மான நஷ்ட வழக்கை பொறுத்து குற்றவியல் நீதிமன்றத்திலும் தொடரலாம். சிவில் நீதிமன்றத்திலும் தொடரலாம். குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் பிரிவு 468(2) மற்றும் இந்தியா தண்டனை சட்டப் பிரிவு 5௦௦ன் படி சம்பவம் நடந்த நாளிலிருந்து மூன்று வருடங்கள். சிவில் நீதிமன்றத்தில் தொடர்வது என்றால், சம்பவத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும்.
ஆனால் இந்த கால வரையறை தாண்டி மனு தாக்கல் செய்யப்படுமானால், அதற்கு நீதிமன்றம் கால தாமதத்திற்கான தகுந்த காரணங்கள் உள்ளது என திருப்தி அடைந்தால், அந்த மனு விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.