வெள்ளி, 11 ஜூன், 2021

திருமணம் அவசியமான ஒன்றா?

 முதலில் திருமணம் அவசியமில்லாதது என்றே வைத்துக்கொள்வோம். அதனால் மேலை நாட்டிலே உள்ளது போல லிவ் இன் relationshio லேயே இருக்கலாம்னு முடிவு பண்றோமுன்னு வையுங்க . அது போல வாழ்வதில் என்ன கிடைக்கும்? சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்குமா? நாலு இடத்திற்கு தெரிந்தவர் முன் கூட்டிச் செல்ல முடியுமா?அக்கம் பக்கத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்க முடியாம? குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா அப்படி பிறந்தாலும், அதன் எதிர்காலம் என்ன? இந்த சமூகக் கட்டமைப்ப்பிற்குள் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். பொதுவாக இந்த ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்கள் திருமனம் செய்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது தான் அப்படி வாழ்வார்கள்.

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரியா சக்ரபோர்த்தி தான் சுஷாந்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். திருமணம் என்ற பந்தத்தில் நுழைய விரும்பாமல் இருந்தவர்களின் முடிவையும் பார்த்து விட்டோம்.

சரி திருமணம் செய்வதே காமத்திற்குத தான்னு ஒரு பதிவை பார்த்தேன். இந்த அளவிற்கு மோசமான கருத்து திருமணத்தை பத்தி இருக்கிறது மிகவும் வேதனை தரக் கூடியது. அந்த சுகத்தை கொடுப்பதற்குத் தான், நாமே அந்த பெண்களுக்கு ஒரு பெயரையும் சூட்டி சமூகத்தில் ரொம்ப மதிப்பாக வைத்திருகிறோமே? அப்புறம் திருமணம் என்று தனியாக எதற்கு?

திரூமணம் என்ற பந்தத்தின் அர்த்தம் /புனிதம் தெரியாதவர்கள் பேச்சு… வெற்றுப் பேச்சு..

சரி திருமணம் என்ற பந்தம் நமக்கு கால் கட்டு என்று சொல்கின்ற விலங்கு என்று தெரிந்தும் ஏன் நிறைய பேர் போட்டு கொள்ளத் துணிகிறோம்?

அதன் பின் நம் முன்னோர் வகுத்து வைத்த சூட்சமம் உள்ளது.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு பெற்றோரும் சரி அதன் உடன் பிறந்தவர்களும் சரி அன்பை பொழிகிறார்கள். அது வளர வளர அன்பைப் பெற்று கொண்டே வருகிறது. வாலிபனாகும் போது , இந்த திருமணம் என்ற பந்தத்தின் மூலமாகத தான், இன்னொரு நபருக்கு தன அன்பை முதன் முதலாக கொடுக்கத் துவங்குகின்றான். அந்த அன்பு நம் வாழ்க்கை துணையிடம் ஆரம்பிப்பதற்கு வேண்டுமானால் உடலின் மூலமான ஈர்ப்பு இருக்கலாம். அடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அது அவனுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. வெறுமனே இவனைப் பார்த்து சிரிக்க மட்டும் செய்கிறது. ஆனால் அதைப் பார்த்தாலே அவனுக்கு அன்பு பெருகுகிறது. இப்படி மனைவி, பிள்ளைகள், அதை தாண்டி சுற்றம், மற்றவர் என்று அவன் அன்பை பிறருக்கு வழங்குவது விரிந்து கொண்டே வருவது திருமணத்தின் மூலம் தான்.

பிரமச்சாரியாக இருக்கும் ஒருவன் கிரகஸ்தன் என்ற தகுதியை அடைவது திருமணம் என்ற பந்தத்தில் நுழையும் போதுதான். அதனால் தான் அதற்கு இல்லறம் என்று பெயர் வைத்தார்கள். அன்றிலிருந்து தான் அவனுடைய அறநெறி வாழ்வு துவங்குகின்றது என்றும் அவன் செய்யும் அத்தனை அறச் செயல்களுக்கும் அவள் துணையோடுதான் அவன் செய்ய முடியும். சக்தி இல்லை என்றால் சிவனேன்னு இருன்னு தானே சொல்கிறார்கள். அதனால் தான் சிவன் தன உடலில் பாதியை பார்வதிக்கு கொடுத்தார். திருமாலும் திருமகளை தன மார்பில் இருத்தினார். கடவுள்கள் நமக்கு உணர்த்துவதும் இதைத் தான்

இருவருக்கும் இடையிலான அன்பு தொடர்ந்து படர்ந்து உணர்வு பூர்வமாக மாறி இறுதியில் ஆன்மீக ரீதியாக நிலைக்க வேண்டும். அப்படி உடலாலும் உள்ளத்தாலும், இனைந்து 60 வயதை கடந்தவர்களுக்கு நடத்தப்படும் சஷ்டயப்த பூர்த்தி அதாவது அறுபதாம் கல்யாணம் என்பது . அதை பெரும்பாலும் மறந்தே விட்டோம்.

ஒருவருக்கு 60 வயது முடிந்து 61வது வயது தொடங்கும் போது அவரது ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்த நாளன்று அவருடைய ஜாதகத்தில் நவக்கிரகங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.

அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறுபாகம் துவங்குகிறது என்று பொருள். அன்று முதல் அவர் இன்னொரு புதுப்பிறவி எடுக்கிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஓர் ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம். அதனால்தான், அப்போது மறுபடியும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடத்தி வைப்பது போல, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு நடத்தி வைக்கும் திருமணம் இது. இந்த அறுபதாம் வயதில். சாதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்று, அவர்களுக்கு திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்திருப்பார்கள்.நம்முடைய தமிழ் ஆண்டுகள் 60. ஒருவர் அறுபதை தொடும்போது, ஒருவர் இந்த அறுபது ஆண்டுகளை கடந்திருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.இப்போது அறுபதாம் திருமண தம்பதிகள் புதிய வாழ்க்கையை தொடங்குவதன் அடையாளம். கால ஓட்டத்தில் தொலைத்துவிட்ட நிம்மதியான வாழ்க்கையை, சற்றே நிதானித்து, அனுபவித்து சுற்றங்கள், நட்புகள் இவர்கள் புடைசூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது.இதன் அருமை தெரிந்து தங்கள் பெற்றோருக்கு பிள்ளைகள் அந்த திருமணத்தை உற்சாகமாக நடத்தி வைக்கும்போது, அந்த பிள்ளைகள் குறித்து மனதில் ஒரு கர்வ பெருமை துளிர்க்கிறது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது. அதை வாழ்க்கை துணையுடன் தான் கொண்டாட முடியும் சொற்ப பேர்க்கே அந்த பாக்கியம் கிட்டும். அன்று மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், வருவோர் அனைவருமே மணமக்களின் ஆசீர்வாதம் பெறுவர். ஏனென்றால் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு அவர்கள் ஆசிர்வாதம் பாக்கியமாக கருதப்படும் பண்பாடு நமது.

நம் ஊரில் திருமனம் என்பது இரண்டு உள்ளங்களை மட்டுமல்ல. இரண்டு தரப்பு உறவுகளையும் இணைப்பது. அதனாலேயே மகனின் திருமணமும்,மகளின் திருமணமும் பெற்றோருக்கு முக்கிமான ஒன்று. எனவே அதில் அவர்களுக்கு இல்லாத உரிமை மற்றவருக்கு இல்லை.(விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவையே பொது விதி ஆகாது)

சில விஷயங்களை பொதுவில் பேசும்போது, அது ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்று வரும் போது, நிஜம் சுடும்.

குடித்து விட்டும், சீட்டாடி, பொறுக்கியாய் திரிந்தாலும், சினிமாப்பட ஹீரோயின் காதலிப்பது போல அத்தனை கெட்ட பழக்கத்தையும் மறந்து காதலிக்க வேண்டும், பார்க்கிறவர்களை எல்லாம் கண்ணா என்று கூப்பிட வேண்டும் (பள்ளியிலேயே ஆல் இந்தியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் என்று தான் பிலெட்ஜ எடுத்து பழக்கம்) , கூப்பிட்டவுடன் பெற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சினிமா மாதிரியே கனவு கண்டு கொண்டிருந்தால் எப்படி.? எந்த படத்திலும் அதற்கு பிறகான நரக வாழ்க்கையை காட்டுவதில்லை. குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து பார்த்தால் தெரியும்.

சினிமாவில் நடக்கும் கூத்துக்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு வேலை செய்யாத ஒருவனை தேர்ந்தெடுத்து பெற்றோரை விட்டு விட்டு , ஓடி போய் கல்யானம செய்வதற்கு கல்யாணமே செய்யாமல் இருந்து விடலாம். காதலர் தான கணவர் ஆக வேண்டும் என்றால், பெற்றோர் மனது மாற முயல வேண்டும். தான் தேர்ந்தெடுக்கும் அந்த நல்லவனை, வல்லவனை ஜல்லிகட்டு மாட்டைப் பிடிக்க வேண்டாம், தன பெற்றோரின் மனதைப் பிடிக்கச் செய்ய வேண்டும் ஏனென்றால் நாளைய உனது நல்லது, கெட்டது எதற்கும் அவர்கள் தான் முன் நின்று செய்ய வேண்டும். குழந்தைக்குக் கூடஎந்த பண உதவி செய்யாத, ஓடி போன கணவனுக்காக, எத்தனை இளம் பெண்களை கையில் குழந்தையுடன் பெற்றோரின் துணையுடன் வந்து காத்துக் கிடப்பதை பார்க்கும்போது இப்படி ஒரு திருமணம் இவர்களுக்கு தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.

.அதே போல ஒருவர் தன குழந்தைகளுக்காக மனைவியுடன் வாழ ஒத்துக்கொண்டாராம். பொது வெளியில் தன மனைவியை நாய் என்கிறார். அவர் குழந்தைகள் அவரிடம் என்ன கற்றுக்கொள்ளும்?

இந்த சமயத்தில் ரமண மகரிஷி சொன்னது நினைவுக்கு வருகிறது. பார்க்கும் பொருளும் பார்க்கப்படும் பொருளும் ஒன்று என்று. . மற்ற உயிர் களையே தானாக பார்க்கச் சொன்னபோது, தன்னில் ஒரு பாதியான துணைவியை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டுயதில்லை.

என்ன தேவர் மகன் படத்தில் ஒரு வசனம் வருமே உனக்குள்ளே உலாவிக்கிட்டிருக்கிற மிருகம் எனக்குள்ளே தூங்கிக்கிட்டிருக்குன்னு.

அதே தான். ஒவ்வொரு பெண்ணும் சக்தி . சிவனே என்று சும்மாயிருக்காமல், அவளுக்குள்ளே தூங்கிக் கிட்டிருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பாதீங்கன்னு!?

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...