புதன், 23 ஜூன், 2021

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பற்றி 2020 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது? இந்தத் தீர்ப்பினால் ஏற்கனவே உள்ள 2005 இந்து வாரிசு சட்டத்திற்கு மாறான வேறு விளைவுகள் ஏற்படுமா?

 குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும்.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டென்பது பழைய சட்டமாயிற்றே. புதிதாக என்ன மாற்றம் செய்தார்கள் என்று பெருமை கொள்கிறார்கள்?
ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ

குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும

பரம்பரை சொத்தை உயில் மூலம் மகனுக்கே அளிக்கமுடியுமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சுய சம்பாத்தியத்தில் உள்ள சொத்துக்கள் மட்டுமே உயில் மூலம் எழுதி வைத்தல் செல்லுபடி ஆகும். ஒரு இந்து குழந்தை வயிற்றில் ஜனிக்கும்போதே பரம்பரை சொத்திற்கு உரிமை உடையது ஆகிறது. அதை உயில் மூலம் தடுக்க முடியாது.

படித்தற்கு நன்றி .புதிய உபயோகமான தகவலை தெரிந்துக் கொண்டீர்கள் எனில், ஆதரவு வாக்கிடுங்கள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...