நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது சாட்சியை விசாரிக்கும்போதும் பிரமாணப் பத்திரம் என்று தாக்கல் செய்வார்கள். இல்லையா.
சாட்சி என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை அப்படியே டைப் செய்து கொடுப்பார்கள்.இப்போ இந்த வசதி வந்து விட்டது.முன்னாலே எல்லாம் சாட்சியே எல்லாத்தையும் வாய்மொழியா சொல்லணும். அதிலேயே திணறிடுவாங்க.அப்புறம் குறுக்கு விசாரணை..கேட்கவே வேணாம்.😀
இந்தப் "பிரமாணம் "ங்கிறதுன்னா என்னன்னு தெரியுமா?
தமிழிலே உண்மையைக் கண்டுபிடிக்க கையாளும் வழி தான் இந்தப் "பிரமாணம்"..
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் உண்மையை மூணு விதமா தெரிஞ்சிக்க முயல்வது தான் காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம்.
காட்சிப் பிரமானம்னா நாம பார்க்கிற விஷயங்களை வைத்து ஒரு முடிவு எடுக்கிறோமில்லையா அது தான்.
உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட போறோம்.ஒரு மருந்து எழுதி கொடுக்கிறார். மறு பேச்சு பேசாமல் அதை வாங்கி சாப்பிடுறோம்.ஏன்? அதை பத்தி நமக்கு ஒண்ணும் தெரியாது. டாக்டர் அவரோட மருத்துவ அறிவை வச்சி சொல்ற மருந்து சரியாதான் இருக்கும்ங்கிற அனுமானப் பிரமாணம் அது.
அடுத்து இந்த ஞானிகள் எழுதி வச்சிட்டு போயிருக்கிறதை அவங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்னு எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைப்பிடிக்கிறோம் இல்லையா..அது தான் ஆகமப் பிரமாணம்..
சில பேரு இந்தக் அனுமானப் பிரமானத்தையும் ஆகமப்பிரமாணத்தையும் கேள்வி கேட்டு தானும் தெரிஞ்சு நடந்துக்க ஆசைப்படுவாங்க.. அதன்படி கேட்கப்பட்ட கேள்வி தான் இதுன்னு எடுத்துக்கலாம்.!!
தன் கிட்டேயுள்ள அறிவைக் கொண்டு கண்டறியும் விதத்தில் தான் .. அதாவது அனுமான பிரமாணத்திலே தான் எந்த ஒரு முடிவும் நாம எடுக்கிறோம்.
போன தடவை எனக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட போனப்ப, ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார்.வாங்கி சாப்பிட்டவுடன் சரியா போச்சு..இப்ப அதே மாதிரி கஷ்டம் வந்தப்ப, டாக்டர் கிட்டே போனப்ப, அவர் வேற மருந்து எழுதி கொடுத்தார். டாக்டர் நீங்க போன தடவை எழுதிக் குடுத்த மருந்தே நல்லா வேலை செஞ்சுது. அதையே எழுதிக் குடுங்கன்னு கேட்டா அவர் சொல்றார்……
"இல்லே அதை சாப்பிட்டா கான்சர் வரும்ன்னு இப்ப கண்டுபிடிச்சுருக்காங்க"ன்னு. .இதுக்கு தான் நான் பீஸ் குடுத்து அவருக்கு நன்றிலாம் சொன்னேன் அப்ப.
அதை அன்னிக்கு எனக்கு எழுதி குடுத்தது தவறுன்னு இன்னிக்கு சொல்ல முடியுமா?
தன்னோட மருத்துவ அறிவைக் கொண்டு அந்த நோய்க்கு அது தான் தீர்வுன்னு அவர் அனுமானித்தது, அதுக்கு பின்னாடி இன்னொரு பெரிய மருத்துவ ஆராய்ச்சியாளர் கண்டுபிடிச்சதாலே தவறாகிடுமா?
இல்லை தானே..இப்பவும் அதே மருந்தை எழுதிக் குடுத்தா தான், அது சரியில்லன்னு சொல்லலாம்.
பட உபயம் தனக்கெதிரா சொன்னாலும் உதவும் கூகிள்.
- அதே போல தானே சாட்சிகள் கொடுக்கிற பிரமாணங்களையும் ஆதாரங்களையும் சட்ட விதிகளோடு பொருத்திப் பார்த்து, முன்னோடி தீர்ப்புகளையும் வச்சி ஒரு நீதிபதி தன்னோட சட்ட அறிவைக் கொண்டு, அனுமானத்தின் அடிப்படையில் ஒரு தீர்வு….தீர்ப்பு கொடுக்கிறார். அது மேல் முறையீடு செய்யும் போது, அங்குள்ள நீதிபதியின் சட்ட அனுமானத்தை,… கண்ணோட்டத்தை பொறுத்து தீர்ப்பு மாறுபடுகிறது.
- இதில் உள் நோக்கத்தோடு செயல் பட்டால் அன்றி, நீதிபதி தவறு செய்கிறார் என்று அர்த்தம் கிடையாது.
- ஒவ்வொரு அடுக்கு முறையிலும் மேல் அதிகாரியோ/டாக்டரோ/நீதிபதியோ பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் , விசாரணை அதிகாரி/நீதிபதியினடையதும் மாறுபட்டு இருக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. அது பணியின்போது எந்த வித கெட்ட எண்ணத்தோடும் செய்யாத போது குற்றமும் ஆகாது.
- எந்த தீர்ப்பும் வழங்கப்படும் போது, தான் அந்த முடிவிற்கு வந்ததற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருப்பார். லிட வேண்டும். அதனால் அது போன்ற சட்டத் திருத்தத்தை சட்டக் கமிஷனும் பரிந்துரை செய்யாது.
- அடுத்து நம் நாட்டில் அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாதவர்கள் தான் அதிகம். அந்த அறிவோடு விமர்சனம் செய்பவர்கள் குறைவு. அதனாலே கூகிள் செய்தெல்லாம் தீர்ப்பு தப்புன்னு சொல்லிடமுடியாது
கடைசியா, கேசு முடிச்சு தீர்ப்பு சொன்னா, இது போன்ற சர்ச்சைகள் வந்தா என்ன செய்றதுன்னு தான், நிறைய வழக்குகள் நீதிமன்றங்கள்லே தேங்கி கிடக்கோ என்னவோ!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக