ஆமாம். இவரே தான் திருமதி பிரதிபா பாட்டில்.
சிறந்த ஜனாதிபதி என்று பெயர் எடுத்த திரு அப்துல் கலாமிற்கு அடுத்து அந்த பதவியை வகித்தவர், மோசமான ஜனாதிபதி என்ற பெயர் பெற்றது துரதிர்ஷ்டமே.
முப்படைகளின் தலைவராக, நாட்டின் முதல் குடிமகளாக, இருக்கும் ஜனாதிபதி, அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 52ன் படி பொது ஊழியர்.நான் பார்த்ததிலேயே மோசமான ஊழியர் இவரே என்று நான் கருதுகிறேன்
ஆனால் அவரோடதரப்பையும் கேப்போம் வாங்க..
என்னோட பதவி காலத்தில், நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் நம்ம நாட்டிற்கு வேணும்னா ஒரு பயனும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் என்னோடு சேர்ந்து பயணம் செய்த என் குடும்ப உறுப்பினர்கள் 11பேருக்கு? 😀 அவங்களும் பார்க்கணும் இல்லையா? நான் போய்ட்டா, யாரு அவங்களை பார்த்துப்பாங்க? அதான் கூடவே கூட்டிட்டு போக வேண்டியதாச்சு.அதை போய் தப்பா சொல்லலாமா?😄
அப்புறம் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி என்ற பெருமை எனக்குத்தான்.😃 ரொம்ப அதிகமில்லை. வெறும் 22 தடவை தான்.😃 இதற்காக செலவிடப்பட்ட வரி செலுத்தியவர்களின் பணம் ஜூஜூபி 205 கோடி ரூபாய்க்கும் அதிகம் தாங்க!!
அடுத்ததா என் சொந்தக்காரர்களை பார்க்கறதுக்குன்னு பூனாவிற்கும் தில்லிக்குமாக நான் அலஞ்சென்னு சொல்லுவீங்க. எங்க…மஹாராஷ்டிராவை சேர்ந்த எனக்கும் புனாவிற்கும் என்ன தொடர்பு என்பீர்கள்? முந்திய ஜானாதிபதியைவிட ஊருக்கு அடிக்கடி போய் அரசு செலவில் அதிக நாள் ஏன் தங்கினேன் என்பீர்கள்?அங்கிருக்கும் திருமணமான என் மகள் வீட்டிற்கும் நான் பூனா போய் தங்கியதற்கும் சம்பந்தம் உண்டா என்பீர்கள்? இதை பத்தியே ஊரெல்லாம் பேச்சு!!
நான் இங்கும் அங்கும் அலைந்து உடல் கெட்டதை எல்லாம் பார்க்கமாட்டீர்களா?😆 நாட்டிற்காக உழைத்தவர் என்று கூட பாராமல் அந்த செலவுக்கணக்கை மட்டும் பாருங்கள். சே…ரொம்ப மோசம் நீங்கள்😅
நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், குடியிருப்பதற்கு பூனாவை தேர்ந்தெடுத்தது தப்பா? வயசான காலத்திலே பொண்ணு இருக்கிற ஊரிலேயே தங்கலாம்னு முடிவு பண்ணி, பூனாவில் 2.61 லட்சம் சதுர அடி… நீங்கள் படித்தது சரி தான் லட்சம் நிலம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கினேன் தான்.. என்ன பெரிய விஷயம். அது ராணுவ வீரர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.அதனாலென்ன? நான் இராணுவத்துக்கு தலைவரா இருந்து சேவை(😭)செஞ்சவர் தானே..என்ன தப்பு? அதையும் குறை சொல்லிட்டாங்க.?
அரசாங்க விதிமுறையின்படி ஒரு ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு, குடியிருக்க அரசு இல்லம் இல்லை என்றால், குத்தகைக்கு 2000 சதுர அடி மட்டுமே வாழும் பரப்பளவு கொண்ட இடத்தை தேர்வு செய்யலாமாம். அதிகப்பட்சமாக ஒரு காபினெட் அமைச்சருக்கு ஓதுக்கப்படுவது போல், கட்டிடம் எழுப்ப 5498 சதுர அடி நிலம் மட்டுமே ஒதுக்க முடியுமாம் .இது சம்பந்தமான தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கேட்டதை கொடுத்திருக்காங்க.
சரி 4500 சதுர அடியில் கட்டிடம் கட்டணும் அவ்ளோதான?
ஜஸ்ட் அந்த 2.61 லட்ச சதுர அடி நிலத்தில் 4500 சதுர அடி பங்களா கட்ட சொன்னேன். அதுக்கு போய் . பலத்த எதிர்ப்பு… சே…போங்கப்பா உங்க கதையே வேணாம்னு நிலத்தையே திரூப்பிக் கொடுத்திட்டேன்.அதுக்குள்ள நான் ஏதோ நிலத்தையே அபகரிக்க பார்த்தேன்னு என்னா பேச்சு?! .நீங்களே சொல்லுங்க…அந்த விஸ்தாரமான ராஷ்ட்ரபதி பவனில் குடியிருந்தபின், 4500 சதுர அடி பங்களாவிற்குள் முடங்கி கிடக்க முடியுமா?
அதுக்கப்புறம் கூட விட்டீங்களா? மஹாராஷ்டிரா அரசு ஏதோ வனிகரீதியிலான அரசு நிலங்களையெல்லாம் என்னோட மகள் ஜோதி ரத்தோர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெயந்த் படேல் ரெண்டு பேரும் நடத்துரை அறக்கட்டளைகளுக்கு கொடுத்துச்சுன்னு ஒரே கூப்பாடு! அவங்க கொடுத்ததுக்கு நான் என்ன செய்வேன்?
6.72 லட்ச ரூபாய் கட்டிதான் அவங்க வாங்குனாங்க.ஆனா நீங்க என்ன சொல்றீங்க?7.அந்த 93 ஹெக்டர் நிலத்தொட மதிப்பு 19 கோடிங்கிறீங்க. யயஏங்கஅரசாங்கம் சொல்ற விலையைத் தானே கட்ட முடியும்? அதுக்கும் குறை சொல்லிக்கிட்டு…
விதிமுறைப்படி ஓஓவீட்டோட, ரெண்டு போன், ஒரு மொபைலை போன், ஒரு கார் கொடுக்கணும்.நான் கார் வேணாம் என்கிட்ட இருக்கு.டீசல் போட பணம் கொடுங்கன்னு சொன்னேன்.அதையும் தப்பாதான் பார்த்தாங்க!!
அட அதையும் கூடப் பொறுத்துக்கிட்டாங்க..2012 பிப்ரவரியிலே உள்ளாட்சி தேர்தல் நடக்கிற சமயம்.நாக்பூரிலிருந்து வர்ற காரை அமராவதி போலீஸ் சோதனை போடுறாங்க.உள்ளே இருக்கிறார் என் புள்ளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஷெகாவத். பார்த்தவுடனே விட்டுட்டு தானே போகணும்? சாமான் வக்கிற இடத்திலே பத்திரமா 😃வச்சிருந்த 1 கோடி ரூபாயை புடிச்சிட்டாங்க.அது கட்சி பணம், தேர்தலில் போட்டியிடுற ஏழை😂காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுக்க வச்ச பணம்ன்னு சொன்னா, இப்பிடியாங்க ஊரே சிரிப்பீங்க? நல்லதுக்கே காலம் இல்லை…
எவ்ளோ பெருமையை இந்தியாவுக்கு கொடுத்திருக்கேன். ஒரு முதல் பெண் ஜனாதிபதியை இப்படியா படுத்துவீங்க?
நான் பதவிலே இருந்தப்ப, 23பேருக்கு கருணை அடிப்படையில் மரண தண்டனையில் இருந்து விடுவிச்சு இருக்கேன்.எல்லோரும் என்னை கருணையுள்ள ஜனாதிபதின்னு பாராட்டுவாங்க!! அதுவும் 1981லேயிருந்து பெண்டிங்க இருந்த 91 தண்டனை கைதிகளோட கருணை மனுக்களை என்னோட பதவி காலம் முடியப்போவுதுனாலும் பரவாயில்லை ன்னு கடுமையா வேலை செஞ்சு அத பண்ணேன்.அது சில பேருக்கு புடிக்கல. சுப்ரீம் கோர்ட்டு அரிதிலும் அரிதான கேஸுன்னு சொல்லி 9 வயசு பையனை கொன்னவனுக்கு மரண தண்டனை கொடுத்ததை எப்படி குறைச்சென்னு கேக்குறாங்க? அபிசல் குரு மனுவை ஏன் முடிக்கலைன்னு கேக்கிறாங்க..நான் ஆள் பார்த்து பைசல் பண்ணுனேன்னு குறை. எல்லாத்தயும் நானே பார்த்துட்டா அடுத்து வர்றவருக்கும் வேலை வேணும்ல?
சரி வேலை செஞ்சு ட்யரடாச்சேன்னு தென் ஆப்பிரிக்கா, சேஷைலஸ் தீவுன்னு ரெண்டு நாட்டுக்கு ட்ரிப் போனேங்க.ஜஸ்ட் 18 கோடி ரூபா தான் ஆச்சு!! அதுக்கு போய் பதவியை விட்டு போகும்போது இவ்ளோ பெரிய செலவான்னு எல்லாத்துக்கும் குறை தான்?
இப்ப் நீங்களே சொல்லுங்க? நான் நல்ல பொது ஊழியரான்னு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக