நமது மாநில அரசால் நடத்தப்படும் இந்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..
https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parentமாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்,கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009 ன் கீழ் வருகின்ற நுழைவு நிலை வகுப்புகளுக்கான சேர்க்கைக்காக, இந்த ஆர்டிஇ போர்ட்டல் மூலம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்ததும் கடந்த இரண்டு வாரங்களாக சேர்க்கை தொடங்கிவிட்டதும் உங்களுக்கு தெரியும் தானே?!!
.இந்த ஆண்டு மட்டும் , மாநிலம் முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கைக்காக உள்ளன.
https://sankatamthavirkumsattam.blogspot.com/p/blog-page_37.htmlஇந்த சட்டத்தை பற்றி இந்த லிங்கில் விவரம் உள்ளது.👇
ஆனால் 2009ல் இந்த சட்டம் போட்ட போது, கட்டாயமாக அனைத்து கல்வி நிறுவனத்தில், நுழைவு நிலை வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, 25% இந்த சட்டத்தின் கீழ் வரும் பொருளாதார வசதியில்லாத குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளது, அது தங்கள் தொழில்/வியாபாரம் நடத்தும் உரிமையை பாதிக்கிறதுன்னு சொல்லி தனியார் பள்ளிகள் கேஸ் போட்டன..
ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் இந்த சட்டத்தால் அவர்களுக்கு என்ன பிரச்சினை?
இருக்கிறதே..அந்த சட்டம் போட்டது, அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15 (5) மற்றும் 21-ஏ ஆகியவற்றின் கீழ் அல்லவா?.
இந்த அரசியலமைப்பு சட்டத்தில் 93 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், 2005 ல் , பிரிவு 15 இல் ஒரு உட்பிரிவாக (5) சேர்க்கப்பட்டது..
அதன் படி, எஸ்.சி., எஸ்.டி மற்றும் சமூக / கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த குழந்தைகள், தனியார் உதவி பெறாத நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்யலாம் ,
அதே போல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய கல்விநிறுவனங்கள். 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க 21 ஏ பிரிவைச் சேர்த்ததன் மூலம், கல்விச் சட்டம் 2009 இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது..
: இதை எதிர்த்து, பிரமதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தான் அரசியல் சாசன பெஞ்சு அந்த சட்டத்திருத்தம் சரியானது என்றும், எந்த தொழிலுக்கும். அது இடையூறு இல்லையென்றது.
SC upholds constitutional validity of RTE Act
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சட்டத்தினால் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்கிறார்கள்.
ஆனாலும் இதில் உள்ள குறைகள் (மேலே லிங்கில் உள்ளது) இன்னமும் களையப்படாமல் உள்ளது.
குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் அரசு பள்ளிகள் இல்லாதது..
அந்தக் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் அதிகமான பள்ளிகளைக் கட்டியிருக்க முடியும் என்றாலும், தரக் கட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள பணியமர்த்துவதற்கு சாத்தியமில்லை. எனவே, சமூக-பொருளாதார பின்னணியையும் பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளையும் பூர்த்தி செய்ய ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தலையிட்டது..
துரதிர்ஷ்டவசமாக, இந்த தலையீடு தான், விரும்பிய அளவுக்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆர்டிஇ வழியாக கிடைக்கும் இடங்களில் 1/3 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன, இது 2/3 இடங்கள் காலியாக இருப்பதை தான் குறிக்கிறது.
ஆனால் ஒன்று கவனித்தீர்களா?
தடுக்கி விழும் இடமெல்லாம் தனியார் பள்ளிகள் உள்ள காலம் இது.. அரசாங்கம் சொந்தமாக புதிய பள்ளிகளை உருவாக்கவில்லை. இது அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை!
கல்விக்கு கட்டணம் மாதத்திற்கு ரூ .2,000-4,000 வரை , தகுதியற்ற ஆசிரியர்கள், அவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, இந்த பக்கம் அவர்கள் உழைப்பை சுரண்டுவது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்!!
இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தில், இலவச கல்வி அளிக்க அரசு முனைப்பாக இருந்தும் ஏனிந்த காலியிடம் ?
எந்த அரசு திட்டம் என்றாலும் அதன் தாக்கம் குறித்த ஆய்வு அவசியம்..அது இல்லாததால் தான் நிறைய அரசின் நிறைய திட்டங்கள் தோல்வியை தழுவின.
…இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தையே எடுத்து கொள்ளுங்கள்..
குறைந்தபட்ச முதலீட்டைக் கொண்டு அதிகபட்ச பயன்பாட்டைப் பெறும் திட்டம் இது. இதன் செயல்பாட்டினால், நாட்டின் உள்ளேயும் வெளியும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது..ஆனாலும்…இதற்கு ஃபீடபேக் என்னும் பின்னூட்ட வழிமுறை இல்லை.
இந்த பின்னூட்டங்கள் இருந்தால் தான், சட்டத்தின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகள் தெரியும்..
சரி..அரசு கேட்கவில்லை என்றாலும் என்ன….
நாம் கண்டு அறிந்ததை சொல்வோம்…
ஆர்டிஇ சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்று மதிப்பிடப்பட்டதை பலவீனப்படுத்திய ஓட்டைகள் இங்கே:
- மக்களின் முழு பங்களிப்பு இருந்தால் மட்டுமே எந்த திட்டமும் வெற்றியடையும்.அது அவர்களின் நன்மைக்கானது என்றாலும். இந்த சட்டம், பயனாளிகள் அதன் சிறந்த அம்சத்தை மக்கள் தாங்களாகவே புரிந்துக் கொண்டு தங்கள் குழந்தைகளைத் பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்று கருதுகிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் எந்தவொரு சட்டத்தையும் , குறிப்பாக, இது பின்தங்கிய மக்களுக்கு உள்ள ஒரு நலன்புரிச் சட்டம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அரசும் செய்திகள் போன்றவற்றின் மூலம் அதை விளம்பரப்படுத்தாது. அதனால் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல பயனாளிகளுக்கு இந்த சட்டம் இருப்பதைப் பற்றி எதுவும் தெரியாது. இத்தகைய சூழ்நிலைகளில், தேவை மற்றும் வழங்கல் இரண்டும் இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு இல்லை.
- அடுத்தது இது மத்திய அரசு கொணர்ந்த சட்டம் அல்லவா? இதற்கு மாநிலங்களின் பங்கேற்பு பற்றாக்குறை
,இந்த சட்டத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மை காரணத்தினால், அதன் செயல்பாட்டில் மாநில அரசின் பங்கு குறித்த திட்டம் இல்லை..ஆர்டிஇ சட்டத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், மாநிலத் தலைமையின் கீழ் ஒரு நிலையான செயல்படுத்தல் செயல்முறை இல்லாதது தான் இந்த சட்டத்தின் மிக பெரிய ஓட்டை. பல மாநிலங்களில் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தாததால் குழந்தைகளுக்கு பள்ளியில் உள்ள சேர்க்கை இடங்களை அணுகக்கூடிய நிலையில் இல்லை.
மையப்படுத்தப்பட்ட செயல்முறைக, விரைவான சேவை வழங்கலுக்கு வேண்டுமானால் நல்லது. ஆனால் செயல்படுத்த வேண்டியவைகளுக்கு, மாநில அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல், வெற்றி கொள்ள முடியாது.
3. மாணவர்களுக்கான சேர்க்கை சோதனைகளின் தரமற்ற தரம்
ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, பள்ளிகளுக்கு அவர்களின் வழக்கமான சேர்க்கை பரிட்சை மூலம் குழந்தையை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மதிப்பீடு, வகுப்பறையில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், பள்ளியில் சேரும்போது மாணவர்களின் தயார்நிலையை அளவிடவும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக இது கருதப்பட்டாலும், இதைக் கொண்டு , அந்த சேர்க்கையை தவிற்பதற்கான கருவியாகவும் அது மாறியுள்ளது. .
பல பள்ளிகளில், இந்த சட்டத்தின் மூலம் சேர்க்கை பெற விரும்பும் குழந்தைகளுக்கு பரீட்சை தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அது கடுமையாகவும் , குறைந்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாணவரை நிராகரிக்க இரண்டு தரங்களாகவும் இருக்கிறது. இதன் மூலம் :
- படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு பள்ளியில் ஒரு குழந்தை இந்த சட்டத்தின் கிழ் சேர்ந்து அதன் பயனைப் பெற முடியவில்லை
- தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுடன் இணையாக இருப்பதாக நினைத்து, கல்வியில் சமபங்கு பெற முயற்சிக்கக்கூடாது. என்று பள்ளியால் சுட்டிக்காட்டப்பட்டது , இது சட்டத்தின் நோக்கத்தை முற்றிலுமாக மீறுகிறது
4. ஆர்டிஇ பெற்ற குழந்தைகளின் கற்றல் விளைவுகளை அளவிடும் பற்றாக்குறை
சில பள்ளிகள், இந்த சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஒரு தனிப் பிரிவை உருவாக்குகின்றன. இதைச் செய்வதற்குப் பின்னால் அவர்கள் சொல்லும் காரணம்,
- பெரும்பாலும் இந்த குழந்தைகள் தங்கள் பள்ளியின் உள்ள மற்ற குழந்தைகளைப் போல ஒரே கல்வி மட்டத்தில் இல்லை, எனவே கூடுதல் கவனம் தேவைப்படுகிறது
- இவர்கள் கடினமான குழந்தைகள் என்ற. சாக்குப்போக்கின் கீழ் கைவிடப்படுகிறார்கள் அல்லது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்
- ASER காலடி எடுத்து வைக்கும் வரை இந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட கற்றல் தரத்தை மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்தப்படுவதில்லை
இந்தச் சட்டத்தின் ஏற்பாடு வெறும் கண்துடைப்பாகவும், ஆர்டிஇ மூலம் சேர்க்கை பெறும் குழந்தைகளின் கற்றல் விளைவுகளையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
5. ஒவ்வொரு பள்ளியிலும் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களின் நிலையை புதுப்பிக்கும் டைனமிக் டாஷ்போர்டு இல்லாதது
ஒரு பள்ளியில் இந்த சட்டத்தின் கீழான சேர்க்கை எந்த அளவிற்கு நடந்து முடிந்து உள்ளது என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை..அது குறித்து, பள்ளிகளில், டைனமிக் டாஷ்போர்டு இல்லாத நிலையில், கண்காணிப்பு தாமதமாகவும் திறமையற்றதாகவும் இருக்கிறது.
ஆர்டிஇ இதுவரை ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு குறித்து பயனாளிகளுக்கு எதுவும் தெரியாது. இது பற்றிய அனைத்தும் தெளிவற்றதாகவே இருக்கின்றன, எனவே எந்தவொரு தரவுகளும் சரியாக காட்டாத போது இது குறித்த நடவடிக்கைகள் பயனற்றவையே.
எனவே அரசு, இந்த அருமையான சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் அதே வேளையில், நம் வீட்டு குழந்தைகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சிறந்த இலவச கல்வியை பெற்று கொடுக்க நாம் அனைவரும் முனைய வேண்டும்..
- ஒன்றுக்கும் உதவாத ஒரு சினிமா பற்றியோ அரசியல் கேலி கூத்துகளையோ தெரிந்துகொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தில் பாதியளவாவது இந்த சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள மாட்டோமா என்ன?
.