முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் சம்பந்தப்பட்ட செய்தி அடிபடும் நேரம்.இது..
முதலில் இந்த மீன் …முன் ஜாமீன்" என்றால் என்னன்னு தெரிஞ்சுப்போம். இதற்கு விளக்கம் கொடுத்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்..
"முன் ஜாமீன்" என்பது "கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து பிணை. ஒரு தகுதியான நீதிமன்றம் இதை வழங்கும்போது, கைது செய்யப்படும் நேரத்தில் ஒருவரை விடுவிப்பதற்கான உத்தரவு வழங்கப்படும்".
இதோட அர்த்தத்தை சட்டப் புத்தகத்தில் பார்க்கலாம்னா, ஆச்சரியம் என்னன்னா குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 இல் இதைப் பத்தி சொல்லபடவேயில்லை. அதுக்கும் முந்தைய 1898 சட்டத்தில் கூட இது இல்லை.
அப்புறம் எப்படி இது முளைச்சது? முதன்முறையாக 41 வது சட்ட ஆணைய அறிக்கை, 1969 ல் இந்த சொல் குறிப்பிடப்பட்டுள்ளது,
ஏன்?
ஏனென்றால் இப்போது போலவே அப்போதும், ..முக்கிய நபர்கள், தங்கள் போட்டியாளர்களை தவறான வழக்குகளில் சிக்க வைக்க குற்றம் சாட்ட முயற்சித்து , சில நாட்கள் சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். என்று உணரப்பட்டது.அப்போது தான், அத்தகைய ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு காரணம் உள்ள ஒரு குற்றவாளியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடு.தேவை, அது சேர்க்கப்பட வேண்டும் என்று உணரப்பட்டது
ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், ஜாமீனில் இருக்கும். போது தப்பி ஓடுவதற்கோ அல்லது அதை தவறாகப் பயன்படுத்துவதற்கோ குறைவான வாய்ப்புகள் தான் உள்ளன என்று இருந்தால், அவரை முதலில் காவலில் வைத்து, பிறகு சில நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனுக்கு மனு செய்வது சரியல்ல என்பதால், அந்த ஏற்பாட்டின் தேவை எழுந்தது,
பாராளுமன்றமும் இந்த பரிந்துரையை பரிசீலித்து, 1973 சட்டத்தை இயற்றும்போது, பிரிவு 438 இன் கீழ் "கைது செய்யப்படுபவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கான ஏற்பாட்டைச் சேர்த்தது.
முன் ஜாமீனை ஒரு "பாதுகாப்பு போர்வையில், எதிர்காலத்தில், அவர் இன்னும் குற்றங்களைச் செய்து, அதிலிருந்து கைது செய்யாமலிருக்க .அனுமதிப்பதோ இதன் நோக்கம் கிடையாது,
ஒன்று தெரியுமா?
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விட்டால், இது உதவாது. .கைது செய்யப்பட்ட பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், ஜாமீன் தான் கேட்க வேண்டும்
பிரிவு 437 அல்லது 439 சி.ஆர்.பி.சி.யின் கீழ் தான். தீர்வு காண வேண்டும்.
இந்த முன் ஜாமீனை உரிமையாக கேட்க முடியுமா?
அதுவும் கிடையாது..
"1973 க்கு முன்னர் இந்த முன் ஜாமீன் என்பதே ஓரு சட்டரீதியான உரிமையாக இல்ல என்பதால், இந்திய அரசியலமைப்பபு சட்ட 21 வது பிரிவின் கீழ் அதை ஒரு அடிப்படை உரிமையாக கருத முடியாது"ன்னு சொல்லிடுச்சு. உச்ச நீதிமன்றம்
- "ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக எந்தவொரு நபரும் கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு ஒரு காரணம் இருந்தால், அவர் உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றத்திற்கு முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும். தன் விருப்பப்படி ஜாமீன் கொடுக்க விரும்புகிறதா இல்லையா என்று நீதிமன்றம் முடிவு செய்யும்.
இப்போது புரிந்திருக்கும்... வழக்கமான ஜாமீனோ Cr.P.C. பிரிவு 167 (2) ன் கீழ் கொடுக்கப்படும் இயல்புநிலை ஜாமீன் போல, குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைக்கான விஷயம் கிடையாது!!
- முன் ஜாமீன் கேட்பவர், தான் ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக கைது செய்யப்படலாம்ன்னு நம்புவதற்கு, நியாயமான அடிப்படை இருக்கணும். வெறும் "பயத்தை" அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது அவரது நம்பிக்கையின் நியாயத்தை தீர்ப்பதற்கு நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய குறிப்பிட்ட சம்பவங்கள்/உண்மைகளை சொல்ல வேண்டும்."
2005 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் பிரிவு 438 இல் சில திருத்தங்களை அறிமுகப்படுத்தியது,
- இந்த விதியின் கீழ் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படும். அதே நேரத்தில் நீதிமன்றங்கள் அதிக விழிப்புடன் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்:
- குற்றச்சாட்டின் தன்மை மற்றும் ஈர்ப்பு
- மனிதரரின் பின்னணி, அவரது முந்தைய தண்டனை அல்லது அறியக்கூடிய குற்றத்திற்காக சிறைவாசம் பற்றிய உண்மை.
- ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் விசாரணையைத் தவிர்த்து, நீதியிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு
- எஃப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் அவரை கைது செய்வதன் மூலம் துன்புறுத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ கொல்லப்பட்டதாக இருந்தால்
இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யலாம் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்கலாம்.இந்த இரண்டில் எது நடந்தாலும், விசாரணை அதிகாரி, எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யலாம்.
அதுக்காக, தள்ளுபடி ஆனதுனாலேயே கைது செய்ய தேவையும் இல்லை .
பாராளுமன்றம் சேர்த்த துணைப்பிரிவு 1 (ஏ) , 1 (பி) ன்படி,
- 1(ஏ) ..அந்த மனுவில், ஏதேனும் தகுதியைக் கண்டால், முன் ஜாமீனு மனுவை நிராகரிக்கவில்லை என்றால், அரசு வக்கீலை கேட்ட பின், முடிவு எடுக்க, அதை இறுதியாக விசாரிப்பதற்கு முன்னர் அரசு வழக்கறிஞர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு (எஸ்.பி.) 7 நாட்கள் அறிவிப்பு வழங்கப்படும்.
அது போன்ற சமயத்தில் கைது செய்யாமல் இருக்க இடைக்கால உத்தரவு போடும். ஆனால் அது முன்ஜாமீன் கிடையாது!!
- 1 (பி) .. இறுதி விசாரணையின் போது மனுதாரர் தேவை என்று அரசு வக்கீல் ஒரு மனுவை அளித்து, நீதிமன்றமும் அவர் ஆஜராவது கட்டாயமானது என்று நினைத்தால், அதை அனுமதிக்கும்.
உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கும்போது சில நிபந்தனைகளை விதிக்கலாம்;
- தேவைப்படும் போதெல்லாம் அந்த நபர் காவல்துறை அதிகாரியால் விசாரிக்க ஆஜராக வேண்டும்.
- வழக்கின் உண்மைகளை அறிந்த எந்தவொரு நபருக்கும் அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வற்புறுத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது வாக்குறுதியளிக்கவோ கூடாது.
- குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது,
- பிரிவு 437 (3) இன் கீழ் விதிக்கப்படும் பிற நிபந்தனைகளை நீதிமன்றம் விதிக்க முடியும்.
- குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டால், அப்போதோ அல்லது எந்த நேரத்திலும் அதிகாரியின் காவலில் இருக்கும்போது அவர் முன் ஜாமீன் பெற்றால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்படவேண்டும்.
- அதே போல, ஒரு மாஜிஸ்திரேட் அந்த குற்றத்தை அறிந்துக் கொண்டு, அந்த நபருக்கு எதிராக முதல் சந்தர்ப்பத்திலேயே வாரண்ட் பிறப்பிக்க முடிவு செய்தால், அது ஜாமீன் பெறும் வாரண்டாக தான் இருக்க வேண்டும், ஆனால் மாஜிஸ்திரேட் அவருக்கு தெரியாமல், ஜாமீனில் வெளிவராத வாரண்ட் பிறப்பித்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் உத்தரவு பின்னர் நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரி ஜாமீன் உத்தரவைப் பற்றி அறிந்தால், அவர் அதை ஜாமீன் வாரண்டாக மாற்றி ,அதை போலீஸ் அதிகாரி மூலம் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிப்பார்.
இந்த முன்ஜாமீன் எந்த குற்றத்திற்கு கிடைக்காது?
- கற்பழிப்பு /கூட்டு கற்பழிப்பு.
மேலும் கீழே சொல்லும் சில வழிமுறைகள் விதித்துள்ளது உச்சநீதிமன்ற. 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
- வழக்கு பொருட்களை குற்றவாளியை வைத்து தான் போலீஸ் எடுக்க உத்தேசித்துள்ளது
- புகார் பார்த்த மாத்திரத்தில் பொய் என்றோ, ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கருதினால் ஒழிய, மரணம்/ஆயுள் தண்டனை வழங்கங்கக் கூடியவற்றில்
- பொருளாதார ஏமாற்றுதல் குற்றங்கள்
- வழக்கமான பிணை வழங்கும் பிரிவில் சொல்லாத சிறப்பு காரணம் இருக்கவேண்டும்.
- வெகு அரிதாக வழங்க வேண்டும்…
- வரதட்சணை கொடுமை வழக்குகளில் , அதுவும் திருமணம் ஆன ஏழு வருடங்களுக்குள் என்றால், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக சொல்லி நிபந்தனை இருக்க வேண்டும்
சரி…எப்போது தான் ன்ஜாமீன் உத்தரவு முடிவுக்கு வரும்?
- எந்த மாற்று உத்தரவும் வராத வரை, நீதிமன்ற விசாரணை முடிந்து, தண்டனை கொடுக்கப்பட்டால், அது வரை.
முன்ஜாமீன் கைது செய்வதிலிருந்து பாதுகாக்க அல்ல…
கைது செய்த பிறகு காவலில் வைக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க..
அதே போல,, முதல் தகவல் அறிக்கை இல்லாத போதும், முன்ஜாமீன் கேட்கலாம். சம்பவங்களின் அடிப்படையில் வந்த "சந்தேகம்" இருந்தால் மட்டும் போதுமானது.
குற்ற விசாரணையே சந்தேகத்தில் இருந்து தானே ஆரம்பிக்கிறது….
எப்போதெல்லாம், துன்பம் சூழ்கிறதோ, அப்போது, நமக்கும் "சந்தேகம்" வரத்தானே செய்கிறது?!
பாரதிக்கும் வந்தது
"தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?"…
அவ்வையின் பாணியே தனி...
"இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – "என்று சந்தேகம் கொண்டாலும்,
பின்பு ஆறுதல் தருகிறாள்..
"முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்
கொஞ்சமே அஞ்சாதே நீ. 73
இதற்கு பொருள்:
"நெஞ்சமே! பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் சாகவில்லை. காப்பான்.