சனி, 12 ஜூன், 2021

எந்தெந்த தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RTI) பயன்படுத்தலாம்?

 தகவல் அறியும் சட்டம் நம்ம நாட்டிலே அதிகாரபூர்வமா சட்டபூர்வமா 2005 அக்டோபர் 12, அன்று முதல் தான் நடைமுறைக்கு வந்தது. ஆனா, அதுக்கு முன்னாடியே, அக்கம் பக்கத்து தகவல்களை அறியும் உரிமையை நாம செம்மையாத்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றோம்.

அப்ப இது எதுக்கு?

ஒரு அரசு இயந்திரம் இயங்கும் முறை பற்றி முன்னர் எல்லாம் ரகசியம் காக்கப்பட்டது. ஆனால் கால மாற்றத்தில், அது குறித்த தகவல்கள் என்பது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாக ரட்345பார்க்கப்பட்டது.அதன் அடிப்படையில் வந்தது தான் 2005ல் வந்த தகவல் அறியும் உரிமை சட்டம் .

இதன் மூலம், அரசு மற்றும் அரசு சார்ந்த, உதவி பெறுகின்ற நிறுவனங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கோரூம்போது, அதை பெறுவது உரிமையாக்கப்பட்டுள்ளது.

படிமப்புறவு : கூகிள்

தகவல் என்ற வார்த்தைக்கு சட்டத்தில் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே எந்த எந்த தகவல் பெறலாம் என்றுக குறிப்பாக சொல்ல முடியாது.

அதே சமயம் பொது தகவல் அதிகாரி, ஒரு தகவலை உருவாக்கவும் முடியாது. என்ன தகவல் கோப்பில் உள்ளதோ அதை மட்டுமே அவர் அளிக்க முடியும்.

எந்த தகவல் பெறலாம் என்று சட்டத்தில் சொல்லாவிட்டாலும், எந்த தகவலை பெற முடியாது, அதாவது அதை பெறும் உரிமையிலிருந்து விளக்கு அளிக்கப் பட்டுள்ளன என்று பட்டியல் இட்டுள்ளது.அவை என்னென்ன?

  • நாட்டின் பாதுகாப்பு மற்றும் மற்ற நாட்டுடன் உள்ள பொருளாதார தொடர்பு கொண்டவை
  • எந்த ஒரு நீதிமன்றத்தால் பிரசுரம் செய்ய தடை விதிக்கப்பட்டவை
  • சட்டசபை மாண்பை குலைக்கக்கூடியவை
  • வணிகரீதியானவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடியவை
  • நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை
  • ஒரு வெளிநாட்டால் ரகசியமாக கொடுக்கப்பட்டவை
  • அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் அல்லது ஒரு உயிருக்கு பாதகமானவை
  • குற்றவியல் வழக்குகளில் விசாரணை செய்யவும் கைது செய்யவும் இடையூறு கொடுக்கக்கூடியவை
  • காபினெட் அமைச்சர்கலின் பதிவேடுகள்.அவற்றில் முடிவு எடுத்த பிறகு அது குறித்த தகவல்கள் கொடுக்கலாம்
  • அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள். அவை கேட்கும்போது, சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ தெரிவிக்கப்படவேண்டும்.
  • ஒரு தகவல் கொடுப்பது காபிரைட்சட்டத்திற்கு எதிரானது என்றால் பொது தகவல் அதிகாரி அதைக் கொடுக்க மறுக்கலாம்.
  • இந்த விதிவிலக்குகள், கோரும் தகவல் 20 வருட பழமையானது என்றால், பொருந்தாது.ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு, இன்னொரு நாட்டுடன் உள்ள பொருளாதார தொடர்பு, பாராளுமன்ற உருமை மீறல் நடவடிக்கைகள் 20 வருட மேற்பட்டவை என்றாலும் கொடுக்க மறுக்கலாம்.

இவை தவிர்த்த மற்ற தகவால் பெறும் உரிமை இருந்தாலும், மேற்சொன்ன விதிவிலக்குகளை காட்டி தகவல் கொடுக்க மறுப்பதே பொது தகவல் அதிகாரிகள் தங்கள் பணியாக செய்கின்றனர்.

மேலும் அரசும், தனக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பொதுமக்களுக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொள்கின்றன.தகவல் கொடுக்க மறுக்கும் அதிகாரிக்கு தண்டனை வழங்குவது பற்றி சட்டம் சொன்னாலும், அது கண்டிப்பாக அமுல்படுத்துவது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.!


தகவல் கொடுக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை---உயர்நீதிமன்றம் உத்தரவு.

சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், இயந்திர கதியில் தகவல் கோரும் விண்ணப்பத்தை மறுக்கும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு தசுண்டனை அளிக்கும் சட்டப் பிரிவை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.

2008 ல் தமிழ்நாடு அரசுத் பணியாளர்கள் தேர்வாணையத்தின் முன், பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் காலி விவரங்கள் கேட்டு மனு செய்ததற்கு, அது மூன்றாம் நபரின் நலனுக்கு எதிரானது என்று மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், மனுதாரர் கேட்ட தகவலைக் கொடுக்குமாறு மாநில தகவல ஆணையம் உத்தரவிட்டது.

அது குறித்த வழக்கு விசாரணையின்போது , இது போன்று இயந்திரகதியில் பொது தகவல் அதிகாரிகள் தகவல் தர மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்று கண்டித்த மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன்  சரியான காரணம் இன்றி அவர்கள் மறுப்பது தெரிய வரும் போது அபராதமும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய நபர்கள் அந்தப் பதவியை வகிக்க தகுதியில்லாதவர்கள் என்றும் அவர்களுக்கு வாசற் கதவையே காட்ட வேண்டும் என்றும் கடுமையாக தன் அதிருப்தியைத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு, RTI போராளிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது அவர்களின் வெகு நாளைய கோரிக்கையாகும். இதன் மூலமே குறிப்பிட்ட காலத்திற்குள் தகவலைப் பெற இயலும் என்பது அவர்களின் தரப்பு வாதம். மேலும் இது பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், அவ்வாறு தாமதப்படுத்தும் பொது தகவல் அதிகாரிகளால், அந்த சட்டத்தின் நோக்கமே வீணடிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதம், சொற்ப அளவாக இல்லாமல் இருப்பதும், தகவல் தராவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்னும் அச்சுறுத்தல் ஏட்டளவில் இல்லாமல் செயல் வடிவில் இருந்தாலே, இந்த சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கத்தை கொடுக்கும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...