துக் கேட்கிறாரா தெரியவில்லை. எப்படி இருந்தாலும்,இது இரு மதங்களை பற்றிய சரியான புரிதல் இல்லாத கேள்வி.

தாய் வழி சித்தி மகள் எனில் தங்கை முறை ஆகிறது.

Nandi google

தங்கையை விரும்புவதற்கு காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. முறை கெட்ட இந்த உறவை முறைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

இஸ்லாம் மதத்திலும் அப்படி ஒரு வழக்கம் தற்போது நடைமுறையில் இல்லை. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.அதே காரணத்தினால் ஏன் நாமே தற்போது அத்தை மகள், மாமன் மகளை திருமணம் செய்வதை தவிற்கிறோமே.

எது எப்படி இருந்தாலும் இது போன்றவை உணர்வு சார்ந்தவை.தங்கையாக பார்க்க வேண்டியவளை தாரமாக பார்க்கும் பார்வையே மோசமானது.இதற்கு எந்த மதமும் எந்த வித அங்கீகாரமும் தராது.!!


ஞாயிறு, 6 ஜூன், 2021

பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது ஏப்ரலில் சண்டை போட்டு பெண்ணை பெண் வீட்டார் அழைத்து சென்றுவிட்டு இப்போது விவாகரத்து கேட்டு வருகிறார், நாம் கொடுத்த மகரை திரும்பகேட்கலாமா?

  நான் ஒருவருடன் ஒரு பணிக்காக ஒப்பந்தம் போடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர் பணம் கொடுக்கிறார். அந்த வேலை நடக்கும்போது ஏதேனும் எதிர்பாராமல் இடைஞ்சல் ஏற்பட்டால், வேலை நின்றுவிடுமே தவிர, கொடுத்த பணத்தை நான் திரும்ப கொடுப்பேனா?

பொதுவாக இல்லை…ஆனால் அந்த ஒப்பந்தத்தில் அது போல ஒரு ஷரதது இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

முஸ்லீம் திருமணமும் ஒரு ஒப்பந்தம் தானே..அப்படின்னா கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக்கலாமா? என்ற கேள்வி ஏன் வருகிறது?

 மணமுடிக்கும் சமயம், மணமகன், இவ்வளவு மஹருக்கு, மணப்பெண்ணை தன் வாழ்க்கைத் துணையாக இருக்க சம்மதம் கேட்கிறார்.

பொதுவாக அது பணமாக இருக்கும்.அல்லது நகை, வீடு, நிலம் என்றும் இருக்கலாம்..எதுவென்றாலும் அதை ஒப்பந்தத்தில் குறிப்பிடுவர்.சில சமயம், திருமணத்தின்போது கொடுக்காமல் பின்னால் தருவதாக உறுதி தந்து, எழுதுவதும் உண்டு.

.அதை பகுதி பகுதியாகவும் கொடுக்கலாம்.அது போன்ற சமயம், பொதுவா, முன்னால் கொஞ்சம் கொடுத்துட்டு, பின்னால் பெரும் தொகையையோ சொத்தையோ கொடுப்பதாக எழுதுவாங்க!!

ஆனால் எப்போது எப்படி கொடுப்பது என்று எழுத வேண்டும்.


மணப்பெண்ணிடமும், இன்னாரை உன் வாழ்க்கை துணையாக ஏற்க சம்மதமா? என்கிறார்கள்.அதற்கு அவள் சம்மதம் கொடுக்கும் போது தான் அந்த ஒப்பந்தம் நிறைவேறுகிறது.

அந்த ஒப்பந்தத்திற்கு மணமகன் கொடுப்பது தான் இந்த மஹர் என்பதால் அந்த திருமண வாழ்க்கையில் சிக்கல் வருகிறது என்றால், கொடுத்த மஹரை திரும்ப கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுவதற்கு காரணம், மற்ற ஒப்பந்தத்தில் கொடுக்கப்படும் பணத்தை போல இந்த மஹர் பணம் கொடுப்பது தான். 

அதே போல, மற்ற ஒப்பந்த பணம் வசூலிப்பது போல, மஹர்  குறிப்பிட்டபடி கொடுக்கலைன்னா, அது கணவன், தன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய கடனாகிறது!! அதை கொடுக்காமல் அவன் இறக்க நேரிட்டால் கூட, அது மதரீதியான கடமை என்பதால், , அவனின் சொத்தில் இந்த மஹர் முதலில் வசூலிக்கப்பட்டுவிடும்!!கணவனின் சொத்தை தன்னிடமே வைத்துக்கொண்டு, மஹர் பணம் கொடுத்தால் தான் சொத்தை விடுவிப்பேன் என்று சொல்லும் உரிமையும் உண்டு..

அவ்வளவு ஏன்..கொடுப்பதாக சொன்ன மஹர் பணத்தை கொடுத்தால் தான், தாம்பத்யத்துக்கு ஒத்துக்கொள்வேன் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு உண்டு!!

ஆனால், இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகளும் உண்டு…

சொத்தை நிறுத்தி வைத்துக்கொண்டாலும், அதை விற்கும் அதிகாரம் அவளுக்கு கிடையாது..மஹர் பணத்தை கொடுத்ததும், சொத்தை விட்டுவிடவேண்டும்.

அதே போல, இந்த மஹர் கடனை தன் வாரிசுகளுக்கு மாற்றி விடமுடியுமா என்பதில் இரு வேறு கருத்துகள் உள்ளன!!

இந்த மூலக் கேள்விக்கு போகும் முன், ஏன் இந்த மஹர் கொடுக்கும் முறை வந்தது? ன்னு பார்ப்போம்.

"மஹர் " என்ற வார்த்தை ஹீப்ரூ மொழியில் இருந்து வந்த "மணப்பெண் பரிசு" என்ற பொருள் கொண்ட "மெஹ்ரா" என்ற வார்த்தையுடன் தொடர்புடையது..

முஸ்லீம் திருமணத்தின் படி, திருமண ஒப்பந்தத்தின் போது, இந்த திருமணப் பரிசை, மணமகன், மணப்பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று இதை நபிகள் நாயகம் வலியுறுத்துகிறார். அதை பற்றி குரானும் ஹதீஸும் அதிகமாக சொல்கிறது..

அதுவும் "பரிசு" என்று வரும் போது, அதை கொடுக்கலாம் அல்லது தவிற்கலாம். ஆனால் இந்த பரிசு, மணமகனால் தவிர்க்க முடியாத .பரிசு.☺️

சரி..அதை குடுக்க பணமில்லைன்னு, கல்யாணத்திற்கு முன்னரே, மனைவியாக ஆகப்போகிறவர் கிட்டேயிருந்து, அவர் தனது மஹர் உரிமையை ரத்து செய்வார் என்றும் எதிர்காலத்தில் மஹர் உரிமை கோர மாட்டார் அல்லது எந்தவொரு மஹர் இல்லாமல் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார், என்று ஒரு ஒப்பந்தம் போட்டாலும், அந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது.

முஸ்லீம் சட்டத்தின் கீழ், கணவர் தனது விருப்பப்படி மனைவிக்கு விவாகரத்து கொடுக்க முடியும். அந்த அதிகாரத்தை தவறா பயன்படுத்துவதைத் தடுப்பதும், பலதார மணம் செய்வதைத் தடுப்பதும் தான் , மஹரின் முக்கிய நோக்கம்

அப்டியே மஹர் குடுக்காம கல்யாணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது.. அந்த அளவுக்கு, முஸ்லீம் சட்டத்தின் கீழ் இந்த மஹர் ரொம்ப முக்கியமானது

ஏனென்று சற்று பின்னோக்கி பார்த்தால், இஸ்லாம் வரும் முன்பு, அரேபியர்களிடம், ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு, அவள் பெற்றோர், சகோதரருக்கு பரிசு கொடுத்து, அவளை மணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.ஆனால் அந்த பணம் அவளுக்கு போய் சேர்வதில்லை. இஸ்லாத்தில் விவாகரத்து செய்வது சுலபம் என்பதாலும், கணவன் இறந்தாலும் அந்த பெண் தான் பாதிப்படைவாள் என்பதால் இந்த "மஹர் "மணப்பெண்ணிற்கு தான் கொடுக்கப்படவேண்டும் என்று வந்தது.

சிலர், இந்து திருமணங்களில் கொடுக்கப்படும் வரதட்சனையோடு சேர்த்து பேசுவர்.

வரதட்சிணை என்பது, மணப்பெண் வீட்டிலிருந்து அல்லது ஆண் வீட்டிலிருந்து மற்றவர் குடும்பத்திற்கு கொடுப்பது..ஆனால் இந்த மஹர், நேரிடையாக அவளுக்கு கொடுக்கப்படுவதால், அதில் அவள் பெற்றோருக்கோ ஏன் கொடுத்த கணவனுக்கோ கூட உரிமை கிடையாது!!.

அது தான், அந்த பெண் திருமணம் முடிக்கும் போது அவள் பெற்றோர், கணவரிடமிருந்து கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்..அதைக் கொண்டு அவள் விருப்பம் போல செலவழிக்கலாம்..

இது 14ம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் மதம் கொண்டு வந்த சிறப்புன்னு கூட சொல்லலாம்.ஏன்னா, இங்கிலாந்தில் 1870 முன்னால் வரைக்கும், ஊரு பெண் சம்பாதித்த சொத்து, திருமணம் ஆனவுடன், அவள் கணவனின் சொத்தாக மாறிப் போயிடும்..அது போன்று இருந்த காலக்கட்டத்தில், குரான், பெண்கள் விஷயத்தில் இந்த புரட்சி செய்திருக்குன்னு தான் சொல்லணும்!!.பார்க்க

முஸ்லீம் திருமணச் சட்டத்தில் உள்ள இது போன்ற சில காரணங்களுக்குத் தான், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை எதிர்த்து ஒரு முஸ்லீம் பெண் மனு செய்துள்ளார்!!

.மஹர் பணம் எதுவும் குறிப்பிட்டு எழுதலைனா..?

முஸ்லீம் சட்டத்தின் படி, இந்த மஹர் பணம் ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லையென்றால், மனைவி தனது விவாகரத்துக்கு எதிராக மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மஹர் கேட்கலாம்..

அதே போல மஹர் பணத்தை கணவன்  உயர்த்தியும் கொடுக்கலாம்..ஆனால் எழுதிய மஹர் பணத்தை, மனைவி குறைத்து விட சம்மதித்தால் மட்டும் செய்யலாம்.இதுவும் ஒப்பந்த சட்டத்தை நினைவு படுத்தும்.

ஆனால், பல சந்தர்ப்பங்களி!!ல் கணவர் போதுமான வருமானம் கொண்டிருந்தாலும, மஹர் பணத்தை குறைவாகக் குறிப்பிட்டிருப்பர். ஆனால் அந்தத் தொகையைக் கொண்டு, அந்த மனைவியால் ஒரு கவுரவமான வாழ்க்கை மேற் கொள்ள முடியாது.

இது போன்ற சம்பவங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

இது பற்றி நீதிமன்றம் தீர்க்க முடியாததால், சட்டமன்றம் தான் இதற்குரிய சட்டங்களை இயற்ற முழு அதிகாரமும் கொண்டது. !!

இல்லறத்தில் சிக்கல் வந்து, கணவர் விவாகரத்து கேட்கும் போது, முதலில் கொடுக்காத இந்த மஹர் கொடுத்து விட்டுத் தான் , விவாகரத்து செய்ய முடியும்.

இந்தியாவில் இரண்டு வகை முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஷியா பிரிவு., ஹனபி பிரிவு என்று.

இதில் ஹனபி பிரிவினர், பெண் விவாகரத்து கேட்கும்போது, கொடுக்காமல் விட்ட மஹரை கணவன் கொடுக்கத் தேவையில்லை என்கிறது.இன்னொரு பிரிவோ, அது அவள் அடிப்படை உரிமை என்பதால், கொடுக்க வேண்டும் என்கிறது..

கவனியுங்கள்..

கொடுக்காமல் விட்ட மஹரைப் பற்றி தான் பேச்சு..

கொடுத்த பரிசை திரும்பப் பெறுவதில் அல்ல!!

அந்த திருமணம் ரத்தாகி விட்டது என்பதால், திருமணத்திற்கு வந்தவர்கள் கொடுத்த பரிசை, திருப்பி கொடுத்து விடுகிறோமா என்ன?

😀

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...