சனி, 12 ஜூன், 2021

உடுமலை சங்கர் ஆணவ கொலையின் தீர்ப்பு மக்களுக்கு சொல்லுவது என்ன?

 



வழக்குகளைப் பொறுத்தவரையில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்:

  1. இங்கு சில பரபரப்பான வழக்குகளில் மீடியா விசாரணை, போலீஸ் விசாரணை என்று இரண்டு விதமான விசாரணை நடக்கிறது. எல்லோரும் மீடியாவில் சொன்ன விஷயங்களைக் கொண்டு தீர்ப்பை முன்னாடியே எழுதிக் கொண்டு அது போலவே நீதிமன்றத்திலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது தவறு.
  2. நீதிமன்ற செயல்பாடுகளின் அடிப்படைக் கொள்கையே "ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது"என்பது தான். எனவே குற்ற சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்ற கண்ணோட்டத்தில் தான் விசாரணையே துவங்கும். நம் மக்களின், மீடியாவின் கண்நோட்டதிலிருந்து இது மாறுபட்டது.
  3. குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த அரசு, அதன் சார்பாக விசாரணை நடத்தும் போலீசார், வழக்கை நடத்தும் அரசாங்க வக்கீல் இவர்களின் பங்கு தான் ஒரு வழக்கின் முடிவை தீர்மானிக்கிறது.
  4. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செயபபட்ட வழக்குகளில் எல்லாம் அரசு வக்கீல் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும், அதைக் கொண்டு தான் அவர்களில் பனித் திறன் நிர்ணயிக்கப்படும் என்று சில மாநிலங்களில் உத்தரவு போடப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு விட்டது. ஏனென்றால், அரசு வக்கீளின் பணியே நீதிமன்றத்திற்கு வழக்கின் சாட்சிகளையும் சம்பவங்களின்யும் ஆஜர் படுத்தி தகுந்த முடிவு எடுக்க உதவுவது தான். . தண்டனை வாங்கிக் கொடுப்பதல்ல.
  5. நிறைய கொலை வழக்குகளில் கொலை செய்த நபர்களை பார்த்த கண்ணுற்ற சாட்சிகள் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த குற்றத்திற்கு பின்பலமாக இருந்தவர்கள் குறித்து நேரிடை சாட்சியம் இருக்காது. சந்தர்ப்ப சாட்சி, சாட்சியங்களைக் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும்.
  6. இந்த சந்தர்ப்ப சாட்சியங்கள் என்பது ஒரு சங்கிலி தொடர் போல வைத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு கண்ணியும் அந்த சங்கிலியோடு தொடர்பு கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில அந்த தொடர்பு அறுந்து போனால், அந்த கண்ணி சங்கிலியோடு தொடர்பு கொண்டிருக்காது. குற்றத்திற்கு மூல காரணமாக சொல்லபபடுபவர்கள் குறித்த சாட்சியமும் அது போலத் தான்.அந்த இணைப்பை உரிதுயாக நீதிமன்றத்தில் நிரூபிததால் மட்டுமே காரண கர்த்தா எனச் சொல்லப்படுபவர்களையும் குற்றத்தில் இணைக்க முடியும்.
  7. இது அணைத்து வழக்கிலும் சாத்தியமாகியிருக்காது. போலீஸ் விசாரணையில் அதற்கான தடயங்கள் கிடைத்திருக்காது. அப்படியிருந்தாலும், அதை நீதிமன்றத்தல் தாக்கல் செய்யப்படிருக்காது. அப்படியே செய்யப்படிருந்தாலும், வழக்கறிஞர் அது குறித்த வாதத்தை சரியான அளவில் முன் வைத்திருக்க வேண்டும். "சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் தான் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும்".
  8. இவை எல்லாவற்றையும் தாண்டி வரும்போது, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் இதே போன்ற வழக்குகளில் அளித்த தீர்ப்புகள், பின்பற்றுவதற்கான முன்னோடியாக இருக்கும். அவற்றையும் பின்பற்றி அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து தான் தீர்ப்பு வழங்கப்படும்.

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

  1. கல்லூரிக் காலத்தில் வரும் காதலை ஒத்தி வையுங்கள். இரண்டு பேரும் சொந்தக் காலில் நின்று அதன் பின்னரும் ஒருவர் பால் ஒருவருக்கான அன்பு தொடருமானால், பெற்றவர்களை அதற்கு சம்பாதிக்க வைத்து திருமணம் செய்யுங்கள் அதுவே காதலுக்கு மரியாதை. கல்லூரிக் காலத்திலேயே திருமணம் செய்துக்கொண்டு,பெற்றோருக்கு பாரத்தை ஏற்படுத்தி, மூட்டைததூக்கியாவது அவளை காப்பாற்றுவேன்/ கூழ் குடித்தாவது அவனுடன் வாழ்வேன் " என்று வெட்டியான வசனம் பேசாமல் தன குடுமபத்தை காக்கும் வண்ணம் தன்னை தயார்படுத்தி கொண்டு, தன்னை ஒரு குடும்பத தலைவனாக/தலைவியாக தயார் செய்துக் கொண்டு, தன துணை தேட வேண்டும்.
  2. பெற்றவர்கள் சாதி பெருமைக்காக தன பிள்ளைகளை இரையாக்கும் அளவிற்கு மதம் கொள்ள வேண்டாம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள சின்னஞசிறிய புள்ளியாக உள்ள இந்த பூமி உருண்டையில், ஒரு சின்னஞஞசிறிய ஊரில், சின்ன்ஞஞஞசிறிய தெருவில் வாழும் நாம், நம்முடைய சாதி பெருமை பேசிக் கொண்டு தானே சாஸ்வதம் என இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம் என்பதை உணர வேண்டும்.
  3. நம் குழாந்தைகள் சாதிபபற்றுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால், சிறு வயதிலேயே நம் கலாசசாரம், பண்பாடு, எந்த அளவிற்கு அந்த சாதியில் பிறந்தும் பொது வாழ்வில் இருந்து, அனைத்து மக்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த தலைவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் பண்புகளை நம் பிள்ளைகள் பழகும் விதம் செய்ய வேண்டும். அவற்றை எல்லாம் விட நம் பிள்ளைகள் ஒரு குடும்ப தலைவியாய் குடும தலைவனாய் பரிணாமிக்க இன்னமும் காலம் தேவை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்..

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...