திங்கள், 7 ஜூன், 2021

இந்த நாகரிக உலகத்தில் தற்போதும் வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் போக்குவரத்து காவலர்கள் வெளிப்படையாக லஞ்சம் வாங்குவது எதை காட்டுகிறது?

 ஏன் வாங்குகிறார்கள்?

நாம் கொடுப்பதால்…

நாம் ஏன் கொடுக்கிறோம்?

ஒரு குற்றத்தை செய்து விட்டதை மறைக்க…

நாம் ஏன் மறைக்க வேண்டும்?

தண்டனையிலிருந்து தப்பிக்க…

தப்பிக்க வேண்டாமென்றால்?

அபராதத்தை கட்ட வேண்டும்.

அதனால் நமக்கு நன்மையா?

கண்டிப்பாக நன்மை தான்.

எப்படி?

அடுத்த முறை இந்த குற்றத்தை செய்ய மாட்டோம்..

இப்போது பதில் சொல்லலாம்…

இந்த நாகரீக உலகில் தற்போதும் வெளிப்படையாக கூச்சமே இல்லாமல், செய்த குற்றத்தை மறைக்க, போக்குவரத்து காவலர்களிடம் வெளிப்படையாக லஞ்சம் கொடுபது எதை காட்டுகிறது?


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...