பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

பெண் குழந்தைகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் அல்லது திட்டங்கள் மற்றும் காப்பீடு பற்றிய விவரங்கள் என்ன?

 வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

இது போன்ற காரணத்தினால குறைஞ்சுகிட்டே வர்ற பெண் குழந்தைகளோட விகிதத்தை சரி செய்யவும், பெண் கல்வியை அதிகப்படுத்தவும் அவங்களுக்கு எதிரா இருக்கிற இந்த ஏற்றத்தாழ்வை மாற்றவும் மத்திய அரசு எடுத்திருக்கிற முயற்சியின் அடையாளமா கொண்டு வந்த திட்டங்கள் . என்னென்ன என்று பார்ப்போம்

1.பெண்ணைக் காப்பாற்றுங்கள்.. பெண்ணை படிக்க வையுங்கள் BBBP

இந்த திட்டம் 2015லே , பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை, சுகாதாரம் , குடும்ப நலத் துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ன்னு மூணு மத்திய அமைச்சகங்கள் வரிஞ்சு கட்டிட்டு ஒண்ணு சேர்ந்து நடத்துறது.

நிபந்தனைகள்'

  • ஒரு குடும்பத்தில் 10 வயதுக்கு கீழ் ஒரு பெண் குழந்தை இருக்கணும்
  • அவள் பெயரில் சுகன்யா சம்ரிதி கணக்கு ஏதாவது ஒரு வங்கியில் ஆரம்பிக்கவும்
  • பெற்றோர் NRI ஆக இருக்க கூடாது.

எந்த தேசியமயமாககப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் என்றாலும் அந்த திட்ட விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வேண்டிய ஆவணங்கள் இணைத்து தாக்கல் செய்து கணக்கு ஆரமபிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் உள்ள சலுகைகள்

சுகன்யா சம்ரிதி யோஜனா

  • இந்த சிறு சேமிப்பு கணக்கு பெண் குழந்தையின் பெயரில் ஆரம்பிப்பது
  • தறபோது 7.5%கூட்டு வட்டி கொடுக்கப்படுகிறது
  • 15 வருட கால அளவு கொண்டது
  • பெண் 21 வயது அடையும் வரையிலோ அல்லது திருமணம் ஆகும் வரையிலோ கணக்கு வைத்திருக்கலாம்.
  • வரி விலக்கு கொண்டது..
  • வேண்டிய போது .அதில் இருந்து, கடன் பெறலாம்.
  • அரசின் துணையுடன் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

பாலிகா சம்ரிதி யோஜனா

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தில் 1997 ஆகஸ்ட் 15க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கான உதவிப்பணம் கொடுக்கும் திட்டம்

  • குழந்தை பிறந்தவுடன் Rs.500 கொடுக்கப்படுகிறது
  • அதன் பிறகு கீழ்கண்டபடி ஆண்டு தோறும் உதவிப்பணம் வழங்கப்படும்.
  • I to III. Rs.300/- for each class

I V . .. Rs 500/-

V. .. Rs. 600

VI to VII…Rs. 700/- for each class

VIII…Rs. 800/-

IX to X…Rs. 1000/-

UGC இந்திரா காந்தி ஒரே பெண் குழந்தை முதுகலை பட்டப்படிப்பிற்கான உதவிப்பணம்

  1. குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும்
  2. 30 வயதுக்கு மேல் இருக்க கூடாது.
  3. தொழில் சார்ந்த முதுகலை பட்டப் படிப்பிற்கில்லை.
  4. தொலை தூரப் படிப்பிற்கில்லை

CBSE ஒரே பெண் குழந்தை உதவி பணத் திட்டம்

  • குடும்பத்தின் ஒரே குழந்தையாக இருக்க வேண்டும்.
  • பள்ளி மேல்நிலைப்படிப்பு 11, 12 ஆம் வகுப்பிற்கு உதவிப்பணம்
  • 15 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது
  • இந்திய குடிமக்களுக்கு மட்டுமே
  • CBSE 10 ஆம் வகுப்பு தேர்வில் 60%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • படிக்கும் பள்ளியின் கல்விக்கட்டணம் மாதம் Rs.1,500 மிகாமலும் அடுத்து வரும் ஆண்டில் 10% மிகாமலும் இருக்க வேண்டும்.

SOF பெண் குழந்தை உதவிப்பணத் திட்டம்.

  • பொருளாதார வசதி குறைந்த குடும்ப பெண் குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பிற்கென வருடம் Rs 5000 உதவிப்பணம் வழங்கப்படும்.
  • படிக்கும் பள்ளி தேர்வு செய்து அனுப்பும் குழந்தைகளின் பட்டியல் கொண்டு வழங்கப்படும்.

தமிழ் நாட்டைப் பொறுத்து பெண்குழந்தைகளுக்கு என்று தனியாக திட்டங்கள் இல்லையென்றாலும் கல்வி உதவிப்பணம் பல வகைகளில் கொடுக்கப்படுகிறது.அதற்கான லிங்க் இதோ

Tamil Nadu Scholarship 2020 - List & Last Date - Scholarship4Study.Com

பெண்கல்வின்னு பார்க்கும்போது, அந்தக் காலத்திலே பெண்கள் கற்றவர்களாகத்தான் இருந்திருக்காங்க.

காளிதாசரே குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றி இப்படி சொல்றார்

“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.

கிராமப்புறங்களில், பெண் கல்வியின் நிலை, சொல்லிக்கிற மாதிரி இல்லை. கடைக்கோடிச் சிறுமிக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்படுவதில் தான் அரசு அக்கறை காட்டணும்ன்னு சொன்னாலும் இதப்பத்தி பெத்தவங்க உணர்ந்தால்தான் அது தன் கடமையும்கூடன்னு புரிஞ்சுக்கிட்டு பிள்ளைகளை படிக்க வைப்பாங்க..அந்த விதத்தில் ஹத்ராஸ் சம்பவத்தினால, அந்தப் பெண்ணின் குடும்பம் மட்டுமில்லே மத்தவங்களும் அதை புரிஞ்சுக்கிட்ட மாதிரி தான் தெரியுது.

ஆனால், எனக்கு சில கேள்விகள் உண்டு. 1.பெண் கல்வியின் நோக்கம், படித்த பெண்களிடையேயாவது நிறைவேறியிருக்கிறதா?

2. பெண் குறித்த சமூகத்தின் கோணல் பார்வை மாறியிருக்கிறதா?

3. பாலியில் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா?

4. பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் வன்முறைகளிலிருந்து படித்த பெண்களுக்காவது பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா?

5. குடும்பத்தில், சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் சமத்துவத்தையும் பெற முடிகிறதா?

கசப்பான உண்மை என்னன்னா இந்தக் கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’ ன்னு தான் இருக்கும்

இதெல்லாம் மாறணும்னா, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொதுவான மனிதநேயம், மனித உரிமைகள், இதைத் பத்தி பேசிப் ப்ரயோஜனமில்லை. சின்ன வயசிலேயே குழந்தைகளின் மனசிலே பதிய வைக்க, இதெல்லாம் பள்ளிப் பாடங்களாக ஆக்கப்படும்போது தான் உண்மையான மாற்றம் வரும்.

தசரா விற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. தஸ் என்றால் பத்து..ஹரா என்றால் ஓழித்தல் தீமையை ஒழிக்கும் நாள் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தசராவாவது பெண் குழந்தைக்கு எதிரான தீமையை ஒழித்த நாளாக உண்மையாகக் கொண்டாட.

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ

ஸ்ரீஜா

படங்கள் என் கைபேசி

தரவுகள்

https://www.paisabazaar.com/saving-schemes/sukanya-samriddhi-yojana/

UGChttps://www.paisabazaar.com/saving-schemes/beti-bachao-beti-padhao-bbbp/ Single Girl Child Scholarship Scheme 2020-21: Eligibilty, Apply etc.

UGC Single Girl Child Scholarship Scheme 2020-21: Eligibilty, Apply etc.

https://www.paisabazaar.com/saving-schemes/balika-samridhi-yojana-bsy/

CBSE Single Girl Child Scholarship Scheme 2020-21: Apply Now!

https://www.sofworld.org/girl-child-scholarship-scheme-gcss

பெண் கல்வி – Tamil and Vedas


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...