சனி, 12 ஜூன், 2021

எனது அம்மாவின் அப்பாவுடைய பெயரில் இருந்த இடத்தை விற்று அவர்கள் அண்ணன் தம்பி மட்டும் சம பங்கு பிரித்து கொண்டனர். அதற்கு என் அம்மா பங்கு கேட்டால் அவர் தந்தையே பணத்தை உண்டு தீர்த்துவிட்டனர் என கூறி விரட்டி விட்டனர். வருமையில் வாடுகிறோம். என்ன செய்வது?

 உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்காமல் சென்றிருந்தால், உங்கள் மாமாககளுக்கு சொத்தில் எனன உரிமை உள்ளதோ அதே உங்கள் தாய்க்கும் உள்ளது. எப்போது பிறந்தார், எப்போது திருமனம் ஆனது, எப்போது உங்கள் தாத்தா இறந்தார் என்பதெல்லாம் தேவையில்லை. பாகப்பிரிவினை வழக்கு போட்டு சொத்தில் பங்கு வேண்டும் எனக் கேட்கலாம்.உங்களால் வழக்கு போட வசதி இல்லை என்றால் உங்கள் தாலுகாவில் உள்ள இலவச சட்ட உதவி மையம், அது பெரும்பாலும் நீதிமன்ற வளாகத்திலேயே இருக்கும். அதை அணுகினால், அவர்களே வக்கீல் வைத்துக் கொடுத்து, அவர்களுக்கு உண்டான பீஸும் கொடுத்து விடுவார்கள்.

அதே போல, இன்னொரு வழியும் உள்ளது. உங்கள் தாத்தா இறந்த பிறகு, வாரிசு சான்றிதழ் பெற்றுத்தான் சொத்தை விற்று இருப்பார்கள். உங்கள தாயையும் வாரிசாக சேர்க்காமல் சான்றிதழ் கொடுத்தது தவறு என்று ஆதாரத்துடன் புகார், சான்றிழ் அளித்தவருக்கு மேலதிகாரியிடம் கொடுத்து, திருத்தப்பட்ட சான்று பெறுங்கள். உரிய வாரிசான உங்கள் தாயின் அனுமதி பெறாமல் செய்த கிராயம் செல்லாது என்று அந்த சொத்தை வாங்கியவருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்.


ஒரு வயதான அம்மா புற்று நோயால் சிகிச்சைக்காக தனது நிலத்தை விற்க முடிவு செய்தபோது தான் அவரின் பெயரில் உள்ள பத்திரம் தொலைந்துவிட்டது என தெரியவந்தது. இப்போது மருத்துவ சிகிச்சைக்காக உடனே விற்பனை செய்யவேண்டும், வாங்குபவரும் தயாராக உள்ளார். இதற்கு என்ன வழி?


சான்றிட்ட கிரயப்பதிரம் பெற்றால் மட்டும் போதாது அசல். ஆவன்ம் தொலைந்து விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, பத்திரிக்கையிலும் விளம்பரம் செய்ய வேண்டும். பின்னர் காவல் நிலயயத்தில் இருந்து சான்று பெற்வேண்டும். அப்போது தான் தொலைந்த பத்திரத்தைக் கொண்டு யாரும் தவறு செய்ய முடியாது



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...