கருணை அடிப்படையிலான பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணை அடிப்படையிலான பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 மார்ச், 2022

முதல்வரின் உத்தரவின் பேரில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நடைமுறை காலாகாலமாக இருக்கிறது, இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது தானே?

இரண்டு நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தின் கடும் 

கோபத்திற்கு  ஆளாகியுள்ளது தமிழக அரசு. கேந்திர தேவி 

என்பவர் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் 

இறுதி விசாரணையில் தான் இந்த நிகழ்வு

     

என்ன நடந்தது?

      

        கருணை அடிப்படையில் அரசு பணி பெற்ற உதவி 

பொறியாளர்களுக்கும் நேரடியான தேர்வு மூலமாக அந்த 

பதவியை  பெற்றவர்களுக்கும் இடையே பணி மூப்பு 

அதாவது  சீனியாரிட்டியை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட 

பிரச்சினையின்  காரணமாக நேரடி பணி நியமனம் 

பெற்றவர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தை  

அணுகுகிறார்கள். அப்போது வழக்கு   ஆவணங்களை 

பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம்,   ஹரியானா 

மாநில அரசுக்கு எதிராக உமேஷ் குமார் நாக்பால் 

என்பவர்  தொடர்ந்த வழக்கில் (https://indiankanoon.org/doc/1737552/) 1994ல் 

உச்ச  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கருணை அடிப்படையில் 

பணி  நியமனம் செய்வதில் மேற்கொள்ள வேண்டிய 

வழிமுறைகளை  பின்பற்ற தவறிவிட்டதாக கூறியது. அதே 

சமயம், மிக கால  தாமதமாக நீதிமன்றத்தை அணுகிய 

காரணத்தினால், வழக்கை  தள்ளுபடி செய்கின்றது

"      ஆபரேஷன் சக்சஸ்  பேஷண்ட் டைட் " என்பார்களே அது 

போன்ற நிலை.  சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் 

போல,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர்.   

இந்த வழக்கு விசாரணையின் போது தான் தமிழக அரசு உச்ச 

நீதிமன்றத்தின் கோபத்திற்கு உள்ளானது.

      

        1994 லேயே உச்சநீதிமன்றம் இது சம்பந்தமான தீர்ப்பு 

ஒன்றை வழங்கி அது தான் இந்த நிலத்தின் இறுதியான தீர்ப்பு 

என்ற நிலையில்,, அதை சற்றும் மதிக்காமல் தொடர்ந்து பனி 

நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் 20006 சூலை 

மாதத்தில்  போடப்பட்ட ஒரு அரசு உத்தரவிற்கு  பின்னர் தான் 

அது  போன்ற  நியமனங்கள் நிறுத்தப்பட்டன" என்றும் .  இது 

சற்றும்  மன்னிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல என்று தன் 

காட்டத்தை  காட்டியது நீதிமன்றம்.  இது பற்றி மேலும் 

விவரங்களுக்கு போகும் முன்னர்,  கருணை 

அடிப்படையிலான பணி என்றால் என்ன என்று 

தெரியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.   


        கருணை அடிப்படையிலான  நியமனம் என்பது இந்திய 

அரசாங்கத்தால்  தொடங்கப்பட்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் 

திட்டம்என்று சொல்லலாம்.  ஒரு அரசு ஊழியர் பணியில் 

இருக்கும் போது அல்லது மருத்துவ  காரணங்களுக்காக ஓய்வு 

பெறும்போது கருணை அடிப்படையில்  அவருடைய  குடும்ப 

உறுப்பினருக்கு அவருடைய கல்வி  தகுதியின்  அடிப்படையில், 

ஒரு அரசு பணி கொடுtத்து,  அந்த குடும்பம் வறுமையில் 

வாடாதவாறு  அவர்களின்  வாழ்வாதாரத்தைத் தக் கவைக்க 

உடனடியாக உதவுவதே  இத்திட்டத்தின் நோக்கம். இது போல 

நியமனம் செய்யப்படுபவர்களுக்கான சம்பளமும், அந்த 

பணிக்கான தேர்வில் மூலம தேர்ந்து எடுக்கப்படுபர்களுக்கு 

வழங்கப்படும் சம்பளமும் ஒன்றாகவே இருக்கும் என்று உச்ச 

நீதிமன்றமே சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.  


            பொதுவாக ஒவ்வொரு மாநில அரசும் கருணை 

அடிப்படையிலான பணி நியமனத்திற்கான கொள்கை ஒன்றை 

அவ்வப்போது மாற்றி  வகுப்பதுண்டு. இப்படி கொள்கை மாற்றம் 

இருக்கும் போது, அரசு ஊழியர்  இறந்த சமயத்தில் 

பின்பற்றப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதா  அல்லது, 

பணி நியமனம் வேண்டிய மனுவை பரிசீலனை 

செய்யும்  காலத்தியதா என்ற குழப்பமும் இருக்கும். ஆஷிஷ்  

அஷ்வேதியின்  மனுவை பரிசீலிக்கும் போது, மத்திய பிரதேச 

அரசுக்கும் இதே  போன்றந்தேகம் ஏற்பட்டது.  அரச ஊழியர் 

ஒருவர் பணிக் காலத்தில்  இறக்கும் போது தான் இந்த பணி 

நியமனம் செய்யும் கோரிக்கை எழுகிறது  என்பதால் அந்த 

காலகட்டத்திய அரசின் கொள்கையையே 

கருத்தில்  கொள்ளவேண்டும் என்றும், அதன் பின்னர் அதில் 

செயயப்படும் எந்த  மாற்றத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது 

என்று உச்ச நீதிமன்றம் வழி  காட்டியுள்ளது.  


            இதன் அடிப்படை\யில் பணி வேண்டி மனு செய்வதற்கும் 

ஒரு காலவரையறை உண்டு.  அந்த அரசு ஊழியர் இறந்த மூன்று 

வருட காலத்திற்குள் இந்த மனு செய்ய  வேண்டும்.  அதே சமயம், 

மருத்துவ  காரணத்தினால் பனி ஒய்வு பெற்றவர் அதன் பின்னர் 

உடல் நலக்குறைவு  ஏற்பட்டு சில வருடங்கள் கழித்து இறந்தால், 

அந்த  கால தாமதம்  மன்னிக்கப்படும்.  ஆனால் எந்த வித ஏற்றுக் 

கொள்ளும் காரணமும்  இன்றி, கால தாமதமாக இந்த பணி 

நியமனம் வேண்டி செய்யப்படும் மனு  ஏற்றுக் கொள்ளப்பட 

மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில்  ஸ்டீல்  அத்தாரிட்டி 

தொடர்ந்த வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது.  

 
     மனுவை தாக்கல் செய்வதற்கு காலத்தை நிர்ணயம் 

செய்த  அதே வேளையில், அந்த மனுவை பரிசீலனை செய்து 

உத்தரவு  பிறப்பிப்பதற்கு எந்த கால நிர்ணயமும் 

செய்யப்படவில்லை.  உரிய  பணியிடம்  காலியாகும் போது, 

நியமனம்செய்வதை  கருத்தில் கொள்ள வேண்டும் என்று 

மட்டுமே  வழிமுறைகள்  சொல்லியுள்ளது. அதே சமயம், எந்தவித 

கால அளவும்  இல்லாமல், அந்த கோரிக்கை விடுத்தவர் 

காத்திருக்க  வேண்டிய நிலையும் உள்ளது. கருணை 

அடிப்படையிலான  பணி நியமனம் செய்படுவதன் நோக்கமே, 

திடீரென ஒரு அரசு  ஊழியர் இறக்கும் போது அதனால் அந்த 

குடும்பமே நிதி  சிக்கலில் மாட்டி தவிப்பதை தடுக்கும் 

நோக்கத்தில்  கொண்டு வரப்பட்டது. 


             ஆனால் திட்டத்தின் நோக்கத்தையே முறியடிக்கும் 

வகையில் கால தாமதம் செய்தால், என்ன செய்வது?   

நிலுவையில் உள்ள அந்த மனுவை பரிசீலிக்க மட்டுமே 

உயர்நீதிமன்றம் உத்தரவிடலாம். ஆனால் அந்த மனுவின் 

அடிப்படையில் பணி உத்தரவு கொடுக்க  வேண்டும் 

என்று உத்தரவிட முடியாது ஏனெனில்  இந்த கருணை 

அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர 

முடியாது  அந்த பணி நியமனம்  செய்பவர் 

திருப்தியடையாதபோது அதை நிராகரிக்கும் அவருக்கு 

அதிகாரம் உள்ளது.   எனவே தான் " இந்த கருணை 

அடிப்படியிலான பணி கோருதல் என்பது உடனடியான உதவி 

தரக்கூடிய ஒரு பலவீனமான உரிமை" என்றுள்ளது நமது உயர் 

நீதிமன்றம்.  


            காலதாமதப் படுத்திவிட்டு, இறுதியாக மனு செய்த நபரை 

பணி நியமனம் செய்தாலும், , மனு செய்த மூன்று மாத 

காலத்திற்குள் முடிவு எடுக்காமல் இந்த கால தாமதம் 

ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்டஈடு 

செலுத்த வேண்டியிருக்கும் என்று ஹிரித்திக் என்பவர் 

பொதுத்துறை துணை இயக்குனருக்கு எதிராக தொடர்ந்த 

வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு 

வழங்கியுள்ளது. நம்முடைய மாண்புமிகு சென்னை 

உயர்நீதிமன்றம் மட்டும்  என்ன? சாவகாசமாக பதினைந்து 

வருடங்கள் கழித்து, கருணை அடிப்படையில் பணி நியமனம் 

கோரிய மனுவை நிராரித்த பள்ளி கல்வி இயக்குனர ஒரு லட்சம் 

ருபாய் செலவு தொகையாக மனுதாரர் அருள்ஜோதிக்கு 

வழங்க உத்தரவிட்டது. 
 
     தமிழக  தேர்வாணையத்தின் வலைத்தளத்தில் கருணை 

அடிப்படையிலான பணி நியமனம் குறித்த சில 

கேள்விகளுக்கான் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளனஅதில் 

கருணை அடிப்படையிலான பணி நியமனம் 

யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற கேள்விக்கு

இறந்தவரின்  அல்லது மருத்துவ  காரணங்களுக்காக 

ஓய்வுபெற்றவரின் மனைவி, அல்லது கணவன், மகன்,மகள்.  

விவாகரத்தான மகள் மற்றும் விதவையான மகள் என்று 

குறிப்பிடப்பட்டிருக்கும்


           பொதுவாக மகளுக்கு திருமணம் ஆன பிறகு, அவள் 

இன்னொரு குடும்பத்தின் அங்கமாகிறாள் என்ற 

அடிப்படையில்,  இந்த வகை பணி நியமனத்தில்,  மகனா 

அல்லது மகளா என்று கேள்வி எழும்போது, மகனுக்கே 

அதிக வாய்ப்பு உள்ளது. 

            மகனுக்கு திருமணமாகியிருந்தாலும், தகப்பனாரின் 

இறப்பினாலோ  அல்லது மருத்துவ காரணத்தினால் ஓய்வு 

பெறும்போதோ . கருணை அடிப்படையிலான பணி 

பெறும் உரிமை உள்ளபோது, திருமணமான மகளுக்கு 

ஏன் அந்த உரிமை இல்லை,அவளுக்கு விவாகரத்து 

ஆகியோ அல்லது அவள் கணவன் இறந்து, அவள் 

தகப்பனாரின் தயவில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தால் 

மட்டுமே அந்த தகுதி அவளுக்கு உண்டு என்று ஏன் பிரித்து 

பார்க்க வேண்டும் என்ற கேள்வி என்னுள்எழுந்ததுண்டு.   

இதே போன்ற வழக்கு ஒன்று, தேபஸ்ரீ சக்ரவர்த்தி 

என்பவரால் தொடரப்பட்டு,  மாண்புமிகு 

திரிபுரா உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது 

நீதிபதிகள், அதே போன்ற கருத்தை தெரிவித்தது 

மட்டுமல்லாமல், திருமணமான மகளை தவிர்த்த அந்த 

அரசின் அறிப்பனையை ரத்து செய்துள்ளது.   நமது 

உச்ச நீதிமன்றம் இதற்கெல்லாம் முன்னோடியாக 

இருப்பது அல்லவா? முகேஷ் குமார் என்பவர்  தொடர்ந்த 

வழக்கில், இரயில்வே போர்டு  ஒன்றின் சுற்றறிக்கையில்

இறந்த அரசு ஊழியரின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த 

குழந்தைகளுக்கு கருணை அடிப்படியிலான பணி 

நியமனம் செய்ய விதித்த தடையை நீக்கியது. ( முகேஷ் 

குமார் எதிர் யூனியன் ஆப்  இந்தியா ) 


            உரிமை கோரும் இடத்தில் கடமையும் இருக்கும் 

அல்லவா?இறந்த கணவனின் பணியிடத்தில் கருணை 

அடிப்படையில் பணி நியமனம் பெற்ற பெண்,  அப்போது 

கொடுக்கும் உறுதிமொழியின்அடிப்படையில்,  கணவன் 

தாயையும் சரியாக பராமரித்து அவருக்கு வேண்டிய 

மருத்துவ வசதியையும் செய்து கொடுக்க 

வேண்டியவளாகிறாள் என்றுரூக்கிறது கல்கத்தா 

உயர்  நீதிமன்றம். துர்கா பாய் மண்டல்  என்பவர் 

தொடர்ந்த வழக்கில். 

            
                 இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் இறந்தவரின் 

மனைவியோ அல்லது கணவரோ அதிகபட்சம் ஐம்பது 

வயதும் , மகன் அல்லது மகள் என்றால் 35 வயது 

கொண்டவராக இருக்க  வேண்டும் என்று  நிர்ணயம் 

செய்யப்பட்டுள்ளது. இந்த வயது நிர்ணயம் அரசு 

ஊழியரின் இறந்த தேதியை பொறுத்து  

 நிர்ணயிக்கப்படும்.


             ஒருவருக்கு மேற்பட்ட தகுதியான வாரிசுகள் 

இறந்தவருக்கு  இருந்தால்,  யாருக்கு பணி நியமனம் செய்வது 

என்பது, அந்த  அரசு ஊழியரின் கணவர் அல்லது மனைவியின் 

சிபாரிசின்  அடிப்படையில் இருக்கும். அதுவே திருமணமாக 

நபராக அந்த  இறந்தவர் இருந்தால். அவருடைய சகோதரர் 

அல்லது  சகோதரிக்கு அந்த பணி கோரும் உரிமை உண்டு.    

 

      அதே போல, இன்னொரு சந்தேகமும் நமக்குள் எழும்.  

கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி நாம் மனு 

கொடுத்த காலத்தில் நமக்கு இருந்த கல்வி தகுதி ஒன்றாக 

இருக்கும்.  அந்த மனு நிலுவையில் இருக்கும் போது, நம்முடைய 

கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டால், அந்த தகுதியின் 

அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுமா? 

உதாரணத்திற்கு  இளநிலை உதவியாளர் என்கிற ஜூனியர் 

அசிஸ்டன்ட்  பதவிக்கு  மட்டுமே தகுதியாக இருந்த மனுதாரர்,  

தன் கல்வி  தகுதியை  உயர்த்திக் கொண்டால் அடுத்த உயர் 

நிலை  பணியான தட்டச்சர்  எனப்படும் டைபிஸ்ட் பணிக்கு 

நியமிக்கப்படுவாரா? என்றால். இதற்கு தமிழக அரசின் 

தேர்வாணையத்தின் வலைத்தளத்தில் 

அவருக்கு சாதகமான பதிலே உள்ளது. இதே போன்ற ஒரு 

உத்தரவை தான் டெல்லி உயர்நீதிமன்றமும், நிர்மலா தேவி 

என்பவர் தொடர்ந்த வழக்கில்  பிறப்பித்தது. ஆனால் அதை 

ஏற்றுக் கொள்ளாத டெல்லி ஜெயில் போர்டு, தற்போது  உச்ச 

நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக உச்ச 

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை 

பொறுத்திருந்து பார்ப்போம்.  

     
         உச்ச நீதிமன்றத்தின் கோபத்திற்கு தமிழக அரசு 

ஆளானது  குறித்து சொல்லிக்கொண்டு இருந்தேன் அல்லவா? 

அந்த  முக்கித்துவம் வாய்ந்த 1994 வருடத்திய தீர்ப்பில், 

முக்கியமாக  கருணை அடிப்படியிலான பணி நியமனம் 

என்பது அரசு  பணிகளில் கீழ் நிலைகளில் உள்ள 'சி' மற்றும் 

'டி' பிரிவில்  மட்டுமே செய்யப்படவேண்டும் என்றும், 'ஏ'  

மற்றும் 'பி' பிரிவு நியமனங்களுக்கு உரிய முறையில் தேர்வு 

நடத்தியே நியமிக்க  வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 

சொல்லியிருந்தது. ஆனால்  இந்த வழக்கில்  கருணை 

அடிப்படையில் நியமனம்  செய்யப்பட்டது உதவி 

பொறியாளர் எனப்படும் பி பிரிவு பணி.  அவர்களுக்கும் 

நேரிடையாக அந்த பணியில் நியமனம் 

செயயப்பட்டவர்களுக்கும் இடையே பனி மூப்பு, எனப்படும் 

சீனியாரிட்டியை நிர்ணயம் செய்யும் போது, இந்த நேரிடை 

பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், கருணை 

அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜூனியர்களாக 

ஆக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியால், அவர்கள்,  

அந்த கருணை அடிப்படியிலான பணி நியமனம் 

செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.  

 

      ஏன் உச்ச நீதிமன்றத்தின் 1994 வருடத்திய தீர்ப்பில் 

கொடுக்கப்பட்ட அறிவுருத்தல்களை தமிழக அரசு 

கடைப்பிடிக்கவில்லை, ஏன்  தொடர்ந்து 'பி' பிரிவு 

அதிகாரிகளை கருணை அடிப்படையில் பணி நியமனம் 

தொடர்ந்து செய்து கொண்டு இருந்துள்ளது என்றதற்கு அரசு 

தரப்பின் பதில் என்ன தெரியுமா.?? உச்ச நீதிமன்றத்தின் அந்த 

தீர்ப்பின் விவரமே  அரசின் சட்டத் துறைக்கு 2001 ல் தான் 

தெரிய வந்தது என்றும், அதன் பின்னர் அந்த தீர்ப்பின் படியே, '

ஏ' மற்றும் 'பி' பிரிவு பணிகளுக்கு கருணை 

அடிப்படையிலான பணி நியமனம் ஏதும் 

செய்யப்படவில்லை என்று சொல்லியுள்ளது. 

      

        இதை நீதிமன்றம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அந்த காலக் கட்டத்தில் 'சி' மற்றும் 'டி' பிரிவில் கருணை 

அடிப்படையிலான எத்தனை பணி நியமனம் எப்படிப்பட்டது 

என்ற  விவரங்களை கூட தமிழ அரசு கொடுக்கவில்லை 

என்று கண்டித்த  நீதிமன்றம், அதே வேளையில்,இந்த வழக்கு 

மிக காலதாமதமாக  தொடரப்பட்ட குறைபாட்டை சுட்டிக் 

காட்டியது. இந்த வழக்கு  விசாரணைக்கு உச்ச 

நீதிமன்றத்தை வந்தடைந்த போது, ஏறக்குறைய அந்த பணி 

நியமனம் பெற்றவர்கள் இருபது  வருடங்களுக்கு மேலாக 

பணி செய்து, அவர்களுக்கும் மற்ற  நேரிடையாக அந்த 

பணியில் நியமனம்  செய்யப்பட்டவர்களுக்கும் 

இடையே பணி மூப்பும் நிர்ணயம் செய்யப்பட்டு, பதவி 

உயர்வும்  அளிக்கப்பட்டு விட்ட நிலையில், அதுவும் அரசு 

செய்த தவறில்,  அந்த பணியில் நியக்கபட்டவர்களின் . பங்கு 

ஏதும் இல்லாத  காரணத்தினால், இதில் தலையிட முடியா 

நிலையில் இருப்பதாக  கூறியது

https://www.barandbench.com/news/unpardonable-supreme-court-pulls-up-tamil-nadu-compassionate-appointments-violation-top-courts-1994-ruling 

      

            இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 

விட்டாலும்...இந்த வழக்கு நமக்குள் எழுப்பியுள்ள வினா 

ஒன்று...

      
        உச்ச நீதிமன்றம் அளித்த 1994 வருடத்திலான தீர்ப்பை ஒரு 

மாநில அரசு தனக்கு 2006 சூலை வரை  தெரியவேயில்லை 

என்றுள்ளது. ஒரு தனி மனிதன் இது போன்ற வாதத்தை 

எடுத்து வைத்தால், எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் 

என்பது சந்தேகமே. அதே சமயம் நீதிமன்றத்தின் உத்தரவை 

அவமரியாதை செய்த காரணத்திற்காக தண்டிக்கவும் 

படலாம். அப்படியிருக்க, அந்த மக்களின் அரசு, அவர்களுக்கு 

எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நிலையில் இருந்து 

மாறி, இந்த தவறை ....இல்லையில்லை  தப்பை 

செய்யும்போது?? 

இந்த கேள்விக்கான பதிலை உங்களுக்குள்ளேயே கேட்டு 

பெற்று கொள்ளுங்கள்...

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...