lகள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி!!
நீங்கள் மட்டுமல்ல இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நாள் செய்தித் தாள்களில் இது தான் தலைப்புச் செய்தி என்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு சட்டத்தையும் நீதிமண்றத்தையும் புரிந்துக் கொண்டுள்ளோம் என்பது தெளிவு!!
நாமென்ன…நா…ம ..செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நீதிமன்றத்தின் அனுமதியா வாங்குறோம்?அப்புறமென்ன நீதிமன்றம் அனுமதி கொடுத்துச்சுன்னு…
அதே போல சமூகம் விலக்கிய ஒரு செயலை செய்தா தான் அது குற்றம். அப்புறம் அந்தக் குற்றத்தை ஒருத்தர் செய்தாரா இல்லையா என்பதை விசாரித்து முடிவு செய்வது மட்டும் தான் நீதிமன்றம் செய்யிற வேலை.
இன்னொன்னு… எ..து கள்ளக்காதல்? கணவனோ மனைவியோ இருக்கும்போது இன்னொருவருடன் உடல் ரீதியான தொடர்பில் இருப்பதா? அதை காதல் என்று சொல்லி காதலை கொச்சைப்படுத்தலாமா? காமம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதே போல 18 வயது நிரம்பியவர் சேர்ந்து வாழ்வதை சமூகம் அங்கீகரிக்கிறது இல்லையா. இப்போது லிவ் இன் சகஜமாகி விட்டது.இவை எல்லாம் குற்றச் செயலாக பார்க்கப்படுவதில்லை.யாரும் அவ்வாறு சேர்ந்து வாழ்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோருவதில்லை.
திருமணம் ஆனாலும் #ஈருடல் ஓருயிர் # என்பதெல்லாம் சட்டத்தில் கிடையாது. இருவரும் தனித்தனி நபர்கள் தான். அவர்களை பிணைக்கும் பந்தம் தான் திருமணம். எனவே அந்த பந்தத்திற்கு முரணாக இன்னோருவருடன் தொடர்பில் உள்ளார் என்று அந்த பந்தத்தை அறுத்துக் கொள்ளலாமே தவிர, சமூகம் ஏற்றுக கொண்ட ஒன்று குற்றமாகாது.
இதைத் தான் …இதை.த்தான்..அவங்க சொன்னாங்க!! இப்போ சொல்லுங்க யாரு மாறுனது? நீதிமன்றமா? சமூகமா?
திருத்தம் 1
நீதிமன்றம் இந்த தீர்ப்பு கொடுத்ததற்கு இன்னொரு காரனமும் உண்டு. அந்த பிரிவின் படி இன்னொருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆணுக்கு மட்டுமே தண்டனை, சம்பந்தசப்பட்ட பெண்ணுக்கு கிடையாது என்று இருந்தது. அது பாலின பாகுபாடு என்றாகும். அதே போல மனைவி என்பவள, கணவனின் சொத்து என்பது போலவும், அதை மற்றவர் கொள்வது குற்றம் என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால் முன்பு ஒரு வழக்கில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், மனைவி கணவசனின் சொத்து என்று குறிப்பிட்டதை எதிர்த்து பெண் ஒரு ஜடப் பொருள் அல்ல என்று நாடெங்கும் விமர்சனம் எழுந்ததால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று, அவர் அதை திருத்தி தீர்ப்பு வழங்கினார். ஞாபகம் யாருக்காவது இருக்கிறதா? அன்றைய சமயம் வந்த தீர்ப்பின் follow up தான் இது.
ஒருவரின் சொத்தை இன்னொருவர் கவர்ந்தால் தானே குற்றம்? அது சொத்து இல்லை எனும்போது இன்னொருவர் கையாள்வது எப்படி குற்றச் செயலாகும்? அதை..அதாவது நீங்கள் சொன்னதைத் தான் இப்போது அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் நீதிமன்றம் எதற்கு உள்ளது? மனித சமுதாயம் ஒன்றி வாழத் தடையாக இருப்பது குற்றம் எனக் கொள்ளப்பட்டு, அதை செய்பவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தண்டிக்கப் படுகின்றனர். ஆனால் காலம் மாற மாற, சமுதாயத்தால், குற்றம் எனப்படுவதின் வரையறை மாறிக் கொண்டே வருகிறது.
முன்பு விபச்சாரம் செய்வது குற்றம் எனப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை என்ன? விபச்சாரம என்பதும் ஒருவரால்,விரும்பி ஏற்று கொள்ளப்பட்ட தொழில் என்னும்போது , அது குற்றமாகாது என்ற அளவில் சமூகள் லநூட்டம் (?) மாறி விட்டது.
முன்னர் திருமணமாக ஆணும் பெண்ணும் ஹோட்டலில் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது குற்றமாகப் பார்க்கபட்டது. இப்போது அப்படியா? மேஜரான ஆண் பெண் அவ்வாறு தங்குவது குற்றமில்லை என்றானாது. திருமணதிற்கு முன்னர் "லிவ் இன்" உறவில் இருப்பதை சமூகம் தவறாகப் பார்ப்பதில்லை. பிடித்திருந்தால், திருமணம் செய்துக் கொள்கின்றனர். இல்லையென்றால், விலகி விடுகின்றனர்.
அதே போல ஒரு பெண், திருமணமான பின்பு, கணவனின் சொத்து என்று கருதப்பட்டது மாறிவிட்டது. திருமணமானாலும், அவள் தனி மனுஷி தான் என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவளுடைய தனி மனித உரிமைகள், திருமணதிற்கு பின்பும் தொடர்கின்றன. குடும்ப வன்முறைகள் ஆகியவற்றில் இருந்து எதிர்த்து நிற்கும் உரிமை, ஆகிய சமுதாய மாற்றங்கள் நடந்துள்ளன. ஒருவனுக்கு சொந்தமான பொருள் களவு போனால் தானே, அதை கவர்ந்து சென்றவன் கள்வனாவான்? ஒரு பெண் பொருள் என்ற வரையறைக்குள் வராதபோது, கணவனின் சொத்து என்ற விளக்கத்தில் இருந்து வெளியேறுகிறாள். அதனாலேயே, திருமணமான பின்பு, அவள் இன்னொரு ஆணுடன், உறவு வைக்கும்போது, அது தனி மனித செயலாக பார்க்கபடுகிறதே ஒழிய, ஒரு நபரின் சொத்து பறிபோவதாக பார்க்கப்படுவதில்லை,
சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த தீர்ப்பிற்கு இவ்வளவு கவலைப்படும் நாம், அதே போல ஒரு திருமணமான ஆண் அந்த உறவை தாண்டி இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைக்கும்போது, , அந்த வெளி உறவில் உள்ள பெண்ணை குற்றவாளியாக இதுவரை பார்க்கவில்லையே? அதை ஏன் யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை? கணவன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் பெண் குற்றவாளி இல்லை என்னும் நிலையில் தானே இது வரை இருந்தது? அதை மட்டும் சமுதாயம் எதிர்த்துக் கொண்டா இருந்தது? அந்த தவறை செய்வது ஒரு திருமணமான ஆண் என்பதால் சமுதாயம் வாய் மூடி மவுநியாகத் தானே இருந்தது?
திருமணமான ஆணுக்கு ஒரு நியாயம், திருமணமான பெண்ணிற்கு ஒரு நியாயம் என்று இருந்த அந்த ஏற்றத் தாழ்வு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இது வரை திருமணமான ஆண் தவறு செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும் என்று பொங்காத நாம், இப்போது மட்டும் பொங்குவது சரியாகவா உள்ளது?
இன்னொன்று தனி மனித ஒழுக்கம் என்பது நம்மிடம் இருந்து வர வேண்டும்…அதை நீதிமன்றம் தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக