நவீன, சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் அர்த்தம் இல்லாத 100 க்கும் மேற்பட்ட சட்டங்கள் தற்போது நம் நாட்டில் உள்ளது. அதில் நிறைய ஆங்கிலேயர் காலத்திலும் எமெர்ஜென்சி காலத்திலும் இயற்றப்பட்டவை.
'100 சட்டங்கள் திரும்பப்பெறும் திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு, இதுபோன்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதே சமயததில், சில சட்டங்கள் குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்தாலும், அது பெயரளவிலேயே உள்ளது..எந்த நடவடிக்கையும் அந்த சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டதாக தெரிவதில்லை.
உதாரணமாக, Banking Regulation Act 1949 என்று ஒரு சட்டம் உள்ளது..இந்த சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி இந்தியாவின் அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்துதல், மேற்பார்வை செய்தல், தணிக்கை செய்தல் மற்றும் இயக்குதல் வேண்டும், அதற்கேற்ப ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், நடப்பது என்ன ..
விவசாயக் கடனும் கல்விக் வசூலிக்க வங்கிகள் காட்டும் தீவிரம், லட்சக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டவர்களிடம் மீட்க உருப்படியான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை…இன்னமும் எத்தனை விஜய் மல்லையாக்களும் நீரவ் மோடிக்களும் வரப்போகிறார்களோ தெரியலை…
ஆனால் சாமானிய மக்களிடம் இந்த வங்கிகள் காட்டும் கெடுபிடி இருக்கே…
எனக்கு தெரிந்த ஒரு அரசு ஊழியர், தான் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டை வங்கி விற்க முயற்சி செய்வதை அறிந்தார். ஏற்கெனவே இரண்டு முறை நடத்திய ஏலத்தில் அவர்கள எதிர்பார்த்த தொகை கேட்கப்படவில்லை.ஓத்தி வைக்கப்பட்டது. இவர் போய் கேட்டவுடன் ஒத்துக்கொண்டு பணத்தை உறுதி செய்தனர். வங்கியில் கடன் வாங்கவும் இவர் அரசு ஊழியர் என்பதால் அரசிடம் அனுமதி பெற்று தான் சொத்து வாங்க முடியும் என்பதால், சொத்து பத்திர நகல்களை கேட்கிறார். வங்கி அவரிடம் பேசிய தொகையில் 15% செலுத்தக் கோர, அதன்படியே செய்து, அரசுக்கு அனுமதி கோருகிறார். அனுமதி உத்தரவு கோரும் மனு நிலுவையில் இருக்கும்போதே வங்கி இவரை மீதி தொகையை 15 நாளில் செலுத்தி கிரய பத்திரம் பதிய சொல்கிறது.இவர் அரசு அனுமதி கொடுக்காத நிலையில், தான் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது என்பதையும் மேலும் அது வந்த பிறகே வங்கிக் கடன் வாங்கி, பிறகே கிரய பத்திரம் பதிய முடியும் என்பதால், கால அவகாசம் கேட்டு மனு செய்கிறார்.அதை நிராகரித்து விட்டு, அவர் கட்டிய emd தொகையை தாங்கள் பறிமுதல் செய்துவிட்டதாக அறிவிக்கிறது.!!
என்ன ஒரு கொடூரமான செயல்!!
ஆனால் கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு வங்கிகள் மோசடிகளுக்கு மேல் மோசடிகளைப் பதிவு செய்துள்ளன, அதில் வங்கி அதிகாரிகளின் பங்கு உள்ளது தெளிவாக தெரிகிறது.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இந்த கண்காணிக்கும் அதிகாரத்தை தக்க வைத்துள்ள ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரி கூட சட்டத்திற்கு முன்பாக கொண்டு வரப்படவில்லை,
தகவல் அறியும் உரிமை கோரல் சட்டத்தின் மூலம், ரூ .100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்ட வழக்குகள் மற்றும் வங்கிகளின் பட்டியலையும் மத்திய மோசடி பதிவேட்டில் பதியப்பட்ட, ரிசர்வ் வங்கியால் சிபிஐக்கு பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளின் பட்டியலையம் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள். தருமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொள்ளப்பட்டும் மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், ரிசர்வ் வங்கி அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.
இந்த Banking Regulatioin Act, 1949 தற்காலத்திற்கு ஏற்றது போல இல்லையோ, கண்காணிக்க, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பே தவறும் போது, எப்படி சரி செய்வது..என்று கேள்விகள் நமக்குள் ஏழத்தானே செய்தன?!
இப்படி கண்காணிப்பதாக பெயர் பண்ணிக் கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி என்னும் ருசி கண்ட பூனைக்கு மணி கட்டுவது யார்?
கட்டி விட்டார்கள்…😀
வேறு யார்?
வழக்கம் போல பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தான்
இரண்டு நாட்கள் முன்பு, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், தங்களின் சட்டரீதியான கடமைகளை கடுமையாக மீறுயதாகவும் , நிரூபிக்கக்கூடிய நிதி மோசடி செயலில் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதில் சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
- ... எந்த வங்கியும் மோசடி நடந்ததாக புகார் செய்துள்ளதில், ரிசர்வ் வங்கியின் எந்தவொரு அதிகாரியும் கடமை தவறியதாக பொறுப்பேற்கவில்லை. இது இந்தியாவில் வங்கித் துறையில் வெடித்த மோசடிகளின் எண்ணிக்கையான கிட்டத்தட்ட ரூ .3 லட்சம் கோடிக்கு மேல் (ரூ. மூன்று டிரில்லியன்) விட முற்றிலும் நேர்மாறானது..
- "வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியை வங்கி நிர்வாகத்தின் மாற்று ஈகோவாக ஆக்குகிறது, அதுவும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரையில் . ஆனாலும் கூட, எந்தவொரு அதிகபட்ச வங்கி மோசடிகளில கூட , மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பு ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் பங்கை ஒரு அடிப்படை மட்டத்தில் கூட விசாரிக்க முயலவில்லை "
- கிங்ஃபிஷர், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்- தனியார் சர்க்கரை அமைப்பு, நீரவ் மோடி / பஞ்சாப் நேஷனல் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, ஐ.எல்.எஃப்.எஸ், பி.எம்.சி வங்கி, யெஸ் வங்கி, முதல் குத்தகை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- "ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் தீவிர ஒத்துழைப்பின் காரணமாகவே இந்த மோசடிகள் ஏற்பட்டுள்ளன. இது பல்வேறு சட்டங்களின் கீழ் கணிசமான அதிகாரங்களை கொண்டுருந்தாலும் இந்த மோசடிகளைத் தடுக்கத் தவறிவிட்டது"
- வைப்புத்தொகையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆர்வத்தை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களின் நலனைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி தவறிவிட்டது
- பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த தோல்வி, இந்தியாவின் முழு வங்கி அமைப்பிலும் நம்பிக்கை இழக்க வழிவகுத்தது,
ஒழுங்குபடுத்தவேண்டிய ரிசர்வ் வங்கி, தொடர்ச்சியான வங்கி மோசடிகளைக் குறித்து, அலட்சியமாக இருப்பதால், அது குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்ற மனுதாரர், .இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் நடந்துள்ள இந்த நிதி மோசடிகளில், .இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் செய்த சட்டவிரோதங்கள் குறித்து, சிபிஐ அல்லது வேறு ஏதேனும் தகுதிவாய்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
என்ன நடக்கிறது என்று நாமும் உன்னிப்பாக கவனிப்போம்!!