வருமான வரி சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருமான வரி சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

வருமான வரி சேமிப்பு செய்வது எப்படி?

 உங்களுக்கு தெரியுமா…

  • உங்க அப்பாவுக்கு வாடகை குடுத்தீங்கனா வருமான வரி மிச்சமாகும். ஆமாங்க. ஆமாம்.
  1. உங்க அப்பா அம்மாவோட ஒரே வீட்டில் இருக்கீங்களா..
  2. வீடு அவங்க பேரில் இருக்கா

அப்ப அவங்களுக்கு வாடகை குடுக்கிறதா வருமான வரி மிச்சம் செய்யலாம். நாம வாங்கிற வீட்டு வாடகைப்படியிலிருந்து விலக்கு கேட்கலாம்.

படிமப்புரவு கூகிள்

ஆனால் ஒரு கண்டிசன் ..

வருஷத்துக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல வாடகை குடுத்தா அவங்களோட வருமான வரி கணக்கு எண்ணை குறிப்பிடனும்.

அதாவது அவங்களுக்கு வருமான வரி கணக்கு ஆரம்பிக்கணும்.

ஆனா அதிலேயும் ஒரு வசதி இருக்கு. வாங்கிய வாடகை பணத்திலே 30% அந்த வீட்டை பராமரிக்கிற செலவுக்கு போயிருச்சுன்னு சொல்லலாம்.

பாருங்க அவங்க வீட்டிலேயே இருந்துகிட்டு நம்ம வருமானத்தின் வரி சலுகையும் கூட…

ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய்😂

  • அட அவங்கள் உடம்பு சரியில்லன்னு மருத்துவ செலவு வந்துருச்சா. அதுக்கும் வருமான வரி விலக்கு இருக்கு. முக்கியமான நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளு…படி தான்.

கோரானாவை கூட அதிலே சேர்த்திருக்காங்களாம்.

  • அதே போல மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு, உங்களுக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு மட்டுமில்லாம பெத்தவங்களுக்கும் பாலிசி எடுக்கிறதை உங்க பாலிஸியா வச்சுக்கோங்க.

அது உங்க கடமையை நிறைவேத்தின பொறுப்பான புள்ளையா காட்றது மட்டுமில்லீங்க உங்க பர்ஸையும் பதம் பார்க்காது. A stitch in time saves nineனு சும்மாவா சொன்னாங்க.

60 வயசுக்கு கீழே உள்ள உங்க குடும்பத்துக்கு கட்டுற பிரீமியம் ரூபாய் 25000 வரைக்கும் தான் விலக்கு. அதுவே 60 வயசுக்கு மேலே உள்ளவர்களுக்கு செய்யும்போது ரூபாய் 50000 வரைக்கும்.

  • அப்புறம் இந்த வைப்பு நிதிங்க..அது தான் ஃபிக்ஸட் டெபாஸிட் ன்னு தமிழிலே சொல்வாங்களே 😁 அதை உங்க பேரிலோ மனைவி பேரிலோ மட்டும் போடாம,
  1. காசு இல்லாத காலத்திலே கடுப்பேத்துறேனோ 😫 

அப்பா பேரில் போட்டா, அதுக்கும் சில தள்ளுபடி உண்டுங்க

இது ஆடி தள்ளுபடி இல்லை..ஆடாத😂 தள்ளுபடி

போஸ்ட் ஆபிசிலோ, வங்கியிலோ இருக்கிற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், அல்லது மாதாந்திர திட்டத்தில் அதிக வட்டியும் கிடைக்கும். வருஷத்துக்கு 50,000 ரூபாய் வரைக்கும் இந்த வட்டிப்பணத்திற்கு வருமான வரி கிடையாது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா ,😂

  • அது போல அவங்க பேரில் வருமானம் வர்ரதா காட்டும்போது, அவங்க வயசு 60க்கு மேலேனா ரூபாய் 3 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு. 80 வயசுக்கு மேலென்னும் போது ரூபாய் 5 லட்சம் வரை.
  • அதே போல பிள்ளைக பேரிலேயும் PPF, சுகன்யா சம்ரிதி திட்டம் இதிலே எல்லாம் வைப்பீடு செய்றது வருமான வரி விலக்கு அதிகபட்சம் 1.5 லட்ச ம் ரூபாய்க்கு குடுக்கப்படுது.

ஆனா ஒன்னுங்க….பையன் பேரில் கணக்கு இருந்தாலும், பணம் அப்பாவோடது இல்லையா.

அதுனால அவர் தனியா gpf, ppf கணக்கு வச்சிருந்தாலும் ரெண்டுக்கும் சேர்த்து தான் இந்த 1.5 லட்ச ரூபாய் கழிவு.

அப்பறம் என்னங்க …

வரியையும் போட்டு, அதற்கு விலக்கும் கொடுத்து…நாம அதிலே பலனைடைய..

அதற்கு மேலே…வேறென்ன வேறென்ன வேண்டும்…😁

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...