திங்கள், 7 ஜூன், 2021

நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை எப்படித் தவிர்ப்பது?

 இதற்கு பெறுபான்மையான காரணம், வழக்காடுபவர்கள் ஒத்துழைக்காததால் தான் இந்த நிலை.

  • ஏற்கெனவே வாய்தா வழங்குவதற்கு கடும் விதிமுறைகல் கொண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அதன் காரணமாக போடும் உத்தரவை எதிர்த்து இன்னொரு மனு போடுவர்.இது நீதிமன்றத்தின் நேரத்தை வீனடிக்கிறது.
  • வழக்கில் சாதகமற்ற சூழ்நிலை இருக்கும்போது, அந்த கட்சிதாரர்கள் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றனர்.
  • அதை முடிக்க சொல்லி நீதிபதி உத்தரவிட்டால், அவர் மீது ஒரு பக்கமாக செயல்படுவதாக புகார் சொல்கின்றனர்.
  • அதனை நீதிபதி எதிர்கொண்டு, விளக்கமளித்து, அதிலிருந்து மீண்டு வருவதே பெரும் பாடு ஆகிறது.
  • அதனால் நிறைய நீதிபதிகள், இது போன்ற சிக்கலை தவிர்க்க, வக்கீல் வாய்தா கேட்டால் கொடுத்து விடுகின்றனர்.
  • வக்கீல்களில் நிறைய பேர், தங்கள் தொழிலில் உள்ள போட்டியின் காரணமாக வழக்கை சீக்கிறம் முடிக்க ஒத்துக் கொள்வதில்லை. அதுவும் இந்த கிராமப்புற கட்சிக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
  • மக்கள் நீதிமன்றம், சமரச மையம் போன்றவை நிலுவை வழக்கை இரண்டு தரப்பும் சமரசமாக தீர்க்க உதவுகின்றன.இதில் உள்ள நண்மைகள்
  • வழக்கு போட்டபோது கட்டிய முத்திரை கட்டணம் திரும்பி கொடுக்கப்படும்
  • மேல்முறையீடு கிடையாது
  • இரண்டு தரப்பின் உறவு சீர்படுகிறது
  • ஆனால் மக்களிடம் இவை அதிகம் போய் சேர்வதில்லை.
  • இன்னொரு வகை கட்சிக்காரர்களும் உண்டு.கூகிளில் பார்த்து தெரிந்து கொண்டு, அதை கொண்டு வழக்கறிஞரின் அனுமதி பெறாமல், எதிர் தரப்பை திட்டியும் தங்கள் வழக்கிற்குப் பொருந்தாத முன்னோடி தீர்ப்புகளை சேர்த்து, அதன் படி வழக்கு நடத்துமாறு வக்கீலை கட்டாயப்படுத்தி, அதனால் தங்கள் வழக்கையே பாழ் படுத்தி கொள்வோரும் உண்டு.

இது சம்பந்தமாக நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய கட்டுரை இதோ.

https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_76.html



  • இரண்டு தரப்பும் வழக்கு வேகமாக முடிக்க வேண்டும் என்று செயல்பட்டால் நீதிமன்றம், விசாரிக்காமல் தள்ளிப்போட முடியாது.

இப்போது சொல்லுங்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகம் தேங்கியிருக்க காரணம் நாம் தானே…😀பின்னே அந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞரை நாம் தானே நியமிக்கிறோம்…😀

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...