உத்தர் பிரதேசம் கோண்டா மாவட்டம் 1982 மார்ச் 12 இரவு.
25 வயதே நிரம்பிய டிஎஸ்பி kp சிங் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கி போடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு வீட்டிற்குள் மறைந்திருப்பதாக கிடைத்த துப்பின் அடிப்படையில் அந்த 2 கொள்ளைக்காரர்களை பிடிக்க போலீஸ் படையுடன் சென்ற டிஎஸ்பி kp சிங் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் போலீசார் உட்பட 12 பேர் இறந்தனர் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
அந்த வீட்டின் கதவை தட்டிய டிஎஸ்பி, யாரும்திறக்காமல் போக, திரும்பி இரண்டு எட்டு வைத்திருக்க மாட்டார்..அவருடன் வந்த போலீஸாரே அவரை சுட்டுத் தள்ளினர். சில கிராமத்தினரையும் சுட்டுவிட்டு, ஒரு பொய்யான எநகவுன்டர் கதையை பரப்பி விட்டுள்ளனர் என்று தெரிந்தது.
என்ன ..சினிமா போல இருக்குதா…
இது உண்மை சம்பவம்.[1] .
அந்த காவல் நிலைய ஆய்வாளர் சரோஜ்க்கு எதிரான விசாரணையை நடத்திய டிஎஸ்பி மீது ஏற்கெனவே காழ்ப்புணர்ச்சி இருந்தவருக்கு, அதற்கு பக்கபலமாக அந்த மாவட்ட sp யும் (அவருடைய சொந்தப் பகை) துணை நிண்றது, போலீஸ் மேல்மட்ட நிலையில் நடந்த சதி, நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த பொய்யான என்கவுண்டரில் குறிவைக்கப்பட்ட சிங்கின் மனைவி விபா மட்டுமே தப்பினார்.அவர் சாட்சியம் தான் இந்த வழக்கின் பின்புலமாக இருந்த சதித்திட்டத்தை வெளிக்கொணர உதவியது.
19 போலீசாருக்கு எதிராக சிபிஐ போட்ட இந்த வழக்கில், 10 பேர் விசாரணையின் போதே இறக்க, சிலர் ஓய்வு பெற்று விட, ஒருவர் மட்டுமே தீர்ப்பு சொல்லும்போது பணியில் இருந்தார். சதியில் ஈடுபட்ட மேல்மட்ட காவல் அதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
டிஸ்பி சிங் கொல்லப்பட்டபிறகு, அவரின் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்,கொண்ட குடும்பத்தினருக்கு அடுத்து என்ன நடந்திருக்கும்?
மூத்த மகள் கின்ஜால் சிங், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு தினசரி வருகை தருவதோடு, கடினமாகப் படித்தார். டெல்லியின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் சேர்ந்தார், இதற்கிடையில் அவரது தாய்க்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது நோயுடன் ஒரு தீவிரமான போருக்குப் பிறகு, தனது மகள்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக மாறி, தங்கள் தந்தையின் மரணத்திற்கு நீதி பெறுவர் என்ற மன அமைதியுடன் தான் அவர் கண்ணை மூடினார்.
எத்தனை பெரிய சோகம்…ஆனாலும் …கிஞ்சலும் அவரது சகோதரி பிரஞ்சலும் அவர்கள் அம்மா ஆசைப்பட்டது போல, தங்கள் தந்தையின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்,தங்கள் வாழ்நாள் இலக்கை நோக்கி, தங்கள் சக்தியை முழுதும் அர்ப்பணித்தனர்.
அவர்கள் தாயார் இறந்த பிறகு, கின்ஜால் இறுதித் தேர்வுகளை எழுத தனது கல்லூரிக்கு திரும்பினார். பட்டம் பெற்ற உடனேயே, அவர் தனது தங்கை பிரஞ்சல் சிங்கையும் டெல்லிக்கு அழைத்து வந்தார். ஒன்றாக, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதில் அவர்கள் தங்கள் கவனத்தை முழுவதுமாக செலுத்தினர்.
2007 ஆம் ஆண்டில் இருவரும் . கிஞ்சல் சிங் ஐ.ஏ.எஸ் ஆகவும், அவரது சகோதரி பிரஞ்சல் சிங் ஐ.ஆர்.எஸ் ஆகவும் .யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்
2013 ஆம் ஆண்டில், 31 வருட போராட்டத்திற்குப் பிறகு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்தது, மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
"என் அப்பாவை கொன்னவனை பழி வாங்காம விடமாட்டேன்"னு ஹீரோ சொல்லிட்டு அவரே அருவாளை தூக்கிட்டு போய் வில்லனை போட்டா தான் பழிவாங்கல்"ன்னு சினிமா நம்மை மூளைச் சலவை செய்து விட்டது..😂
இந்தப் பழி வாங்குதல் சிறப்பாக இருக்குல்ல?!
படிமப்புரவு கூகிள்
அடிக்குறிப்புகள்[1] UP fake encounter: 3 cops get death for UP fake encounter in 1982 | India News - Times of India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக