செய்யக் கூடாது.செய்யவும் முடியாது. ஏன் என்றால் ஒரு அரசு அலுவலகம் வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கலாம். ஆனால் ஒரு அரசு ஊழியர் ஒரு குறித்த நேரத்திற்கான பணியாளர் கிடையாது. அவர் ஒரு whole time பணியாளர்.
இது சம்பந்தமான பழைய அரசு கோப்பு ஒன்றை நான் தலைமை செயலகத்தில் ஒரு முறை பார்க்க நேரிட்டது. அது அரசு பணியாளர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்குவது குறித்தது. அதில் இடம் பெறவேண்டிய வார்த்தைகளை குறித்து அலுவலர்களுக்கிடையே நடந்த குறிப்புரையில், அரசு ஊழியர்கள், முழு நேர ஊழியர்கள் full time employees எனக் குறிப்பிடலாமா எனக் கேட்டு தன் மேலதிகாரிக்கு அனுப்புகிறார். அதற்கு அவர், அப்படிஎழுதினால், யார் half time ஊழியர் என்பது குறித்து கேள்வி வரும் என்று கோப்பை திரூப்புகிறார். திரும்பவும், அப்படியானால், 24 மணி நேர ஊழியர் எனக் குறிப்பிடலாமா எனக் கேட்க, அவர் மேலதிகாரியோ, இப்படி குறிப்பு எழுதுகிறார்:
இப்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்று உள்ளது. நாளை அது மாறினால்? அதனால் அந்த வாரத்தையும் வேண்டும் என்கிறார்.
கடைசியில், whole time employee என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.
எனவே அரசு ஊழியர் அரசுக்கு மட்டுமே ஊழியராகவும், அதுவும் whole time ஊழியராகவும் இருக்கிறார்.. அவருக்கென்று உருவாக்கப்பட்டது தான் அரசு ஊழியர் நன் நடத்தை விதிகள், 1973.
அரசு மருத்துவர்கள் தங்கள் பணி நேரம் முடித்தபின் தனியாக மருத்துவம் பார்ப்பது குற்றமா ?
அவர் மருத்துவ தொழில் செய்து அதன் தொடர்பாக தான் பணம் வாங்குகிறார் என்றால் அது குற்றமாகாது என்றும் அதே சமயம் அரசு மருத்துவமனையில் நோயாளியை சேர்ப்பது தொடர்பாக ஆதாயம் பார்த்தார் என்றால் மட்டுமே. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி மீறி தனியாக தொழில் நடக்கும் அரசு மருத்துவர்கள மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.அது சம்பந்தமான தீர்ப்பு ஒன்றை உச்சநீடிமன்றமே 2011 ல் வழங்கியுள்ளது. அது குறித்து நாளெடுகளில் வந்த செய்தி இது
Private practice by government doctors no criminal offence: court
NEW DELHI:, MAY 01, 2011 01:13 IST
UPDATED: MAY 01, 2011 01:13 IST
Private practice by a government doctor cannot be construed as a criminal offence, and at the most, departmental action
Read more at:
Private practice by govt doctors no crime: SC | India News - Times of India
HC comes down hard on Govt doctors interested in private practice
CHENNAI , MARCH 14, 2019 02:27 IST
UPDATED: MARCH 14, 2019 02:27 IST
Orders constitution of a monitoring committee to keep a check on their attendance and performance
In a hard hitting judgement, the Madras High Court on Wednesday came down hard on doctors who enter into government service, secure admission in post graduate and speciality courses as in-service candidates, get educated at State cost, gain experience by treating poor patients in government hospitals and then leave the job for personal enrichment.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக