மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை அடைந்த நபர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் நிற்க தடை உண்டு. ஆனால், நம் மனைவியையோ குடும்ப உறவினரையோ தேர்தலில் நிற்க வைத்து அவர்கள் பெயரில் நாம் ஆட்சி செய்வது என்பது நம் வரலாறு இது தான் சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருவது என்பது.
படிமப்புரவு கூகிள்
அதனால் இதில் சட்டத்தின் துணை கொண்டு தடுப்பதை விடுங்கள்.யார் நின்றாலும் அவர்கள் பின்னணி தெரிந்தும் இந்த கையை நீட்டிக்கொண்டு, அந்த கையால் ஓட்டுப போடும் நம்மவர்களை என்ன சொல்வது?
மேல் நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையே வேறு. ஒரு கட்டுப்பாடற்றது. வாழ்க்கை துணையை மாற்றுவது அங்கு சர்வ சாதாரணம். மற்ற ஒழுங்கு குறித்துக் கேட்கவே வேண்டாம். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு கொண்டவர்கள்.
ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது எந்த ஒழுங்கீனத்தையும் ஏற்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு தெரியும்.
"மன்னன் எவ்வழியோ மக்களும் வழியே என்று.."
அனபாய சோழன் சீவக சிந்தாமணி என்னும் சமண நூலை படிக்கிறான்..அதனால் மனம் மயங்கி, ஆடல் பாடல்களிலேயே நேரத்தை கழிக்கிறான்..இதன் காரணமாக நாட்டு மக்களும் கேளிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள் என்பதால், அவரின் முதல் மந்திரி வேண்டுகோளுக்கு இணங்க அதை நிறுத்தினான் என்றும் அப்படியாயின் அறநெறி கற்பிக்கக்கூடிய நூல் எழுத அவன் வேண்ட, அவ்வாறு பின்னால் சேக்கிழார் எனப்பட்ட அந்த மந்திரியும் எழுதியது தான் பெரியபுராணம் என்று சொல்கிறது சேக்கிழார் புராணம்..இப்போதெல்லாம் முதல் மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?😁
இன்றைய ட்ரெண்டிங்கா, எதிரில் யாரை பார்த்தாலும் கேட்கும் கேள்வி "யாருக்கு ஒட்டு போடுவது?"
எனக்கு அரசியல் பிடிக்காது என்றாலும் ஓட்டு போடும் ஜனநாயக கடமையை ஆத்த வேணுமே…இதிலே இருக்கிற கஷ்டமும் நஷ்டமும் நமக்கே என்பதால்…😀
நாம என்ன ஹாயா எங்கியோ உட்கார்ந்துக் கிட்டு, இருக்கிற நாட்டிற்கு விசுவாசமாக இருந்துக்கிட்டு , இங்கேயிருக்கிற அரசியலை கிண்டல் பண்றவங்களா 😁
- ..….அங்கேயிருந்து வெளிவரும் வெளிநாட்டு இதழ்களில், இந்த என்.ஆர்.ஐக்கள் .எழுதும் கட்டுரைகளை படிச்சா தெரியும்..அப்படியே ஆங்கிலத்தில்… .இங்கேயிருக்கிற அரசியலை கிண்டல் பண்ணிக்கிட்டு இந்தியாவில் இருக்கும்போது, ஏதோ மூச்சு முட்டி போய் கிடந்த மாதிரி எழுதுவாஙக…படிக்கிறப்பவே கஷ்டமா இருக்கும்.
ரொம்ப காலம் முன்னாலே "ஹிந்து"வில் "யாருக்கு ஒட்டு போடுவது?" என்ற இந்த தலைப்பில் புஷ்பா பார்கவான்னு ஒருத்தர் எழுதினார்.அது அன்னிக்கு மட்டுமில்லே இன்னிக்கும் பொருந்தும்ங்கிறதுனாலே அதை சுருக்கமா சொல்றேன்.
நம்ம கிட்டே வோட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் முப்பது தகுதிகள் இருக்கானு பார்த்து, யார் அதில் அதிக மார்க் எடுக்கிறங்களோ அவர்களுக்கு வோட்டு போடுங்கன்னு சொல்றார்.
என்னென்ன தகுதிகள்?
- இரண்டு மொழிகளாவது எழுதப் படிக்கத் தெரிந்தவராக.
- சுய சம்பாத்யம் கொண்டவராக.
- கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யாதவராக
- சம்பாதித்த சொத்து எப்படி வந்தது என்கிற தெளிவுடன்
- சேர்த்திருக்கும் சொத்து சமபாத்தியத்துக்கு பொருத்தமாக
- 10 முறையாவது தனக்கென்று இல்லாமல் பிறருக்கு உதவி செய்தவராக
- மரியாதை, அடக்கம், சிநேகம்(சினேகா இல்லே ..😁), நவீன சிந்தனை, பாரம்பரியத்தில் நம்பிக்கையுடன்
- ஜனநாயகம், சோஷலிசம், மத சார்பின்மை, விஞ்ஞான முறையில் அணுகுமுறை இதிலெல்லாம் நம்பிக்கை கொண்டவராக
- மனைவி குழந்தைகளை அடிக்காதவராக
- வரதட்சனை கேட்காதவராக, வாங்காதவராக,
- லஞ்சமே வாங்காதவராக
- நல்ல கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் தைரியம் உள்ளவராக
- தன்மானம் உள்ளவராக, மற்றவர் காலில் விழாதவராக
- சக மனிதர்கள் மேல் மரியாதை உள்ளவராக
- அணுகுவதற்கு எளியவராக
- தொகுதியில் பத்து குடும்பமாவது தெரிந்தவராக
- அரசு கொடுத்த வீட்டை பதவி போனவுடன் காலி செய்பவராக
- அளிக்கப்படும் சலுகைகளுக்கு பணம் கொடுப்பவராக, அவருடைய பில்களை ஒழுங்காக கட்டுபவராக
- தொகுதியில் உள்ள சில பிரச்சினைகளையாவது முழுதும் புரிந்து வைத்திருப்பவராக
- நன்றாக பேசக்கூடியவராக, மக்களுக்கு பதில் சொல்லாக கூடியவராக
- நேரத்திற்கு கூட்டத்திற்கு வருபவராக😀
- மற்ற புத்திசாலி மனிதர்களை பார்த்து பயப்படாதவராக
- புகழ்ச்சிக்கு மயங்காதவராக
- சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ மைக், புத்தகம், பெஞ்ச், நாற்காலியை தூக்கி எறியாதவராக😆, சண்டை போடாதவராக
- பினாமி சொத்து இல்லாதவராக
- சும்மா ஷாப்பிங்கிற்காக வெளிநாடு செல்லாதவராக, தன் வேலைகளை தானே செய்பவராக
- இட ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதை ஆதரிப்பவராக
- ஜோசியர்கள், சாமியார்கள் பேச்சை கேட்டுச் செயல்படாதவராக
- இந்திய அரசியல் சாசனத்தை நன்றாக அறிந்தவராக
- மரியாதையை கேட்டு வாங்குபவராக இல்லாமல் தானாக பெறக் கூடியவராக
இருக்க வேண்டும்.
இந்த 30 தொகுதிகளில் எந்த வேட்பாளருக்கு அதிக மார்க் போடுகிறோமோ அவருக்கு வோட்டு போடலாம் என்கிறார்.
இது ஒனறில் கூட தேருமானு தெரியலைன்னு சொன்னா…😁
நம்மை கடவுளாலே கூட காப்பாற்ற முடியாது😆
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக