இந்து சட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து சட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

கணவனுடன் குடித்தனம் செய்ய மறுத்து விவாகரத்து ஆன மனைவி, ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

 "மனைவி" என்ற ஸ்தானத்தை அடைபவளுக்கு தான் எத்தனை பெயர்கள்..

கிரிஹினி இல்லத்தரசி, மதி மந்திரி,, சகி [அவரது கணவரின் தோழி]., கிரிஹ லக்ஷ்மி, அர்தாங்கினி (அவனது பாதி) ,சமராஜி என்று. ..

அவள் தான் தர்மம், அர்த்த மற்றும் காம சாஸ்திரத்தின் ஆதாரம் மட்டுமல்ல, மோட்சத்தின் மூலமும் கூட என்கிறது . மகாபாரதம்.

அவள் தான், தனது கணவரின் ஆத்மா என்கிறது இராமாயணம்.

எல்லாம் சரி தான்…ஒரு குடும்பத் தேரின் இரண்டு சக்கரங்களான கணவனும் மனைவியும், காலப்போக்கில் ஒரு கருத்து வேறுபாட்டிற்குள் நுழைந்தால்? .

அது ஊடல் என்றில்லாமல், தீர்க்க முடியா சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் போது,?

அந்த விவாகம், ரத்தாகிறதோ இ8ல்லையோ, தன்னைத் தானேபராமரிக்க முடியாத அவளையும் அவன் குழந்தைகளையும் பராமரிப்பதற்கான சட்டபூர்வமான உரிமைகளை இந்து திருமணம் பாதுகாக்கிறது என்று சட்டம் சொல்கிறது.

இந்து திருமண சட்டம்1955, இந்து வாரிசு சட்டம் 1956, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் இந்து பாதுகாவலர் மற்றும் வார்டு சட்டம் 1956 என்று ஏகப்பட்ட சட்டங்கள், பெண்ணிற்கான பராமரிப்பைப் பற்றி தான் பேசுகிறது

எது பராமரிப்பு?

இந்திரா காந்தி சொன்னது போல, கானா, "கப்டா அவுர் மகான்"( உணவு, உடை, உறையுள்) இத்தோடு, மருத்துவச் செலவு,, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணமாகாத மகளின் திருமணத்திற்கான செலவுகள்,..  இப்படி பட்டியல் இடுகிறது இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 பிரிவு 3

இந்த சட்டங்களின் நோக்கம் தான் என்ன?

"கணவனால் பிரிந்து, தனித்து வாழும், மனைவி மற்றும் அவள் குழந்தைகளை வறுமையிலிருந்து பாதுகாப்பது தான், பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை பொருள்" என்று 2020ல் தங்கள் முன் வந்த ஒரு வழக்கில், விளக்குகிறார்கள் நீதிபதி மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர்   தங்கள் 67 பக்க தீர்ப்பில்..

இந்த பராமரிப்புக்கான உரிமையே ஒரு பிரிக்கப்படாத குடும்பத்தின் கருத்திலிருந்து தான் வருகிறது.

இன்று வரை ஒரு "இந்துக் குடும்பம்" என்பது ஒரு கூட்டு குடும்பமாகத் தான் பார்க்கப்படுகிறது.ஒரு பெண்ணை தங்கள் வீட்டுப் பையனுக்கு பார்த்து, நிச்சயம் செய்து, மணமுடித்து கூட்டி வரும் போது, அவளை பராமரிக்கும் கடமையும் அவர்களுடையது தானே?..

வரும் பெண், . புகுந்த வீட்டினருக்காக உழைக்கக் வேண்டும்.. ஆனால், தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடியாத மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் கணவன் இறந்தால், அவளுடைய புகுந்த வீடு அவளை பராமரிக்க கடன்பட்டதா? 

இதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...