பொதுவாக பூமியில் உள்ள நில அளவு, பட்டாவுடையதை விடக் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் உங்கள் விஷயத்தில் அது சரியாக உள்ளது.அந்த விதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியே!!?!!
பத்திரத்தில் உள்ள அளவு மாறுபட்டிருப்பதற்கு எவ்வளவு என்று நீங்கள் சொல்லவில்லை
தவறு உங்கள் புறமும் உள்ளது."buyers bewsre"என்று கேட்டதில்லையா?? . வாங்கும் முன் நில அளவு உறுதி படுத்த நீங்களும் முனையவில்லையே..
உறங்குபவருக்கு சட்டம் உதவாது.
ஒரு பழமொழி கூட உண்டே. "விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது" என்று.
இதற்கு தான் அடிப்படை சட்ட விவரங்கள் ……வக்கீலுக்கும் கோர்ட்டுக்கு மட்டுமல்ல … எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது.
ஏமாற்றுதல் என்ற குற்ற செயலை விற்றவர் செய்துள்ளார் என்பது உண்டு தான் அதற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப் புகார் கொடுத்து வழக்கு போடலாம்..அல்லது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கலாம். இதற்கு ஏற்படும் கால, பண விரயம் என்பது எவ்வளவு நில அளவு இழப்பு என்பதை பொறுத்து உள்ளது .வரப்பு சண்டைக்கு கேஸ் நடத்தி நிலத்தையே தொலைக்க கூடாதில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக