சிவில் வழக்குகளில் கீழ்கண்ட படிநிலைகள் உண்டு..
- முதல் விசாரணை.அன்று வழக்கு போட்டவர் மற்றும் எதிர் தரப்பு இரண்டு பேரின் வழக்கறிஞர்கள் ஆஜராவர்
- எழுத்துமூல எதிருரை
- பிரச்சினைகள் வரைவு
- வழக்கு தாரர் தரப்பு சாட்சி விசாரணை
- எதிர் தரப்பு சாட்சி விசாரணை
- இரண்டு தரப்பு வாதுரைகள்
- தீர்ப்பு.
அவ்வளவே தான்.ஆனாவ் ஓவ்வொரு நிலையையும் இரண்டு தரப்பும் லேசில் கடக்க விடுவதில்லை ஒன்று மாற்றி ஒன்று, இடைக்கால மனுக்கள் போடுவது, சாட்சிகள் விசாரணையை தள்ளி போடுவது, எதிருரை, வாதுரை குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாமல், வழக்கை ஒத்தி வைக்க வேண்டுவது என்று…காலம் ஓடிக் கொண்டே இருக்கும் . இதில் கட்சிதாரர்கள் அதிகம் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் ஒவ்வொரு நிலையை முடித்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு வழக்கு நகரும்
ஏதாவது ஒரு கட்சிதாரர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுகள் சேர்ப்பதில் விசாரணை முடித்து சேர்க்கவும் காலதாமதம் ஆகும்.அவர்கள் தரப்பு எதிர் உரை போட்டு சாட்சி விசாரணை செய்ய அனுமதி கொடுத்து என்று…போகும்.
வழக்கு நடக்கும் போது, அனைத்து தரப்புக்கும் போதிய சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதே அடிப்படை நியதி. அதனால் தான் இந்த தவிர்க்க முடியாத தாமதம் சில சமயம் நேரிடலாம்.
யாராவது சிவில் சட்டத்தை பற்றி கூற முடியுமா? எத்தனை சிவில் சட்டங்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது?
மற்றவரின் உடல் மற்றும் உடைமைக்கு தீங்கு ஏற்படுத்தும் கெட்ட எண்ணத்துடன் செயல்படுவது குற்றம் என வரையறுக்கப்படும்போது, மற்ற எதுவும் சிவில் சட்டத்தின் எல்லைக்குள் வரும்.. அதாவது வீடு, வாசல், நிலம் தொழில், படிப்பு, குறித்த அனைத்திற்கும் சிவில் சட்டமே வழிகாட்டி..
திருமணம், குழந்தைகள், பிறப்பு, இறப்பு போன்ற தனிப்பட்ட உரிமைகள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்து, தனி தனி சட்டங்களாக உள்ளன.
மத்திய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் தேவைக்கேற்ப, சிவில் சட்டங்கள் வகுத்துள்ளன. இவற்றை எண்ணிக்கை படுத்துவது கடினம். மேலும் சட்டம் என்னும் பெரும் சமுத்திரத்தில் உள்ள அனைத்தையும் அளக்கவும் முடியாது.அது தேவையும் அல்ல.
நாம் சார்ந்திருக்கும் நிலை குறித்த சட்டங்களை தெளிவாக அறிந்திருத்தலே போதுமானது.
"அகல உழுவதை விட ஆழ உழு"
சராசரியாக சிவில் வழக்குகளில், வழக்கு முடிய எத்தனை வருடங்கள் ஆகும்? ஒரு வேளை தீர்ப்பு வந்த பிறகும் எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் பழையபடி நிலைமை தொடருமா?
குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கிற்கு பதில் போட வேண்டும், தேவையில்லாத வாய்தா வாங்கக்கூடாது என்று சட்டத் திருத்தமே வந்துவிட்டது. பிறகும் வாய்தா வாங்குவது ஏதாவது ஒரு தரப்பு தான். எனவே நம் தரப்பில் வாய்தா வாங்காமலும், எதிர் தரப்பு வாயதா கேட்கும்போது கடுமையாக எதிர்த்து வந்தால், வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வரும்.மேல்முறையீட்டை பொறுத்து வழக்கறிஞர் வாதம் மட்டுமே கேட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான வழக்கில் அதை செய்யாததால் வழக்கு தள்ளிப்போகும். எழுத்து மூலமான் வாதத்தையும் வைத்தால், தீர்ப்பு தான்.
முயற்சி திருவினை ஆக்கும்.!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக