இரண்டாம் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 நவம்பர், 2021

விவாகரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் செய்யலாமா?

 திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யமுடியாத நிலையில் விரிசல் ஏற்படும் போது அதை தவிர்த்துவிட்டு இன்னொரு துணை வைத்துக் கொள்ளலாமா?

"முடியாது" என்று நமக்கு தெரியும்..அதை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்த பின்னரேயே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடியும் தானே?!!.

அப்படி செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்துக் கொண்டால், அது இருதார மணச் செயல் என்று தண்டிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 494..

அதுவும், அந்த குற்றம் செய்ததாக முதல் கணவனோ அல்லது மனைவியோ போலீசில் புகார் கொடுக்கும்போது தான், அந்த குற்ற நடவடிக்கை தொடங்குகிறது.

முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், சிலர் மறைத்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, அந்த மனைவியை அழைத்து வந்து காட்டும்போது தான் முதல் மனைவிக்கு விவரம் தெரியும்.கணவனை பொருளாராத ரீதியாக சார்ந்திருக்கும் போது கையறு நிலையில், கள்வனாலும் கணவன்…இல்லையில்லை…கல்லானாலும் கணவன்” என்று ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் அவன் இருக்க, அந்த கணவன்மார்கள் அந்த குற்றத்திலிருந்து தப்பித்து வந்தனர்!!.

இப்போது பெண்களுக்கு சிறப்பு சட்டங்கள், சமஉரிமை என்று வந்துவிட,, போதாதற்கு ஒரு குடும்பத்தையே நடத்த திண்டாடும் நிலையில், இரண்டாவது குடும்பமா என்று யோசிக்கும் நிலைக்கு போயினர் ஆண்கள்.!!.

இதில், அந்த திருமணமும் தோற்று போகும் போது, விவாகரத்து கோரி, உரிய காலத்தில் தாக்கல் செய்தாலும், அவருடைய துணை அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு நீண்டுக் கொண்டே போய் உரிய காலத்தில் விவகாரத்து கிடைக்காமல், இன்னொரு திருமண அமைப்பே ஏற்பட முடியாமல் காலம் தாழ்ந்து விடுகிறது.

இதுவே இருவரும் மணமொத்து சேர்ந்து தாக்கல் செய்தால், ஆறு மாதத்தில் மணவிலக்கு பெற்று விடலாம்..

இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்தாலும் "இரு மணம் செய்த குற்ற"த்திற்கு உள்ளக நேரிடும்!!.

இப்படி ஒரு கடுமையான அமைப்பு இருப்பதன் காரணம், திருமண உறவை சீர்குலையாமல் நீடிக்க வைக்க செய்யும் முயற்சியே…

அப்படியே விவாகரத்து கேட்டு மனு செய்தாலும், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கப்படும்.இதில் தோல்வியுற்ற பின்னரே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

இது முடிந்து தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டவர மேல்முறையீடு போய்…

முடிவே இல்லாத தொடர்கதையாகி இளமையை தொலைக்கின்றனர்…அநேகர்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருக்கு தனி சட்டமும், அதில் விவாகத்தை ரத்து செய்வது எளிது மட்டுமல்லாமல் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் (இப்போது இங்கு யாரும் அதை பின்பற்றுவதில்லை) அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு பிரச்சினை இல்லை..இதில் பாதிப்படைவது அந்த பெண்கன் மட்டுமே.!!

கிறித்துவ மதத்தில் அப்போதிருந்தே, விவாகரத்து ஒரு கடினமான நடைமுறை..

விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கினாலும், அதை மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் செல்லும்..நல்லவேளை..இது போன்ற விதி இந்து திருமணத்திற்கு இல்லை.

ஆனாலும் இந்த இரு துணை குற்ற சட்டபிரிவு இருக்கிறதே..

இதை குறித்து சில வினாக்கள்..உங்களிடம் கேட்கவா? விடையை மனதில் குறித்து கொண்டே வாருங்கள்.. கடைசியில் பார்க்கலாம்..

  1. இந்திய தண்டனை சட்டம் என்பது சாதி, மதம், பாலினம், , இனம் மற்றும் தேசியம் போன்ற வித்யாசம் இல்லாமல், , 3, 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு உட்பட்டு, எல்லோருக்கும், பொருந்தக் கூடிய மதச்சார்பற்ற சட்டம் என்னும்போது, . ஒரு செயல் சில பிரிவினருக்குக் குற்றமாகவும் மற்றவர்களுக்கு குற்றம் இல்லாமலும் இருக்க முடியாது இல்லையா?
  2. ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 இந்து மக்களை மட்டும் தானே தண்டிக்கிறது? இது, அவர்களின் தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணத்தின் செயலைத் குற்றமாக்குகிறது. அப்படியானால் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே அது பாகுபாடு காட்டுகிறதே?."
  3. இது, குடிமக்களுக்கு சம உரிமை கொடுக்கும் அரசியலமைப்பபு சட்டப்பிரிவு 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது தானே?.
  4. பிரிவு 494, கிரிமினல் நோக்கம் இல்லாத குற்றம் தானே?. இது கடுமையான பொறுப்புக் குற்றங்களின் வகைக்குள் எப்படி வரும்?..
  5. "ஒரு குற்றமிழைக்கக்கூடிய மன நிலை இல்லாத குற்றத்திற்காக ஒருவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுபவது, தேவையில்லாதது, நியாயமற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா?
  6. அந்த குற்ற வழக்குக்கு விதிவிலக்காக தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் செய்யும் இன்னோரு திருமணத்தின் செல்லுபடியை அங்கீகரிக்கிற. அளவிற்கு, சட்டப்பிரிவு 494, இந்து, கிறிஸ்தவம் அல்லது பிற சமூகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது..இது சமத்துவத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது தானே?.
  7. இந்த குற்றம் உலகளாவியதும் அல்ல என்னும்போது, இருதாரமணச் செயல் குற்றமாக்கப்படக் கூடாத ஒன்று என்பதைத் தானே குறிக்கிறது?.
  8. சுருக்கமாக, குற்றம் எண்ணம் இல்லாததும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு இருதார மணம் குற்றமல்ல என்பது, இருதார மணத்தின் செயலில் உள்ளார்ந்த குற்றவியல் எதுவும் இல்லை என்பதை தானே சுட்டிக்காட்டுகிறது ?
  9. இருதார மணம் என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாக அல்ல.. இருதார மணம் என்பது திருமண வாழ்க்கை தொடர்பான தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதை குற்றமாக்குவது திருமண வாழ்க்கையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கு உதவாது தானே?
  10. திருமணமான ஒருவர் மற்றொருவருடன் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்னும்போது, , திருமணம் போன்ற முறையான ஏற்பாட்டிற்குப் பிறகு இதுபோன்ற கூட்டுவாழ்வு ஏற்பட்டால், அந்தச் செயல் எப்படி குற்றமாகும்.?
  11. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இருதார மணம் ஒரு குற்றமாக தொடர அனுமதிப்பது காலத்துக்கு மாறானது மட்டுமல்ல, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது தானே?

என்ன,..இப்படியெல்லாம் கேட்க முடியுமா? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?

இந்த வினாக்களை எல்லாம் நான் கேட்கவில்லை…

தங்கள்.தரப்பு வாதங்களாக வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளத்தின் மாண்புமிகு உய்ரநீதிமன்றத்தில்.!!

என்னவென்று?

"இந்த இரு தார மணம் என்பது குற்றச்செயல் என்னும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494, குடிமக்களுக்கு சமஉரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

அதுவும் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஒரு பெண்னின் தந்தை என்று தெரிந்தால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்

ஆண்களுக்கு கூட இல்லாத அவசரம் அவசியம் அவருக்கு என்ன என்றால், ..இருக்கிறதே..!!

அவரும், அவரது மகள் மற்றும் பிற உறவினர்கள் ஐபிசியின் பிரிவு 34 , பிரிவு 494 இன் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக கிரிமினல் வழக்கை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் மீதான குற்றம் தான் என்ன? என்கிறீர்களா?

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் தனது மகளுக்கு இன்னோரு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தான்.!!.

இந்த மனுவை சமீபத்தில் விசாரணைகு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

நாமும் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்போம!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...