நல்லா பார்த்துக்கோங்க. …இவர் தான் அந்த மனு.
இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் தான் இந்த சிலை இருக்கு.அவர் கையிலே இருக்கிறது தான் மானவ தர்ம சாஸ்த்ரா அதாவது மனு நீதி..
இவர் தான் இந்துக்களுக்கான முதல் சட்ட நூல் எழுதியவர் .இந்துக்களில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர மற்றும் மீதியுள்ள அவரண குலத்திற்கான சட்ட விதிகளை உருவாக்கி ஒரு முன்மாதிரியான வேத சமூகம் உருவாக பாதை அமைத்தவர். அவருடைய சட்ட விதிகள் , நீதிமன்ற தீர்ப்புசுளிலும், இதோ நீங்க கேக்கிற மாதிரி பொது விவாதங்களிலும் இன்றும் மேற்கோள் காட்டப்படுது.
இந்த மனு நீதி, ஹிந்துக்களிடையே சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை கொண்டு வருதுன்னு ..கருதக்கூட வேண்டாம். அந்த வார்த்தைகள் தெளிவாக காட்டுது. ஆனால் இதெல்லாம் சாதியை பத்தி சொல்லலே…அப்ப இருந்த வருணங்களை பத்தி தான் சொல்லுதுன்னு சொல்லறவங்சுளும் உண்டு.
ஆனால் அது மதம்கிற போர்வையிலே , சமூக நீதிக்கு எதிரானது ன்னு சொல்லி தான் டாகடர் அம்பேத்கர் 1927லே மனு நீதி பிரதியை எரிச்சார்.
.சரி இந்த சிலை எப்படி உயர்நீதிமன்ற வளாகத்திலே இருக்குன்னு கேட்கறவங்களுக்கு…1989லே இந்த சிலை நிறுப்பட்டதுலேயிருந்து பிரச்சினை தான் அதை அங்கிருந்து ஆறு மாசத்துக்குள்ளே நீதிமன்ற வளாகத்தில் இருந்து எடுக்கனும்ன்னு உயஸ்ர்நீதிமன்றம் உத்தரவு போடுது.
ஏன்னா. உயர்நீதிமன்ற வளாகம் அரசோடதுங்கிறதுனால,… உண்மைத்தாங்க sword is with the Court …but purse is always with the State..
ஆனா அதை முடக்குற மாதிரி ஒரு பொது நல வழக்கு போட்டு, முடக்கி வச்சிருக்காங்க.
சமீபத்திலே, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ம், சாதியை அடையாளம் காட்றமாதிரி எதுவும் இருக்க கூடாது, அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதுண்னு சொல்லியிருக்கு.இதிலே இருந்தே, நீதிமன்றம் எந்த வித ஏற்றதாழ்வை அனுமதிகாதுண்னு தெரியுதில்லை?
இன்னொரு விஷயம் இந்த மனுவிற்கும் நமம உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற மனுநீதி சோழனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.