கோவிட 19 ஏற்படுத்திய பாதிப்புகள் மட்டும் தானே நமக்கு தெரியும்? அது கொண்டு வந்த நன்மை என்ன தெரியுமா?
அது 20000 பேர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறது.
உண்மை தான்…
மாநிலங்கள் , உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியிடம் கொடுத்த புள்ளிவிவரப்படி இந்த கொரானா கால ஏப்ரல் _ஜூன் காலக்கட்டத்தில் 20,732 நபர்கள் சாலை விபத்தில் இறக்க போன வருட இதே காலக்கட்டத்தின் 41,032 இறப்பை விட இது குறைவு…!!
இதே போல விபத்தினால் காயம் அடைந்தவர்களும் போன வருட இதே காலக்கட்டத்தின் புள்ளிவிவரப்படி 70000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 63,000 விபத்துகள் குறைந்துள்ளது!!
கெட்டதிலும் ஒரு நல்லது☺️
ஆனாலும், இந்த லாக்டவுன் நேரத்தில் சாலை விபத்தினால் இறந்த, காயம் அடைந்தவர்கள் வரிசையில் இரண்டாவதாக முன்னணியில் உள்ளது தமிழ் நாடு…
நாம யாரு? லாக் டவுனுன்னாதான் என்ன?.நாம தான் பறப்போமே?!😊
சாலைகளை பொறுத்தவரை நாம் பாதசாரியாக இருந்தாலும் சரி வண்டியோட்டுபவராகவோ சரி பின்னால் உட்கார்ந்து பயணம் என்றாலும் கவனம் இருக்கவேண்டியது அவசியம். இன்னொருவரின் அஜாக்கிறதையால் நம் உயிருக்கும் உடமைக்கும் சேதம் வரலாம்.
அதே சமயம், நம்மாலும் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்ப்பது முக்கியம்.
சரி ..விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு ன்னென்ன தண்டனைகள் கிடைக்கும்?
அஜாக்கிறதையாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஒட்டி
- அதனால் ஓர் மரணம் ஏற்பட்டால் இரண்டு வருடம் வரையில் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
- மற்றவருக்கு காயம் ஏற்படுத்தினால் ஆறு மாதம் வரையான சிறை தண்டனையோ அல்லது ரூபாய் 1000 வரைக்கான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
- இதில் காயம் பட்டவரோ, பாதிக்கப்பட்டவரோ நஷ்ட ஈடு கோரி மனு செய்தால், அதை தர வேண்டியதும் சேரும்.
விபத்து ஏற்படாவிட்டாலும், அது எற்படக்கூடிய வகையில் அஜாக்கிறதையாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஒட்டினாலேயே தண்டனை உண்டுன்னு எத்தனை பேருக்கு தெரியும்..?
அதற்கு மூன்று மாதம் வரையான சிறை தண்டனையோ அல்லது ரூபாய் 250 வரைக்கான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
அதே சமயம் இந்த குற்றங்கள் "விபத்துகள்" அதாவது திட்டமிடப்படாமல் நடந்த குற்றம் என்பதால் குற்றவாளி பிணையில் செல்லலாம். அதே போல விபத்தில் பாதிப்பு அடைந்த நபருடன் செட்டிலமெண்ட் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்.
சரி…விபத்து ஏற்படாதவாறு தேவையான கவனம் எடுத்து பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டும, எதிரபாராதவிதமாக விபத்து நடந்துவிட்டால்?
அப்படிப்பட்ட சமயத்தில், அதில் மூன்றாம் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அதற்கு இவரை பொறுப்பாளியாக்க முடியாது.
செய்த தவறுக்கு மட்டுமே தண்டனையே தவிர, எதிர்பாராது நடந்ததற்கு பொறுப்பாளியாக்க முடியாது. இது ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையினால்.
சட்டத்தையும் தண்டனையையும் விடுங்கள். நம்மை எதிர்பார்த்து ஒரு குடும்பம் வீட்டில் காத்திரூக்கிறது என்பதை கவனம் கொள்வோம்.அதே தானே ரோட்டை உபயோகிக்கும் இன்னொருவருக்கும்.
"When We are on the way to our work, Think of the way and not the Work"
Road accidents in India: Coronavirus may have saved 20,000 lives on Indian roads - Times of India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக