உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நாட்டின் தலையாய தீர்ப்பு ரன்பதால் அனைத்து உயர்நீதிமன்றங்களுமே அதற்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என்னும் போது அதற்கும் கீழ் உள்ள, அவற்றின் அதிகார வரம்பில் வரும் மாவட்ட, நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என்று எல்லா நீதிமன்றமும் கீழ்ப் படிந்து அதன் தீர்ப்பை ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும்.
ஆனால், அந்த தீர்ப்பு சம்பந்தப்பட்ட வழக்கிற்கு பொருந்த வேண்டும்…
சில சமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அந்த வழக்கிற்கு பொருந்தாது என்று நீதிபதி கருதலாம். அப்போது அதை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு சொல்லலாம். ஆனாலும் அதை நிராகரித்த காரணத்தை தீர்ப்பில் சொல்ல வேண்டும்.
அப்படி செய்யும் போதே,, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத காரணம், சட்டப்படி சரியில்லை என்று தோன்றினால், நாம் மேல்முறையீடு செய்யலாம்
ஆனால் பெரூவாரியான நீதிமன்றங்கள் அதை செய்யத் தவறுகின்றன அதை தடுக்க ஒரே வழி,
வாதுரைகளையு எழுத்து மூலமாக கொடுப்பது.
அதில் இந்த தீர்ப்பையும் மேற்கோள் காட்டுவது..
(இதை நிறைய வழக்கறிஞர்கள் செய்ய தவறுகின்றனர் )
இப்படி செய்யும் போது, நீதிபதியும், அதை தான் ஏற்காத காரணத்தை, (ஏற்றுக் கொண்டால் கூட சொல்ல வேண்டும்.) தீர்ப்பில் சொல்வார்.
இந்த நடைமுறையை நீதிமன்றம் பின்பற்ற தவறும் போது,. நிச்சயமாக, அவருக்கு எதிராக, பாரபட்சமாக செயல்படுகிறார் என்று உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புகார் கொடுக்கலாம். புகாரை பிரமாண வாக்குமூலமாக நோட்டரி "அட்டெஸ்ட் " செய்து அனுப்பினால், உயர்நிதிமன்றமும் அதை விசாரித்துத் தான் ஆக வேண்டும்.
அதுவும் காரணத்துடன் நம் புகாருக்கு பதில் அளிக்கும்.
அளிக்க வேண்டும்.