பொய் வழக்கில் நஷ்டஈடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொய் வழக்கில் நஷ்டஈடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே நீங்கள் தெரிந்து கொண்ட வாழ்க்கை பாடங்கள் என்னென்ன?

 கசப்பான பாடம் தான்…ஆனால் வாழ்க்கை இனிக்க உங்கள் கல்லூரி காலத்திலேயே தெரிந்துக் கொள்ளுங்கள்!!

சந்தோஷ் பேருக்கேத்த மாதிரி நிறைய கலர் கனவுகளோடு மிதந்தான்.

இருக்காதா பின்ன…

சின்ன வயசிலேயிருந்து ஒண்ணா விளையாடி திரிஞ்ச பக்கத்து வீட்டு காதலியோட கல்யாணம்ங்கிறதுக்கு ரெண்டு வீடும் பச்சை கொடியும் காட்டிட்டாங்க… ஒரே ஜாதி வேற…

..அப்புறம் தடை என்ன? ..காதல் சிறகை காற்றினில் விரித்து….

கலர் கலரா தான் காலம் போச்சு.

ஆனால் விதி அவன் கிட்டே சடுகுடு ஆடும்னு நினைச்சு பார்த்திருப்பான்?…😗

ரெண்டு வீட்டுலேயும் சொத்து தகராறுனாலே பிரச்சினை வர, இருந்த செக்ரேட்டேரியட் காலனியை விட்டு வேற இடத்துக்கு குடி போனாங்க..

நிறைய கனவுகளோடு தான் அவன் பி.டெக் இன்ஜினீயரிங் படிக்க சேர்ந்தான்..

திடீருன்னு ஒருநாள் காதலியோட அம்மா வந்து, தன் பெண் கர்ப்பமா இருக்கா,,அதுக்கு அவன் தான் காரணம்னு சொல்லி உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லி, அவன் தலையிலே குண்டை போடுறாங்க.இவன் அதை மறுக்க, விவகாரம் பெரிசாகி போலீஸ் ஸ்டேஷன் போயிருச்சு..இவன் மேல கற்பழிப்பு புகார்..

அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்காமலே மாமியார் வீட்டுக்கு போனான்…

95 நாள் வாசம் முடிச்சு பெயிலில் வந்தான்.அதுக்குள்ளே அங்கே ஒரு பெண் குழந்தை பிறந்துருச்சு.

DNA டெஸ்ட் பண்றாங்க. இவன் தகப்பன் இல்லைனு வருது…அதுக்குள்ளே கோர்ட்டு விசாரணையம் ஆரம்பிச்சுறுது..திரும்பவும் கோர்ட்டு உத்தரவுபடி DNA டெஸ்ட் நடத்தப்பட, அதே ரிசல்ட் தான் வருது.

2010லேயிருந்து கோர்ட்டு, கேசுன்னு அலைஞ்சு, கடைசியா 2016 பிப்ரவரியில் அவன் குற்றவாளி இல்லேன்னு விடுதலை ஆகிறான்.

ஆனால் அவன் வாழ்க்கை?

எல்லாம் போச்சு..படிப்பு அரைகுறை..ஒரு கமர்சியல் ஓட்டுநர் உரிமம் கூட வாங்கமுடியலை.. கேசுக்கே ரூபாய் 2 லட்சம் செலவு.

.நஷ்டஈடு கேட்டு, அந்த பொண்ணு, அவ பெற்றோர், அப்புறம் அந்த போலீசையும் சேர்த்து கேஸ் போட்டு, இப்போ 2020 நவம்பர் மாதம் அவனுக்கு சாதகமாக, 15 லட்ச ரூபாய் அந்த பெண்ணும் அவள் பெற்றோர் சேர்ந்து குடுக்கணும்ன்னு தீர்ப்பு வருது.அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிரா தீர்ப்பு எதுவும் குடுக்கலை.

எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் பார்த்தீங்களா…

அதுவும் அவன் கல்யாணம் பணணிக்க நினைச்ச பெண்ணே செய்யும்போது…

இனிமேயும் அவன் யாரையும் சொல்வானா

😁😂🤣

அதுனாளே வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடம்…

யாரையும் கண்மூடித்தனமா நம்பாதே!!

ஞாயிறு, 6 ஜூன், 2021

95% பொய்யான வரதட்சிணை கொடுமை புகார் கொடுக்கும் பெண்கள் தண்டிக்கப்படுவதில்லையே. இதற்கு காரணம் என்ன?

 வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வெளிப்படையாக வாங்குகிறார்களே…

வெறும் 5% பேர் தான் தண்டனை அடைகிறார்கள். வாங்கும் 95% பேர் தண்டிக்கப்படுவதில்லையே. இதற்கு காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தால், உங்கள் கேள்விக்கும் சொல்லிவிடலாம்….

எரிமலைகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவை திடீரென ஒரு நாள் வெடிப்பதில்லை.. வெகு காலமாக உள்ளுக்குள் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பஞ்சபூதங்களின் ஒத்துழைப்போடு நடப்பது அது…அதுவரை சாம்பல் பூத்தவண்ணம் அமைதியாய் உள்ள அவையா

இப்படி வெடித்தது ஏன்று ஆச்சர்யம் இருக்கும்..

பெண்ணின் நிலையும் இது தான்.

காலம் காலமாக குடும்ப உறவுகளுக்குள் இருந்த அழுத்தத்தால் போராடி மூச்சு முட்டி கொண்டு இருந்தவள், சுதந்திர காற்றை இப்போது தான் சுவாசிக்க ஆரம்பித்துள்ளாள்..

அந்த வேகத்தின் வெளிப்பாடே தன்னைக் காயப்படுத்திய புகுந்த வீட்டினரையும் காயப்படுத்த வரதட்சிணை புகார் கொடுப்பது..

உண்மையில் புகார் கொடுக்க முனைந்தால், தன் வாழ்வு பறிபோகும் என்று தெரிந்தே துணிந்தே வருவாள்.

அந்த திருமண உறவு கேள்விக்குறியான பிறகு தான் இந்த பெரிய அடியே எடுத்து வைப்பாள்..

அது பொய் புகாரோ உண்மையோ, மீண்டும் இல்லற வாழ்வு கூடி வருவது கடினம் என்னும்போது தானே இதை செய்கிறாள்..அந்த நிலைக்கு தள்ளியவர்கள் மீது கோபம் எழுவது இயற்கையே..

அதற்காக பொய் புகார் கொடுப்பவரருக்கு நான் வாக்காலத்து வாங்கவில்லை.

ஆனால் ஏழு அடி எடுத்து, "உன் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து கொள்வேன்" என்று உறுதி கூறியவனே மாறும்போது?.

சரி ..பொய் புகார் கொடுத்துள்ளாள் என்றே வைத்துக்கொள்வோம்..

நீதிமன்றத்திலும், குற்றமற்றவர் என்று தீர்ப்பாகிவிடுகிறது.

அடுத்து யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்?

"என்னை பொய் புகார் கொடுத்து, நோகடிக்கவைத்தார்.அவர மீது நடவடிக்கை எடுங்கள்" என்று விடுதலையானவர் தான் புகார் கொடுக்க வேண்டும்.

அய்யோ …திரும்பவும் முதல்லேயிருந்தா..?😶

ஆனால்..நாம என்ன செய்வோம்..

"தப்பிச்சோம்..பிழைச்சோம்னு" ஓடிறது..

யார் மேல தப்பு?!

சரி..திருமண உறவே அற்புதமானது. அதுல வாழ்க்கையை ஏன் போர்க்களம் போல ஆக்கிக்கணும் ?

சில முக்கிய விஷயங்களை, திருமண்ப் பொருத்தம் பார்க்கும்போதே கணித்து விட்டு தவிற்கலாமே..

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்பம் மற்றும் கூட்டு குடும்பத்தை குறிக்கும் இடம். ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் ஏழாம் அதிபதி எனப்படும் களத்திரஸ்தானாதிபதி, இரண்டாமிடத்தில் இருந்தால், திருமணமாகி திருமணத்தின் மூலம் நல்ல, குடும்ப வாழ்க்கையும், அவர்களை சார்ந்து வாழும்அமைப்பு உண்டாகும்.

ஆனால்…ஏழாம் அதிபதி (கடக, சிம்ம லக்னம்) சனியாகி , லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்தால்,திருமணம் தாமதமாகும் என்ற நிலை இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர், குடும்பத்தில் ஒரு பற்றற்ற நிலையை உருவாக்கும்.

சனி இரண்டாம் இடத்தில் அமர்ந்து அதோடு பாவ கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுக்கள் சூரியன், செவ்வாய் இருந்தால், அவர்கள் கூட்டு குடும்பமாக, வாழ அமைப்புஇருக்காது.

உடனே தனிக்குடித்தனம் போவது உத்தமம் இல்லைனா..குடும்பத்தில் தினசரி குண்டு வெடிக்கும்.

.ஜோதிடத்தில் ராகு, கேதுக்கள் என்பவை மாமனார், மாமியாரை குறிக்கும் .

நான் சொல்லலை…😀

அத்துடன் பாப கிரகமான சனி சேர்வது ஜாதகருக்கும், மாமனாருக்கும் மாமியாருக்கும் இடையே நல்லஉறவு முறையை கொடுக்காது.தாமரை இலைத் தண்ணீர் போல், மறைமுகமாக வாழவே இயலும்.

அப்ப தப்பு பொண்ணு மேல கிடையாது😀

அதே நேரத்தில் 2 க்குடைய கிரகம் இரண்டில் ஆட்சி ஆகி, குரு பார்வையில் இருந்தால் நிச்சயமாக கூட்டு குடும்ப அரவணைப்பில் வாழும் அமைப்பைக் கொடுக்கும்.

அப்படி ஒரு பொண்ணு கல்யாணம் செய்ய கிடைச்சா விட்டுறாதீங்க!!

போலீசாரால் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நிரபராதி என தீர்ப்பு வரும்போது ஏன் தவறாக வழக்கு தொடர்ந்த போலீசாருக்கு தண்டனை வழங்கக்கூடாது?



கேரள விஞ்ஞானி நாராயணன் நம்பி ராக்கெட் ஏவப்படும் களமாகத் தான் விண்வெளியை பார்த்தாரே தவிர விண்வெளியை ஆளும் நவக்கிரகஙகள் தனக்கு எற்படுத்தயிருந்த பந்தன யோகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஜோதிட சாஸ்திரம் சிறைபடும் யோகமான இதைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமானாலும் முக்கியமான பாவங்கள் 6, 8 12 சிறைக்கு செல்லும் அந்த நல்ல வாய்ப்பை சீரும் சிறப்புமாக செய்கின்றன!!சொல்றது 

30 November 1994…அன்று தான் நாராயணன் நம்பியின் வாழ்க்கையை குப்புற புரட்டிப் போட்டு கும்மி அடித்த நாள்!

அவருக்கு அப்போது 53- வயது..இந்திய விண்வெளி ஏஜென்ஸியின் கரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் ப்ராஜெக்ட்டை நடத்தி செல்பவர்.ரஷியாவில் இருந்து தொழில்நுட்பத்தை பெற காரணமானவர்.

ரஷிய விஞ்ஞானிகளுடன் ..

இப்படி தான் கொண்டிருந்த எண்ணற்ற பெருமைகள் தரைமட்டமான நாளாக மாறும் என நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்.

அந்த நாளை நினைவு கூறும்போது சொல்கிறார்…

கேரளத்து தலைநகர் திருவனந்தபுரத்தின் தெற்கு எல்லையிலுள்ள குறுகலான தெருவில் உள்ள அவர் வீட்டிற்கு மூன்று காவல் அதிகாரிகள் வருகின்றனர். அவருடன் காவல் துறை DIG பேச விருப்பப்படுவதாக மரியாதையும் பணிவுமாக சொல்கின்றனர். போலிஸ் ஜீப்பிற்கு அவர்கள் வழிகாட்ட நடக்கிறார். தான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்கிறார்.இல்லை என்கின்றனர். ஜீப்பிற்கு பின்புறம் தான் சந்தேக நபர்கள் ஏற்றி சொல்வார்கள் என்பதால், எங்கு உட்காரவேண்டும் எனக் கேட்க, வண்டியின் முன் சீட்டில் உட்கார சொல்கின்றனர். அவர்கள் அங்கு சென்ற போது, அந்த அதிகாரி இல்லை. அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். தாண்டி செல்பவர்கள் தன் மீது வீசும் பார்வை குற்றவாளியை பார்ப்பது போல் இருக்கிறது.ஆனாலும் ஒரு விபரமும் யாரும் சொல்லவில்லை.

அந்த பெஞ்சிலேயே தூங்கிப் போன அவரை விடியற்காலையில் கைது செய்துள்ளதாக சொல்கின்றனர்.பத்திரிகையாளர்கள் குவிகிறார்கள். மாலத்தீவில் இருந்து வந்த இரண்டு பெண்களின் வலையில் விழுந்து பாகிஸ்தானுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக அவர் மீது குற்றம் சொல்லி பரபரப்பு செய்திகள் வெளியாகின்றன.

அந்த விடிகாலையிலிருந்து அவர் வாழ்க்கை விடியவேயில்லை.

சினிமாக் கதைப் போல இருக்கிறதா? அதைத்தான் அவரும் சொல்கிறார். தான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே காலம் பிடித்தது என்று

இந்த வழக்கு குறித்து 'Orbit of memories' என்கிற தன் சுயசரிதைப் புத்தகத்தில் கூறும் விஞ்ஞானி நம்பி நாராயணன்,`இந்தியா கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்குத் தடை ஏற்படுத்த முனைப்புக் காட்டியது. இதனால், சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னைக் கைது செய்ய வைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பேப்பர் மூலமாக தொழில்நுட்பங்களை மாற்றமுடியாது என்ற அவர் வாதம் அந்த துப்பறியும் சாம்புக்களின் முன் எடுபடவேயில்லை.

அவர் கைதிற்கு ஒரு மாதம் பிறகு வழக்கை கையில் எடுத்து CBI இரண்டு வருட விசாரனைக்கு பிறகு அவரை குற்றப்பத்திரிக்கையில் இருந்து விலக்கியது. 1996-ம் ஆண்டு கேரள போலீஸின் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. சி.பி.ஐ அறிக்கையைத் தொடர்ந்து நம்பி நாராயணன் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

ஆனாலும் பிரச்சினை அதோடு முடியவில்லை. அதை எதிர்த்து கேரளா அரசு மேல்முறையீடு செய்ய அது 1998ல் உச்சநீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட களங்கம்?

ராக்கெட் கரயோஜெனிக் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முடிவில் இருந்த சமயம் நடந்த இந்த கைதால், அதன் பிறகு அது குறித்த எந்த முன்னேற்றமும் இந்தியா காணமுடியவில்லை .அது மட்டுமல்லாமல் அவருடைய பணி, மரியாதை மகிழ்ச்சி எல்லாம் போனது .

தவிர தீவிர இறை நம்பிக்கையுள்ள அவர் மனைவி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார்.எனவே நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தை அணுகினார். அதன்பேரில் அவருக்கு கேரளா அரசு 5 மில்லியன் ரூபாய் வழங்க வேண்டும என்று உத்தரவு பிறப்பித்தது. அதை கொடுத்த கேரளா அரசு, இந்த சட்ட விரோத கைது மற்றும் காவலுக்கு நஷ்ட ஈடாக மேலும் 13 மில்லியன் ரூபாய் கொடுக்கவும் முன்வந்துள்ளது.

தன் மகளுடன்

.ஆனால் இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கில் அவரை சிக்க வைத்தவர்கள் எந்த வித பங்கமும் இல்லாமல் திரிவதை பார்த்து மனம் வெதும்பி, தன்னை பொய்யாக இந்த வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடந்துள்ளார் இந்த 78 வயது விஞ்ஞானி. 2018ல் உச்ச நீதிமன்றம் இந்த ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் கேரளா போலிஸாரின் பங்கு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

அது குறித்த முடிவுக்காக தான் ஆவலாக காத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சரிந்து போன நாட்டின் மற்றும் அவர் கவுரவத்தை மீட்கும் விதமாக அவருக்கு 2019ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

மதுபாலா மண்டல்

அசாமை சேர்ந்த 59 வயதான மண்டல் போலிஸாரின் தவறான அடையாளத்தினால் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.

இது மட்டுமல்ல அப்பாவிகளை தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற பொய்யான குற்றங்களை சுமத்தி போலீசார் பொய் வழக்கு போடுவது இன்று அதிகரித்துக் கொண்டு வருகிறது கண்கூடு.

சர்வதேச சமூக மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கைழுத்திட்ட இந்தியா, நம் நாட்டின் சட்ட அமைப்பு, தவறான கைது மற்றும் காவலில் இருந்ததால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்டஈடு கேட்கும் உரிமை அங்கீகரக்கவில்லை என்றுள்ளது. ஆனாலும் நமது உச்ச நீதிமன்றம் இது குறித்த தேவையை அதிகமாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நிறைய வழக்குகளில் அடிப்படை உரிமையை பாதிக்கக்கூடிய கைது, காவல் ஆகிவற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது..

ஒரு கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து பரோலில் சென்ற ஹஸ்னா என்ற நபரை ஆஜர்படுத்தாமல் தவறாக ஹசன் என்ற 68 வயது நபரை சிறையில் தள்ளிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ரூபாய் 5 லட்சம் நஷ்டயீடு மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

தவறாக இருவரை கைது செய்து தடுப்புக் காவலுக்கு அனுப்பிய காவல் ஆய்வாளரை தலா ரூபாய் 2 லட்ச ரூபாய் நஷ்டஈடு கொடுக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இது போன்ற உத்தரவுசுளுக்கு எதிராக அரசு முன் வைக்கும் ஒரே வாதம்..அரசு தன் குடிமக்கள் பாதுகாப்புக்காக செய்யும் செயல்களுக்கு எந்த கெட்ட எண்ணமும் கிடையாது என்பதே ஆனால் இது போன்ற வழக்கில் இந்த வாதத்தை புறம் தள்ளிய குஜராத் உயர் நீதிமன்றம், இது ,*அரசன் தவறே செய்யமாட்டான்* என்ற பழைய தத்துவத்தின் அடிப்படையிலானது, தற்போதைய குடிமக்கள் நலம் விரும்பும் அரசு மற்ற குடிமக்களை போல தன் ஊழியர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றுக் கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

சரி ஒரு பாவமும் செய்யாமல் சிறைவாசம் அனுபவிக்றதுலிருந்து தப்பிக்க இன்னொரு வழியும் இருக்கு . ..

போலிஸ் நம்மை பார்க்கிற பார்வை சரியா இருக்கா இல்லையான்னு ஆராயறதுக்கு முன்னாலே நம்ம ஜாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வை சேர்க்கை சரியிருக்கான்னு பார்த்து, ஜெயிலுக்கு போக வேண்டிய அமைப்பு இருக்குன்னு தெரிய வந்தா, என்னைய ஜெயில்ல போடுங்க சார் என்று வாலண்டியராக போய் ஒருநாள் ஜெயிலில் தங்கி பரிகாரம் செய்துக்கலாம்

இது நம்ம தமிழ்நாட்டில் இல்லை, உத்திரபிரதேசத்தில்தான் இது நடக்குது.. ஜாதகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு அந்த தோஷம் இருக்கும் காரன்த்தினால் பரிகாரமாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சிறையில் இருக்க அனுமதிக் கேட்டு மனு செய்யும் போது, எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கச் சட்டத்தில் இடமில்லை. என்றாலும் முற்றிலும் இது மதரீதியிலானது என்பதால் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் படியே கோரிக்கையை ஏற்கப்படுகிறதாம். இது போன்று வருடத்துக்கு 24 விண்ணப்பங்கள் வருகிறது, என்று சொல்லப்படுகிறது.

விதியை மதியால் வெல்வது என்பது இப்படி தானோ?

படங்கள்..நம்ம விண்வெளி வித்தகன் கூகிள்

சிறை செல்லும் தோஷம் யாருக்கு வரும் - பரிகாரம் என்ன?

ஒரு விஞ்ஞானியை சி.ஐ.ஏ எப்படி அழிக்கும்? - `இஸ்ரோ' நம்பி நாராயணன் எடுத்துக்காட்டு

Nambi Narayanan: The fake spy scandal that blew up a rocket scientist’s career

HC awards Compensation of Rs.5 Lakhs to a Man detained illegally by Police. [Read the Judgement]

Cop to pay Rs 2 lakh for illegal detention: HC | Mumbai News - Times of India


பொய் வழக்கு போட்ட போலீசிடம் இருந்து நாம் தப்பிக்க முடியுமா?

 ஒருவரை குற்றவாளி எனும் முன்பு, அவர் அந்த குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகம், கொள்ளும் அளவிற்கு காவல் அதிகாரியிடம் ஆதாரம் இருக்க வேண்டும்.

சட்டப்படி குறித்த காலக் கெடுவிற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடமை இருக்கும்போது, எந்தவித ஆதாரமுமின்றி கைது செய்யும்போதும, அவர் மீது வழக்கு தொடரும் போதும், அதற்காக விசாரணை அதிகாரியின் மீது ‘malicious prosecution’ என்ற நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சட்டம் அளித்துள்ள இந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்தாத காரணத்தினால்தான் தேவையற்ற கைதுகள், காழ்ப்புனர்சியின் காரணமாக பொய் வழக்குகள் போடப்படுவது தொடர்கிறது.

அதே சமயம்,, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார் என்பதற்காக, ஒரு குற்றப் புகாரைத் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்த ஒரு காவல் அதிகாரி மீது, பொய்யான குற்றச்சாட்டுகளைச் செய்ததற்காக, ஐபிசி பிரிவு 211 ன் கீழ் வழக்குத் தொடர முடியாது என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில்[1] தீர்ப்பளித்துள்ளது..

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளில், விசாரணை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிட்டால், அது விசாரணையை நடத்துவதில் அவர்களின் சுதந்திரத்திற்கு நேரடியாக தலையிடுவதாகிவிடும் என்று நீதிபதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் ஒற்றை பெஞ்ச் குறிப்பிட்டது.

"தவறான குற்றச்சாட்டு" தொடர்பாக பிரிவு 211 இன் கீழ் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், குற்றவியல் சட்டத்தை இயக்கிய புகார்தாரருடன் மட்டுமே தொடர்புபடுத்த முடியும் என்றும் விசாரணை அதிகாரி அல்ல. என்பதையும் நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது,

சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 340 ன் கீழ் தாக்கல் செய்த கிரிமினல் மனுவில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய சம்மளை எதிர்த்து முன்னாள் சி.பி.சி.ஐ டி. டிஎஸ்.பி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதியரசர் தெருவித்துள்ளார்.

இந்த வழக்கை பொறுத்து மேற்படி டிஸ்.பி பணியில் இருந்த போது, புகார்தாரர் மீது விசாரணை செய்யுமாறு பணிக்கப்பட்டது.

விசாரணை செய்து அவர் தாக்கல் செய்த குற்ற வழக்கில் இருந்து, மேற்படியாளர் நீதிமன்றத்தில், விடுதலை செய்யப்பட்டார். எனவே டி.எஸ்.பி மீது பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கோரி, வழக்கு தொடுத்தார்.

அவர் சார்பாக வாதிடுகையில், வெறும் விடுதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பொய் வழக்கு போட்டதாக சொல்லமுடியாது என்றும், அப்படியே வழக்கு போடுவதானாலும், சிவில் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும், குற்றவியல் நீதிமன்றத்தை அல்ல என்றனர்.

ஆனால் எதிர் பார்ட்டியோ, அந்த குற்ற வழக்கு, முழக்க பொய்யான தகவல் கொண்டு போடப்பட்டது என்று தீர்ப்பாகியுள்ளது என்றும், ஒரு சட்ட விரோத கைதை எதிர்த்து, தான் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டதால், வேண்டுமென்றே, உண்மை தெரிந்தும் பொய் வழக்கை டி.எஸ்.பி பதிந்தார் என்றும் ஆட்சேபம் செய்தார். அதுவும் ஒரு முதல் நிலை விசாரணை செய்யத் தான் விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது, இங்கு சொல்வதை அங்கு ஆஜராகியும் சொல்லலாம் என்றார்.

இரண்டு தரப்பையும் விசாரித்த நீதியரசர்,

  • பொய் வழக்கு போட்டதற்காக வழக்கு போடும் முகாந்திரம் இருந்தாலும், சிவில் நீதிமண்றத்தையே நஷ்டஈடு கோரி அணுக வேண்டும் .
  • அதற்கான அடிப்படையை கொண்டு கு.வி.மு.ச.பிரிவு 340ன் கீழ் மனு போட முடியாது.அப்படி போடவேண்டும் என்றால் அது,. 195(1)(b), Cr.P.C.கீழான நிபந்தனைகளை அடியொற்றி இருக்கவேண்டும்.
  • பொய் வழக்கு போடுதல் குறித்து,, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இதே போன்ற ஒரு வழக்கில் [2] கீழ்கண்டவாறு சொல்லியுள்ளது "சட்டப்பிரிவு 211 சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்பது, "குற்ற நடவடிக்கை தொடங்குவது" என்பதுடன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டும், பொய்யான குற்றச்சாட்டுகள் என்பது, இறுதி அறிக்கை அதாவது சார்ஜ் ஷீட் தாக்கல் செய்த பின் வருவதல்ல"
  • மேற்படி வழக்கை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், கிடைக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் தான் எப்.ஐஆர் போடப்பட்டது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதன் பின்னர் தான் இந்த வழக்கில் டி எஸ் பி விசாரிக்க வருகிறார் என்றும், வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை கொண்டே இவ்வாறு குற்ற வழக்கு தொடர அனுமதித்தால், போலீசாரின் விசாரணை செய்யும் உரிமையில் குறுக்கீடாக அமையும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடிக்குறிப்புகள்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...