சிறப்பு திருமண சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு திருமண சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

நான் ஒரு இந்து பெண். நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நான் கட்டாயமாக மதம் மாற வேண்டுமா? அப்படியே நான் மதம் மாறாமல் இருந்தாலும் என் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

 இப்போது "லவ் ஜிஹாத் " என்ற மத மாற்ற திருமணங்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட உள்ளதாக சில மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.

இவை எந்த அளவிற்கு சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை என்பது ஒரு சந்தேகமே. ஏனென்றால் மேஜர் வயதை எட்டிய இரு எதிர் பாலினர் முழு விருப்பத்துடன் திருமணம் என்னும் பந்தத்தில் இணையும்போது…எந்த சட்ட ரீதியான தடையையும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

அது நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம உறுதி அளித்துள்ள அடிப்படை சுதந்தரம் மற்றும் தனித்தன்மைக்கு எதிரானது.

சரி அந்த சம்மதம் விரும்பித் தான் செய்யப்படுகிறதா இல்லை அந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு செய்தாளா என்பதை வேண்டுமானால் ஆராயலாம்.

இதோ ஹதியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் அம்மா தீவிர இந்து மத நம்பிக்கை கொண்டவள்.அப்பா நாத்திகவாதியான ஆர்மி ஆபிசர் அவள் அகிலாவிலிருந்து ஹதியாவாக மாறி, ஒரு முஸ்லீம் இளைஞனை திருமணம் செய்தபோது அவள் அப்பா அது செல்லாது என்றும் தன் மகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அந்த மதம் மாறி செய்த திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

ஆனால், அதை எதிர்த்து மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட, இந்த விவகாரத்தில் விசாரித்து அறிக்கை தருமாறு தேசிய புலனாய்வு அமைப்பை உத்தரவு இட்டது.ஹதியா தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் மதம் மாறியதாக உறுதியாக கூற, வழக்கு அவருக்கு ஆதரவாக திரும்பியது…

இந்த தீர்ப்பினால் நாடே கொந்தளித்தது.

இந்த லவ் ஜிஹாத் திருமணங்கள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் இது போன்ற வழக்கில் உத்தரவு போட்டது.இதில் பிறப்பில் முஸ்லிமான பெண் ஹிந்துவாக மாறி, ஒரு மாதம் கழித்து ஒரு ஹிந்து ஆணை திருமணம் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவரை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிட்டது.இன்னொரு வழக்கில், இந்து பெண் முஸ்லிமாக மாறியது குறித்து வாக்குமூலம் பதிவு செய்து, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இவர் மதம் மாறினார் என்று முடிவு செய்தது.

அப்படியானால் கேரளா உயர்நீதிமன்றம் ஏன் திருமணம் செல்லாது என்றது?

1995ல் உச்ச நீதிமன்றத்தில் வந்த சரளா முட்கள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகளுக்காண  விளக்கத்தை  2000ம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில் கொடுத்தது.

        அந்த வழக்கில், ஒரு இந்து , இரண்டாம் திருமணம் செய்தால் இ.த.ச.பிரிவு 494 பிரிவின் கீழ் குற்றவாளி ஆவதை தவிர்க்கும் பொருட்டு, இஸ்லாம் மதம் மாறி திருமணம் செய்தபோது, அவ்வாறு மதம் மாறுவதாலேயே முன்னர் செய்த திருமணம் ரத்தாகாது என தீர்ப்பு அளித்தது.

மதம் மாறாமல் திருமணம் செய்தால் விளைவுகள் என்ன?

ஒரு ஹிந்து பெண் மதம் மாறாமலேயே ஒரு முஸ்லீம் ஆணை திருமணம் செய்யலாம்.சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்யலாம்.

ஆனால் அந்த முஸ்லீம் கணவனின் சொத்துக்களை பொறுத்து அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது.

அவள் தன் கணவனிடம் இருந்து "மெஹர் "எனப்படும் பணம் பெறலாம். இந்த மெஹர் பணம் திருமனத்தின் போது கணவன் மனைவிக்கு அன்பளிப்பாக கொடுக்க உறுதி கூறுவது .அதற்கு எந்த விதிமுறைகள் கிடையாது.இரண்டு தரப்பும் பேசி முடிவு செய்வது.

ஆனால் அந்த பெண் இந்த மதம் மாறுவதால், அவள் பிறந்த குடும்பத்தில் சொத்துரிமை எதுவும் போகாது.

அதே சமயம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் வாரிசாக உரிமை கோரலாம்.இதில் கவணிக்க வேண்டிய விஷயம் மற்ற குழந்தைகள் பிறப்பினாலேயே மற்ற உறவினர்களின் சொத்தில் தனிப்பட்ட உரிமை பெறும்போது, இவர்களுக்கு அது கிடையாது.

தனக்கு பிடித்த மத நம்பிக்கை கொள்வது, தன் விருப்பப்படியே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது... இவையெல்லாம் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள். அதை தேர்ந்தெடுக்கும் பக்குவம் வரும் போது உங்கள் குழந்தைகள் என்று இல்லை…யாரும் பின்பற்றலாம்.

அதை எந்த சட்டம் போட்டும் தடுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர் மனப்பூர்வமாகத் தான் செய்தாரா என்று உறுதி செய்யலாம்.

ஆனால் மனதில் உறுதி கொண்டு தன் பெற்றோரையே துறக்கத் துணிந்தவருக்கு அது ஒன்றும் கடினம் இல்லையே….

லவ் ஜிகாத் என்றால் என்ன?

 இன்னிக்கு பிரபலமான வார்த்தை இந்த லவ் ஜிகாத். இருந்தாலும் நம் சகோதரர் அதற்கு விளக்கம் கேட்பதால்,அதையும் கொஞ்சம் விளக்கிப் போடுவோம்😃

இந்துப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் வலுக்கட்டாயமாக மணம் செய்து கொள்வதையே இந்துத்துவ அமைப்புகள் லவ் ஜிஹாத் என்று சொல்கிறார்கள் இந்துப் பெண்கள் இத்தகைய திருமணங்கள் மூலம் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியான்னாலே அதனோட கலாச்சாரம், பண்பாடு தான் அடையாளம்.என்ன தான் நாம நவ நாகரீகமா மாறினாலும், அந்த மனசு, dna எல்லாம் இதிலே ஊறியது தான். சட்டுன்னு இன்னொரு கலாச்சாரத்தை ஏத்துக்க முரண்டு பிடிக்கும். அதனாலே தான் இன்னும் இங்கே தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறதுலேயிருந்து, வேலை வாங்கி கொடுத்து, ..சொத்து சேர்த்து கொடுத்துன்னு கொடுத்து கொடுத்து ஏமாளியா போறாங்க பெத்தவங்க..வெளிநாட்டிலே அப்படியல்ல.ரெண்டையும் போட்டு குழப்பிக்க கூடாது!!

இவ்ளோ செய்றவங்க. புள்ளைங்க கல்யாணத்திலே மட்டும் தலையிடக்கூடாதுன்னு சொல்றது எப்படி சரி?

ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் பெத்தவங்க உதவி தேவைப்படுது.!!

சரி பெத்தவங்களும் சம்மதிச்சிட்டாங்கன்னு வையுங்க.

இந்த வேற்று மதத்திலே கல்யாணம் பண்ணவங்க ..அனுபவதையே எடுத்துகுவோமே..

இவங்க சாதாரண படிப்புலாம் இல்லீங்க.IAS முடிச்சு பெரிய பதவியில் இருக்கிறவங்க.

டினா , அக்தர் கான் திருமனத்தின் போது

ஏன் இவங்க இப்ப ட்ரெண்டிங்கிலே இருக்காங்கன்னு கேட்டா இவங்க கல்யாணத்தின்போது so called liberals ஒரே பரபரப்பாயிட்டாங்க.

இவங்க சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் எந்த மத மாற்றமும் இல்லாம திருமணம் செஞ்சுக்கிட்டாங்க.இது மத்தவங்க பாடம் எடுக்க வாய்ப்பை கொடுத்தது…

.நல்லது…

இப்ப பாருங்க..ரெண்டு பேரும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட்டில் மனு போட்ருக்காங்க.

அனைத்து படமப்புரவு மாறாத கூகிள்

வெவவேறு இடங்களுக்கு மாறுதல் வாங்கி விட்டனர்.

புது இடத்தில் இந்து சம்பரதாயப்படி சடங்குகள் செய்துள்ளார் டினா . தன் பெயரில் இருந்த கான் என்பதை நீக்கி விட்டார்.

என்ன பிரச்சினை..?

ஆரம்பத்திலே எல்லாம் ரொமான்டிக்கா தான் போகும். காஷ்மீர் முஸ்லிமான அக்தர்க்கு சமீபத்தில் காஷ்மீரில் போடப்பட்ட சட்டங்கள் குறித்த மனவருத்தம், இரண்டு பேருக்கும் இடையிலே இதனாலே ஏற்பட்ட கருத்து வேறுபாடு. இதெல்லாம் தான் பிரிவுக்கு காரணம்ன்னு சொல்லப்படுது.அது அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கைனாலும் அவங்க திருமணம் பரபரப்பா பேசப்பட்டதாலேயே இதுவும் இப்போ பேசப்படுது.

படிச்சு நல்ல வேலையிலே இருப்பவர்களுக்கே மதம் குறித்து கருத்து வேறுபாடு வரும்போது, மத்த நிலையிலே இருக்கிறவங்களை கேட்கவே வேண்டாம்.

பெத்தவங்க சம்மதத்தோட வேற்று மதத்தை சேர்ந்தவங்களை கல்யாணம் பண்ணும் போது இப்படி..

அதுவே சம்மதம் இல்லாதபோது,…

அங்கே தான் வருது சட்டப் பிரச்சினை…

  • வெவவேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யணும்னா சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தான் அதை பதிவு செய்யமுடியும்.
  • அதுக்கு 30 நாட்கள் பொது அறிவிப்பு கொடுக்கப்பட்டு, அதற்கு ஆட்சேபனை யாரும் செய்யலைனா பதிவு நடக்கும்..
  • அந்த ஆட்சேபனையை யார் வேணும்னாலும் செய்யலாம்.அதை விசாரிச்சு, திருப்தியானாதான் பதிவு.
  • இந்த மாதிரி பொது அறிவிப்பு கொடுப்பது, இந்து திருமணத்தில் கிடையாது.

அதுனால தான் இருவரில் யாராவது ஒருவர் இன்னொருவர் மதத்திற்கு மாறி திருமணம் செய்துக்கிறாங்க.அது பெரும்பாலும் பெண் தான் மதம் மாற வேண்டியிருக்கு.அதை தான் எல்லோரும் எதிர்க்கிறாங்க.

இந்த விமர்சனத்திலே தப்ப இன்னொன்னும் செய்யிறாங்க. அந்தந்த மதத்தில் இருந்தே திருமணம் செய்துட்டு, அப்புறம் அந்த பெண் மதம் மாறுறா..மாற்றப்படுறா..கல்யாணத்துக்காக மதம் மாறலைன்னு வாதாடுறாங்க..

இதிலே நிறைய சட்ட சிக்கல் இருக்கு.இந்து பெண்ணுக்கு அவள் பிறந்த வீட்டில் சொத்துரிமை அப்படி இருக்கும்.ஆனால் கண்வனோட சொத்திலே உரிமை?! கஷ்டம் தான்…

என்ன சொல்ல…

நம்ம குழந்தைகளை பண்பாடு கலாச்சாரம் , பிரச்சினைகளை கையாள்வது, தனக்கு நல்லது எது என்று முடிவு எடுக்கும் திறன் இவற்றை கற்றுக்கொடுப்பது மட்டும் இல்லாமல், ஆண், பெண் இருவருமே அவர்களின் தோழர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பேசும் நிலைக்கு கொண்டு வருவது விரும்பத்தகாத நிகழ்வை தடுக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

IAS toppers Tina Dabi, Athar Khan file for divorce in Jaipur's family court



🙏🙏


இங்கு பதிவிட்டது யார் மனதையும் புண்படுத்த அல்ல..

ஆனால் இங்குள்ள கலாச்சாரம், பண்பாடு புரிந்தவர்கள், தெரிந்தவர்கள் இங்கிருந்து போனவுடன், நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆச்சரியம்.

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்….

அதுவும் வெளிநாட்டினர் நம்மை பார்த்து கற்றுக் கொண்டு இருக்கும்போது…

அதுவும் இன்றைய சூழ்நிலையில் பெண்பிள்ளைகள் நிலைமையே இங்கு சரியில்லாத போது…

அது தான் உண்மை சம்பவங்களை சேர்த்துள்ளேன்..அவர்களுக்குள் நடந்த சொந்த பிரச்சினை நமக்கு தேவையில்லை அவர்கள் சம்பந்தப்பட்ட மதம் தான் கரு.

பாடகி சுதா ரகுநாதன் மகள் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தபோது விமர்சனம் செய்தவர்கள் தான் இன்று கமலா ஹாரீஸை வரவேற்கிறார்கள்…

நம்ம ஆட்களுக்கு வெளிநாட்டினரென்றாலே ஒரு craze…

நான் எல்லா மதத்தினருக்கும் பாலமாக இருக்கணும்னு நினைப்பவள்.அதே சமயம் இப்படி செய்தால் என்ன பிரச்சினை வரும் என்று தெரிந்தே, அவர்களுக்கு நான் சொல்லாமல் இருந்தால் என் வித்தைக்கு நான் செய்யும் துரோகம்..

எனவே மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எனக்கு மடல் அனுப்பாமல் இங்கேயே கருத்து சொல்லலாம்..

Evelyn Beatrice Hall has said.

I disapprove of what you say, but I will defend to the death your right to say It.

பொதுவெளியில் யோசனை சொல்பவர்கள் சந்திக்கும் தொல்லை தான் இது…..

இருந்தாலும் நான் எந்த கட்சி, மத சார்பற்று ,உண்மையை உரக்க சொல்வேன்.என் இன மக்கள் படும் இன்னல்களுக்கு என்னால் முடிந்த தீர்வு சொல்லிக்கொண்டிருப்பேன். அதே சமயம் சூழ்நிலை புரியாமல் எங்கிருந்துக் கொன்போ உசுப்பிவிடுபவர்களிடம் இருந்து பத்திரம் என்றும் உங்களுக்கு சொல்வேன்….🙏🙏


இதோ ஒரு அனுபவஸ்தரின் கதையையும் கேளுங்கள்.

Late Wajid Khan’s wife Kamalrukh on life in an inter-caste marriage: Scare tactics to make me convert included taking me to court seeking divorce - Times of India


திங்கள், 7 ஜூன், 2021

சிறப்பு திருமணச் சட்டம் 1954 இன் கீழ் திருமணம் செய்வதற்கான படிகள் யாவை?

 

இந்த சிறப்பு திருமண சட்டம், 1954, சீர்திருத்த நோக்கில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் மிகப் புதுமையானது என்று சொல்ல முடியாது .

ஏனென்றால் 1872 லிருந்து நடைமுறையில் இருந்த இதே போன்ற ஒரு சட்டத்தின் மாற்றப்பட்ட பதிப்பு தான் இது.

1872 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நீதிபதியும் சட்ட வரலாற்றாசிரியருமான சர் ஹென்றி மைனே என்பவர், மதச்சார்பற்ற திருமணச் சட்டத்தை, சிறப்பு திருமண மசோதா வடிவத்தில் அறிமுகப்படுத்தினார்,

இது இந்தியாவின் எந்த இரண்டு குடிமக்களும் தங்களுடைய தனிப்பட்ட சட்டங்களை விட மதச்சார்பற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள அனுமதித்து.

அதற்கு எதிர்ப்பு வராமலா?😃

தங்கள் "மதம் எப்படிப்பட்ட ஆபத்தில் உள்ளது" என்ற கூகுரலும், கடுமையான எதிர்ப்பையும் அது எதிர்கொண்டது.🤣

வேறு வழியின்றி,😁 அவர்கள் கோரிக்கைக்கு அடிபணிந்து,, அந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், , தங்கள் மதத்தை கைவிட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கட்டுப்படுத்தப்பட்டது.

என்ன அநியாயம்!!

ஆனாலும் அவ்வப்போது, ​​ மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களுக்கும் இந்த சட்டத்தை பொருந்த செய்ய முயற்சி எடுக்கப்பட்டு, . கடைசியில், 1954 இல், கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டம் பழையதை மாற்றியது.

இந்த புதிய சட்டத்தின் கீழ், என்ன சிறப்பு?

எந்த இரண்டு இந்தியர்களும், அவர்கள் இந்தியாவில் அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்தாலும், ஒரே மதத்தையோ அல்லது வேறு மதத்தையோ பின்பற்றுகிறார்கள் என்றாலும் அல்லது எந்த மதமும் பின்பற்றவில்லை யென்றாலும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

சாதி மற்றும் மதத்தால் பிளவுபட்டுள்ள ஒரு நாட்டில் , இந்த எல்லையை எதிர்க்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குவது தான், இந்தச் சட்டத்தின் நோக்கம்…

ஆனால் நடந்தது என்ன?

இதன் விதிகள், தம்பதிகளை திருமணம் செய்து கொள்வதற்கு வசதி செய்து தருவதற்கு பதிலாக அவர்களுக்கு இடையூறுகளை உருவாக்குகின்றன என்கின்றனர்.

அதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் இந்த சட்டத்தின் சில விதிகளை பார்ப்போம்.:

பிரிவு 5:

  • இது இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தேசிக்கப்பட்டுள்ள திருமணத்திற்காக கொடுக்கப்பட வேண்டிய , வீட்டு அறிவிப்பைப் பற்றியது.
  • இதன்படி, குறைந்தபட்சம் கடந்த 30 நாட்களுக்கு குறையாமல், இரு தரப்பினரும் வசித்த மாவட்டத்தில் மட்டுமே திருமண அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
  1. குடும்பம், சமூகம் மற்றும் நெட்வொர்க்குகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் தம்பதிகள் தங்கள் திருமணத்தை தங்கள் வசிக்கும் மாவட்டத்தில் பதிவு செய்ய முடியாது. 

ஒரு இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர் இது பற்றி கூறும்போது “நாங்கள் தம்பதியரை வேட்டையாடவில்லை; சமூகம் தான் அவரகளை எங்களிடம் கொண்டு வந்தது ” என்கிறார். இவர்களுக்கு துப்பு கொடுக்கவென்றே, அக்கம்பக்கத்தினர், கோயில் மேலாளர்கள், திருமண பதிவு அதிகாரிகள் ஏன் வழக்கறிஞர்கள் கூட.

இந்த சமயத்தில் சென்னை குரளகத்தில் உள்ளத் திருமண பதிவு அலுவலகலத்தில் வழக்கறிஞர்கள் திருமண பதிவு சம்பந்தமாக செய்த அராஜகம் பற்றி ஞாபகம் வந்தால் சமூகம் பொறுப்பல்ல 😃

வேறு வழியில்லாமல், வன்முறைக்கும் அவர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பிறகும் அஞ்சி, திருமணத்திற்காக அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, மற்ற நகரங்கள் / மாநிலங்களில், ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வசதி இல்லாத ஜோடிகளுக்கு இது ரொம்ப கஷ்டம்.

உண்மையில், இந்த சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு (5) இன் கீழ் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் இணைய யுகத்தில் ஒரு கிளிக்கில் மட்டுமே, நாடு முழுவதும் பரப்பப்படலாம்,

இது தனியுரிமையின் தெளிவான மீறலாகும், இது 2017 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.

அண்மையில், மாண்புமிகு அலகாபாத் உயர்நீதிமன்றம் கூட, திருமண நோட்டீஸ் வெளியிடுவது தனியுரிமை மீறல் என்று தீர்ப்பளித்தது. அதை விருப்பத்தின் பேரில் செய்யுமாறு மாற்றக் கேட்டுக் கொண்டது.

இந்த ஏற்பாட்டின் காரணமாக, கடந்த ஆண்டு, கேரளாவில் உள்ள தம்பதியினர், தங்களை பற்றிய, மணமகனின் பெயர், முகவரி, வயது, தொழில், புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் (வாட்ஸ்அப்) தங்கள் தகவல்களை பார்த்தனர், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் கூட வெளிவந்தன

"லவ் ஜிஹாத்" குற்றச்சாட்டுகளின் கீழ். வாட்ஸ்அப்பில் வந்த அது ஒரு செய்தியை உள்ளடக்கியது: “இவர்கள் தான் லவ் ஜிஹாதிகள். இந்த மக்களின் அடுத்த பலிகடாக்கள். இந்த நபர்களை நீங்கள் அறிந்தால், நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். "😃

அடுத்த தடை அந்த சட்டத்தின் பிரிவு 6 (2) :

  • இது திருமணத்தை நடத்த இருக்கும் இடத்தில், பொது அறிவிப்பு ஒன்று, ஒரு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட வேண்டும்.
  • மேலும், திருமணத்திற்காக நகரும் மாவட்டத்தின் நிரந்தர வசிப்பவராக தம்பதிகளில் ஒருவர் இல்லை எனில், பிரிவு 6 (3) , அவர்களின் நிரந்தர முகவரிக்கு அறிவிப்பை அனுப்புவது கட்டாயமாக்குகிறது, இது தம்பதிகளின் பாதுகாப்பை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது .

பிரிவு (7)

  • எந்தவொரு இந்தியரும், இந்த திருமண உறவுக்கு ஆட்சேபனையளிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
  • ஆட்சேபனை கிடைத்ததும், திருமண அதிகாரி திருமணத்தினை நிறுத்த வேண்டும் மற்றும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

நான் பார்த்த வரையில், பெரும்பாலான தம்பதிகள் மதமாற்றத்தில் ஆர்வம் காட்டுவதில்லை, அவர்கள் திருமணம் செய்து கொள்ள, சிக்கல் குறைவான வழியைத் தேர்வு செய்யவே விரும்புகிறார்கள்.

உண்மையில், இந்த நீதிமன்ற திருமண ஏற்பாடுகள் மிகவும் சிக்கலானவை. தம்பதியினர், தங்கள் வீடுகளுக்கு திருமண அறிவிப்பு, போகும் என்றாலே, ​​பயந்துவிடுகின்றனர்,

அவர்கள் பொதுவாக நீதிமன்ற திருமணத்தை விரும்புவதில்லை என்றாலும், குடும்பம் மற்றும் சமூக அழுத்தத்திலிருந்து தப்பிக்கத்தான் அதை நாடுகிறார்கள்.

  1. ஆனால் நீதிமன்றமே குடும்பத்தினரையும் சமூகத்தையும் அவர்கள் திருமணத்தில் தலையிட அழைக்கிறது. 

பின்னே ஊரை கூட்டி, மேளம் கொட்டி தானே கல்யாணம் செய்யணும்?😀

அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள " சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான "உரிமையை கொடுக்க இந்த சட்டம் தவறிவிட்டதா?

எந்தவொரு மத திருமண சட்டமும் , அத்தகைய அறிவிப்புகளை பொது களத்தில் வெளியிடவோ, மாநில அல்லது திருமண அதிகாரிகளுக்கு எந்தவொரு ஆட்சேபனைய விசாரணை நடத்தக்கூடிய அதிகாரம் இல்லாதபோது, இந்த சட்டத்தின் கீழ் மட்டும், ஏன் இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன? என்ற கேள்வி வருகிறதே?

ஆரம்பத்தில், இந்த சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் மற்றும் ஆட்சேபனைகள் கொண்டு வரப்பட்டதே, சட்டவிரோத இரு தார திருமமானத்தை தடுத்து நிறுத்துவதற்கான காரணத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டன.

ஆனால், இப்போது இது ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் இந்த இரண்டு வித நம்பிக்கை கொண்ட ஜோடிகளை துன்புறுத்துவதற்கான ஒரு முறையாக கையாளப்படுவத தான் வருத்தமே.

2017 ஆம் ஆண்டில் மாண்புமிகு கேரள உயர்நீதிமன்றம் கூட, "அனைத்து மத நம்பிக்கை திருமணங்களும் காதல் ஜிஹாத் அல்ல" என்பதை வலியுறுத்தியது. நீதிமன்றம் கூறியது, “இதற்கு முன்னர் வாழ்க்கைத் துணைவர்களிடையே பிளேட்டோனிக் காதல் இருந்தாலும்கூட,, இரண்டு மதத்தாரிடையேயான திருமணத்தின் ஒவ்வொரு வழக்கையும்‘ லவ் ஜிஹாத் ’அல்லது‘ கர் வாப்சி ’என்று பரபரப்பை ஏற்படுத்தும் இந்த மாநிலத்தின் போக்கை கண்டு நாங்கள் திகைக்கிறோம்.” என்று தன் வருத்தத்தையும் பதிவு செய்தது.

இந்த சிறப்பு திருமண சட்டத்தின் நோக்கமே, தம்பதிகளின் நம்பிக்கை, உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது.;

ஆனால், இதன் கீழ் திருமணத்தை பதிவு செய்வதில், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு இல்லாதது, தம்பதியினரை குறைவான சிக்கல் கொண்ட வழிகளைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது,

அதாவது.. அவர்களின் உறவை முறித்துக் கொள்வது அல்லது மத மாற்றத்திற்குப் பிறகு திருமணம் செய்துகொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

இப்போது, ​​மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் வருகை, இந்த தம்பதிகள் ஒன்றாக வாழ எந்த வழியையும் விடாது என்றும் தோன்றுகிறது.!!

‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் பெருகிவரும் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த சிறப்பு திருமண சட்டத்தினை திருத்தி, இரு வேறு மத மத நம்பிக்கை கொண்ட தம்பதிகளுக்கு விவேகமான இடத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.

எந்த அளவிற்கு, அரசு இதற்கு செவி சாய்க்கிறது என்பதை பொறுத்தே இந்தியா இன்னமும் மத சார்பற்ற நாடாகத்தான் இருக்கிறதா என்ற ஐயத்தை தீர்க்கும்!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...