ஒரு மாஜிஸ்திரேட் தன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை---அது போலீசார் தாக்கல் செய்த குற்ற அறிக்கை படியோ அல்லது பாதிக்கபட்டவர் நேரிடையாக நீதிமன்றம் முன்பு ஆஜராகி கொடுக்கும் புகாரின் அடிப்படையிலோ கோப்பிற்கு எடுப்பதற்கான அதிகாரத்தை கொடுப்பது குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் (இதை இனி கு.வி.மு.ச. என்று சொல்வோம்) பிரிவு 19௦.
விதி என்று இருந்தால் விதிவிலக்கும் உண்டல்லவா?
அப்படி கோப்பிற்கு எடுத்துக்கொள்வதற்கு உள்ள ...நிபந்தனை என்று சொல்வதை விட சில தகுதி கொண்டவையாக எவை இருக்க வேண்டும்?
அதை தான் சொல்கின்றன ..கு.வி.மு.ச. வின் சட்டப்பிரிவு 199 யை உள்ளடக்கிய சேப்டர் XIV.
அப்படி விதிவிலக்கில் வரக் கூடிய குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 199 என்னவென்றால்
"எந்த நீதிமன்றமும் இந்திய தண்டனை சட்டத்தின் சேப்ட்டர் XXI கீழ் தண்டிக்ககூடிய குற்றங்களை குறித்து அந்த குற்றத்தால்
பாதிக்கப்பட்டவர் தரும் ‘புகாரை’ தவிர்த்து வேறு முறையில் வழக்கை கோப்பிற்கு எடுக்கக்
கூடாது" என்கிறது..
"புகார் " என்றாலே காவல் நிலையத்தில்
கொடுக்கக் கூடியதைத் தான் நினைப்போம். ஆனால்
இந்த சட்டத்தின் பிரிவு 2(d) எது ‘'புகார்’' என்று விளக்குகிறது .
எது?
நிச்சயமாக மாஜிஸ்திரேட்டு முன்பாக
தாக்கல் செய்யபடுவது தான். அப்படியானால் .நாம் காவல் நிலையத்தில் கொடுப்பது?? அதை தான் பதிந்து ‘முதல் தகவல் அறிக்கை’ என்கிறார்களே. போலீசார் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் அறிக்கை தான். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடுக்க முகாந்திரம் இருந்தால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். அல்லது புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்று தோன்றினாலோ " முடிப்பதற்கான அறிக்கை' தாக்கல் செய்வார்கள். அந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தின் கோப்பிற்கு எடுத்து கொள்ளும்போது, அரசு சார்பாக கவ்வல் நிலைய அதிகாரி தான் 'புகார்தாரராக' காட்டப்படுவார். காவல் நிலையத்தில் 'புகார்' கொடுத்தவர் , நீதிமன்றத்தை பொறுத்தவரை "DEFACTO COMPLAINANANT மட்டுமே !!.
மாஜிஸ்திரேட் தான் பெறும் புகாரை இரண்டு விதமாக கையாளலாம். ஒன்று அதை தீர விசாரித்து , குற்றம்
நடந்துள்ளதாக தெரிய வரின், வழக்கை கோப்பிற்கு எடுத்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க,
சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு நீதிமன்றத்திலிருந்து ‘சம்மன்’ அனுப்பி,
நீதிமன்றத்தின் முன்பு, ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடலாம். அதன் பின் 'சட்டம் தன கடமையை செய்யும்.'!!
இல்லையெனில், குற்றம் நடந்துள்ளதாக முதல் நிலை
விசாரணை தெரிவிக்கும் பட்சத்தில், , அது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு
காவல் துறைக்கு கு.வி.மு.ச. பிரிவு 156 (3)ன் கீழ் உத்தரவிடலாம்.
'அவதூறு' என்பதை 'சிவில்' மற்றும் ‘'கிரிமினல்'’ என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். தன்னுடைய நன் மதிப்பிற்குகு களங்கம் ஏற்படுத்தியதாக சொல்லி, தவறு இழைத்தவருக்கு தண்டனை பெற்றுத் தர, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 499,500 ன் மூலம் அவதூறை குற்ற எண்ணத்துடன் செய்யப்படும் CRIMINAL DEFAMATION செய்ததாக அவருக்கு தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.
ஆமாம். 'நீதிமன்றத்தை' தான் அணுக வேண்டும். காவல் நிலையத்தை அல்ல.
ஏனெனில் இந்த இ.த.ச பிரிவு 499,500 சேப்டர் XXI கீழ் வருபவை. அதனால் மாஜிஸ்திரேட்டு முன்பாக புகார் தாக்கல் செய்து அவர் பாதிக்கப்பட்டவரை விசாரித்து, குற்றம நடந்துள்ளதாக 'முதல் நிலையில்' தெரிய வந்ததாக திருப்தியுற்று கோப்பிற்கு எடுக்க வேண்டும்.
அதே சமயம், மாஜிஸ்திரேட்டு தனக்கு இருக்கும் அதிகாரப்படி, முதல் நிலை விசாரணையில் குற்றம் நடந்ததாக திருப்தியடைந்து காவல் துறையை விசாரித்து அறிக்கை தருமாறு, மற்ற வழக்குகளில் செய்வது போல பிரிவு 156 கீழும் உத்தரவிட முடியாது. ஏனெகனில், காவல் துறை விசாரணை முடித்து தரும் அறிக்கையைக் கொண்டு வழக்கை கோப்பிற்கு எடுக்க முடியாதே!! . பாதிக்கப்பட்டவர் தானே நீதிமன்றத்தில் ஆஜராகி புகார் தர வேண்டும்.!!
ஏன் இந்த நடைமுறை?
சுப்பிரமனிய சாமி மத்திய அரசிற்கு எதிராக இந்த
சட்டப்பிரிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்,சுப்ரமணிய சாமி எதிர் யூனியன் அரசு குடி மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள
பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை ஆகியற்றிற்கு எதிராக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதாலும், அரசு அதை அவர்களுக்கு எதிராக 'அதிகார துஷ்ப்ரயோகம் செய்வதாகவும் ,அரசியல் அமைப்பு சட்டத்தில் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பேச்சுரிமை என்னும் அடிப்படை உரிமையை இது பாதிப்பதால், அவை நீக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், இ. த. ச. சேப்டர் XXIV ல் சொல்லப்படும் குற்றங்கள் பொறுத்து
காவல் துறைக்கு விசாரிக்கும் அதிகாரம் அளிக்காமல், நீதிமன்றமே விசாரிக்கும்
அதிகாரம் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியது.. மேலும் பேச்சுரிமை என்பதும் நியாயமான வரையறையுடன் கூடியதாக தான் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியது.
எனவே. எந்த விதத்தில் பார்த்தாலும், காவல் நிலையத்தில் ஒருவர் அவதூறு செய்து விட்டதாக புகார் கொடுத்து அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதோ முடியாது என்றும தீர்ப்பளித்துள்ளது. இந்த புகழ் பெற்ற வழக்கை தான் மேற்கோள் காட்டி, சமீபத்திய கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பும் வெளிவந்துள்ளது. திவ்யா எதிர் மாநில அரசு https://www.livelaw.in/pdf_upload/karnataka-high-court-order
என்ற வழக்கிலும், காவல் துறை ஆய்வாளரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாஜிஸ்திரேட்டு போட்ட உத்தரவை ரத்து செய்தது.
எனவே காவல் நிலையத்தில் அவதூறு புகாருடன் அணுகுவதோ, அவர்களும் அதை வாங்கிக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதோ தேவையற்ற கால விரயத்தையும் பொருளாதார இழப்பையும் தான் ஏற்படுத்தும்
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்...
அப்படியே இந்த வீடியோவையும் பாருங்கள்
https://youtu.be/WnA2QsdwRLU
2 கருத்துகள்:
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இந்தியாவில் அரசு ஊழியர்களை காப்பதால் வரும் வழக்குகள் 99.99
GOVERNMENT PROSECUTERS DIRECTLY INVOLVED CRIMES
கருத்துரையிடுக