ஒரு சமுதாயத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் தான் சட்டங்கள் என்றும் அதை மீறுபவர் தண்டிக்கப்படவும் ஆளாவர்.இது நாட்டுக்கு நாடு மாறுமென்பதால் அமெரிக்காவில் சட்டபூர்வமானது என்பதற்காக இந்தியாவில் அது இங்கு ஏற்றுக்கொள்ளப்படாததாலேயே சட்ட விரோதம் ஆகாது.
அதே சமயம் சமூகம் ஏற்றுக்கொள்ளாத சில சட்டப் பூர்வமானதாக இருக்கும்.
அதனால் கேள்வியை சற்று மாற்றிப் பார்ப்போம்.
உண்மையில் இந்தியாவில் சட்டபூர்வமானது ஆனால் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதது என்று எண்ணும் விஷயங்கள் எவை?
இந்த படங்களை பாருங்கள்.
இவற்றில் ஏதாவது வித்யாசம் உள்ளதா?
முதல் படத்தில் உள்ள சிங்கங்கள் இரண்டும் ஆண். அடுத்ததில் உள்ளவை பெண்கள்.
கடைசியில் உள்ள இந்த இரண்டு பென்குவிண்கள் ரொம்ப பிரபலம். பெர்லின் உயிரியல் பூங்காவில் உள்ள இந்த ராய் மற்றும் சிலோ 1998ல் பத்திரிகை தலைப்பு செய்திகளில் அடிபட்டது.
இரண்டும் ஒரு முட்டையை தத்தெடுத்து, ஒரு பென்குவின் குஞ்சை /குட்டியை
எது சரியான வார்த்தை?
வளர்க்க ஆரம்பித்தன.😂
பறவை இனத்திலும் விலங்கினத்திலும் ஒரே பாலினம் கொண்டவை ஒன்று சேரும்போது, மனித இனத்தில் மட்டும் ??
இந்தியாவில் ஒரே இனத்தை சேர்ந்தவர் திருமணம் செய்வதோ சேர்ந்திருப்பதோ குற்றம் எனப்பட்ட இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377யை சட்டவிரோதமானது என்று 2018 செப்டெம்பர் மாதம் மாண்புமிகு உச்சநீதிமன்றம் தீர்ப்பள்ளித்தது.
2009 ஜூலை 2ல் நாஸ் அமைப்பு எதிர் டில்லி மாகாணம் என்ற வழக்கில், மாண்புமிகு டில்லி உயர்நீதிமன்றம் பரஸ்பர சம்மதத்துடன் பெரியவர்கள்(அடல்ட்ஸ்) உறவு கொண்டாலும் அது சட்டவிரோதம் என்றது. ஆனால் மாண்புமிகு உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை 2013 டிசம்பர் 11ல் மாற்றியமைத்தது,
என்ன சட்டம் கொண்டு வந்தாலும் ஆணும் ஆணுமோ அல்லது பெண்ணும் பெண்ணுமோ உறவு கொள்வது இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே உள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு , சட்ட கமிஷன், சுகாதாரக் துறை, மனித உரிமைகள் அமைப்பு, திட்ட கமிஷன் இப்படி ஏகப்பட்டவை , லெஸ்பியன், கே, திருநங்கைகள் ஆகியோருக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து, விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டாலும் மக்களின் மனதில் ஓரளவு மாற்றமே ஏற்பட்டு உள்ளது.
