திங்கள், 7 ஜூன், 2021

இன்றைய காலக்கட்டத்தில் நம்மை எப்படி ஏமாற்றுகிறார்கள்? நூதன பணம் திருடும் கும்பல்கள் பற்றி குறிப்பிட முடியுமா? (scam alert)

 நம்மோட ஞாபக மறதிக்கு குறை ஏது?

ஃப்ரீடம் 251..மறக்கக்கூடிய மோசடியா அது?

வெறும் 251 ரூபாய் கட்டினால் போதும் ஓரு மொபைல் பெறலாம்ன்னு 2016ல் திரு கோயலோட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிச்சப்ப, அந்த நிறுவனத்தை பத்தி ஒன்னும் தெரியலை...

கோயல் பேட்டியெல்லாம் கொடுத்தார்..2016 ஃபிப்ரவரிக்குள்ள பணம் கொடுத்த எல்லோர் கையிலும் ஃப்ரீடம் இருக்கும்னு…

அவர் சரியாத் தான் சொன்னாரோ?😀

எங்கேயும் பரபரப்பு தொத்திக்கிச்சு…பேப்பரில் தலையங்கமே இது தான்..

நல்ல வேளை, இப்ப இருக்கிற அளவிற்கு சேனல்கள் அப்ப இல்லே..இருந்தா ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை லைவ் போட்டு கொன்னுருப்பாங்க😂

ஞாபகம் இருக்கா..பணம் வசூல் எல்லாம் அவங்க கம்பனியோட ஆன்லைன் பக்க மூலம் தான் நடந்துச்சு..கேஷ் ஆன் டெலிவரி கிடையாதுன்னுட்டாங்க.

நமக்குத்தான் சந்தேகப்படவோ, யோசிக்கவோ நேரமே இல்லையே.. வழக்கம் போல, மத்தவன் போறதுக்குள்ள நாம கட்டிடனும்ன்னு 30,000 பேர் ஓடிப் போய் பணம் கட்டினார்கள்.. 😄 ஏழு கோடி பேர் அந்த சான்ஸை விட்டுட்டோமேன்னு வருத்தத்தோட பதிவு செஞ்சுகிட்டாங்க😂

படிமப்புரவு கூகிள்

பிப்ரவரியும் வந்து போச்சு..ஆனால் போன்? அது பத்தின பேச்சே இல்லை. அதுக்குள்ள பணம் கட்டினவங்கல்லாம் ஒரே கசாமுசானு சத்தம் போட , பணத்தை திருப்பிக் குடுக்குறோம்னு சொன்னாங்க. குடுத்தாங்களான்னு விவரம் இல்லே.

அப்புறம் ஜூன் மாசம் 30 ந் தேதிக்குள்ள 2 5 லட்சம் போன் டெலிவேரி செய்யப்போறோம்ன்னு சொன்னாங்க. பிறகு 2 லட்சம் தான் தயாராகுதுன்னாங்க. அப்புறம் ஜூலைன்னாங்க. கடைசியா சொன்னது முதல் கட்டமா 5000 பேருக்கு மட்டும் செய்வோம்..மீதி பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து குடுப்போம்ன்னு சொல்லி..🤣

இதுக்கு நடுவுல கோயல், பிரதமருக்கு லெட்டர் போடுறாரு…கொஞ்சம் இந்த திட்டத்தில் பணம் போடுங்க..அப்படி செஞ்சா 75 கோடி பேரு பயன் அடைவாங்கன்னு.. அதிகமில்லை பாஸ்..ஜஸ்ட் 50,000 கோடி ரூபாய் தான் கேட்டார்..

என்ன ஒரு தெகிரியம் 😂

ஆனால் ஆச்சரியம் பாருங்க மானியம் அதாங்க சலுகை எதுவும் வேணானுட்டார்😄

2017 வரைக்கும் கோயல் , பணம் கட்டினவங்களுக்கு கண்டிப்பா அவர் நிறுவனம் ஃப்ரீடம் போன் குடுத்துடுவோம்னு சொல்லிக்கிட்டு இருந்தார்…

இதை விடக் கொடுமை என்னன்னா அந்த 5000 பேருக்கு குடுத்துட்டோம்னு வேற சொன்னார்.ஆனா யாரும் அதை வாங்கினதா ஆதாரமே இல்லை😗

கோயல் விட்ட ஸ்டேட்மெண்ட்டெல்லாம் பயங்கரம்…😎

ஒரு ஃப்ரீடம் 251 மொபைல் போன் தயாரிக்க தங்களுக்கு 1180 ரூபாய் செலவாகுதுன்னும் ஆனால் நஷ்டத்துக்கு தான் அதை ஜனங்சுளுக்கு விக்கிறோம்னு …அதோட இந்த விலையும் 75 கோடி போன் ஆர்டர்னா குறையும்ன்னு தான் கவர்மெண்ட்டை கேட்டோம்னு ஒரு பிட் போட்டாரு பாருங்க 😄

அவர் சொன்னதுலே இன்னொரு ஹைலைட்..… இந்த போன் அஸெம்பலிங் எல்லாம் ஹரித்வாரிலே😉 நடக்குது, 60 % உள்ளூர் தயாரிப்பு வச்சு செய்றோம்.இத 100% ஆக்கிறது தான் குறிக்கொள்னு…

ஆனால் அது பொய்..அது போல ஒண்ணு தயாரிக்க ரூபாய் 2000_2500 செலவாகும்னு இந்திய செல்லுலார் சங்கம் சொல்லி பார்த்துச்சு..நம்ம ஆளுங்க காதிலே ஏறினா தானே!!😁

அட..இதுக்கு எப்படி அவ்ளோ பணம் மூலதனம்ன்னு காரணம் வேற சொன்னார்..நாடு முழுதும் கிட்டத்தட்ட 300 டிஸ்ட்ரிபுயுடர்கள் இருக்காங்க..அவங்க மூலமா ஒரு 10 கோடி ரூபாய் வந்துச்சு…ஒரு 23 கோடி ரூபாய் இந்த பிஸின்ஸ்க்கே ஒதுக்கிட்டோம்ன்னு கலர் கலரா..சொல்லிட்டு..🤔

பாவம் அதுக்கப்புறம் 2017ல் அவர் "உள்ளே" போனதுனாலே தொடர்ந்து சொல்ல முடியலை. இப்ப போன காரணம் வேற..ஏதோ ஒரு வழக்கில் முடித்து வைக்க ஆட்களை மிரட்டி பணம் பறிச்சார்ன்னு😃

ஒரு ஆறு மாசம் முடிச்சுட்டு வெளியே வந்தார்…இப்பவும் நம்ம ஆட்கள் நம்பிக்கையை விடலை.அவர் சொல்றதை கேட்டுக்கிட்டாங்க.."நான் இல்லாதப்ப நான் வச்ச ஆட்கள் சரியில்ல. அரசாங்கம் உதவி செய்ய மாட்டேன்னுட்டுது. எனக்கு இன்னொரு வாய்ப்பு குடுங்க🙏

அது எப்படி எல்லோரும் ஒரே மாதிரி கேட்கிறீங்க😄

ஆனால் இன்னி வரைக்கும், நானும் ஒவ்வொருத்தர் கையிலே இருக்கிற போனைத் தான் பார்க்கிறேன்..எங்கே அந்த ஃப்ரீடம் 251..நீங்க பார்த்தீங்க?😁

ஏன்னா கடைசி வரைக்கும் கோயல் சொன்னது..நாங்க 5000 போன் டெலிவரி பண்ணிட்டோமே"

கிடைக்காதவங்களுக்கு "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" ன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா 2018 ஜூனுக்கு பிறகு அப்படி ஒரு நிறுவனமே காணாம போயிடுச்சு..😊

எனக்கு தெரிஞ்சு இந்த 251 ரூபாய் பணம் கட்டிய ஒரு பேராசிரியரை கேட்டேன்..

"போன் வந்துச்சா..பணம் வந்துச்சா..?"

"ரெண்டுமே இல்லை."

"அப்புறம் என்ன பண்ணினீங்க,?"

"இந்த பணத்துக்கு என்னத்த அலையறது..அதுவும் நான் ஏமாந்துட்டேன்னு சொல்லிக்கிட்டா இருக்கமுடியும்?"

இது தான் நம் பலவீனம்.அவர்களின் பலம்.!!


ஏமாற்றுபவன், ஏமாறுபவன் - இவர்களில் யார் குற்றவாளி?

கண்டிப்பாக நடைமுறையிலும் சட்டப்படியும் எமாற்றுபவனே குற்றவாளி . 420 என்று தானே அவனைச சொல்கிறோம?

ஆனால் ஏமாறுபவன் என்று ஒருத்தன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்? ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நாம் ஏமாறுவதில்லையா? அது போலத் தான்.

கதாநாயகன் தன் தந்திரத்தையும் அறிவையும் பயன்படுத்தி பல்வேறு மக்களை பல்வேறு விதமாக ஏமாற்றுகிறார். அதற்கு அவர் சொல்லும் ஒரே காரணம் "ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருப்பான்"

இப்போது சொல்லுங்கள் யார் குற்றவாளி?"


Status Update

By Boogeyman


இந்தியாவில் ஒருவரிடம் பணத்தை ஏமாந்து விட்டால் அதைத் திரும்பப் பெறவே முடியாத அளவிற்கு ஏன் சட்டங்கள் மோசமாக உள்ளன?


உண்மை தான் சட்டங்கள் அனைத்தும் மோசமாக தான் உள்ளது…

இந்த முடிவை நீங்களே எடுத்துவிட்டு அதற்கு ஆதாரம் தானே கேட்டீர்கள்?😅

எப்படி என்று பார்ப்போமா?

படிமப்புரவு ஏமாற்றாத கூகிள்

  1. நாம் இன்னொருவரிடம் பணத்தை ஏமாந்துவிட்டோம் என்றால், அதை அப்படியே நம்பி எதிர் ஆளை பிடித்து ஜெயிலில் போடாமல், நான் சொன்னதற்கு ஆதாரம் கேட்கிறது. சட்டம் மோசம் தான்!!
  2. பணப் பரிவர்த்தனை என்றால் எழுத்து மூலம் தான் இருக்க வேண்டும் என்கிறது. நான் இன்னொருவன் மேல் நம்பிக்கை வைத்து கொடுத்தேன் எதுவும் எழுதி வாங்கவில்லை என்றால் ஏற்றுக கொள்ளாதாம். சட்டம் மோசம் தான்!!
  3. சரி இன்னொருவர் முன்னால் தான் கொடுத்தேன் என்றால் அவனை கூட்டி வந்து அதை நிரூபி என்கிறது. அவன் எங்கே என்றே தெரியவில்லை. வந்தாலும் எனக்காக சொல்வானோ மாட்டானோ..! பணம் வாங்கிவனிடம் இவனும் பணம் வாங்கிக்கொண்டு நான் பணமே கொடுக்கவில்லை என்றாலும் ஆச்சரியம் இல்லை. சட்டம் மோசம் தான்!!
  4. எழுதி வாங்கிக்கொண்டு தான் கொடுத்தேன் என்று அதை காட்டினால், அதில் உள்ள வாசகங்கள், கடனாக கொடுத்ததாக சொல்லவில்லையே என்கிறது.சட்டம் மோசம் தான்!!
  5. அப்படியே கடன் ஆவணம் சரியாக எழுதி இருந்தாலும் கடன் கொடுத்தது காலாவதியாகிவிட்டதே என்கிறது. "பயிர் பாராமல் கெடும்.கடன் கேளாமல் கெடும்" என்று ஊரில் சொல்வதில்லையா?..நீ கடன் திருப்பி கேட்டாய் என்பதற்கு ஆதாரம் காட்டு'என்கிறது.சட்டம் மோசம் தான்!!
  6. அதற்கு ஆதாரம் காட்டி, அப்படியும் அவன் தரவில்லை என்று வழக்கு போட நான் வைத்த வழக்கறிஞர், வாய்தா வாங்கிக்கொண்டு வழக்கை இழுத்துக்கொண்டு இருக்கிறார்..சட்டம் மோசம் தான்!!
  7. வழக்கை சுமூகமாக முடிக்க மக்கள் நீதிமன்றம், சமரச மையம் போன்றவை செயல்பட்டாலும், அங்கு என் வழக்கை எடுத்துப்போய் சீக்கிரம் தீர்வு காண நான் முயற்சிக்க வேண்டுமாம்.!!சட்டம் மோசம் தான்!!

ஒரு ஏமாளி கிடைத்து விட்டான் என்பதற்காக இப்படியா சட்டம் ஏமாற்றுவது?😅😃

சட்டம் ரொம்ப மோசம் தான்!!

நன்றி படித்தமைக்கு.

ஸ்ரீஜா.






கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...