திங்கள், 7 ஜூன், 2021

கோச்சிங்க் சென்டர்கள் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிடக் காரணங்கள் என்ன?

 இன்றைய தேதியில், வேலைக்கு போகும் பெற்றோர்களுக்கு குழந்தையைக் கவனிக்க நேரம் இல்லை. பாடம் சொல்லிக் தர நேரம் இல்லை.அவர்களை மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு தயார் படுத்தும் திறனும் குறைவு.

இவை எல்லாம் தான் கோச்சிங் சென்டர்கள் கோலோச்சக் காரணங்கள்.

இவை தற்போது முற்றிலும் வியாபாரத்தளங்களாகி விட்டன.. அதனாலேயே இந்த கேள்வியை கூட எழுப்பினேன்..


இப்போது அது போன்ற கோச்சிங் சென்டர்களையும், "சேவை குறைபாடு" இருக்கும் போது, சட்ட வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது நுகர்வோர் மன்றம். இது நடந்துள்ளது பெங்களூரில்.

தன் மகளின் படிப்பிற்கு கோச்சிங் கொடுக்கவும், கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி கொடுக்கவும் ரூபாய் 70,000 கட்டணம் செலுத்தி, பெங்களூரில் உள்ள கோச்சிங் சென்டரில் icse சிலபசில் உள்ள ஓன்பதாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார் மனு சோளங்கி.

பிறகு?

கூடுதல் வகுப்புகள் நடத்தாதது மட்டுமல்ல, சாதாரண வகுப்புகளும் நடத்தப்படாதது,

வார தேர்வுகளுக்கு முன்னரே கேள்விகளை கொடுத்து விடுவது

யூனிட் தேர்வில் அனைத்து பாடங்ளிலும் மகள் பெயிலானது

இந்தக் குறைகளை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் சொல்லியும் சரியான நடவடிக்கை எடுக்காதது.

இந்த காரணஙகளால் மகளை இன்ஸ்டிடியூட்டில் இருந்து நிறுத்திய தந்தை சேவை குறைபாடு உள்ளதால் நிறுவனம் தன்னிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று புகார் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிறுவனம், அது வணிக நோக்குடன் நடத்தப்படுவதல்ல என்றும் கல்வி கற்பிக்கும் சேவை செய்வதாகவும் எனவே நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்ய முடியாது என்றும், வெறும் 5000 ரூபாய் மட்டுமே திருப்பி அளிக்கவேண்டும் என்றாலும், நல்லெண்ண அடிப்படையில், மாணவி இரண்டாம் கட்ட பயிற்சிக்கு வராததால், அந்த கட்டணமான ரூபாய் 26.000தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தது.

அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம், நிறுவனத்தின் செயல் சேவை குறைபாடே என்று தீர்ப்பளித்து, மேற்சொன்ன கட்டணத்துடன் செலவுத்தொகை ரூபாய் 5000 சேர்த்து, செலுத்தும் நாள் வரையான வட்டியுடன் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு நல்ல முன் மாதிரி தீர்ப்பு.

இந்த கோவிட் காலத்தில் பாடங்களை நடத்தாமலேயே கல்விக்கட்டணம் மட்டும் வசூலித்துக் கொண்டிருக்கும் நம் மாநில கல்வி நிறுவனங்கள் இனியாவது பொறுப்புடன் செயல்பட்டால் சரி.!! இல்லையெனில்…



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...