சொத்து உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொத்து உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஏப்ரல், 2022

எனது தந்தை சொத்தின் மீது நான் எனக்கு (பணம் கட்டியவர்) உரிமை உள்ளதா? என் தந்தை வாங்கிய அடமான விட்டு கடன் கூட்டு வட்டி மற்றும் அசல் என முழு கடனையும் என் சுய சம்பாத்தியம் முலம் அடைத்து அடமான கடன் பத்திரத்தை மீட்டேன்


 https://www.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q                   நண்பர்களுக்கு  வணக்கம். 

பெரும்பான்மையான நபர்களின் மனதில் உள்ளது  தான் இந்த கேள்வி.  ஆனால்  இது பற்றி கேட்டால் எங்கே நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ, சொத்திற்கு ஆசைப்படுகிறான் என்ற பேர்  கெட்டு விடுமோ என்று  கேட்காமலும், உள்ளுக்குள்ளே இந்த கேள்வி மனதை அரித்துக் கொண்டும் இருக்கும்.

நம் கூட பிறந்தவர் சிலர் இருப்பார்கள்.  ஆனால் நாம் மட்டுமே அப்பாவின் கடனை அடைத்து, வீட்டை கடனிலிருந்து மீட்டிருப்போம். இதற்கு உரிய முன்னுரிமை,  வீட்டின் சொத்து உரிமை மாறும்போது, கிடைக் குமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் இருக்கும்.  அப்படி கிடைக்காமல் போனால்.... என்ன செய்வது? நீதிமன்றத்திற்கு போகலாமா என்ற தடுமாற்றம் இருக்கும்....

அதுவும்  பரம்பரை சொத்து என்றாலாவது பரவாயில்லை உறுதியாக நம் பங்கு கிடைக்கும், ஆனால் அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து என்றால்... அதை அவர் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். என்று சட்டம் சொல்லும் போது ...!!

இதே போன்று, எனக்கு தெரிந்தவர் வீட்டில் நடந்தை சொல்கிறேன். 

அந்த குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபரான அந்த குடும்பத்  தலைவர்   இறந்து விடுகிறார்.  பிள்ளைகள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் தான் உள்ளனர். இருக்கும் ஆண் பிள்ளைகளில் மூத்தவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்ய...?  அவன் படிப்பு நிறுத்தப் படுகிறது.... அப்பா பார்த்துக் கொண்டிருந்த  கடையை இவன் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். வீடு ஓட்டு வீடு என்றாலும் சொந்த வீடு.  வாடகை பிரச்சினை இல்லை.  ஏதோ வாழ்க்கை வண்டி மெதுவாக அசைந்து நகர ஆரம்பிக்க, , இவனும் கடையை நன்றாக நடத்த ஆரம்பித்து, அதில் வரும் இலாபத்துடன் வீட்டின் பேரில் கடனும் வாங்கி,  இரண்டு மாடி வீடாக கட்டுகிறான். அடுத்து திருமணம் ....ஒவ்வொருவருக்காக நடக்க ஆரம்பிக்க. வீட்டின் உரிமை பிரச்சினை தலை எடுக்கிறது. 

வீட்டின் தற்போதைய நிலைக்கு மூத்தவன் காரணம் என்றாலும், அப்பாவின் கடையால தானே அந்த பணமே வந்தது, அதனால் அதிகபட்ச உரிமை எடுத்துக்  கொள்ள முடியாது, எல்லோருக்கும் சம பங்கு தான் என்கிறார்கள் மற்றவர்கள்...

இவன் நினைத்தால்,  இதை பெரும் பிரச்சினை ஆக்கி, சண்டை யிட்டு, அதிக பங்கு கேட்டு கோர்டுக்கு மற்றவர்களையும் இழுத்து, வருடக்கணக்கில் இழுத்தடித்து இருக்கலாம்.  அதற்கு மாறாக அவன் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டான். மூத்த  ஆண் பிள்ளையாக, தன்  கடமையைத் தான் செய்தேன் என்றான்.   தனக்கு கொடுத்த பங்கை வாங்கிக் கொண்டு, தனியே வீடு வாங்கி  தன் குடித்தனத்தை தொடர்ந்தான்.  சட்டத்தின் பார்வையில் இது தான் நடக்கும்.  ஆனால் தர்மம் என்று ஒன்றுள்ளதே...அதன் பார்வையில், அவன் பிள்ளைகள் இன்று நன்றாக படித்து, பெரிய உத்தியோகத்தில் உள்ளனர். மற்றவர்களின் குடும்பம் பற்றி ..........ஒன்றும்  சொல்ல வேண்டாம்.

இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், சிலவற்றிற்கு கணக்கு பார்க்கக்  கூடாது.."உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"  என்பார்கள் அதைத்  தான் இங்கு நான் சொல்ல வருவது.  பெற்ற தாய், தந்தை, எந்த குழந்தைக்கும் குறைவில்லாமல் பராமரிப்பது அவர்கள் கடமை என்றால், 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும்  குறள் நி னைவிற்கு வருகிறதா? 

தந்தையின் கடமை என்று வரும் போதே மகனுக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது தானே...மற்ற பிள்ளைகள் தங்கள் கடமையை செய்தார்களா என்ற கேள்வி வேண்டாம். நாம் சரியாக நம் கடமையை செய்தோமா?  அப்பா வாங்கிய கடனை பிள்ளை அடை ப்பது அவன் கடன் தானே? அப்பா நம்மை வளர்ப் பதற்கு ஆன செலவை நம்மிடம் எதிர்பார்த்தாரா? இல்லையே ..... அது போலத்  தான் இதுவும்....

 "இது எப்படி சரியாகும்," கடனை அடைக்க உதவாத மற்ற பிள்ளைகளும் கடனை அடைத்த நானும் ஒரே பங்கு தான்  பெற வேண்டுமா?   எனக்கு கூட எழுதி வைக்காமல் வேறு ஒரு பிள்ளைக்கு அப்பா எழுதி வைத்தால் என்ன செய்வது| ? செலவு செய்த பணத்திற்கு கூட கொஞ்சம் கொத்தில் பங்கு  கிடைப்பது தானே நியாயம்? எ ன்று கேட்கலாம்.  ஆனால்  நீதி தேவதை கண்ணை மூடிக்  கொண்டிருக்கிறாள் தானே?  . அவளுக்கு நீங்கள் செலவு செய்தது தெரியாது.    பரம்பரை சொத்து என்றால், அனைத்து பிள்ளைகளுக்கும் சம உரிமை என்பதும்  சுய சம்பாத்திய சொத்து என்றால் அப்பா அவருக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் என்பது மட்டும்  தான் தெரியும்.  வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு , அந்த சொத்திற்காக நாம் செலவு செய்ததை காட்டி , கூட கொஞ்சம் பங்கு கேட்கலாம் தான்,,,அல்லது மொத்த சொத்தும்  நமக்கே சொந்தம் என்று வழக்கு போட்டு வாதாடலாம் தான். ..நீதி தேவதை அதையெல்லாம் குறித்து கொள்வாள்...அதற்கேற்ப தன நிலைப் பாட்டை  மாற்றி தீர்ப்பு  சொல்லலாம் தான் ...

ஆனால் ...நம் நாட்டின் தலை நீதிமன்றமான மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கொள்கை என்ன தெரியுமா??

யதோ தர்மஸ்ததோ ஜயா


"எங்கு தர்மம் இருக்கறதோ அங்கு ஜெயம் (வெற்றி) உண்டு".

உச்ச நீதிமன்றத்தின் நோக்கமே இது வென்றால் நீதி வழங்குவது இல்லையா என்ற கேள்வி வரலாம்.  நீதி எண்பது சூழ்நிலைக்கேற்ப மாறக்  கூடியது.  கொலை செய்வது குற்றம் என்றால் அதை தன்  தற்காப்புக்காக செய்தால் அது குற்றம் அல்ல என்கிறது சட்டப்  புத்தகம்.  ஆனால் தர்மம் என்பது என்றும் நிலைத்தது. அதனால் தான் ,  நீதியின் வழியில் சென்று தர்மத்தை அடைவதே நீதிமன்றங்களின் தலையாய பணி  எனப்படுகிறது.   அதன் அடிப்படையில்சொத்து உரிமையை அப்பா மாற்றி எழுதும்போது,  நமக்கு வேண்டுமானால்,  நாம் செலவு செய்த பணம் நமக்கு கிடைக்காமல் போகலாம்.  ஆனால் அதை அமைதியுடன் ஏற்றுக் கொண்டால், தர்மம் தலை காக்கும்.  நம் குடும்பத்தின் தலையும் நிமிரும்.. இது அனுபவ பூர்வமாக நான் கண்டுணர்ந்த  உண்மை. 

எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தின்  கதவை தட்டி, நம் கைப் பொருளையும் நேரத்தையும் வீணாக்கி,மனம் நொந்து அலைக்கழிக்கப் படுவதை விட,  மாறக்கூடியது எது,  மாறாதது எது ,இரண்டிற்கும்  உள்ள வித்யாசம் என்ன என்பதையும் உணர்ந்து செயல் படுவது தான் விவேகம் உள்ளவரின் வழி. 

நாமும் அந்த வழியை சார்ந்தவர்கள் தானே?


திங்கள், 22 நவம்பர், 2021

இறந்த மகனின் சொத்துக்கு சட்டப்பூர்வ வாரிசு ? யார் வருவார்கள்? 1) தந்தை உள்ளார், மனநிலை பாதிக்கப்பட்டவர். 2) இறந்தவருக்கு தம்பி உள்ளார், வயது 14. 3) தாய், வேறு திருமணம் செய்து, வேறு ஊரில் வாழ்ந்து வருகின்றார். இவர்களில் யார் வாரிசாக வருவார்கள்?

 திருமணமாகாத மகனின் வாரிசாக அவரின் பெற்றோரும் அவர்கள் இல்லாத பட்சத்திலேயே அவரின் சகோதரர் வாரிசாக முடியும்.

தந்தை மனநிலை பாதிக்கபட்டிருந்தாலும் வாரிசு தான்.

வேறு திருமணம் செய்திருந்தாலும் இறந்தவரின் தாய் என்பதில் மாற்று கருத்து இல்லை.

திங்கள், 28 ஜூன், 2021

ஐந்து பேருக்கு வர வேண்டிய சொத்தை ஒருவர் மட்டும் பெற்றோரிடம் சாதகமாகப் பேசி எழுதி வாங்கியுள்ளார், இது UDR சர்வே சட்டம் மூலம் போனால் மீதி உள்ள நான்கு பேருக்கும் சொத்து கிடைக்குமா?

         யூ.டிஆர். சர்வே விதிகளுக்கும் நில உரிமை மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை.

        யூடிஆர் என்ற இந்த டேட்டா அபடேட் ரெஜிஸ்ட்ரி, என்பது 1979_ 89 வாக்கில் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் வகைப்படுத்தப்பட்டு  அளவிடப்பட்டு ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றின் விஸ்தீரணம் , உரிமையாளர் எல்லாம் கணினியில் ஏற்றப்பட்டது .அப்போது கொடுக்கப்பட்ட து தான் யூடிஆர் பட்டா எனப்படுவது

        அதே சொத்தில் நாங்களும் தானே 30 வருடமாக கூட்டாக அனுபவித்து கொண்டு இருந்தோம், ஒருவருக்கு பெயர் மாற்றி, மற்றவரை விட்டால் எப்படி அது சரி? என்கிறீர்களா?

        அதுவும் சரி தான்.ஆனால் அதை கேட்டிருக்க வேண்டியது யு.டி.ஆர் பட்டா கொடுத்த போதே.. முன்று தசாப்தம் கழித்து வந்து கேட்டால்?

        நல்ல தூக்கத்தில் இருந்தோமா?


        நமக்கு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது தெரியும் அல்லவா ?

        நாம் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை ஆர்டிகில் 21 மூலம் பெற்றிருக்கிறோம். இந்த "தூங்குவது" கூட அந்த அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கியது . தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்வது என்பதை சட்டம் அனுமதிக்காது . அதை உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.timesofindia.com/india/right-to-sleep-a-fundamental-right-says-supreme-court/articleshow/12025358.cms&ved=2ahUKEwjC4-TtjbzxAhVGT30KHYiKAXQQFjABegQIAxAC&usg=AOvVaw3g1oX4K0ayqff3n9NDulH3

        அதேபோல தன் உரிமைகளை கேளாமல், தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கும்/, இருந்தவர்களுக்கும் ,சட்டம் உதவாது!!

Vigilantibus non dormientibus jura subveniunt

        இது ஒரு லத்தீன் மாக்ஸிம் . இதன் பொருள் என்னவென்றால் "சட்டம் விழிப்போடு இருப்பவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை பெறுவதற்கு உதவி செய்யும் தூங்குபவர்களுக்கு அல்ல" என்பது

        அவரது உரிமையைப் பொருட்படுத்தாதவர்களுக்கு சட்டம் உதவாது.. ஒருவர் தன் உரிமையை கோர, அந்த உரிமையைக் கவனிக்க வேண்டும். . அவரது உரிமைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சட்டத்தின் நன்மைகளை பெற தகுதியுடையவர்கள்.. அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் நபர்களுக்கு சட்டம் அவர்களுக்குண்டான உரிமைகளை வழங்குகிறது.

        வழக்கமாக, ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நிவாரணம் பெற, செயல்படுத்துவதற்கு , சட்டரீதியான வரம்புகளை, சட்டம் பரிந்துரைக்கிறது. இல்லையென்றால்,கால வரையற்றதாக போய்க்கொண்டே இருக்குமே..பிரசுனைக்கு தீர்வு என்று ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்?

        ய.டி.ஆர் பட்டா கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டது . சட்டப்படி, தொடர்ச்சியாக 30 வருடங்கள் ஒரு பட்டா ஒருவரின் பெயரில் இருக்கும் பொழுது, அந்த சொத்து அவருக்கு ஏகபோக உரிமையாகவும் ஆகிவிடும் .

        நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான காலத்திற்குப் பிறகு ஒருவர் வழக்குத் தொடுகக முடியாது. சட்டரீதியான காலக்கட்டத்தில் "சும்மா" இருந்த ஒருவர், சட்டரீதியான வரம்புக்குப் பிறகு உரிமை கோர முடியாது.   எனவே யு.டி.ஆர்.பட்டாவில், இப்போது உரிமை மாற்றம் என்று கேட்பதை கால வரையறை சட்டம் அனுமதிக்காது .

        என் தாத்தா பாட்டிக்கு அந்த அளவிற்க்கு விவரம் தெரியாது அப்பா அம்மாவுக்கு. தெரியாது .அந்த அளவிற்கு எங்களுக்கு எல்லாம் சட்ட அறிவு அப்போது இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?    அதையும் சட்டம் அனுமதிக்காது .

ஏனென்றால் ...

Ignorantia juris non excusat

இதுவும் ஒரு லத்தீன் மாக்ஸிம் தான்! .இதன் பொருள்
"சட்டத்தின் அறியாமை என்பது தவிர்க்கக் கூடிய காரணம் இல்லை ”.

        நாமெல்லாம் பொதுவாக நினைத்து கொள்கிறோம்..
"இந்த சட்டம் அப்படிங்கிறது எல்லாம் வக்கீல்களுக்கும் ஜட்ஜ்களும் மட்டும்தான் தெரிஞ்சுக்க வேண்டியது நமக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது வக்கில போய் பார்த்து, கோர்ட்டுக்கு போனா போதும் அப்போ அவர் சொல்ற சட்ட விதிகளின்படி நடந்தா போதுமம்னு" நினைக்கிறோம் ஆனால் உண்மை அப்படி கிடையாது

        ஒரு குடிமகனாக இருப்பவன், அந்த நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை தெரிந்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பது அவனுடைய கடமைகளுள் ஒன்று. அந்தக் கடமை தவறி, அதனால் அதனை காரணமாக வைத்து உரிமையும் கோரவும் முடியாது!
சட்டத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க அறியாமையை ஒரு பாதுகாப்பாக மன்றாட உங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதித்தால், எல்லோரும், சட்டத்தையும் அதன் விளைவுகளையும் தெரிந்துக்  கொண்டு கூட, அறியாமையை ஒரு பாதுகாப்பாக முன்  வைக்க முடியும் இல்லையா?,

        நிறைய இடங்களில், இந்த பட்டாவில், தாத்தா பெயரில் அப்பா பெயரில் பங்காளி பெயரில் பட்டா இருப்பதை பெயர் மாற்றம் செய்யாமலும், அதில் உள்ள அளவுகள், சர்வே எண் தவறாக குறிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்யாமலும் இருக்கிறார்கள்.  அப்படியே திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்களும் நிலுவையில் இருக்கின்றன .அவற்றை பொருத்துதான் சரி செய்து கொடுப்பார்களே ஒழிய, 30 வருடங்களுக்கு முன்னர் ,பட்டா யார் பெயரில் இருந்ததோ அதனை தற்போது உரிமை மாற்றம் செய்துக் கொள்வதற்கான சட்டத்தில் வழிவகை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுத்தாலும் பலன் கிடையாது என்பதே நிதர்சனம்..

        அதுக்காக, அஞ்சு பேருக்கு உரிமையிருக்கிற சொத்தை, நான்கு பேரை விட்டுவிட்டு தன் பெயருக்கு மட்டும் மாற்றி இருக்காரே. அதை, நீக்குவதற்கான வழியாவது இருக்கான்னு கேட்டால், அதுவும் கிடையாது

        இங்கே ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" அப்படிங்கறது நம்முடைய மூதுரை
எல்லாருக்கும் கிடைக்க வேண்டியதை தனக்கு மட்டுமே ஒருத்தர் வாங்கிக் கொண்டு போனாலும், அதற்கு உண்டான கர்மங்களை அவர் அனுபவிப்பார்.   அதை நாம தான் போயி அவருக்கு காட்டணும் அப்படிங்கறது கிடையாது. ஒவ்வொரு கர்மாவுக்கும் உண்டான பலன்களை , அது முதிர்ச்சி அடைந்து சரியாக போய் காட்டும் என்பதை தான் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" அப்படின்னு சொல்றாங்க..

        இப்படித்தான்..சீடர்கள் குருவிடம் கல்வி கற்று முடித்து, கிளம்பும்  போது, "தர்மத்தைக் காத்து நீதியின் வழியாக நடங்கள்" என்று ஆசீர்வாதம் சொல்றாரு. இதைக் கேட்ட சீடர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது "என்ன குருவே நீதி வேறு தர்மம் வேறா?" அப்படின்னு கேட்கும் பொழுது அவர் சொல்றாரு
"நீதி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாறக் கூடியது. ஒருத்தர கொலை செய்தது சட்டப்படி குற்றம் என்றாலும் கூட ,அது அவருடைய தற்காப்புக்காக அந்த கொலையை செய்தா, அது குற்றமாகாது அது போல நீதி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது ஆனால் தர்மம் அப்படி அல்ல அது நிலைத்து நிற்கக் கூடியது அதனால்தான் தர்மத்தை காத்து நீதியின் வழியில் நடந்து"ன்னு ஆசீர்வாதம் சொன்னேன் என்றார்

        நம்ம உச்ச நீதிமன்றத்தின் லோகோ கூட என்ன தெரியுமா?
"Yato Dharma Tato Jaya
  

பொருள்: "தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது"



நன்மையே விளையட்டும்!

புதன், 23 ஜூன், 2021

பாதையை பஞ்சாயத்துக்கு எழுதி வைக்க வழிமுறைகள் என்ன?

 வரப்புக்காக சண்டைபோட்டவங்க நிலத்தையே வித்து கேசு நடத்துனாங்குலாம்"ன்னு கிராமத்திலே ஒரு பேச்சு வழக்கு இருக்கு.

இந்த பொது பாதை, வாய்க்கால் வரப்பு மீதான உரிமை இவைஎல்லாம் கிராமங்களில் ஒரு உரிமையோடு கூடிய கவுரவப் பிரச்சினையாக மாறி அதுவே சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகி, கொலையிலும் போய் முடிந்து விடுகிறது.

அரூவா மீசை….. கொடுவா பார்வை… ஆறுமுகம் தான் கைய வச்சா தூள் ….…….ன்னு நம் ஊர்களில் முன்பு பட்டைய கிளப்பிக்கிட்டு இருந்த இதெல்லாம் குறைந்து, இப்போது தான் மக்கள் சுய உனர்வுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

என் பாதை என் உரிமை என்பதெல்லாம் கிடையாது……இன்னொருவரின் நிலமாக இருந்தாலும், அதில் ஒருவருக்கோ, அல்லது, பொதுவாகவோ நடந்து செல்லும் உரிமையை தருவது தான் இந்திய வசதியுரிமைகள் சட்டம், 1882

நன்றி கூகிள் அண்ணா..

இந்த உரிமை கிடைக்கவேண்டும் என்றால், சில நிபந்தனைகள் உண்டு.என்னென்ன?

  • காலம் காலமாக அந்த ஊரே அந்தப் பாதையை தான் பயன்படுத்துதுனால்.
  • அப்படியில்லை சம்பந்தப்பட்ட நிலத்துக்காரர் கிட்ட அனுமதி வாங்கி, (அது எழுத்து மூலமா இருந்தால் நல்லது) உபயோகம் பண்ணினோம் என்றால்.
  • நாங்க எங்க முப்பாட்டனார் காலத்திலே இருந்து அது வழியாதான் போறோம்ங்கிரீங்களா? குறைஞ்சது ௨௦ வருஷமாவது அப்படி உபயோகம் பண்ணியிருக்கணும். இந்த ௨௦ வருஷம்ன்கிறது தொடர்ச்சியா இருக்கணும்.

இதுலே ஒன்னை டிக் அடிச்சீங்கன்னாலும் , அந்த பாதை வசதி உரிமை உங்களுக்கு வந்துடுது.

இன்னொரு முக்கியமானது அந்த பாதையை தவிர்த்து வேறு பாதை உங்கள் நிலத்துக்கு போறதுக்கு இருந்தா, இந்த உரிமையை கேட்க முடியாது.

பொதுவாக நிலங்களை பிரித்து பிளாட் போடுபவர்கள், அதில் ஒரு பொது பாதை எனக் குறிக்கப்படுவதை அந்த ஊர் பஞ்சாயத்துக்கு எழுதி கொடுப்பது வழக்கம். அதை ஒரு செட்டில்மென்ட் பத்திரம் மூலமா செய்யலாம்.

இன்னொன்னும் இங்கே சொல்லனும். பாதை அவங்களோடது , பயணம் மட்டும் தான் நம்மோடதுன்னு இருந்தால் மேற்கொண்டு வம்பும் இல்ல, வழக்கும் இல்ல.

ஆமாஞ சொல்லிட்டேன்.அப்புறம் என்னை வந்து குத்தம் சொல்லப்படாது………

சனி, 12 ஜூன், 2021

பாட்டி பெயரில் உள்ள வீடு. அவர் இறந்து விட்டார். அண்ணன், தம்பி இருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். அண்ணன் குடியிருக்கிறார். தம்பிதான் கடனில் இருந்தபோது வீட்டை மீட்டார். நியாயமாக தம்பிக்கு தான் சேர வேண்டும். எப்படி வாங்குவது?

 இருவருக்கும் சமமான உரிமை உள்ளபோது, ஒருவர் கடனிலிருந்து வீட்டை மீட்டார் என்றால் அந்தக் தொகைக்கு இன்று வட்டியுடன் சேர்த்து கணக்கிடவேண்டும்.ஏனென்றால் அதில் தம்பி குடியிருக்கவில்லை. அன்னான் மட்டுமே அனுபவிக்கிறார்.

இப்போ சொத்தின் மதிப்பில அன்னனுக்கு சேர வேண்டிய பங்கில் இந்த கடன் தொகையில் பாதியையம் அதற்குண்டான வட்டியையும் சேர்த்து வரும் பணத்தை அன்னன் தன் பங்கு பணமாக தம்பிக்கு கொடுத்து விட்டு வீட்டை தன் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.இல்லையெனில், தம்பிக்கு அந்த வீடு வேண்டும் என்றால் அவர் பங்கு பணத்தைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். இது பேசி தீர்க்க வேண்டி யதுப்

மகன், மகள் கையெழுத்து போடாமல் தந்தை சொத்தை விற்க முடியுமா?

 பரம்பரை சொத்து என்னும் போது .இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி, பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள், தாய் வயிற்றில் ஜனிக்கும்போதே அந்த சொத்தின் மீது உரிமை வந்து விடுகிறது.

அதனால் அந்த சொத்துகளை மாற்றம் செய்யும்போது, அவர்கள் சம்மதம் தேவைப்படுகிறது.

அவர்கள் மைனர்கள் எனும் போது அவர்கள் சார்பாக அவர் தந்தை அல்லது தாய் அந்த பரிமாற்றதிற்கு சம்மதம் தெரிவிக்கலாம். சொத்துப்  பரிமாற்றம் மைனர்களின் நலனுக்காக நடக்கிறது என்னும் அடிப்படையில் அவை ஏற்று கொள்ளப் படுகின்றன.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்றால் மேஜராகி இந்த விவரம் தெரிந்தவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

இதுவே மேஜராக இருக்கும் போது அந்த சொத்துப் பரிமாற்றத்திற்கு கண்டிப்பாக அவர்கள் கையெழுத்து தேவை.

நன்றி: Google.

ஆனால் தற்போது காணப்படும் நடைமுறை என்னவென்றால் சொத்தை தன் மகன் பெயரில் வாங் கும் தந்தை, சிறிது காலத்தில் அதை வாய்மொழி பாகப் பிரிவினையில் இன்னொரு மகனுக்கு அளித்து விடுகிறார்.சொத்து பரிமாற்றம் தான பத்திரம் மூலம் நடக்கிறது. இது பத்திர செலவை குறைக்க நடக்கிறது என்றாலும், சொத்துப்  பத்திரத்தின் படி தன் தாத்தா வாங்கிய சொத்தாக இருந்தாலும், தந்தையின் சுய சம்பாத்தியத்தில் வாங்கியதாக பத்திரத்தில் இருந்து அதை அவர் சகோதரருக்கு தானப் பத்திரம் மூலம் கொடுப்பதை அவர் பிள்ளைகளால் தடுக்க முடியவில்லை.

உறவின் முறையில் இப்படியும் ஒரு சிக்கல் வந்து விடுகிறது.

சரி...... மகன் மகள் கையெழுத்து இன்றி பரம்பரை சொத்தை தந்தை விற்கிறார் என்றால், என்ன தீர்வு?

நீதிமன்றத்தில் வழக்கு உடன் தொடர வேண்டாம்.

இருங்க… அவசரப்படாம நான் சொல்றதை கேளுங்க.

அங்குள்ள சமரச மையத்தை அதாவது Mediation Centre அணுகி, மனுவாக உரிய ஆவணங்களுடன் எழுதிக் கொடுத்தால், அவர்கள் இரண்டு தரப்பினருக்கும் அறிவிப்பு அனுப்பி, வரவழைத்து, சமரச தீர்வு காண்பார்கள்.அந்த தீர்வு ஏற்பட உங்களுக்கு மாவட்ட நீதிபதி துணை செய்வார்.

முக்கியமாக உங்களுக்காக வழக்கறிஞர்கள் வைக்க வேண்டிய தேவை இல்லை.

சமரசமாக தீர்வு ஏற்படுவதால் மேல்முறையீடு, கோர்ட்டு, கேஸ், அலைச்சல், பண விரயம் எதுவும் இல்லை.

இந்த சமரச மையங்கள் நடத்துவதற்கு தேவையான நிதி உதவியை அரசு செய்கின்றது.

Win-Win முறையில் இரண்டு தரப்பும் ஜெயிப்பதால் உறவிலும் சேதாரம் இல்லை.முயண்று பாருங்கள்.

ஜெயம் நமதே.

எனது பங்காளி பிரிக்கப்படாத சொத்தில் தன்னிச்சையாக வடபாகம் எனக் குறிப்பிட்டு பேர்பாதியை விற்று விட்டார். வாங்கியவர் அதை வேறொருவருக்கு விற்று விட்டார். எனக்கு பாதை இல்லை என்றாலோ, அது கீழ் மேலாக பிரிக்கப்பட வேண்டிய சொத்து என்றாலோ என்ன செய்வது?

         பிரிக்கப்படாத சொத்தில் உள்ள ஒவ்வொரு அடியும் இருவருக்கும் சொந்தமே. 

    தன்னிச்சையாக உங்கள் பங்காளி விற்று இருந்தால் அது செல்லாது/  

        சொத்து பட்டா பெயர் மாற்றும் முன்பு தாசில்தாரிடம் ஆட்சேபனை மனு கொடுங்கள்.  

         பிரிக்கப்படாத சொத்தில் உங்கள் அனுபவத்தை யாரும் தடுக்க முடியாது.  

        நீங்கள் நீதிமன்றம் செல்ல தேவையில்லை.   வில்லங்கம் ஏற்படுத்திவர் தான் அதை சரி செய்ய வேண்டும்.  

         தற்போது வாங்கியவர அதை அனுபவிப்பதை தடுக்கும் போதே நியாயம் கிடைக்கும் 👍

திங்கள், 7 ஜூன், 2021

தமிழ்நாட்டில் எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்லாமல், யாரையும் சந்திக்காமல் ஆன்லைனில் நிலப் பட்டா பெற முடியுமா? எப்படி?

 ஆன்லைனில் பட்டாப் பெற மனு செய்யலாம்.ஆனால் அதற்கான ஆவணங்களை தபாலில் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்ப சொல்கிறார்கள். அதில் எந்த வில்லங்கமும் இல்லையென்றால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இல்லையென்றால் நேரில் போய் தான் அவர்கள் சந்தேகம் தீர்த்து, வாங்க முடியும்.

பரம்பரை பரம்பரையாக நண்பர் இருக்கும் வீட்டுக்கு பட்டா பத்திரம் எதுவும் இல்லை 50 வருடமாக டாக்ஸ் கட்டியரசீது அவர் பெயரில் உள்ளது. வில்லங்கம் பார்த்ததில் அவர் தாத்தா பெயரில் பத்திரம் உள்ளது. பையன் பேருக்கு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

 அவர் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் மூலம் இவர் பெயருக்கு சொத்தின் உரிமை மாற்றிக்கொள்ளவும்.

பிறகு இவர் தன் பிள்ளைக்கு தான செட்டில்மெண் பத்திரம் எழுதி கொடுக்கலாம்.

ஒரு தந்தை அவரது உழைப்பில் வாங்கிய மனை அல்லது வீட்டை அவருடைய மகனோ அல்லது மகளோ சொந்தம் கொண்டாட முடியுமா?

 சில வாரங்களுக்கு முன்னால், மதுரையில் நடந்த ஒரு இரட்டைக் கொலை பரபரப்பாக பேசப்பட்டது ஞாபகத்தில் இருக்கும்.

தங்கள் சொத்தில் மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் மகன், தாய் தந்தை இருவரையும் வெட்டி கொலை செய்தது….உயிருடன் இருந்தால் தானே பங்கு குடுக்க சொல்வாயென்று

முன்னால் எல்லாம் சகோதரர்களை தான் பங்காளின்னு சொல்வது..இப்போ அக்கா, தங்கையையும் சேர்த்து அப்படி சொல்ல வேண்டி வந்து விட்டது!!

அது பெண்களுக்கு உரிமையை பெற்று தந்ததா அல்லது பாசத்தை குழி தோண்டி புதைத்ததானே தெரியலை!!

இதை பற்றி யோசிக்கும்போது ஞாபகம் வருவது இந்த புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை தான்…

"எத்தனையோ பேர் இழுத்தும் என்ன இன்னும் வரவில்லை

சேரிக்குள் தேர்"

தந்தை இறந்த பின்னர் அவர் வாங்கிய சொத்தில் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து, சொந்தம் கொண்டாடலாம்.

ஆனால் அவர் அந்த சொத்து யாருக்கு சேரவேண்டும் என்று உயில் எழுதியிருந்தாலோ, அல்லது இருக்கும் காலத்தில் யாருக்கும் Uகொடுத்தாலும் இதை தடுக்க முடியாது.

இது இந்து சட்டத்தின் படி.

ஆனால் முஸ்லீம் சட்டத்தில் ஒரு சிறப்பு உள்ளது. சுயமாக சம்பாதித்து வாங்கியது, அல்லது பூர்வீக சொத்து என்று எந்த பாகுபாடும் கிடையாது.

முஸ்லீம் ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தாலும் அவர் உயிலில் அந்த சொத்தை முழுவதும் அவர் விருப்பப்படி கொடுத்து விட முடியாது. அதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவர் விருப்பத்திற்குட்பட்டது மீறும்போது அது அவர் வாரிசுகளின் சம்மத்திற்கு பிறகே செய்ய முடியும்.

இந்த மூன்றிலொரு பங்கு சொத்தில், வாரிசுரிமை பெறாத உறவினர், அல்லது ஊழியம் புரிந்தவர் என்று யாருக்கு வேண்டுமானாலும் அவர் சொத்து கொடுக்கலாம். மற்ற பங்கு சொத்து அவர் வாரிசுகளுக்கே போக முடியும். இதன் மூலம் சொத்தை யாருக்கோ எழுதி வைத்து விட்டு குடும்பத்தை நிற்கதியாக விட்டுச்செல்வதை தடுக்கவே செய்யப்பட்ட ஏற்பாடு.

ஏற்கெனவே முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ள மதத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள போது

ஆதியில் அவர்கள் வணிகர்களாக, போர் புரிபவராக குடும்பத்தை விட்டு வெகு காலம் பிரிந்திருக்க வேண்டியிருந்ததால், குலம் அழிந்து விடாமல் இருக்க அப்படி கொண்டு வரப்பட்டது.

இப்போது ஒரு குடும்பத்தை கவனிக்கவே முடியாது..😂 யாரும் அப்படி செய்வதில்லை தமிழகத்தில்.. எனக்கு மற்ற மாநிலத்தை பற்றித் தெரியாது.

இது நல்ல ஏற்பாடாகவே படுகிறது. ஆனாலும், ஒரு முஸ்லீம் குடும்பத் தலைவர் இறந்தால், வாரிசு சான்றிதழ் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு, ரொம்பவே அலைய வேண்டியிருக்கிறது. இது பற்றி கேட்டபோது, ஒரு தாசில்தார் சொன்னது..

"யாருக்கு தெரியும்ங்க இது ஒண்ணு தான் குடும்பம்னு"

DTCP ஒப்புதல் வாங்கிய துண்டு நிலம் (plot) வாங்கிய பின்னர் அளந்து பார்க்கும்போது குறைவாக இருப்பின் நாம் வழக்கு தொடர இயலுமா? விற்றவர்களிடம் மீண்டும் ஒப்புதல் வாங்க வேண்டுமா? பி.கு: பத்திரத்தில் இருக்கும் அளவு அதிகம் பட்டாவில் உள்ள அளவு சரியான அளவு.

         பொதுவாக பூமியில் உள்ள நில அளவு,  பட்டாவுடையதை விடக் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.    ஆனால் உங்கள் விஷயத்தில் அது சரியாக உள்ளது.அந்த விதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியே!!?!!  

         பத்திரத்தில் உள்ள அளவு மாறுபட்டிருப்பதற்கு   எவ்வளவு என்று நீங்கள் சொல்லவில்லை

         தவறு உங்கள் புறமும் உள்ளது."buyers bewsre"என்று கேட்டதில்லையா??  . வாங்கும் முன் நில அளவு உறுதி படுத்த நீங்களும் முனையவில்லையே..
உறங்குபவருக்கு சட்டம் உதவாது.
       

         ஒரு பழமொழி கூட உண்டே. "விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது" என்று.
       

         இதற்கு தான் அடிப்படை சட்ட விவரங்கள் ……வக்கீலுக்கும் கோர்ட்டுக்கு மட்டுமல்ல … எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது.
        

        ஏமாற்றுதல் என்ற குற்ற செயலை விற்றவர் செய்துள்ளார் என்பது உண்டு தான் அதற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப் புகார் கொடுத்து வழக்கு போடலாம்..அல்லது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கலாம். இதற்கு ஏற்படும் கால, பண விரயம் என்பது எவ்வளவு நில அளவு இழப்பு என்பதை பொறுத்து உள்ளது .வரப்பு சண்டைக்கு கேஸ் நடத்தி நிலத்தையே தொலைக்க கூடாதில்லையா?

இரண்டு சர்வே எண்ணுக்கு இடையே எந்தவித குறிப்பும் இன்றி உள்ள இடத்தின் குறிப்பை எங்கு பார்க்கலாம்?

 

  1. தாசில்தார் அலுவலகத்தில் தான் அதன் எல்லைக்குட்பட்ட அனைத்து நிலங்களின் குறிப்பு கிடைக்கும்.
  2. FMB நகல் கேட்டு அங்கு மனு செய்யவும்.
  3. அதே போல தகவல் அறியும் உரிமை சட்டத்திலும், அங்கு , பொது தகவல் அதிகாரிக்கு மனு செய்யலாம்..
  4. vaoவிடம் அந்த சட்டத்தின் கீழ் கேட்க முடியாது..

ஒரு இடத்திற்கு சொந்தமான யாரிடமும் கையெழுத்து இல்லாமல் அருகில் உள்ள நிலதாரர் பட்டா போட முடியுமா? அது செல்லுபடி ஆகுமா?

 ஒருவருக்கு சொந்தமான சொத்தின் பட்டாவை இன்னொருவர் பெயருக்கு, உரிமையாளர் உரிமை மாற்றம் செய்யாமல், செய்ய முடியாது..


நீங்கள் சொல்வதை பார்க்கும்போது நிலங்கள் மறுசர்வே செய்யப்பட்ட காலத்தில் 1980 களில் என்று நினைக்கிறேன்.. பக்கத்து நிலத்து பட்டாவுடன் தவறாக இணைத்து இருக்க வாய்ப்பு உண்டு.ஆமாம்.இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?🤔

உடன் உங்கள் மூலப் பத்திரங்கள் நகலுடன், ஒரு மனுவை தாசில்தாருக்கு கொடுத்து, நிலத்தின் பட்டாவில் ஏற்பட்ட தவறை சரி செய்யக் கோரவும்.

இறந்தவரின் பேரில் உள்ள மனையை வாரிசுதாரரின் பெயரில் பட்டா மாற்றுவதற்கான முறைகள் என்னென்ன? எவ்வளவு செலவு ஆகும்?

 

  1. இறந்தவரின் இறப்பு சான்றிதழ்,
  2. வாரிசு சான்றிதழ்,
  3. சொத்துப்பத்திரம்,
  4. அவர் பெயரில் உள்ள பட்டா ஆகியவற்றின் நகல்களுடன்

ஒரு மனு தயார் செய்து, தாசில்தாருக்கு அனுப்ப வேண்டும்.

இப்பொதெல்லாம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்களின் நகல்களை தபாலில் அனுப்ப சொல்கிறார்கள்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு அனுப்பலாம்..

அந்த மனுவிற்கு உண்டான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மற்றபடி உங்களுக்கு வழிசெலவுக்கு எவ்வளவு ஆகும் என்றெல்லாமுமா நான் சொல்ல முடியும்?

இறந்தவரின்(தந்தை) பெயரில் பத்திரமும் மகனின் (நான்) பெயரில் பட்டாவும் உள்ளது, இம்மனையினை விற்க எது செல்லுபடியாகும்?

 இறந்தவரின் பெயரில் உள்ள மனைப்பிரிவை ஒரு வாரிசுதாரர் இன்றி மற்ற வாரிசுதாரர் மீது பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலுமா?

இறந்தவரின்(தந்தை) பெயரில் பத்திரமும் மகனின் (நான்) பெயரில் பட்டாவும் உள்ளது, இம்மனையினை விற்க எது செல்லுபடியாகும்?

இரண்டு வினாக்களுக்கும் ஒரே விடை தான்.

சொத்தின் பத்திரம் என்பது, அது நம்மை வந்து சேர்ந்த வரலாற்றை சொல்லும்..உங்கள் அப்பாவின் காலத்திற்கு பின், நீங்கள் மட்டுமே வாரிசு என்றால், அதனோடு உங்களோடு இருக்கும் பட்டாவும் சொத்து விற்பனைக்கு தேவைப்படும்.


அது இல்லாமல், உங்களை தவிர்த்து மற்ற வாரிசுகள் இருந்தால், பட்டாவில் உங்கள் பெயர் இருப்பதாலேயே சொத்து உங்களுக்கு சொந்தமாகி விடாது.

அவர்களை தவிர்த்து விற்பனை செய்ய முயலாமல், அவர்களின் சம்மதத்துடன் , அவர்களுக்கு உரிய பங்கை கொடுத்து விற்பது, தேவையற்ற பண நேர விரயம், உறவு நாசம் , மனஉளைச்சலை தவிர்க்கும்.

என் அப்பாவிற்கு சொந்த ஊரில் 5+2 செண்ட் இடம் மற்றும் 25 செண்ட் இடம் உள்ளது, ஆனால் அது யாருடைய பெயரில் உள்ளது என்று தெரியவில்லை. எப்படி பட்டா வாங்குவது? இது சம்மந்தமா எதுவும் தெரியாது. நான் ஒரு மாற்றுத்திறனாளி.

 

  1. நிலத்தின் அடையாளம் தெரியுமென்றால் வி.ஏ. ஒ. உதவியுடன் , அதன் விவரங்களை எடுங்கள்.
  2. வில்லங்கம் சான்றிதழ வாங்கவும்
  3. அதில் நிலம் யார் பெயரில் உள்ளது என்று தெரியும்.
  4. அவருக்கும் உங்கள் அப்பாவிற்கும் உள்ள தொடர்பு, அவர் பெயரில் ஏன் நிலம் உள்ளது, உங்கள் அப்பாவிற்கு எப்படி அது உரிமை ஆகிறது என்ற விவரத்தை தெரிந்துக் கொண்டு, அதற்கு ஆதாரம் எடுத்துக்கொண்டு, உங்கள் பெயரில் மாற்ற மனு செய்ய்யுங்கள்.

ரொம்ப கடினமான வேலை தான்.யாருடைய உதவியையாவது பெற்றுக்கொள்ளுங்கள்

ஞாயிறு, 6 ஜூன், 2021

இரு வருடங்களுக்கு முன் பாட்டி உயிருடன் இருக்கும் போது சொத்தின் ஒரு பகுதியை என் அம்மாவின் பெயரில் சொத்து மதிப்பிடாத உயில் சாசன பத்திரம் பதிவு செய்தார். அந்த இடத்தை எனது மாமா தர மறுக்கிறார். பத்திரம் மற்றும் பட்டா மாற்றம் செய்வது எப்படி?

 நீங்கள் செய்ய வேண்டியவை

  • பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதன் சான்றிட்ட நகலை பதிவு அலுவலகத்தில் பெறலாம்.
  • அதன் நகலை பாட்டியின் இறப்பு சான்றிதழ் நகலுடன் இணைத்து, தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு செய்யவும்
  • சொத்து பிரிபடாதது எனில், இந்த ஆவணங்களை கொண்டு, சொத்தின் உங்கள் சொந்தமான இடத்தை உட்பிரிவு செய்து, பிரித்துக்கொடுக்குமாறு மனு செய்யவும்.
  • அவர்கள் அவ்வாறு செய்து முடித்து, பட்டா பெற்று, உங்கள் இடத்திற்கு வேலி போட்டுக்கொள்ளவும்.அவர்கள் தடுக்கும் பட்சத்தில், போலீஸ் புகார் கொடுக்கலாம்.


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...