சுயசம்பாதிய சொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயசம்பாதிய சொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

ஒரு தந்தை அவரது உழைப்பில் வாங்கிய மனை அல்லது வீட்டை அவருடைய மகனோ அல்லது மகளோ சொந்தம் கொண்டாட முடியுமா?

 சில வாரங்களுக்கு முன்னால், மதுரையில் நடந்த ஒரு இரட்டைக் கொலை பரபரப்பாக பேசப்பட்டது ஞாபகத்தில் இருக்கும்.

தங்கள் சொத்தில் மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் மகன், தாய் தந்தை இருவரையும் வெட்டி கொலை செய்தது….உயிருடன் இருந்தால் தானே பங்கு குடுக்க சொல்வாயென்று

முன்னால் எல்லாம் சகோதரர்களை தான் பங்காளின்னு சொல்வது..இப்போ அக்கா, தங்கையையும் சேர்த்து அப்படி சொல்ல வேண்டி வந்து விட்டது!!

அது பெண்களுக்கு உரிமையை பெற்று தந்ததா அல்லது பாசத்தை குழி தோண்டி புதைத்ததானே தெரியலை!!

இதை பற்றி யோசிக்கும்போது ஞாபகம் வருவது இந்த புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை தான்…

"எத்தனையோ பேர் இழுத்தும் என்ன இன்னும் வரவில்லை

சேரிக்குள் தேர்"

தந்தை இறந்த பின்னர் அவர் வாங்கிய சொத்தில் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து, சொந்தம் கொண்டாடலாம்.

ஆனால் அவர் அந்த சொத்து யாருக்கு சேரவேண்டும் என்று உயில் எழுதியிருந்தாலோ, அல்லது இருக்கும் காலத்தில் யாருக்கும் Uகொடுத்தாலும் இதை தடுக்க முடியாது.

இது இந்து சட்டத்தின் படி.

ஆனால் முஸ்லீம் சட்டத்தில் ஒரு சிறப்பு உள்ளது. சுயமாக சம்பாதித்து வாங்கியது, அல்லது பூர்வீக சொத்து என்று எந்த பாகுபாடும் கிடையாது.

முஸ்லீம் ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தாலும் அவர் உயிலில் அந்த சொத்தை முழுவதும் அவர் விருப்பப்படி கொடுத்து விட முடியாது. அதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவர் விருப்பத்திற்குட்பட்டது மீறும்போது அது அவர் வாரிசுகளின் சம்மத்திற்கு பிறகே செய்ய முடியும்.

இந்த மூன்றிலொரு பங்கு சொத்தில், வாரிசுரிமை பெறாத உறவினர், அல்லது ஊழியம் புரிந்தவர் என்று யாருக்கு வேண்டுமானாலும் அவர் சொத்து கொடுக்கலாம். மற்ற பங்கு சொத்து அவர் வாரிசுகளுக்கே போக முடியும். இதன் மூலம் சொத்தை யாருக்கோ எழுதி வைத்து விட்டு குடும்பத்தை நிற்கதியாக விட்டுச்செல்வதை தடுக்கவே செய்யப்பட்ட ஏற்பாடு.

ஏற்கெனவே முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ள மதத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள போது

ஆதியில் அவர்கள் வணிகர்களாக, போர் புரிபவராக குடும்பத்தை விட்டு வெகு காலம் பிரிந்திருக்க வேண்டியிருந்ததால், குலம் அழிந்து விடாமல் இருக்க அப்படி கொண்டு வரப்பட்டது.

இப்போது ஒரு குடும்பத்தை கவனிக்கவே முடியாது..😂 யாரும் அப்படி செய்வதில்லை தமிழகத்தில்.. எனக்கு மற்ற மாநிலத்தை பற்றித் தெரியாது.

இது நல்ல ஏற்பாடாகவே படுகிறது. ஆனாலும், ஒரு முஸ்லீம் குடும்பத் தலைவர் இறந்தால், வாரிசு சான்றிதழ் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு, ரொம்பவே அலைய வேண்டியிருக்கிறது. இது பற்றி கேட்டபோது, ஒரு தாசில்தார் சொன்னது..

"யாருக்கு தெரியும்ங்க இது ஒண்ணு தான் குடும்பம்னு"

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...