தகவல் அறியும் உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் அறியும் உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

எந்தெந்த தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RTI) பயன்படுத்தலாம்?

 தகவல் அறியும் சட்டம் நம்ம நாட்டிலே அதிகாரபூர்வமா சட்டபூர்வமா 2005 அக்டோபர் 12, அன்று முதல் தான் நடைமுறைக்கு வந்தது. ஆனா, அதுக்கு முன்னாடியே, அக்கம் பக்கத்து தகவல்களை அறியும் உரிமையை நாம செம்மையாத்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றோம்.

அப்ப இது எதுக்கு?

ஒரு அரசு இயந்திரம் இயங்கும் முறை பற்றி முன்னர் எல்லாம் ரகசியம் காக்கப்பட்டது. ஆனால் கால மாற்றத்தில், அது குறித்த தகவல்கள் என்பது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாக ரட்345பார்க்கப்பட்டது.அதன் அடிப்படையில் வந்தது தான் 2005ல் வந்த தகவல் அறியும் உரிமை சட்டம் .

இதன் மூலம், அரசு மற்றும் அரசு சார்ந்த, உதவி பெறுகின்ற நிறுவனங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கோரூம்போது, அதை பெறுவது உரிமையாக்கப்பட்டுள்ளது.

படிமப்புறவு : கூகிள்

தகவல் என்ற வார்த்தைக்கு சட்டத்தில் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே எந்த எந்த தகவல் பெறலாம் என்றுக குறிப்பாக சொல்ல முடியாது.

அதே சமயம் பொது தகவல் அதிகாரி, ஒரு தகவலை உருவாக்கவும் முடியாது. என்ன தகவல் கோப்பில் உள்ளதோ அதை மட்டுமே அவர் அளிக்க முடியும்.

எந்த தகவல் பெறலாம் என்று சட்டத்தில் சொல்லாவிட்டாலும், எந்த தகவலை பெற முடியாது, அதாவது அதை பெறும் உரிமையிலிருந்து விளக்கு அளிக்கப் பட்டுள்ளன என்று பட்டியல் இட்டுள்ளது.அவை என்னென்ன?

  • நாட்டின் பாதுகாப்பு மற்றும் மற்ற நாட்டுடன் உள்ள பொருளாதார தொடர்பு கொண்டவை
  • எந்த ஒரு நீதிமன்றத்தால் பிரசுரம் செய்ய தடை விதிக்கப்பட்டவை
  • சட்டசபை மாண்பை குலைக்கக்கூடியவை
  • வணிகரீதியானவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடியவை
  • நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை
  • ஒரு வெளிநாட்டால் ரகசியமாக கொடுக்கப்பட்டவை
  • அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் அல்லது ஒரு உயிருக்கு பாதகமானவை
  • குற்றவியல் வழக்குகளில் விசாரணை செய்யவும் கைது செய்யவும் இடையூறு கொடுக்கக்கூடியவை
  • காபினெட் அமைச்சர்கலின் பதிவேடுகள்.அவற்றில் முடிவு எடுத்த பிறகு அது குறித்த தகவல்கள் கொடுக்கலாம்
  • அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள். அவை கேட்கும்போது, சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ தெரிவிக்கப்படவேண்டும்.
  • ஒரு தகவல் கொடுப்பது காபிரைட்சட்டத்திற்கு எதிரானது என்றால் பொது தகவல் அதிகாரி அதைக் கொடுக்க மறுக்கலாம்.
  • இந்த விதிவிலக்குகள், கோரும் தகவல் 20 வருட பழமையானது என்றால், பொருந்தாது.ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு, இன்னொரு நாட்டுடன் உள்ள பொருளாதார தொடர்பு, பாராளுமன்ற உருமை மீறல் நடவடிக்கைகள் 20 வருட மேற்பட்டவை என்றாலும் கொடுக்க மறுக்கலாம்.

இவை தவிர்த்த மற்ற தகவால் பெறும் உரிமை இருந்தாலும், மேற்சொன்ன விதிவிலக்குகளை காட்டி தகவல் கொடுக்க மறுப்பதே பொது தகவல் அதிகாரிகள் தங்கள் பணியாக செய்கின்றனர்.

மேலும் அரசும், தனக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பொதுமக்களுக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொள்கின்றன.தகவல் கொடுக்க மறுக்கும் அதிகாரிக்கு தண்டனை வழங்குவது பற்றி சட்டம் சொன்னாலும், அது கண்டிப்பாக அமுல்படுத்துவது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.!


தகவல் கொடுக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை---உயர்நீதிமன்றம் உத்தரவு.

சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், இயந்திர கதியில் தகவல் கோரும் விண்ணப்பத்தை மறுக்கும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு தசுண்டனை அளிக்கும் சட்டப் பிரிவை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.

2008 ல் தமிழ்நாடு அரசுத் பணியாளர்கள் தேர்வாணையத்தின் முன், பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் காலி விவரங்கள் கேட்டு மனு செய்ததற்கு, அது மூன்றாம் நபரின் நலனுக்கு எதிரானது என்று மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், மனுதாரர் கேட்ட தகவலைக் கொடுக்குமாறு மாநில தகவல ஆணையம் உத்தரவிட்டது.

அது குறித்த வழக்கு விசாரணையின்போது , இது போன்று இயந்திரகதியில் பொது தகவல் அதிகாரிகள் தகவல் தர மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்று கண்டித்த மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன்  சரியான காரணம் இன்றி அவர்கள் மறுப்பது தெரிய வரும் போது அபராதமும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய நபர்கள் அந்தப் பதவியை வகிக்க தகுதியில்லாதவர்கள் என்றும் அவர்களுக்கு வாசற் கதவையே காட்ட வேண்டும் என்றும் கடுமையாக தன் அதிருப்தியைத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு, RTI போராளிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது அவர்களின் வெகு நாளைய கோரிக்கையாகும். இதன் மூலமே குறிப்பிட்ட காலத்திற்குள் தகவலைப் பெற இயலும் என்பது அவர்களின் தரப்பு வாதம். மேலும் இது பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், அவ்வாறு தாமதப்படுத்தும் பொது தகவல் அதிகாரிகளால், அந்த சட்டத்தின் நோக்கமே வீணடிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதம், சொற்ப அளவாக இல்லாமல் இருப்பதும், தகவல் தராவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்னும் அச்சுறுத்தல் ஏட்டளவில் இல்லாமல் செயல் வடிவில் இருந்தாலே, இந்த சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கத்தை கொடுக்கும் என்றனர்.

திங்கள், 7 ஜூன், 2021

தகவல் அறியும் உரிமை சட்டம் பெரும்பாலும் பொதுமக்களுக்கு எந்த நேரங்களில் பயன்படுகிறது?

 பெரும்பாலும் தங்களுடைய உரிமை பாதிக்கப்படுகிறது என்று உணரும் நேரத்திலே தான் இந்த சட்டம் பொதுமக்களுக்கு பயன் கொடுக்கிறது.

ஆனால் வருத்தம் என்னவென்றால் நம் மக்களுக்கு

  • தங்கள் உரிமைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லை.
  • உரிமைகள் கடமைசுளுடன் சேர்ந்து வருகிறது என்பதும் அறிந்திருக்கவில்லை.
  • அந்தக் கடமைகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.
  • தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது தாங்கள் பெற்றுள்ள எப்பேர்ப்பட்ட ஆயுதம் என்ற தெளிவு இல்லை.
  • அது அறிந்திருக்கா வரையில் மற்றோருக்கே லாபம் என்று விழிப்புணர்வு இல்லாதிருப்பதையே அவர்கள் விரும்புவர்;அந்த மாயையிலேயே நாமிருக்கவேண்டும் என்ற அவர் தம் விருப்பபடி தாம் நாம் உள்ளோம் என்பதை அறிய மறந்தர்

எனவே சினிமா, அரசியல், நக்கல், நையாண்டி இதெல்லாம் ஒதுக்கி வைத்து, "வரும் முன் காப்போம்" என நம் உரிமைகளோடு கடமைகளையும் தெரிந்துக் கொள்வோம்…

சர்வே எண்ணுக்கு உரிய 30 ஆண்டு பத்திரப் பதிவுகளை பத்திர அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடியுமா?

 தகவல்கள் பெற வழி வகை செய்வது தான் தகவல் உரிமை சட்டம்..ஆவணம் பெற்றுத் தரும் சட்டம் அல்ல. அந்த பத்திரங்கள் பெற வழிமுறைகள் இருக்கும்போது அதை தான் பின்பற்ற வேண்டும் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு நகல் பெற அங்கு தான் மனு செய்ய வேண்டும்.இந்த சட்டத்தின் கீழ் அல்ல.

ஞாயிறு, 6 ஜூன், 2021

தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட முக்கிய தகவல்களை தர முடியுமா?

 இன்றைய செய்தி இது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி. )நடத்திய போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் / உதவி பேராசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது நமக்கு தெரிந்ததே.

நமக்கு தெரியாத தகவல் என்னவென்றால்…அது தொடர்பான பல தேர்வு கேள்விகளில் சரியான பதிலை உள்ளிட்டிருந்தாலும், மதிப்பெண்களை மறுத்துள்ளது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் தெரிந்துள்ளது.!!

இது சம்பந்தமாக மாநில தகவல் ஆணையத்தில்(டி.என்.ஐ. சி) வழக்கு தொடுத்த சிலர், அவ்வாறு மதிப்பெண் மறுப்பது தவறு என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கிடைக்காது போயிற்று என்று குறித்திருந்தனர்.

இந்த வழக்கு. மாநில தகவல் ஆணையத்தின் தலைவர் முத்துராஜ், முன் வந்த போது,

"பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை" இல்லாதது, போட்டித் தேர்வுகளை நடத்துவதில், குறிப்பாக டி.ஆர்.பி.யில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்ற கவலையை வெளிப்படுத்தினார்.

அத்தோடு, தனது உத்தரவில், மனுதாரர்கள் கேட்கும் முழு விவரங்களை (யார் சரியான பதில்களை உள்ளிட்டவர்கள், அவர்களுக்கு ஏன் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பதையும், விடை விசைகளின் அடிப்படையில் தான் பொருள் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் ) கொடுக்குமாறும், மேலும் தவறான பதில் விசைகளைத் தயாரிப்பதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும். டி.ஆர். பியை உத்தரவிட்டது.

நீதிமன்றம் மற்றும் டி.என்.ஐ.சி உத்தரவுகளை மீறி டி.ஆர்.பி. அதிகாரிகள் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்த அவர்,

" தற்காலிக விடை விசைகளை வெளியிடும் நேரத்தில் பதில்கள் இறுதி செய்யப்பட்டு, தேசிய வழக்குக் கொள்கை அல்லது மாநில வழக்குக் கொள்கையின்படி செயல்பட்டு,, சம்பந்தப்பட்ட ஆய்வுப் பொருள் அல்லது புத்தகங்களை அதிகாரிகள் வெளியிட்டிருந்தால், நீதிமன்றங்கள் மற்றும் டி.என்.ஐ.சி முன் இந்த வழக்குகள் வருவது தவிர்க்கப்பட்டிட்டுருக்கும்." என்றும் சொல்லி,

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் உள்ள பல்வேறு விதிகளைச் சுட்டிக்காட்டியவர் அடுத்து இட்டஸ் உத்தரவு தான் சிறப்பு!!👍

,"ஜூன் 2011 முதல் அக்டோபர் 2020 வரை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவர் பதவியை வகித்த மாநிலத்தில் உள்ள ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக, அவர்களின் வருடாந்திர ரகசிய அறிக்கைகளில் பதிவு செய்யுமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொண்ட மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ், விதிகளின்படி அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு "கட்டாய ஓய்வு" கொடுக்குமாறும் ஆணையம் பரிந்துரைத்துள்ளார்..

ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் சிலர் ஏற்கனவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்!!

இது ஒரு அரிய உத்தரவு!!

வழங்கிய ஆணையரை பாராட்டுவோம்!💐💐


சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...